சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

US, NATO plan Libyan “stabilization” as fighting continues

மோதல்கள் தொடர்கையில் லிபியா உறுதிப்பாட்டிற்கு அமெரிக்க நேட்டோ திட்டமிடுகின்றன

By Bill Van Auken 
25 August 2011

use this version to print | Send feedback

லிபியாவில் போர் தொடர்கையில், வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் எண்ணெய்-வளமுடைய வட ஆபிரிக்க நாட்டைஸ்திரப்படுத்துவதற்கு தயாராகின்றன; இதில் வெளிநாட்டுத் துருப்புக்கள் ஈடுபடுத்தப்படுதலும் அடங்கும்.

கடந்த இரு தினங்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் பெங்காசியை தளமாகக் கொண்ட மாற்றுக்கால தேசியக் குழு (NTC) ஆகியவை எப்படி லிபியாவில் ஒழுங்கை நிலைநிறுத்துவது, மேற்கத்தைய எரிசக்தி நிறுவனங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வது என்பது பற்றிய விவாதங்கள் பரபரப்பான பேச்சுக்களில் நடந்து வருகின்றன.

பிரஸ்ஸல்ஸில் ஒரு நேட்டோ செய்தித் தொடர்பாளர் புதன்கிழமையன்று மேற்கத்தைய கூட்டணியின் ஆளும் குழுநேட்டோ இராணுவ அதிகாரிகளுக்கு லிபியாவில் நேட்டோ ஆதரவு கொடுக்கும் பங்கு பற்றிய அரசியல் வழிகாட்டி நெறிகளின் தொகுப்பு ஒன்றை அளித்தார் இது பரந்த சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

நேட்டோ அதிகாரிகள் இத்திட்டமிடுதலில்நேட்டோ லிபியாவில் தரைப்படைகள் எதையும்நீடித்த முறையில் நிலைப்படுத்தாது என்ற உடன்பாடும் அடங்கியுள்ளது என்று கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் மேற்கோளிட்டுள்ளது.

இத்தகைய சூத்திரம் நேட்டோ துருப்புக்கள் நாட்டில் ஒழுங்கை நிலைநிறுத்தகுறைந்தப்பட்சக் காலத்திற்கு அனுப்புவதற்கான திட்டம் உள்ளது என்பதை வலுவாகக் காட்டுகிறது. இத்தகைய விதி தனிப்பட்ட நேட்டோ நாட்டு உறுப்பு நாடுகள் தங்கள் இராணுவங்களை லிபியாவில் ஒரு நீடித்த காலத்திற்கு நிலைநிறுத்துவதை ஒதுக்கிவிடவில்லை.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சரக அதிகாரிகள் சமீபத்தில் வட ஆபிரிக்க நாட்டிற்குஒழுங்கைக் காப்பதற்கு துருப்புக்கள் அனுப்பப்படலாம் என்பதை ஒப்புக் கொண்டனர். காங்கிரசில் அமெரிக்க-நேட்டோ போர் தொடங்கியவுடன் சாட்சியம் அளித்த அமெரிக்க கடற்படை அட்மைரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ், நேட்டோவின் உயர்மட்டத் தளபதி, “ஆட்சியை உறுதிப்படுத்தும் தேவைக்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார்; மேலும் வருங்கால நேட்டோ தரைப் படையின் பணித்திறன் பொஸ்னியா, கொசோவோவிலிருந்தது போல் இருக்கும் என்று ஒப்புவமையும் காட்டினார்.

இந்த வாரம் முன்னதாக ஒபாமா நிர்வாக அதிகாரி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் (UAE), ஜோர்டான் மற்றும் கட்டாரில் அமெரிக்க ஆதரவுடைய அரபு முடியாட்சிகள் கர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சி இறுதியில் நசுக்கப்பட்டபின் 1,000 முதல் 2,000 துருப்புக்களைஒரு தற்காலிகப் பாலம் போல் அமைக்கப்படுவது உட்படத் திட்டங்கள் இருப்பதாக கூறினார் என்று ராய்ட்டர் மேற்கோளிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ சக்திகள் மற்றும் அரபு ஆட்சிகளின் அதிகாரிகள் புதன்கிழமையன்று கட்டாரில் கூடியதுடன், “உறுதிப்பாடு பற்றிய திட்டங்களை விவாதிக்கவும், தன்னையே நியமித்துக் கொண்டிருக்கும் NTC உடன் பேச்சுக்களை கிட்டத்தட்ட 10 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள நிதியை, கடாபி ஆட்சிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக இருப்பதை, வழங்குவது பற்றி நடத்தினர்.

