சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The stench of a police state

ஒரு பொலிஸ் ஆட்சியின் துர்நாற்றம்

Julie Hyland
17 August 2011

use this version to print | Send feedback

கடந்த 12 நாட்களில் நடந்த சம்பவங்கள் பிரிட்டன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். இலண்டனிலும் ஏனைய நகரங்களிலும் இளைஞர்களின் கலகங்களுக்கு விடையிறுப்பாக கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசு ஒடுக்குமுறை மற்றும் வலதுசாரி வெறித்தனம், பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கான ஆளும் வர்க்கத்தின் தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

ஆகஸ்ட் 4ல் வடக்கு இலண்டனில் உள்ள டோட்டென்ஹாமில், நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான றுப்பினத்தைச் சேர்ந்த 29 வயது மார்க் டக்கனை பொலிஸ் படுகொலை செய்த்தால் இந்த கலகங்கள் தூண்டிவிடப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து அவருடைய படுகொலைக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அமைதியாக நடந்த ஒரு போராட்டத்தில் முன்னறிவிப்பின்றி பொலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் கூட, இந்த குற்றங்களுக்கு காரணமாக எந்த அதிகாரியும் அடையாளம் காணப்படாதது மட்டுமல்லாது குற்றம்சாட்டப்படக்கூடவில்லை.

அதற்குமாறாக, சட்டவிரோதமாக ருப்பேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்ஜியத்தில் நடந்த தொலைபேசி அழைப்பு ஒட்டுக்கேட்பு சம்பவத்தை மூடிமறைத்த பெரும் செல்வந்தர்கள் மற்றும் வங்கிகளை பிணையெடுக்க பொதுநிதிகளைக் கொள்ளையடிக்க ஒப்புதல் வழங்கிய அரசியல் மேற்தட்டுக்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் "குற்றத்தனம்" மற்றும் "நெறிபிறழ்வுக்கு" எதிராக ஒரு சட்டமுறையற்ற நீதிநடவடிக்கையை ஏவ விரும்புகிறது.

தொழிற்கட்சியால் உற்சாகப்படுத்தப்பட்டுள்ள, பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் அவருடைய பழமைவாத-தாராளவாத ஜனநாயக அரசாங்கம், நீர்பீய்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் தோட்டக்களைப் பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்கி, வக்கிரமான அரசு ஒடுக்குமுறையை ஒழுங்கமைத்துள்ளது. மேற்படி வரும் சமூக கிளர்ச்சிகளுக்கு எதிராக இராணுவத்தையும் கூட பயன்படுத்தக்கூடும்.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன., குற்றமற்றவர்கள் என்ற ஊகம் நிராகரிக்கப்பட்டு பொலிஸ் பாரிய கைது நடவடிக்கைகளை நடத்துவதுடன், கைது செய்யப்பட்டவர்களை ஒழுங்குமுறையான விசாரணை செய்யாது நீதிமன்றங்கள் நேரடியாக அதிகாரிகளின் கட்டளைக்கேற்ப செயல்படுகின்றன.  

தலைநகரிலும், ஏனைய இடங்களிலும் சுமார் 3,000 மக்கள் (அதில் பெரும்பான்மையானவர்கள் 16முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள்) சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு முக்கியமாக சிறிய குற்றங்களுக்காக கூட பொலிஸ் மக்களின் வீட்டுக்கதவுகளை நொருக்கிக் கொண்டிருக்கிறது. குற்றஞ்சாட்டப்படாமல், வெறுமனே கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களும், புகைப்படங்களும் ஊடகங்களில் தினமும் வெளியாகி வருகின்றன. விடலைப்பருவ (சுமார் 11 வயது இருக்கக்கூடியவர்கள்) பிரதிவாதிகளின் பெயர்கள் வெளியிடக்கூடாது என்ற அவர்களின் உரிமையும் கூட கடைபிடிக்கப்படுவதில்லை.

