சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Fighting continues in Tripoli after Gaddafi compound is overrun

கடாபி வளாகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டும் திரிப்போலியில் போர் தொடர்கிறது

By Bill Van Auken
4 August 2011

use this version to print | Send feedback

செவ்வாயன்று நேட்டோ ஆதரவுடைய படைகள் முயம்மர் கடாபியின் அதிக தாக்குதலுக்கு உட்பட்டிருந்த பாப் அல்-அஜிசியா வளாகத்தை சூறையாடிய பின்னரும் லிபியத் தலைநகரான திரிப்போலியில் மோதல்கள் தொடர்ந்தன.

பெங்காசியைத் தளமாகக் கொண்ட தேசிய மாற்றுக்காலக் குழு (NTC) உறுப்பினர்கள் வளாகம் வீழ்ந்ததை இறுதி வெற்றியென அறிவித்து, செய்தி ஊடகம் அதை எதிரொலித்தும்கூட, கடுமையான போர்கள் இரு மில்லியன் மக்கள் வசிக்கும் திரிப்போலியின் பல பகுதிகளில் தொடர்ந்தன.

வளாகம் விசுவாசமான  துருப்புக்களால் அதிக கவனத்துடன் பாதுகாக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது; அங்கிருந்த படைகள் தாக்குதல் தொடங்கியவுடனேயே ஓடி விட்டனர். முந்தைய ஐந்து மாதங்களும் அது நேட்டோ போர் விமானங்களின் பெரும் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தது; அவை கடாபியைப் படுகொலை செய்யும் நோக்கத்துடன் வளாகத்தைக் குறிவைத்திருந்தன என்பது தெளிவு. இத்தாக்குதல்கள் கடந்த வாரம் தீவிரமாக இருந்தன.

ஆயுதமேந்திய நேட்டோ ஆதரவுடைய படைகள் வளாகத்திற்குள் புயலென நுழைந்தபோது, ஏராளமான திரிப்போலி வாழ்மக்களும் சேர்ந்து கொண்டனர்; கட்டிடங்களைக் கொள்ளையடிப்பதில் அவர்களும் சேர்ந்து கொண்டனர்; துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் தொலைக்காட்சிப் பொருட்கள் இன்னும் பல பொருட்களும் சூறையாடப்பட்டன.

கடாபி அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது மூத்த அதிகாரிகள் எவரும் வளாகம் வீழ்ந்தபோது அங்கிருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை. 1969ல் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த மன்னரை இளம் இராணுவ அதிகாரிகள் அகற்றி கடாபியை ஆட்சியில் இருத்தியதிலிருந்து அங்கு ஆட்சிசெய்து வரும் கடாபி எங்குள்ளார் என்பது இன்னும் அறியப்படவில்லை.   

நேட்டோ ஆதரவுடைய படைகள் தலைநகருக்குள் நுழைந்து இரு நாட்கள் ஆகியும், கடாபி ஆட்சி விழுந்துவிட்டது என்ற அறிவுப்புக்களைத் தூண்டியும்கூட, கடுமையான மோதல்கள் அல்-மன்சௌரா மாவட்டம் இன்னும் தலைநகரின் மற்ற பகுதிகளிலும் தொடர்கின்றன.

எழுச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகக் கூறும் திரிப்போலி சர்வதேச விமான நிலையம் செவ்வாயன்று பெரும் மோதல்களின் களமாக விளங்கியது.

நகரம் ஆபத்தான முறையில் பழங்குடி மக்களிடையே பிரிந்துள்ளது, கடாபிக்கு இன்னும் ஆதரவு கொடுப்பவர்கள், எதிர்ப்பவர்கள் ஆகியோருக்கு இடையே சமூகப் பிளவுகள்  உள்ளன என்று வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் எச்சரித்துள்ளது. “இப்பிளவுகள் அதிகார வெற்றிடம் என்ற அச்சுறுத்தலைத் தரும் வகையில் பெருகிய முறையில் தெரு மோதல்களாகியுள்ளன, இரண்டு மில்லியன் மக்கள் கொண்ட இந்நகரம் பால்கன் முறையில் பிளவுகளைக் கண்டுள்ளது.”

