சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Campaign deals expose French Greens’ subservience to big business

பிரெஞ்சு பசுமைகட்சியினர் பெருவணிகங்களுக்கு அடிபணிந்திருப்பதை பிரச்சார உடன்படிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன

By Antoine Lerougetel
3 December 2011

use this version to print | Send feedback

சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் புதியதும் இறுதியாக சேர்ந்த கூட்டாளியுமான ஐரோப்பிய சுற்றுச்சூழல்-பசுமை கட்சியின் (Europe Ecology-The Greens – EELV) 2012 கூட்டு தேர்தல் வேலைத்திட்டத்தில், பிரெஞ்சு அணுசக்தித்துறை குறித்து கடைசி-நிமிடத்தில் திருத்தி-எழுதப்பட்டமை, EELV கட்சியின் மோசடி குணாம்சத்தை அம்பலப்படுத்தி உள்ளது. பெருவணிக சோசலிஸ்ட் கட்சியின் ஓர் அரசியல் எடுபிடியாகவும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஓர் ஏவலாளியாகவும் இருந்து கொண்டு, அவர்கள் பிரதிநிதித்துவபடுத்துவதாக முறையிடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோட்பாடுகளுக்கு அவர்களே விரோதமாக உள்ளனர்.

2012 ஏப்ரல்/மே மாத ஜனாதிபதி தேர்தல்களுக்கு பின்னர் வெகுவிரைவில், ஜூனில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தல்களுக்கு சோசலிஸ்ட் கட்சியும், EELV கட்சியும் தயாரிப்பு செய்து வருகின்றன. EELVஇன் தேசிய செயலர் Cécile Duflot, கட்சியின் முக்கிய பிரமுகர் Philippe Mérieux பாரீஸில் இரண்டு தொகுதிகளை அளிப்பது உட்பட, 577 தேசிய சட்டமன்ற இடங்களில் 15 முதல் 20 சதவீத இடங்களை EELVக்கு அளிக்க சோசலிஸ்ட் கட்சி உறுதியளித்துள்ளது.

நவம்பர் 15 செவ்வாயன்று, EELV-PS கூட்டு வேலைத்திட்டம், சோசலிஸ்ட் கட்சியின் தேசிய குழுவால் பிற்பகலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தபோதினும், நவம்பர் 16இல் Le Monde குறிப்பிட்டது: “பிற்பகலில் கையெழுத்தான அந்த உடன்படிக்கை, 'மறுசுழற்சி மற்றும் MOX உற்பத்தித்துறையில் வேலையிழப்புகள் இல்லாதபடிக்கு புனரமைப்பு' குறித்து பேசியது.” எவ்வாறிருந்தபோதினும், சோசலிஸ்ட் கட்சியின் தேசியக்குழுவால் 35-5 வாக்கு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த வேலைத்திட்டத்தின் இந்த பத்தி, பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் பதிப்பில் இடம் பெறவில்லை.

MOX என்பது பல பிரெஞ்சு அணுசக்தி மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஓர் அணுசக்தி எரிபொருளாகும். அது அணுசக்தி கழிவின் மறுசுழற்சியிலிருந்து எடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆணையத்தின் ஒரு சமீபத்திய அறிக்கை, பல விஞ்ஞானிகளின் கருத்துப்படி, MOX "மிகவும் அபாயகரமானதாகும்" என்று கூறியது.

நவம்பர் 15, மாலை 3.30க்கு EELV தலைவர் Cécile Duflot மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலர் Martine Aubry ஆல் கையெழுத்திடப்பட்ட மற்றும் இறுதிசெய்யப்பட்ட எழுத்துக்கள், பத்திரிகைக்கு அளிக்கப்பட்ட போது மாற்றி எழுதப்பட்டிருந்ததை, நவம்பர் 17இல் Médiapart பத்திரிகையும் உறுதிப்படுத்தியது. தேசிய மின்சாரத்துறை நிறுவனமான EDFஇன் தலைமை செயலதிகாரி Henry Proglio, அரீவா அணுசக்தித்துறை நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Luc Oursel லும் அந்த கூட்டத்தைப் பலமான ஆதாரமாகக்கொண்டிருந்தனர்.

பெரும்பான்மை அரசு பங்கை கொண்டிருக்கும் அரீவா நிறுவனம், உலக MOXஇல் 95 சதவீதத்தை உருவாக்குகிறது. அது அரீவாவின் 9 பில்லியன் யூரோ விற்றுமுதலில் 1.7 பில்லியன் யூரோவைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு அணுஉலைகளால் MOX இனி பயன்படுத்தப்படாமல் போனால், அதன் உற்பத்தி இலாபமளிக்காமல் போகுமென செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பங்கெடுத்த ஒருவர் Médiapartக்கு கூறியது: “தேசியக்குழுவின் (BN) நடுவில் நாங்கள் அனைவரும் அந்த செய்தியறிக்கைப் பெற்றோம். எங்களால் ஓர் உடன்பாட்டிற்கு வர முடியாததால், வாக்கெடுப்பிற்குப் பின்னர், துணிச்சலோடு நாங்கள் அந்த பத்தியை வெட்டிவிட்டோம்.”

