சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese prime minister set to step down

ஜப்பானிய பிரதம மந்திரி பதவி விலகுகிறார்

By John Chan 
17 August 2011

use this version to print | Send feedback

ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி (DJP) ஆகஸ்ட் இறுதிக்குள் பிரதம மந்திரி நான்டோ கானுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கக் கூடும்; இது தேக்கம் அடைந்துள்ள பொருளாதார நிலை மற்றும் புகுஷிமா அணுசக்திப் பேரழிவை அரசாங்கம் கையாண்டது குறித்து ஏற்பட்ட பரந்த அவநம்பிக்கை ஆகியவற்றின் விளைவாகும்.

கடந்த வாரம் DJP மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட ஓர் உடன்பாட்டின்படி, ஆகஸ்ட் 26 ஐ ஒட்டி பாராளுமன்றம் கான் தன்னுடைய  இராஜிநாமாவிற்கு முன்நிபந்தனைகளாகக் கூறியுள்ள இரு சட்டங்களை இயற்றும். இவற்றுள் ஒன்று அரசாங்கத்தை 2011 வரவு-செலவுத் திட்டம் செயல்படுத்தப்பட பத்திரங்களை வெளியிட அனுமதிக்கும்; மற்றொன்று புதுப்பிக்கப்படக்கூடிய ஆதாரங்களில் இருந்து மின்சக்தி நிறுவனங்கள் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் சட்ட வரைவு ஆகும்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே கான் ஒரு நொண்டி வாத்துப் பிரதம மந்திரியாகத்தான் இருந்து வருகிறார்; அப்பொழுது எதிர்க் கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது; அதற்கு முக்கிய ஆளும் கட்சிப் பிரிவுகள்ஆதரவு கொடுக்க இருப்பதாக அச்சுறுத்தின. தன் கட்சியில் பிளவுகளைத் தடுப்பதற்காகத்தான் கான் விரைவில் இராஜிநாமா செய்வதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு அவர் மூன்று நிபந்தனைகளை விதித்தார்: முதல் இரண்டும் மேலே கூறப்பட்ட இரு சட்டங்களும் இயற்றப்பட வேண்டும், தொடக்கத்தில் LDP அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் மேல் மன்றத்தில் தடுத்துவிட்டது. மூன்றாவது நிபந்தனை பூகம்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மறுகட்டமைப்பதற்குத் தேவையான இரண்டாவது துணை வரவு-செலவு திட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதாகும்; இது ஜூலை 25ல் இயற்றப்பட்டுவிட்டது.

கடந்த புதன்கிழமையன்று பாராளுமன்றத்தில் அனைத்துச் சட்டங்களும் இயற்றப்பட்டு ஒரு புதிய கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தான் பதவியில் இருந்து கீழிறங்குவதாக கான் மீண்டும் உறுதிப்படுத்தினார். DPJ யின் தலைமைச் செயலர் கட்சுயா ஒகடா தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பை ஆகஸ்ட் 28 அன்று நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளார்; இதையொட்டி ஒரு புதிய பிரதம மந்திரி ஆகஸ்ட் 31க்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று விட முடியும்அதுதான் தற்போதைய பாராளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் ஆகும்.

இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது என வரும் புதிய பிரதம மந்திரியைப் பதவியில் இருத்துவதற்கான அவசரம் ஜனநாயக கட்சிக்காரர்கள், அரசாங்கம் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

செப்டம்பர் 2009ல் நடைபெற்ற தேர்தலில் DPJ மிகப் பெரிய வெற்றியை அடைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாகப் பதவியில் இருந்த LDP ஐ பதவியிலிருந்து அகற்றியது. புதிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமாமாற்றம் வரும் என்று உறுதியளித்தார்; இதில் கூடுதலான சமூகநலச் செலவுகள் செய்யப்படும், அமெரிக்க-ஜப்பானியக் கூட்டிலிருந்து ஆசிய சார்புடைய வகையில் வெளியுறவுக் கொள்கைக் குவிப்புக் காட்டும் கருத்துக்கள் அடங்கியிருந்தன.

ஆனால் இதைத்தொடர்ந்து ஹடோயமா அரசியல் இடர்களை எதிர்கொண்டார். DPJ யின் தேர்தல் உறுதிமொழிகள் நெடுஞ்சாலைகளில் சுங்க வரிகளை அகற்றுவதாகவும், குழந்தைகளுக்கான படி கொடுக்கப்படும் என்பவை உலக அரசாங்கக் கடன் நெருக்கடி எனப் பெருகி வந்த பிரச்சினையுடனும் பெருவணிகம் பொதுநலச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடனும் மோதலைக் கண்டது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடன்பட்டுள்ள தொழில்துறை முன்னேற்றம் அடைந்துள்ள நாடு ஜப்பான் ஆகும்; பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 200 சதவிகிதம் என்று உள்ளது.