அமெரிக்க நிதிய அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ள லிபியச் சொத்துக்களில் கிட்டத்தட்ட 30 பில்லியன் டொலரைக் கொண்டிருக்கையில், இந்த வாரம் வெளிவிவகார அலுவலகம் தான் NTC க்கு 1 முதல் 1.5 பில்லியன் டொலர்கள் மட்டுமே வழங்கும் திட்டத்தைக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் நிதிய உறவுத்துறை என்று கருவூலத்தின் ஒரு பிரிவில் முன்னாள் துணைச் செயலராக இருந்த ஸ்டூவர்ட் லீவி, ப்ளூம்பேர்க் நியூசிடம் லிபிய சொத்துக்களின் பெரும்பகுதியை கையில் வைத்திருப்பதுநாம் லிபியாவில் காணவிரும்பும் வகையிலான அரசாங்கம் அமைப்பதற்கு ஒபாமா நிர்வாகத்திற்கு ஒரு நெம்புகோல் திறனை உத்தரவாதம் அளிக்கும் என்று கூறினார்.

இதற்கிடையில், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக அனுபவமுடைய தடையற்ற சந்தைப் பொருளாதார வல்லுனரும் முன்னாள் கடாபி ஆட்சியின் அதிகாரியும், NTC யின் பிரதம மந்திரி என அறிவிக்கப்பட்டுள்ளவருமான மஹ்முத் ஜிப்ரில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை புதன்கிழமையன்று சந்தித்தார்; வியாழனன்று ரோமுக்கு பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியுடன் ஆலோசனைகளை நடத்தச்  செல்லவுள்ளார். கடாபி ஆட்சியிலிருந்து 2010ல் அரசாங்கப் பதவியிலிருந்து வெளியேறியதிலிருந்து ஜிப்ரில் இன்னமும் திரிப்போலியில் காலடி எடுத்து வைக்கவில்லை.

லிபியத் தொடர்புக் குழு என அழைக்கப்படும் அமைப்பும் வியாழனன்று துருக்கியில்ஸ்திரப்படுத்தும் திட்டம் பற்றி விவாதிக்கக் கூடுகிறது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுவது பற்றிய குறிப்பு ஒன்றுமாற்றுக்காலத் தொடர்பான கொள்கை விருப்பத் தேர்வுகள் என்ற தலைப்பில் லிபிய செயற்குழு வெளியிட்டுள்ள ஆவணத்தில் வந்துள்ளது; இக்குழு லண்டனின் சர்வதேச பாதுகாப்புச் சிந்தனைக் குழுவான Chatham House இனால் அமைக்கப்பட்டது. அதன் செயற்பட்டியலில் உச்சியிலுள்ள முன்னுரிமை: 1) “திரிப்போலிப் பொலிசுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு மக்கள் ஆட்சி தொடர்பான ஒழுங்கை மீட்க உதவுதல், மற்றும் 2) ”ஆயுதங்களைச் சேகரிக்கும் வழியை நிறுவுதல், ஏனெனில் மக்களில் பலரும் ஏராளமான ஆயுதங்களைக் கொண்டிருப்பர்.”

இதேபோல் துருக்கியின் வெளியுறவு அமைச்சர் அஹ்மத் டவுடோக்லு பெங்காசிக்கு சென்றபோது, லிபியஎழுச்சியாளர்களுக்கு அவர்கள்நாட்டிலுள்ள நிலையான நிறுவனங்களை, இராணுவம், பொலிஸ் போன்றவற்றைக் கலைத்துவிடக்கூடாது என்று எச்சரித்து, “NTC யும் எங்களைப் போன்ற கருத்தையே கொண்டிருக்கிறது எனச் சேர்த்துக் கொண்டார்.