தண்டனை வழங்குவதில் நீதிபதிகள் "சட்ட புத்தகத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை" என்று ஒரு இலண்டன் நீதிமன்ற நீதிபதி தவறுதலாக அதனை ஓர் அரசாங்க "கட்டளை" என்று அறிவித்துள்ளார்.  இன்றைய நிலையில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்கு முன்னால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். சிலர் 24மணி நேரத்திற்கு உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அங்கே வழக்கறிஞர்கள் பற்றாக்குறையோடு, ஆவண வேலைகள் மேலோட்டமாக முடிக்கப்பட்டு, மிகவும் வன்மையான மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் பலரின்மீது அதற்கு முன்னர் வேறெந்த குற்றஞ்சாட்டும் இல்லையென்றாலும் கூட, அவர்களில் மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்டோருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. திருட்டு பொருட்களைக் கையாண்டமைக்காக தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களும் ஆறுமாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல், 3.50 பவுண்ட் மதிப்புடைய தண்ணீர் போத்தல்களைத் திருடியமைக்காக, மாணவர்களும் இதே நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அவர்களில் பலர் இப்போது தான் முதன்முறையாக நீதிமன்ற தீர்ப்பையே முகங்கொடுக்கின்றனர். கலகங்களுக்காக பத்து ஆண்டு சிறைத்தண்டனை உட்பட, இன்னும் கடுமையான தண்டனைகளை வழங்கும் முதன்மை நீதிமன்றங்களுக்கு முன்னால் ஆஜர்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல மாதங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக தொந்தரவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளோடு கூட்டு தண்டனையென்பது நாளாந்த நடைமுறையாகி உள்ளது. குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லாமல், தாய்மார்களும் குழந்தைகளும் அவர்களின் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதேவேளையில் கலகங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களின், அவர்கள் எந்த பிரச்சினைக்காகவும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, அவர்களின் சுகாதாரநலன்களை வெட்டவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இலண்டனில் கிளர்ச்சிகள் மேலெழுந்த போது, மறைகுறியீடாக்கிய  (encrypted) சமூக தகவல் பரிமாற்ற வலையமைப்புகளுள் புகுந்து பொலிஸ் தகவல்களை அறிந்து நூறுக்கணக்கான மக்களின் கைத்தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதோடு, அவர்களின் குறுந்தகவல்களையும் பார்வையிட்டதாக கடந்தவாரம் செய்திகள் வெளிக்காட்டப்பட்டது. பிளாக்பெர்ரி குறுந்தகவல் சேவை மற்றும் ட்வீட்டர் சேவைகளை முடக்கவும் கூட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதனோடு சேர்ந்து, மின்னணு தொலைதொடர்பைக் கண்காணிக்கும் தேசிய பாதுகாப்பு மையமான GCHQஇனையும் மற்றும் MI5 ஆகியவற்றையும் பயன்படுத்தி அரசாங்கம் தகவல்களை அறிந்துகொண்டது.

இதே ஆளும் மேற்தட்டு தான் அதன் வெளிநாட்டு கொள்கை நலன்களுக்கு பொருந்தும்போது ஏனைய நாட்டு அரசாங்கங்களை  குழிபறிக்க சமூக ஊடகங்களைப் பாராட்டுகின்றன. ஈரானில் ஜனாதிபதி மஹ்மொத் அஹ்மனிஜத்தைத் தூக்கியெறிந்து, ஒரு மேற்கு-ஆதரவு ஆட்சியை நிறுவும் அமெரிக்க-ஆதரவு முயற்சிகளின் பாகமாக, அங்கே ஏற்பட்ட "ட்வீட்டர்" புரட்சி என்றழைக்கப்பட்டதை ஊக்குவித்தது. எவ்வாறிருந்தபோதினும், அதன் சொந்த மண்ணில், ஆட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைதொடர்பின் எந்த வடிவத்திடமும் அது இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறது.

இவை அனைத்தும் "காட்டு எலிகள்" என்றும், “காட்டு மிருகங்கள்" என்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களை முத்திரைகுத்த நியாயப்படுத்தப்படுகின்றன. உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலின் வலது மற்றும் "இடது" என இரண்டின் பிரதிநிதிகளும் ஒரு "குற்றத்தனமான அடிமட்ட வர்க்கம்" என்று குற்றஞ்சாட்டும் சகல கருத்துக்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்தின்படி இவை சமூகநல அரசு மற்றும் "பல்வித-கலாச்சாரத்தால்" உருவாக்கப்பட்டதாகும். இதேபோன்ற கருத்துக்களை, கடந்த மாதம் நோர்வேயில் 76 நபர்களை, முக்கியமாக இளைஞர்களை, படுகொலை செய்வதற்கு முன்னர் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவெக்கால் வெளியிடப்பட்ட பாசிச அறிக்கையில் காணலாம்.

புலம்பெயர்வு உள்நாட்டு கிளர்ச்சியைத் தூண்டிவிடுமென்று முதன்மை-பாசிசவாதி டோரி அரசியல்வாதி எனோச் போவல் 1960களில் எச்சரித்தது சரியென்று சமீபத்தில், பிபிசி-இல், வரலாற்றாளர் டேவிட் ஸ்டார்கே வலியுறுத்தினார். இது இனங்களுக்கிடையிலான வன்முறையின் விளைவாக இருக்கும் என்று கருதியதே போவலின் தவறு என்று ஸ்டார்க்லே வலியுறுத்தினார். வெள்ளை தொழிலாள வர்க்க இளைஞர்கள் "கறுப்பின இளைஞர்கள் மாறிய போது" என்ன நடந்தது என்றால், "இங்கிலாந்தில் பரவிய"  “கறுப்பின" கலாச்சாரத்தால் அது மூழ்கடிக்கப்பட்டது. "அதனால் தான் கருத்தளவில் நம்மில் பலருக்கு ஒரு வெளிநாட்டில் வாழ்வது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது" என்றார்.