பாப் அல்-அஜிஜியா வீழ்ச்சி அடைந்தவுடன்  நியூ யோர்க் டைம்ஸ்  குறிப்பிட்டுள்ளபடி, “ஒரு புதிய வெற்றி என எழுச்சியாளர்கள் கூற்று இருந்தபோதிலும்கூட, வளாகத்தை முழுமையாக அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லைஅப்படிப் பார்த்தால் எழுச்சியாளர்கள் திரிப்போலியில் பெற்றுள்ள ஆதாயங்கள் மோதலில் ஒரு உறுதியான வெற்றியின் தொடக்கங்களாஅல்லது தலைநகர் மீது கட்டுப்பாட்டிற்கான நீடித்த தெரு மோதல்களின் திறனைக் கொண்டுள்ளதா என்றும் தெளிவு இல்லை. எழுச்சியாளர்கள் மிகைப்படுத்திக் கூறும் முன்னேற்றம் பற்றிய கூற்றுக்கள்கடாபியின் இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர் என்று கூறியது பின்னர் தவறு என்று நிரூபிக்கப்பட்டதுஅவர்களின் நம்பகத்தன்மை பற்றி அது உதவவில்லை.”

செவ்வாய் அதிகாலையில் NTC யின் நம்பகத்தன்மை பெரும் அடியைப் பெற்றது; அப்பொழுது கடாபியின் மகனும் பதவிக்கு வாரிசுமான சைப் அல்-இஸ்லாம் Rixos Hotel ல் தோன்றினார்; அங்கு கடாபி ஆதரவுப் படைகளால் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். திங்களன்று பெங்காசியைத் தளமுடைய குழு அவர் கைது செய்யப்பட்டுவிட்டார் எனக் கூறிய நிலையில்ஹேகில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை விசாரிக்கத்தயார் என்று கூறியபோதுஅவர் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் துப்பாக்கி படைகள் சூழ்ந்து முற்றிலும் சுதந்திரமாகத்தான் இருந்தார்.

சைப் அல்-இஸ்லாம் செய்தியாளர் குழு ஒன்றை அவருடன் அருகில் இருந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார்; அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அரசாங்க ஆதரவாளர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவதற்குக் கூடியிருந்தனர்.

அத்தியாயம் வெறுமனே கிளர்ச்சியாளர்கள்  என்று அழைக்கப்படுபவர்களின் ஒரு பொது உறவுகளின் தோல்வியல்ல. இது உடனடியாக NTC யின் உள்ளேயும் மற்றும் அதற்கும் தற்போது திரிப்போலி கட்டுப்பாட்டிற்காக போராடும் மற்றதரப்புகளுக்கும் இடையிலான ஆழ்ந்த அழுத்தங்களை கோடிட்டுகாட்டுகிறது.

நாளின் தொடக்கத்தில் முன்னதாக நேட்டோ ஆதரவுடைய சக்திகளுக்கு கடாபியை அகற்றும் முயற்சியில் பெரும் வெற்றி என்பது மாறியிருப்பதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் கடாபியின் மகன் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது ஒரு போலிக்கதை எனச் சந்தேகிக்கின்றனர்; வேறு சிலர் அவர் தப்பிப் போயிருக்கலாம் அல்லது தன்னைப் பிடித்தவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து விடுவித்துக் கொண்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். சுற்றில் இருக்கும் மற்றொரு விளக்கம் கடாபி ஆதரவுடைய துப்பாக்கி வீரர்கள், “எழுச்சியாளர்கள் போல் நடித்து அவரைக் கைது செய்து, பின்னர் விடுவித்தனர் எனக் கூறுகிறது.

திரிப்போலி பிரிகேடின் முக்கிய தளபதி என்று வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிடும் எம்ஹெமெத் குலா, “அவர்கள் பெங்காசியில் உள்ளனர். ஆனால் திரிப்போலியில் இங்குள்ள நிலைமைக்கு இன்னும் அவர்கள் பொறுப்புக் கொள்ளவில்லை என்று கூறினார் எனத்  தெரிகிறது.

இந்நிகழ்வு வெள்கை மாளிகை மற்றும் பென்டகனிலுள்ள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, அமெரிக்கப் படையெடுப்பின்போது பாக்தாத்தில் சதாம் ஹுசைன் பகிரங்கமாகத் தோன்றியதை நினைவுபடுத்தியிருக்கும்; அதற்குப் பின்தான் அவரும் பிற பாத்திஸ்ட் தலைவர்களும் தலைமறைவாகி இன்று வரைதொடரும் எழுச்சிக்கு வித்திட்டனர்.