லிபியபுரட்சி” “ஜனநாயகத்திற்காக”, “விடுதலைக்காக என்று பெருவணிகச் செய்தி ஊடகத்தால் வளர்க்கப்படும் கருத்தின் தன்மை பற்றி இதைத்தவிர வேறு எது வெளிப்படையாகக் காட்ட முடியும்? கடாபி என்னும்கொடூரக் கொடுங்கோலருக்கு எதிரான போராட்டம் என்று கூறப்பட்டது இன்னும் முடியக்கூட இல்லை என்ற நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றில் லிபியஎழுச்சியாளர்கள் உடைய முக்கிய கவலை அவருடைய பொலிஸ் மற்றும் இராணுவ சக்திகளின் ஏகபோக உரிமைகளை எப்படி மீட்பது என்றுதான் உள்ளது.

கடந்த வாரம் அதிகமாக வெளிப்பட்டுள்ள உண்மை லிபிய நிகழ்வுகள்புரட்சி அல்லதுமக்கள் சக்தியின் விளைவு அல்ல, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலிய ஏகாதிபத்தியம் திட்டமிட்டு செயல்படுத்திய நடவடிக்கை என்றுதான் உள்ளது.

பரந்த பகுதியில் மக்கள் எழுச்சிகள் மற்றும் லிபியாவில் கடாபி ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைப் பற்றி எடுத்துக் கொண்டு, இச்சக்திகள் ஆபிரிக்க கண்டத்திலேயே மிக அதிக எண்ணெய் இருப்புக்கள் உள்ளன எனப் பெருமிதம் கொண்டுள்ள நாட்டை வெற்றிகொள்ள முயல்கின்றன; இதற்குக் காரணம் அங்கு மேற்கத்தைய எரிசக்திப் பெருநிறுவனங்களின் ஏவல்களை செய்யத் தயாராக இருக்கும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அங்கு நிறுவுவதுதான்.

கடாபி ஆட்சி சரிவைத் தொடர்ந்து வெளிவந்துள்ள செய்தி ஊடகப் பரபரப்பையடுத்து, அதை அகற்ற முயன்ற நடவடிக்கையின் உண்மைத் தன்மையும் இணைந்து வெளிவருகிறது. பிரிட்டனின் இன்டிபென்டென்ட்  புதன்கிழமையன்று திரிப்போலி மீது நேட்டோ ஆதரவு சக்திகள் முன்னேறியது, மேற்கு நபுசா மலைகளைத் தளமாகக் கொண்ட வகையில் என்னும் முறை, “நிறைய தூதர்கள், தகவல் கொடுப்போர், இராணுவ ஆலோசகர்கள், முன்னாள் சிறப்புப் படை உறுப்பினர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

முன்னாள் சிறப்புப் படையின் செயலர்கள், பலரும் பிரிட்டிஷ் முறையில் உரையாடுபவர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்….. எழுச்சியாளர்கள் பெங்காசியிலிருந்து தாறுமாறாக திரிப்போலியை நோக்கி அனுப்பிய படைகளின் முன்னணியில் இருந்ததை வழக்கமாக நிருபர்கள் பார்த்துள்ளனர் என்று செய்தித்தாள் கூறியுள்ளது. “நிருபர்களால் வழக்கமாகப் பார்க்கப்பட்டனர் என்றும் சேர்த்துக் கொள்ள முடியும் ஆனால் லிபிய நிகழ்வுகள் பற்றி தகவல் கொடுக்கும் ஏராளமான தகவல்களிலிருந்து கடுமையாக தணிக்கை செய்யப்பட்டு விடும்.

இப்போரின் நாய்கள் உடனான ஒப்பந்தங்கள் கட்டாரிலும் UAE யிலும் கையெழுத்திடப்பட்டன, நேட்டோ சக்திகள் ஏற்பாடு செய்துள்ளமுடக்கப்பட்ட லிபிய நிதிகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன என்று இன்டிபென்டென்ட் மேலும் கூறியுள்ளது.

இதற்கிடையில், “இப்பொழுது பிரிட்டிஷ் சிறப்புப் படைகளில் பணியாற்றும் துருப்புகளும், முன்னாள் SAS துருப்பினரும் எழுச்சிச் சக்திகளுக்கு ஆலோசனை கூறுகின்றனர்; அவர்கள் அங்கு இருப்பது உத்தியோகபூர்வமாக மறுக்கப்பட்டுள்ளது என்றாலும்கூட என்று கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும், “பல SAS சிப்பாய்கள் இப்பொழுது தலைநகர் திரிப்போலி தாக்கப்படுகையில் எழுச்சியாளர்களுக்கு ஆலோசனை கூறுகின்றனர் என்றும் அது சேர்த்துக் கொண்டுள்ளது.