ஒகினாவாத் தீவிற்கு அருகேயுள்ள மக்களிடையே செல்வாக்கிழந்துவிட்ட கடற்படைத் தளத்தை மாற்றுவதற்கு மறுத்து வாஷிங்டனிடம் இருந்தும் ஹடோயமா வலுவான அழுத்தங்களைப் பெற்றார். அவ்வாறு மாற்றப்படும் என்பது DPJ தேர்தல் உறுதிமொழியில் முக்கிய இடம் பெற்றிருந்தது. ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தபின், ஹடோயமா தீவில் தளத்தைத் தொடர்வதற்கு அவர் அனுமதித்தபின் ஒகினாவாவில் எழுந்த தள-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே இராஜிநாமா செய்தார்.

பொருளாதார சிக்கனத்திற்கு மாற்றம் தேவை என்று வலியுறுத்தி, நாட்டின் நுகர்வோர் வரி பற்றிய விவாதம் தேவை என்ற அழைப்பைக் கொடுத்தும் ஜூன் 2010ல் கான் பதவிக்கு வந்தார். அதன் பின் வரிக்கு எதிர்ப்பு என்பது கடந்த ஆண்டு நடந்த மேல் மன்றத் தேர்தல்களில் DJP யின் இழப்புக்களில் முக்கிய காரணியாக இருந்தது.

வாஷிங்டனுடன் உறவுகளில் சமரசத்தைக் காணவும் கான் முற்பட்டார்; இது ஹடோயமாவின் சீனாவுடனான சிறந்த உறவுகள்கிழக்கு ஆசியச் சமூகம் நிறுவப்படுதல் என்னும் அழைப்பை திறமையுடன் ஒதுக்கித் தள்ளியது. ஒபாமா நிர்வாகத்தின் சீனச் செல்வாக்கை ஆசியாவில் குறைத்து மதிப்பிடுவதற்கான ஆக்கிரோஷ நடவடிக்கைகளுடன் இயைந்த வகையில், கான் சீனாவின்இராணுவ அச்சுறுத்தல் பற்றி அதிகம் குரல் கொடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பெஜிங்குடன் ஒரு இராஜதந்திர மோதலை பூசலுக்கு உட்பட்ட கிழக்கு சீனக் கடல் நீர்ப்பகுதியில் சீன மீன்பிடிக்கும் படகின் தலைமை மாலுமியைக் கைது செய்தவகையில் தூண்டியது.

பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளில் இருந்த பூசல்கள் ஏதும் தீர்க்கப்படவில்லை. DPJ யின் அதிகாரத்திற்குப் பின்னுள்ள, ஊக்கச் செலவு மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவுகள் ஆகியவற்றிற்குப் பெரும் ஆதரவு கொடுக்கும் Ichiro Ozawa கடந்த செப்டம்பர் மாதம் உயர் பதவிக்காக கான் மீது சவால் விட்டுத் தோற்றுப்போனார். சீன-ஜப்பானிய உறவுகள் புதிய அடிமட்டத்தை அடைந்தன; இது ஏற்றமதிச் சந்தைகளுக்காகவும், குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பிற்கு ஆதாரமாகவும் சீனாவை நம்பியிருந்த சக்தி வாய்ந்த வணிகப் பிரிவுகளுக்கு இடரைக் கொடுத்தது.

மார்ச் 11 நில நடுக்கத்தைத் தொடர்ந்த புகுஷிமா அணுநிலையப் பேரழிவும் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்தின. கருத்துக் கணிப்புக்கள் அரசாங்கம் போதுமான உதவிகளை நில நடுக்கம், சுனாமி என வட ஜப்பானில் தாக்குதலுக்குட்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு அளிக்காததை ஒட்டி ஆதரவைக் குறைவாகக் காட்டின. அணுசக்தி நெருக்கடி பற்றிய அரசாங்கத்தின் விடையிறுப்பிற்கும் பரந்த விரோதப் போக்கு காணப்பட்டது. கான் பற்றிய ஒப்புதல் ஜூன் மாதத்தில் 23 என்பதிலிருந்து கடந்த மாதம் வெறும் 17 சதவிகிதம் ஆக சரிந்தது.