கடாபியின் மற்றொரு மகனான முகம்மதும் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு பின்னர் திங்களன்று வீட்டுக் காவலில் இருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

திரிப்போலியைத் தவிர, லிபியாவின் மற்ற பகுதிகள் இன்னமும் மோதலில்தான் உள்ளன. இது கடாபியின் தாயக நகரான சிர்ட்டேயில் குறிப்பாகத் தெரிகிறது; இது ஆட்சி விசுவாசிகளின் கோட்டை எனக் கருதப்பட்டது. பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள் பலர் இச்சிறுநகருள் பின்வாங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது; இது  பெங்காசியை தலைநகரான திரிப்போலியிலிருந்து பிரிக்கும் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ளது.

NTC யின் உறுப்பினர்கள் புதன்கிழமையன்று ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஒன்றாக அமைக்கும் திட்டத்துடன் தாங்கள் திரிப்போலிக்கு வரும் திட்டத்தைக் கொண்டிருந்ததாகக் கூறினர்.

திரிப்போலி நிகழ்வுகள் குறித்து முக்கிய ஏகாதிபத்தியச் சக்திகளின் மனப்பாங்கு NTC க்குள் இருக்கும் பிளவுகள், ஊசல்கள் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. NTC முன்னாள் கடாபி அதிகாரிகள், லிபியாவிலுள்ள CIA “சொத்துக்கள் மற்றும் இஸ்லாமியவாதிகள் என்று பல பிரிவுகளின் கூட்டு ஆகும். அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தாங்கள்ஆட்சி மாற்றம் என்னும் இலக்கை நடத்துவதற்காக விரிவான தயாரிப்புக்களைச் செய்து வருவதாகக் கூறினர். இவர்கள் ஆறு மாத காலமாக ஐ.நா. தீர்மானமான குடிமக்களைக் காத்தல் என்ற மறைப்பின் கீழ் இம்முயற்சியைத்தான் தொடர்ந்து செய்கின்றனர்.

செவ்வாயன்று பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேட்டோ ஆதரவுடையஎழுச்சியாளர்களின் கூற்றான லிபியத் தலைநகரின் 90 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் என்பதற்கு இசைவு கொடுக்கவில்லை. “லிபியாவும், திரிபோலியும் இன்னும் ஆபத்தான இடங்கள்தான் என்று மரைன் கேர்னல் டேவிட் லாபன் கூறினார். “அங்கு நிலைமை தெளிவு இல்லை; கணத்திற்குக் கணம் மாறிக் கொண்டிருக்கிறது.”

கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் படைகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனரா என்று கேட்கப்பட்டதற்கு லாபன்அத்தகைய கணிப்புக்களில் ஈடுபடத்தயாராக இல்லை என மறுத்துவிட்டார்; மேலும்அவர்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்ட போதிலும்கூட….இன்னும் ஆபத்து தரும் தன்மையில்தான் உள்ளனர் என்று எச்சரித்தார்.

லிபியத் தலைநகருக்குள்எழுச்சியாளர்கள் விரைவில் முன்னேறியது, திங்களன்று செய்தி ஊடகத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதுபோல், நவீன அமெரிக்க செய்மதி உளவுத்தகவல் உதவியுடன் பெரும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால்தான் பிரிட்டிஷ், பிரெஞ்சு, கட்டாரி சிறப்புப் படைத் துருப்புக்கள் மற்றும்  தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் தரையில் இயங்கிஎழுச்சியாளர்கள் நடவடிக்கைகளை, கடாபியின் படைகளை நெடுஞ்சாலைகளில் தள்ளும் உந்துதலைக் கொண்டு நடத்தின; அப்பாதைகள் திரிப்போலியை நோக்கிச் செல்பவை; இதையொட்டி அவை வான் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட முடியும்.

லிபிய படைகளின் இறப்பு எண்ணிக்கை பற்றித் தெரியவில்லை. அவர்களில் பலரும் கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர்; மேற்கத்தைய செய்தி ஊடகம் இந்தக் கொடூரமான கதையைப் பற்றிக் கூற அக்கறை காட்டவில்லை.

