சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist perspective for Sri Lankan workers

இலங்கை தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு

18 August 2011

சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் தீவில் வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்ட அலைக்கு ஒரு சோசலிச முன்நோக்கைப் பற்றி கலந்துரையாடுவதற்காக ஆகஸ்ட் 22 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த சில வாரங்களாக மின்சார சபை, டெலிகொம் மற்றும் பல்கலைக்கழகத்திலும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிலைமைகளுக்காக போர்க்குணம் மிக்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் போராடுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த அதே வேளை, தொழிற்சங்கங்கள் பிரதான தடையாக இருந்தன. அவை அரசாங்கத்துக்கும் அது பாதுகாக்கின்ற இலாப முறைமைக்கும் எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் தடுக்கின்றன.

இலங்கையில் நடக்கும் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் இஸ்ரேல் உட்பட அமெரிக்கா, ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் பாகமாகும். ஆழமடைந்துவரும் பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடியினாலும் மற்றும் உலகம் பூராவும் நிதி மூலதனம் கோரிவருகின்ற சிக்கன நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுவதாலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்கத் தள்ளப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் போலவே, இலங்கையிலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கும் முதலாளிமாருக்கும் ஒரு தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படுகின்றன. சீற்றத்தை தணிப்பதற்காக வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்ற அதேவேளை, தொழிற்சங்க தலைவர்கள் முதலாளித்துவ வரம்பையும் அரசாங்கத்தின் சிக்கன திட்டங்களையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்து சலுகைகள் பெற முடியும் என்ற மாயையை பரப்பிய அவர்கள் அனைவரும், அரசாங்கத்தின் அடிப்படை கோரிக்கைகளுக்கு உடன்பட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி அடிப்படையில் வேறுபட்ட ஒரு நடவடிக்கையை பிரேரிக்கின்றது. அது சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அராசங்கத்துக்கான ஒரு அரசியல் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். முதல் நடவடிக்கையாக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு முன்னாள் இது அமைப்புக்கள் உட்பட, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சகல கட்சிகளிடம் இருந்தும் முழுமையாக பிரிந்து, தமது கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காக சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். இத்தகைய போராட்டங்கள் ஐக்கியப்படுத்தப்பட்டு, இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத் தட்டினர் மற்றும் கிராமப்புற வறியவர்களின் பக்கம் திரும்ப வேண்டும்.

தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டத்துக்கான அடித்தளம் இதுவே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான உரையாற்றுவார். தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் எமது கூட்டத்திற்கு வருகை தருமாறும் இந்த இன்றியமையாத கலந்துரையாடலில் பங்கெடுக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

திகதியும் நேரமும்: ஆகஸ்ட் 22 திங்கள், மாலை 4.00 மணி

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்