சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Merkel and Sarkozy propose financial dictatorship

மேர்க்கெலும் சார்க்கோசியும் நிதியச் சர்வாதிகாரத் திட்டத்தை முன்மொழிகின்றனர்

By Peter Schwarz
18 August 2011

use this version to print | Send feedback

ஜேர்மனிய சான்ஸலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் செவ்வாயன்று, யூரோ நெருக்கடியை எப்படிக் கட்டுப்படுத்துவது, சந்தைகளை எப்படி அமைதிப்படுத்துவது என்பது பற்றி பாரிசில் ஒரு அவசர உச்சிமாநாட்டை நடத்தினர். ஆனால் இதனால் வரக்கூடிய இறுதி விளைவு, எதிர்பார்ப்புக்களைவிட மிகவும் குறைவாகத்தான் இருந்தது.

யூரோவைத் தக்க வைக்கும் தங்களது உறுதியை, அவர்கள் அறிவிப்பில் நிரூபிக்கும் வகையில் மேர்க்கெலும் சார்க்கோசியும் மூன்று திட்டங்களுக்கு உடன்பட்டனர். ஆனால் வல்லுனர்கள் சாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்று கருத்தும் நடவடிக்கைகளுக்கு அப்பால், முன்னதாக விவாதித்திருந்ததற்கு மேலாக அவர்கள் செல்லவில்லை.

முதலாவது ஒருஐரோப்பிய பொருளாதார அரசாங்கத்தை தோற்றுவிப்பது; இது 17 யூரோப் பகுதி நாடுகளின் பொருளாதார, நிதியக் கொள்கைகளை இன்னும் சிறப்பாக ஒருங்கிணைக்கும். யூரோப் பகுதி அரசாங்கத் தலைவர்கள் இதற்காக ஆண்டிற்கு இரு முறை கூட வேண்டும் என்றும் அது ஐரோப்பிய ஒன்றியக் குழுத் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் மேர்க்கெலும் சார்க்கோசியும் கூறியுள்ளனர்.

அத்தகைய பொருளாதார அரசாங்கம் முன்னதாகவும் ஒரு சிறப்பு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பால் யூரோ நெருக்கடியை தடுக்க இயலவில்லை. ஜேர்மனிய-பிரெஞ்சுக் கூட்டு முனைப்பின் விளைவாக ரொம்பை அப்பொழுதுயூரோவிற்கான உடன்படிக்கை ஒன்றை இயற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்; அது பின்னர் ஒரு இரண்டாவது சிறப்புக் கூட்டத்தில் மார்ச் மாதம் ஏற்கப்பட்டது.

இந்த உடன்படிக்கை  யூரோப் பகுதி நாடுகளை நிதிய விவகாரங்களில் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதும், பொதுக் கடன்களைக் கடுமையாகக் குறைக்கவும், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், வரிகளைப் பொறுத்தவரை பொது இலக்குகளை ஏற்க வேண்டும் என்றும் உறுதிகொள்ள வைக்கிறது. இதற்கு ஈடாக ஜேர்மானிய அரசாங்கம் யூரோ மீட்பு நிதிக்கு அதிகம் உதவுவதாகவும், ஒரு நிரந்தர யூரோ பிணைஎடுப்புக் கருவியை நிறுவவும் ஒப்புக் கொண்டது.

மேர்க்கெலும் சார்க்கோசியும் வசந்த காலத்தில் பாரிசில் அறிவித்தனர்: “ஜேர்மனியும் பிரான்ஸும் 2011ம் ஆண்டு யூரோவின் மீது ஒரு புதிய நம்பிக்கை நிறுவப்படும் ஆண்டாகச் செய்யப்படும் என்பதில் உறுதி கொண்டுள்ளன.” இதே உறுதிமொழியை அவர்கள் செவ்வாயன்று நடந்த அவற்றின் உச்சிமாநாட்டிலும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புதிய திட்டம் முந்தையதிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பது தெளிவாக இல்லை.