தன்னுடைய பங்கிற்கு நேட்டோ ஆதாரங்களை மேற்கோளிட்டு CNN புதனன்று, “பிரிட்டன், பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் கட்டாரிலிருந்து லிபியாவில் தரையில் இருப்பவை திரிப்போலி மற்றும் பிற நகரங்களில் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு எழுச்சி சக்திகள் கடாபி ஆட்சிக்கு எதிராக இறுதி முன்னேறுதலை நடத்துகையில் உதவுகின்றன என்று தகவல் கொடுத்துள்ளது.

சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள்கூட இரகசியக் குழுக்களை நிலைநிறுத்தின என்று அசோசியேட்டட் பிரஸ் வெளிப்படுத்தியுள்ளது. “இரகசியப் படைகள், தனியார் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அமெரிக்க உளவுத்துறைச் சொத்துக்கள் ஆகியவையும் நேட்டோ கட்டுப்பாட்டு முறையில் இருந்து தனித்துச் செயல்படும் மறைமுகப் பிரச்சாரத்தில் போரிடுவதற்குச் சென்றுள்ளனர் என்று அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது.

நூற்றுக்கணக்கான எழுச்சியாளர்கள் நேட்டோ சிறப்புப் படைத் துருப்புக்கள் மற்றும் கூலிப் படைப்பிரிவினரிடம் பயிற்சி பெறுவதற்கு கட்டாருக்கு அனுப்பப்பட்டனர், அதே நேரத்தில் லிபியாவிலுள்ளஎழுச்சி சக்திகளுக்கு வெளிநாட்டுத் துருப்புக்கள் ஆயுதங்களையும் பொருட்களையும் வழங்கின என்று நியூ யோர்க் டைம்ஸ்  கூறியுள்ளது.

டைம்ஸின் அறிக்கை தெளிவாக்குவதுபோல், இச்சக்திகளின் முக்கிய நடவடிக்கைஎழுச்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முற்பட்டால் விசுவாசமான துருப்புக்கள் தகர்க்கப்பட்டு, வானில் இருந்து நேட்டோ விமானங்களும், அமெரிக்க வேட்டை முறைக் கொலைக்கார பிரிடேட்டர் ட்ரோன்களாலும் அழிக்கப்பட்டுவிடுவர் என்பதுதான். இப்படிப் படுகொலைக்குட்பட்ட படையினர்களின் சடலங்கள் எந்த அளவு எண்ணிக்கையில் லிபியச் சாலைகள், கிராமப் புறங்களில் விழுந்து கிடக்கின்றன என்பது பற்றிச் செய்தி ஊடகம் மீண்டும் மௌனம் காக்கிறது.

இதுதான் லிபியப்புரட்சியின் உண்மையான தலைமை ஆகும். முன்னணிப் பிரிவுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளது; எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அது ஈராக் மீது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நடத்தியது; இன்றும் ஆப்கானிஸ்தானிலும், பாக்கிஸ்தானிலும் அது குடிமக்களைப் படுகொலை செய்வதைத் தொடர்கிறது.

அங்கு வாஷிங்டனின் இத்தகைய யுத்தங்களில் முக்கிய உடந்தையாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் உள்ளது; அது மிருகத்தனமான வறுமை, சமூக சமத்துவமின்மை ஆகியவற்றில் வாடும் பிரிட்டிஷ் இளைஞர்களின் சமீபத்திய கலவரத்தை அடக்கியது.

அரபுப் பகுதிகளில் இருந்து குடியேறிய இளைஞர்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதல்களுக்கு தலைமை தாங்கும், நிக்கோலா சார்க்கோசியின் பிரெஞ்சு அரசாங்கமானது இப்பொழுது லிபியாவில் பெரும் விடுதலை செய்யும் பணியைச் செய்வதாக காட்டிக்கொள்கிறது.

சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலதுசாரி அரசாங்கமும் உள்ளது; இது முன்பு கடாபியின் நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது; முசோலினியின் கீழ் முற்றுப்பெற்ற லிபியாவின் மீதான காலனித்துவ வெற்றிக் காலத்தில் இது பெற்றிருந்த நலன்களை அடையும் சிறந்த வழிவகையாக கடாபி அகற்றப்படுதலை அது காண்கிறது.

இந்த அரசாங்கங்கள் அனைத்துமே உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றிற்காக தங்கள் நாட்டிலேயே இரக்கமற்ற போர்களை நடத்துகின்றன; அதே நேரத்தில் லிபியாவில்சுதந்திரத்திற்கான போராட்டம் என்று கூறப்படும் போரையும் அவை நடத்துகின்றன. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், அவை நிதிய மூலதனத்தின் நலன்களுக்கான செயற்பாடுகளைத் தொடர்கின்றன. லிபியாவில் காணப்படுவது ஏகாதிபத்தியத்தின் தந்திரோபாயங்கள்தாம்; இவை லெனினால் பொருத்தமாகமுற்றிலும் பிற்போக்குத்தனத்தைக் கொண்டவை என்று விவரிக்கப்பட்டன.

இந்த இழிந்த நடவடிக்கைகளுக்கு இணையாக காணவேண்டும் என்றால், 1930 களுக்குச் சென்று இத்தாலி பாசிச முறையில் அபிசீனியாவை (இன்றைய எதியோப்பியா) வெற்றிகொண்டது, அல்லது ஸ்பெயினில்தேசிய விடுதலைக்கான சிலுவைப்போர் என்று பிரான்ஸிஸ்கோ பிராங்கோ, ஜேர்மனிய Luftwaffe இன் (விமானப்படை) உதவியுடன் நடத்தியதையும்தான் நினைவிற்கொள்ள வேண்டும்.

ஆயினும்கூட, ஏகாதிபத்தியவாதிகள் முன்னாள் இடதுகள், தாராளவாதிகள் என்ற முழுத் தட்டின் ஆதரவைப் பெற்றுள்ளன; அவர்கள் இந்த ஆக்கிரமிப்புப் போரை மனித உரிமைகள் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்காக நடத்தப்படும் போர் என்று ஊக்கம் அளிக்கின்றனர்.

இந்த சமூக-அரசியல் அடுக்கின் பிரதிநிதிகளுள் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் Juan Cole உள்ளார்; 2003ம் ஆண்டு ஈராக்கில் நடந்த படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்த வகையில் இவருக்கு ஒரு கணிசமான ஆதரவாளர்கள் சேர்ந்தனர்.

தன்னுடைய Informed Comment இணைய வலைத் தளப் பிரிவில் அவர் இப்பொழுது தன்னைஐரோப்பாவில் வெளியுறவு மந்திரிகள், நேட்டோ உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை அறிந்தவர் என்று விவரித்துக் கொள்கிறார்; வாஷிங்டனுக்குஎப்படி புஷ்ஷின் ஈராக்கியத் தவறுகளை லிபியாவில் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவதாகவும் தெரிவிக்கிறார். வேறுவிதமாகக் கூறினால், இந்த புத்திஜீவி அயோக்கியர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அது எப்படி வெற்றிகரமாக ஒரு அரபு நாட்டின் மீது நவ காலனித்துவ கட்டுப்பாட்டைக் கொள்ள முடியும் என்பதற்கு கருத்துக்களைக் கூறுகிறார். மற்றவர்கள் போல் இவரும் ஏகாதிபத்திய அரசாங்கத்துடன் தன்னை இழிந்த முறையில் இணைத்துக் கொள்கிறார்; அதே நேரத்தில் அதற்கு ஒருஇடது மறைப்பையும் கொடுக்கிறார்.

இத்தகைய முயற்சிகளும் போதாதுள்ளது. லிபியப் போரில் தற்போதைய வெற்றி, முக்கிய சக்திகள் எதிர்பார்க்கும் எண்ணெய்த்துறை இலாபங்கள் பற்றி எச்சில் ஒழுகுவது, அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்காது. ஈராக், மற்றும் அதற்கு முன் ஆப்கானிய போரைப் போலவே, தற்போதைய லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரும் ஒரு முட்டுக்கட்டைக்குத்தான் வழிவகுக்கிறது.