தமது வெறுப்பின் இலக்குகளைக் காட்ட ஸ்டார்க்லே குணாம்சரீதியில் இனவாத சொற்களைப் பயன்படுத்துகிறார் என்றபோதினும், அவர் அனைத்து தொழிலாள வர்க்க இளைஞர்களையும் குற்றஞ்சாட்ட தெளிவாக "கறுப்பினம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

அவருடைய குரோதம் தாராளவாத அமைப்பு மற்றும் அடையாள அரசியலின் ஊழல் நிர்வாகிகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. Politics.co.uk இணைய இதழின் ஆசிரியர் ஐயன் டான்ட் போன்ற ஒருகாலத்திய உள்நாட்டு சுதந்திர ஆலோசகர்கள், ஜனநாயக விரோத முறைமைகளுக்கு எதிரான தங்களின் முந்தைய கடுமைகள் கைவிடப்பட வேண்டுமென அறிவிக்கின்றனர். “சமூக உடைவின் ஒரு மினுக்கொளியால்" கவரப்பட்டு, டான்ட் எழுதுகிறார், “கடுமையான தடையாணைகள் நமக்கு தேவையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்."

இடது" என்றழைக்கப்படும் தொழிலாளர் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளான கென் லிவிங்ஸ்டோனும், டேனி அபோட்டும் பொலிஸின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்தவும் அழைப்புவிடுக்கின்றனர். அதேவேளை அவர்களின் சிறுபான்மை விமர்சகர்கள் (இவர்கள் தங்களின் கூடுகளைக் கட்ட இனவாத அரசியலைக் கலந்தவர்கள்) இன்னும் அதிகமான ஒடுக்குமுறையைக் கோருகின்றனர். மேற்கு மிட்லேண்டின் சாண்ட்வெல்லில் உள்ள இனங்களுக்கிடையிலான சமத்துவ அமைப்பின் தலைமை நிர்வாகி டெர்ரெக் கேம்ப்பெல், இளைஞர்கள் தடியால் அடிக்கப்பட அழைப்புவிடுக்கின்றனர்.

அரசியல் மேற்தட்டில் ஏற்பட்டிருக்கும் மனநோய்க்கு கடந்த வாரத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை மட்டுமே காரணமாக கூறமுடியாது. ஏற்கனவே ஐரோப்பா, மத்தியகிழக்கு மற்றும் சர்வதேச அளவிலும் பிரமாண்ட அதிர்வுகளையும், மேலெழுச்சிகளையும் உண்டாக்கி கொண்டு, வர்க்க பிளவுகளைத் அதிகளவில் தூண்டிவிடும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியோடு அது இரண்டாவது கட்டத்திற்குள் நுழைந்திருப்பதை முதலாளித்துவம் நன்கு அறிந்துள்ளது.

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளை, என்ன வரவிருக்கிறதோ அதன் ஒரு முன்நிகழ்வாக மட்டுமே அவர்கள் காண்கின்றனர். மேலும் அது அவர்களின் சொந்த அரசியல் தயாரிப்பின்மையாலும் திகைத்து போயுள்ளது. மோசமடைந்துவரும் சமூக நிலைமைகள், கொடூரமான செலவின வெட்டுக்களுக்கு மக்களின் எதிர்ப்பை இந்த தொழிலாளர் கட்சியும், தொழிற்சங்கங்களும், வாழ்க்கைக்கேற்ப மாறும் "இடதுகளால்" எந்தளவிற்கு கட்டுப்படுத்தி வைக்க முடியுமென்று தனிப்பட்டமுறையில், அவர்கள் அவர்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றனர். இளைஞர்களிடையே எழும் சமூக கோபத்தின் வெடிப்பில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு மிக பரந்த கோபத்திற்கான ஓர் அச்சுறுத்தும் முன்னோட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.

முதலாளித்துவ அமைப்பின் தோல்வியால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுக்கு எதிரான வர்க்க போராட்டங்களின் வெடிப்பிற்கு அவர்களின் விடையிறுப்பானது கட்டவிழ்ந்த அரசு வன்முறையோடு ஜனநாயக உரிமைகளை அழிப்பதாகும் என்பதை கலகங்களுக்கு அவர்கள் காட்டிய பிரதிபலிப்பு தெளிவுபடுத்துகிறது.

நீண்டகால அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கியெறிவது மட்டுமே எதிர்கால வறுமை, வேலைவாய்ப்பின்மை, யுத்தம் மற்றும் சர்வாதிகாரத்திலிருந்து இளைஞர்களையும், தொழிலாள வர்க்கத்தையும் வெளியில் கொண்டுவர ஒரு பாதையை வழங்கும்.