இந்த வாரம் மேர்க்கெலும் சார்க்கோசியும் முன்வைத்துள்ள இரண்டாவது திட்டமும் ஒன்றும் புதிதல்ல. 2012 நடுப் பகுதிக்குள், 17 யூரோப் பகுதி நாடுகளும் அரசியலமைப்பின் அடிப்படையில் கடன் உச்சவரம்பு ஒன்றை நங்கூரம்போல் நிறுவ வேண்டும்; இது ஜேர்மனிய முன்மாதிரியில் இருக்க வேண்டும். இதை எல்லா நாடுகளும் அவற்றின் தேர்தல் முடிவுகள், அரசாங்க மாற்றம் இவற்றைப் பொறுத்து இல்லாமல் உறுதியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

பெரும்பாலான யூரோப் பகுதி நாடுகளில் ஓர் அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மை தேவைப்படுவதால், உறுதியாக எல்லா அரசாங்கங்களும் இத்திட்டத்தை ஏற்றாலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை. பிரான்சில் இத்தகைய முடிவைச்  செயல்படுத்துவதற்கு சார்க்கோசியிடம் போதுமான பெரும்பான்மை இல்லை.

மேர்க்கெல் மற்றும் சார்க்கோசியின் மூன்றாவது திட்டம்கூட நிதிச் செயற்பாடுகளில் வரி அடையப்படக்கூடிய வாய்ப்பை கொண்டிருக்கவில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அத்தகைய வரி பிரிட்டனும் அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுசெயல்படுத்தினால்தான் திறமையுடன் செயல்படும், ஆனால் அவை இந்நடவடிக்கையை நிராகரித்துவிட்டன. இத்திட்டம் நீண்டகாலமாக இத்தகையடோபின் வரி தேவை எனக் கோரிவரும்இடது சக்திகளையும் ஈர்க்கும் வடிவமைப்பைக் கொண்டது.

ஜேர்மனியச் செய்தி ஊடகம் மற்றும் உச்சிமாநாட்டிற்கு வந்திருந்த நிதிய வல்லுனர்கள் ஏமாற்றத்திற்கும் ஏளனத்திற்கும் இடையே பெரிதும் ஊசலாடினர். “நிறையச் சொற்கள், குறைந்த செயல்கள்தான் என்று Spiegel Online எழுதியது: “ஐரோப்பாவிற்கு ஒரு சிறு சீர்திருத்தம் என்று Handelsblatt  அறிவித்துள்ளது.

உச்சிமாநாட்டின் முடிவு பற்றிஇந்த விளைவுகள் எதிர்பார்க்கப்பட்டன, யூரோவுக்குத் தேவையான ஊக்கத்தை இது அதிகம் அளிக்காது என்று Commerzbank கூறியுள்ளது. புதனன்று ஐரோப்பியப் பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் தொடங்கின, ஆனால் பகல் வணிகத்தின்போது சற்றே மீண்டன.

மேர்க்கெல் மற்றும் சார்க்கோசி இன்னும் பிற ஐரோப்பியத் தலைவர்கள் 2007இல் அமெரிக்கத் குறைந்த பிணையுள்ள அடமானச் சந்தையில் (subprime market) தொடங்கி, 2008ல் வங்கிகளுக்குப் பரவி, இப்பொழுது ஐரோப்பிய அரசாங்கங்களின் கடன்களாக குவிப்புக் காட்டும் நெருக்கடியின் மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் வங்கிகளின் பிணை எடுப்பிற்கு அளிக்கப்பட்டவை, கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் இன்னும் மற்ற அதிக கடன்பட்டுள்ள நாடுகள் அடிபணிந்து செயல்படுத்தியுள்ள மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளின் மூலமும் இந்த நெருக்கடியைக் கடக்க முடியவில்லை.”

மேர்க்கெலும் சார்க்கோசியும் பெப்ருவரி மாதம் பொது நாணயத்தின் தன்மையை மீட்பதற்காக எனக் கூறப்பட்டயூரோவிற்கான உடன்பாடு என்பதை அறிவித்தபோது, இருதரப்பும், ஐரோப்பிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை உச்சிமாநாடுகள் நடத்திய வண்ணம் உள்ளன. இவை அனைத்தும் இருந்தபோதிலும்கூட, யூரோப் பகுதிகளின் சிறு நாடுகளுடைய கடன் நெருக்கடி ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றிற்குப் பரவி இப்பொழுது பிரான்ஸையும் அச்சுறுத்துகிறது. இதற்கிடையில், ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது; இது கடன் நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தும்.