கானைப் பதவியில் இருந்து அகற்றும் உள்ளிருந்து நடத்தப்படும் முயற்சிகளில் முக்கியமாக ஈடுபட்டிருப்பவர்கள் ஒஜவாவும் ஹடோயமாவும் ஆவர்கள். இவர்கள் இருவரும் அவருடைய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க சார்புடைய தன்மைக்கும் விரோதப் போக்கைக் காட்டுகின்றனர். இந்த அழுத்தங்கள் பொருளாதார மந்த நிலை வரவிருக்கும் நிலையில் அதிகமாகிவிட்டன. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்கள் பொருளாதாரம் ஆண்டுக் கணக்கில் இரண்டாவது கால்பகுதியில் 1.3 சதவிகிதம் சுருங்கிவிட்டதை காட்டுகின்றனஇது எதிர்மறை வளர்ச்சி தொடர்ந்து மூன்றாம் காலாண்டில் இருப்பதைக் காட்டுகிறது.

உலக நிதியக் கொந்தளிப்பு பெருகியுள்ளதற்கு இடையே, கடந்த வாரம் காபினெட் அலுவலகம் ஜப்பானின் இந்த நிதிய ஆண்டிற்கான ஜப்பானின் வளர்ச்சிக் கணிப்பை 1.5 ல் இருந்து 0.5 சதவிகிதம் எனத் திருத்தியுள்ளது. ஜப்பானிய ஏற்றுமதிகள் அமெரிக்க டாலருக்கு எதிராக யென்னின் மதிப்பு உயர்வதால் பாதிக்கப்படுகின்றன; ஏனெனில் முதலீட்டாளர்கள் ஜப்பானிய நாணயம் பாதுகாப்பான புகலிடம் என நாடுகின்றனர். பல ஜப்பானிய நிறுவனங்கள் குறைந்த செலவுகளின் காரணமாக வெளிநாடுகளில் தங்கள் அமைப்புக்களை நிறுவுகின்றன; குறிப்பாக சீனாவில். ஜப்பான், சீனாவை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் நம்பியிருப்பது அமெரிக்காவுடனான அதன் நெருக்கமான மூலோபாய உறவுகளுக்கு எதிரிடையாக உள்ளது.

இந்தப் பின்னணியில், ஒஜாவாவின் செல்வாக்கு DPJ க்குள் மீண்டும் எழுச்சி பெற்றுவிட்டது; இந்த ஆண்டு முன்னதாக ஊழல் குற்றச்சாட்டு எனக் கூறப்பட்டதின் அடிப்படையில் அவர் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் பெற்றாலும் இந்நிலை உள்ளது. திங்களன்று Asahi Shimbun கானின் பதவிக்குப் போட்டியிடும் அனைத்து முக்கிய நபர்களும் ஒஜாவின் கதவை நோக்கிச் செல்லுகின்றனர் எனக் கூறுகிறது. 120 உறுப்பினர்கள் பிரிவு என்ற மிகப் பெரிய பாராளுமன்றப் பிரிவு அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கானுக்குப் பின் அநேகமாகப் பிரதமராக வரக்கூடிய நிதி மந்திரி யோஷிஹிகோ நோடா, ஜூன் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பின்னர் உடனடியாக ஒஜாவைக் காண முயன்றார். நுகர்வு வரியில் உயர்வு என்பதற்கு நோடோ வலுவான ஆதரவைக் கொடுக்கிறார்இந்த நடவடிக்கைக்கு ஒஜாவின் எதிர்ப்பு உள்ளது; ஆனால் இந்த மாதம் அவருடைய நாணயக் குறுக்கீட்டுச் செயற்பாடு யென்னின் மதிப்பை ஒஜஸாவின் பொருளாதாரப் பார்வையுடன் பரந்த முறையில் இணக்கத்துடன் உள்ளது.

சனிக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, நோடா DPJ, LDP மற்றும் இன்னொரு எதிர்க்கட்சியான New Komeito ஆகியவை ஒருதேசிய சீரமைப்புக் கூட்டணியை அமைக்க வேண்டும், இல்லாவிடின், “அரசியலில் முன்னேற்றம் இருக்காது என்று தெரிவித்தார். கட்சிகள்வெளிப்படையான விவாதங்களை மேற்கொண்டு மறுகட்டமைப்பு, அணுசக்தி ஆலைகள், நிதிப் பிரச்சினைகளை ஆராய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். DPJ யின் தலைமைச் செயலர் ஒகடா இத்திட்டத்திற்கு தன் ஆதரவை மறு நாள் வெளிப்படுத்தினார்.