இதற்கிடையில் பென்டகன் செவ்வாயன்று ஒரு கதையைத் தொடக்கியது; இது CNN இன்னும் பிற செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டது; இதன்படி லிபியாவில் அமெரிக்கா தரையில் துருப்புக்களை இறக்குவதற்குத் தளம் அமைக்கப்பட்டது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க இராணுவம் மிக நெருக்கமாக லிபியாவின் இரசாயன ஆயுதங்களைக் கண்காணிப்பதாகவும், அவற்றில் 10 டன் மஸ்டர்ட் வாயுவும் உள்ளது என்று கூறப்படுகிறது. லிபியாவிலிருந்து ஆயுதங்கள் வெளியேற்றப்படுவதாக செய்தி ஊடக அறிக்கைகள் வந்துள்ளன. இவற்றில் சில காசாவிற்குச் செல்கின்றன என்றும் கூறப்பட்டது. ஈராக் மீது படையெடுப்பதற்குபேரழிவு ஆயுதங்கள் இருப்பது ஒரு போலிக் காரணமாக பயன்படுத்தப்பட்டது போல், லிபியாவில் இருப்பதாகக் கூறப்படும் இரசாயன ஆயுதங்களைக் கைப்பற்றும் தேவை என்பது அதே நோக்கத்திற்கு உதவலாம்.

பிரான்ஸில் எலிசே அரண்மனை ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் இடையே நடைபெற்ற ஒரு தொலைப்பேசி உரையாடல் பற்றிய அறிக்கையை வெளியிட்டது; அதில் இரு அரசாங்கத் தலைவர்களும் லிபியாவில் நேட்டோ இராணுவ நடவடிக்கை தொடர வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடாபியும் அவருடைய ஆதரவாளர்களும் ஆயுதங்களைக் கீழே போடும் வரை லிபிய அதிகாரிகளுக்கு ஆதரவாக தங்கள் இராணுவ முயற்சி தொடரும் என்று அவர்கள் உடன்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது.

செவ்வாயன்று சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு திரிப்போலி முற்றுகை ஒரு மனிதாபிமானப் பேரழிவிற்கான சூழலை ஏற்படுத்திவருகிறது என்ற எச்சரிக்கையை கொடுத்துள்ளது. “திரிப்போலியின் வன்முறை தொடரும் ஒவ்வொரு நாளும் குடிமக்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது; போரின் நடுவே அகப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் என்று மட்டும் இல்லாமல், போரினால் பாதிக்கப்பட்டுள்ள வசிக்கும் பகுதிகளில் நிலைமை மோசமாகிவிடும்; ஏனெனில் உணவு அளிப்புக்கள், குடிநீர், மின்சார வசதி அனைத்தும் தாக்கப்படும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கப் பிரிவு இயக்குனர் மால்கோம் ஸ்மார்ட் கூறினார்.

இந்த அமைப்பு குறிப்பிடத்தக்க எச்சரிக்கையை தலைநகரில் இருந்த தப்பியோட முயலும் குடியேறிய தொழிலாளர்கள் பற்றியும் கொடுக்கிறது. அவர்களில் பலர் துணை சகாரா ஆபிரிக்காவிலிருந்து வருபவர்கள், “பெரும் பாதிப்பிற்கு உட்படக்கூடியவர்கள்”; ஏனெனில் மற்ற பகுதிகளிலுள்ளஎழுச்சியாளர்கள் கறுப்பு ஆபிரிக்க குடியேறியவர்களைத் தாக்கி, மிதித்துக் கொன்றுள்ளனர்.

லிபிய நிகழ்வுகள் செவ்வாயன்று நியூ யோர்க் பங்குச் சந்தையில் ஏறுமுகத்தைத் தூண்ட உதவியுள்ளன. அமெரிக்க நேட்டோத் தலையீட்டினால் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் லிபியாவிற்குள் மீண்டும் நுழையமுடியும் என்ற பெருகும் ஊகம் உள்ளது; ஆபிரிக்காவிலேயே இங்குத்தான் மிக அதிக எண்ணெய் இருப்புக்களும், மிகுந்த இலாபத்தைக் கொடுக்கும் சூழ்நிலையும் உள்ளன.

இப்பிரிவை யார் நிர்வகிக்கப் போகின்றனர், எப்படி வருவாய்கள் பகிர்ந்து கொள்ளப்படும் போன்ற பெரும் வினாக்கள் உள்ளன என்று PFC எரிசக்தி ஆலோசனை நிறுவனத்தின் வட ஆபிரிக்க பகுப்பாய்வாளர் பென் காஹில் வோல் ஸ்ட்ரீட் ஜர்னலிடம்  கூறினார். ஜர்னலின் கருத்துப்படி லிபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனம் மேற்கத்தைய எண்ணெய் நலன்களின் கோரிக்கைகளைச் சந்திப்பதற்குஅடிப்படையில் சீர்திருத்தப்பட வேண்டும்.”