பிரெஞ்சு அரசாங்க பத்திரங்கள் மீதான வட்டிவிகிதத் தரம் குறைக்கப்படலாம், மிகப் பெரிய பிரெஞ்சு வங்கியான Société Générale இன் வட்டிவிகிதத் தரம் குறைக்கப்படலாம் என்பவை மற்ற வதந்திகளுடன் சேர்ந்து கடன்திருப்பிக் கொடுத்தல் இடர்பாடுகளை கடந்த இரு வாரங்களில் பங்குச் சந்தைகளைப் பீதிக்குத் தள்ளுவதில் இடம் பெற்றிருந்தன. ஜனாதிபதி சார்க்கோசி, சந்தைகளை அமைதிப்படுத்தும் வகையில் ஜேர்மனிய சான்ஸலரை உச்சமாநாட்டிற்கு அழைத்திருந்தார். ஆனால் இக்கூட்டத்தின் விளைவு, அடுத்த உச்சிமாநாடும் மிக விரைவில் கூட்டப்பட வேண்டும் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது.

இத்தகைய மிகக்குறைந்த விளைவு இருந்போதிலும்கூட, மேர்க்கெல் மற்றும் சார்க்கோசிக்கு இடையே நடந்த பேச்சுக்கள் ஒரு தோற்றுவிட்ட பொது உறவு நிகழ்வு என்பதைவிட அதிக தன்மையைக் கொண்டுள்ளது. இருவரும் இன்னும் அதிக வெட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல், ஒருவித ஐரோப்பிய நிதியியல் சர்வாதிகாரத்தை நிறுவுவதல் என்பதற்கு தங்கள் விருப்பத்தை அடையாளம் காட்டியுள்ளனர். அவர்களுக்கு அவற்றைச் செயல்படுத்த இன்னும் கால அவகாசம் தேவை.

பேச்சுக்களுக்கு முன்னதாகவே, யூரோவும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் கடன்கொடுத்துள்ள வங்கிகளை திருப்தி செய்ய ஜேர்மனி இன்னும் அதிக நிதி கொடுக்கவில்லை என்றால் செயல்படாது என்பது தெளிவாயிற்று. இதுவரை ஜேர்மனிய அரசாங்கம் ஒவ்வொரு நாடும் அதன் கடனுக்குப் பொறுப்பைக் கொள்ள வேண்டும், யூரோ மீட்பு நிதிக்கான தன் உதவிக்கு இன்னும் கடுமையான நிபந்தனைகளைத் தான் விதிக்க வேண்டும் என்றுதான் எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ளது.

கிரேக்கம் இன்னும் பிற அதிக கடன்பட்டுள்ள நாடுகள் சிக்கன நடவடிக்கைகளை சுமத்திய பின்னரும் ஆழ்ந்த மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன; இப்பொழுது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இன்னும் கூடுதலான வட்டியைத் தங்கள் கடன்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இருந்தும்கூட, இப்போக்கு நிலைமை சீராகும் எனக் காட்டவில்லை. இதன் விளைவாக யூரோவைக் காப்பாற்ற இன்னும் எவ்வளவு நிதி அளிக்கப்பட வேண்டும் என்ற வினா ஜேர்மனியில் வெடித்துள்ளது.

யூரோவின் தோல்வி, ஏற்றுமதியை நம்பியுள்ள ஜேர்மனிய பொருளாதாரத்தை பேரழிவு தரக்கூடிய நெருக்கடியில் தள்ளும் என்று பொருளாதார வல்லுனர்கள் உடன்பட்டாலும்கூட, சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) இன்னும் மேர்க்கெலின் கூட்டணி அரசாங்கத்தின் பிற உறுப்புக் கட்சிகளும் யூரோப் பத்திரங்கள் என அழைக்கப்படுவது நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை உறுதியாக நிராகரித்துவிட்டன. கூட்டணி அரசாங்கத்தின் மற்ற உறுப்பு நாடுகள், குறிப்பாக எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைவாதிகள் இது ஒன்றுதான் யூரோவைக் காப்பாற்றும் என்று நினைக்கின்றன.