அத்தகையபெரும் கூட்டணி மீண்டும் கருத்திற் கொள்ளப்படுகிறது என்னும் உண்மை ஆளும் உயரடுக்கை எதிர்கொண்டிருக்கும் அரசியல் தேக்க நிலையின் அளவைக் காட்டுகிறது. இதே போன்ற கருத்தை மார்ச் 11 பேரழிவிற்குப் பின் கான் முன்வைத்தார். ஆனால் அதற்கு LDP தலைவர் சடகாஜு தனிகாகி புறக்கணிப்பைத்தான் காட்டினார்; அவர் மீண்டும் பல தயக்கங்களை வெளியிட்டு, கொள்கை வேறுபாடுகளைக் காரணம் காட்டினார்; இதில் வெளிநாட்டு இராஜதந்திர நெறி பற்றிய வேறுபாடுகளும் இருந்தன. நோடாவின் அழைப்பு DPJ க்குள்ளேயே மற்ற பிரமுகர்களால் எதிர்க்கப்பட்டது.

ஒருவேளை போட்டியிடக்கூடிய வேட்பாளரான முன்னாள் போக்குவரத்து மந்திரி சுமியோ மபுச்சியும் ஒஜாவாவை ஜூன் மாதம் சந்தித்தார். விற்பனை வரியில் அதிகரிப்பு கூடாது என்று எதிர்க்கும் வகையில் ஆதரவை அவர் நாடுகிறார்; மேலும் ஊக்கப் பொதிகளுக்கு ஆதரவையும் கொடுக்கிறார். விரைவில் வெளியிடப்படவுள்ள கட்டுரையில், மபுச்சி கானை ஒஜாவைத் தனிமைப்படுத்தியதற்காகக் குறைகூறியுள்ளார். மற்றொரு வேட்பாளர் முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி மிச்ஹிகோ கனோ, இளம் சட்டமன்ற உறுப்பினர்களின் குழுவிற்குக் கடந்த மாதம் எந்த சக ஊழியர்களையும்அதாவது ஒஜாவைகட்சியில் இருந்து ஒதுக்க வேண்டாம் என்று முறையிட்டுள்ளார்.

தன்னுடைய உயரும் செல்வாக்கை அடிக்கோடிடும் வகையில் ஒஜாவா கடந்த புதன்கிழமை 150 பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு உரையாற்றினார்அன்றுதான் கான் தான் பதவியில் விலகுவதை உறுதிப்படுத்தினார். ஒஜாவா கட்சியின் 2009 தேர்தல் அறிக்கையையும் செலவுத் திட்டங்களையும் மாற்றப்போவது இல்லை என்று உறுதியளித்து அறிவித்தார்: “அறிக்கை மக்களுடன் கொண்டுள்ள ஒப்பந்தம், மக்களிடம்தான் இறைமை உள்ளது, எனவே அது மிகவும் முக்கியமானது.”

ஆனால் ஒஜாவா நன்கு அறிந்துள்ளபடி, DPJ எதிர்க்கட்சிகளுடன் கொண்டுள்ள உடன்படிக்கை, சட்டத்தை இயற்றுவதற்காகச் செய்து கொண்டது, அதன் தேர்தல் உறுதிமொழிகளை ஒதுக்கும் தன்மையுடையது. ஜப்பான் டைம்ஸின் கருத்துப்படி, “DPJ வரிகளற்ற நெடுஞ்சாலைப் பயணத்திட்டம், தனி விவசாயிகளின் வருமான இழப்பிற்கு ஈடு மற்றும் உயர்நிலைப்பள்ளி இலவசக் கட்டணத் திட்டம் ஆகியவை பற்றிப் பெரும் சலுகை கொடுத்துள்ளது”, இதைத்தவிர குழந்தைகளுக்கான படிகளும் உள்ளன.

அடுத்த பிரதம மந்திரியாக யார் பதவி ஏற்றாலும், அவர் உடனே ஜப்பானின் மற்றும் சர்வதேசப் பெருவணிகத்திடமிருந்து சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த அழுத்தம் பெறுவார்கள்; ஊக்கப்பொதிகளுக்காக அல்ல. பரந்த சந்தேகம், விரோதப் போக்கு, அப்பட்டமான எதிர்ப்பு ஆகியவை முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் உள்ள நிலையில், வரவிருக்கும் அரசாங்கம் முந்தையதைவிட அதிக காலம் நீடிக்காது எனத்தான் தோன்றுகிறது.