இத்தகைய பொது ஐரோப்பியப் பத்திரங்கள் மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகளின் வட்டிச் சுமையைக் குறைக்கும், அதே நேரத்தில் ஜேர்மனியும் மற்ற நாடுகளும் அதிக வட்டி விகிதங்களை கொடுக்க நேரிடும்.

உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக, யூரோப் பத்திரங்களை வெளியிட தான் இனி உறுதியாக எதிர்க்காது என்ற ஜேர்மனிய அரசாங்கத்தின் குறிப்புக்கள் வெளிவந்தன. ஆனால் தற்போதைக்கு மேர்க்கெல் அவருடைய ஆளும் பெரும்பான்மைக்கு ஆபத்து இல்லாத வகையில் அத்தகைய முடிவை எடுக்க இயலாது.

தன்னுடைய பங்கிற்கு மேர்க்கெல்லின் நிலைமைக்கு மரியாதை காட்டும் வகையில் சார்க்கோசி யூரோப் பத்திரங்களுக்கு ஆதரவாக இன்னும் பகிரங்கமாகப் பேசவில்லை. செய்தி ஊடகத்திற்கு தக்க தகவல் கொடுக்குமாறு தன் அரசாங்கத்தின் சற்று கீழ்மட்ட அதிகாரிகளை அவர் பணித்துள்ளார். உச்சிமாநாடு முடிந்தவுடன் அவர், “ஐரோப்பிய ஒருங்கிணைப்பு வழிவகையின் முடிவில், வருங்காலத்தில் ஒரு கட்டத்தில் அத்தகைய பத்திரங்கள் வெளியிடப்படலாம் என நாம் கற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

யூரோப் பத்திரங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு ஜேர்மனி மிகக் கடுமையான நிபந்தனைகளை இணைத்துள்ளது. அரசாங்கச் செலவுகளை சமாளிக்க அத்தகைய பத்திரங்களைப் பயன்படுத்த விரும்பும் நாடுகள், தங்கள் வரவு-செலவுத்திட்ட, நிதிய, தொழிலாளர் சந்தை குறித்த கொள்கைகளை ஐரோப்பிய நிறுவனங்களின் ஆணைகளுக்கு உட்படுத்த வேண்டும்ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆணை போல்; இவைசுதந்திரமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது, அதாவது, எவ்வித ஜனநாயகக் கட்டுப்பாடும் இன்றிச் செயல்படுகின்றன. மக்கள் விருப்பத்திற்கு எந்தவித பொறுப்பும் ஏற்காத இத்தகைய வழிவகை ஏற்கனவே அதிகம் முன்னேறிவிட்டது. “பாராளுமன்றத்திற்குப் பொறுப்பு என்னும் கருத்திற்கு ஐரோப்பிய உயரடுக்குகள் கொண்டுள்ள இகழ்வு என்னும் புற்றுநோய், இரு நூறு ஆண்டுகளாக பொறுப்பான அரசாங்கம் என்னும் கொள்கையை யூரோப் பகுதி நெருக்கடி அதிகரிக்கையில் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று பிரிட்டனின் ஒப்சர்வர் கூறியுள்ளது.

மேர்க்கெலும் சார்க்கோசியும் பாரிசில் முன்வைத்துள்ள திட்டங்கள் இத்திசையில்தான் செல்கின்றன. அவர்கள் வாதிடும்பொருளாதார அரசாங்கம் என்னும் கருத்தில் உறுதியான கூறுபாடுகள் இன்னும் வரவில்லை. ஆனால் மிகச் சக்தி வாய்ந்த ஐரோப்பிய நிதிய நலன்கள், சமூக வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகள் மீதும் கட்டுப்பாட்டை கொள்ளும் என்ற சர்வாதிகார நிலையைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது. இவர்கள் கோரும் சமச்சீர் வரவு-செலவுத் திட்டங்கள் என்பது பாராளுமன்றங்களை வலிமை இழக்கச் செய்துவிடும்; அதையொட்டி அரசச் செலவுகள் மற்றும் வருவாய்கள் ஆகியவை பற்றிய முடிவு என்னும் மிக முக்கியமான அதிகாரத்தை அவைகள் இழந்துவிடும்.