BN கூட்டத்தில் பங்கெடுத்த மற்றொருவரையும் Médiapart மேற்கோளிட்டுக் காட்டியது: “தேசியக்குழு கூட்டத்தின் முடிவில், வாக்கெடுப்பிற்குப் பின்னர், [சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டின் ஒரு நீண்டகால உதவியாளரான] Stéphane Le Foll திடீரென அறைக்குள் வந்து, 'பொறுங்கள், பொறுங்கள் நாம் நீக்க வேண்டியுள்ளது.…' Aubry அதை நீக்குங்கள், 'ஆம், ஆம், இது சரி, நாம் வாக்களிக்கிறோம்,'” என்றார்.

ஆனால் MOXஐ கைவிடுவதற்கான எவ்வித காலவரையும் அளிக்காமல், விடுபட்ட வரிகள் மீண்டும் சேர்க்கப்பட்டதாக சோசலிஸ்ட் கட்சியின் அறிக்கை நவம்பர் 17இல் அறிவித்தது. “இரண்டு கட்சிகளுமே அவை திருப்திகரமாக இருப்பதாக அறிவித்தன" என்று Le Monde குறிப்பிட்டது. எவ்வாறிருந்த போதினும், இரண்டு கட்சிகளுமே அவைகள் தகுதியுடையதாக செய்திருந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்களின்மீது விவாதிப்பதை தொடர்ந்தன.

“PS-EELV உடன்படிக்கைக்கு மிகவும் அத்தியாவசியமாக தெரியும் முறைமைகளைக்" கொண்டு வருவதையே தாம் விரும்புவதாக, கடந்த வாரம், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹோலண்ட் தெரிவித்தார். வேலைத்திட்டத்தில் EELV எதையெல்லாம் சேர்க்க விரும்புகிறதோ அதை அது எழுதட்டும், பின்னர் PS நடைமுறைப்படுத்த விரும்பாத எவ்வித முறைமையையும் அது நிராகரிக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

பிரான்ஸில் 1974இல் அதன் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே பசுமை இயக்கம் எப்போதும் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு மத்தியதட்டு வர்க்க எடுபிடியாக செயல்பட்டு வந்துள்ளது. அது சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தனிநபர் சம்பந்தப்பட்ட மற்றும் முதலாளித்துவ-சார்பு அணுகுமுறையை அறிவுறுத்தி கொண்டு, அரசியலில் வர்க்கத்தின் அடிப்படை பாத்திரத்தை மறுத்து வருகிறது. இலாப அமைப்புமுறையின் நாசகரமான நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் பூகோள வெப்பமயமாக்கல் மற்றும் மாசு பிரச்சினைகளை, தொழிலாளர் வர்க்கத்தால் முதலாளித்துவத்தைத் தூக்கியெறியாமலேயே தீர்க்க முடியுமென்று அது வாதிடுகிறது.

பசுமை இயக்கம் நீண்டகாலமாகவே முன்னாள் தீவிரகொள்கையாளர்களின் ஒரு சரணாலயமாக இருக்கிறது. பிரான்ஸின் 1968 மாணவர் எழுச்சிகளில் “Danny the Red” என்று அழைக்கப்பட்டவரும், தற்போது ஜேர்மனியில் ஒரு பிரதான முதலாளித்துவ அரசியல்வாதியுமான Daniel Cohn Bendit இதற்கு நன்கறியப்பட்ட சிறந்தவொரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

ஆனால் இந்தமுறை EELVஇன் நிலையானது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நலன்களிற்கு வேகமாக அதனுடைய ஒழுங்கிற்கு இருத்தியுள்ளது. பிரான்சின் அணுஆயுத உற்பத்திக்கு ஓர் எடுபிடியாக இருந்து கொண்டு அணுசக்தி தொழில்துறையும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வீழ்ந்துவரும் சர்வதேச செல்வாக்கை உயர்த்த முனைகிறது. முன்னாள் ஜனாதிபதி Charles de Gaulle உடைய “force de frappe” என்று வீராப்பு பேசுகிறார். பிரான்சின் மின்சாரத்தில் 75 சதவீதத்தை உற்பத்தி செய்து, ஏற்றுமதி வருவாய்களையும் அளிக்கும் பிரான்சின் அணுசக்தித்துறை, யுரேனியம் அல்லது ஏனைய முக்கிய கனிமங்களின் கணிசமான கையிருப்புகளோடு, மேற்கு ஆசியா போன்ற பிராந்தியங்களில் பிரெஞ்ச் ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் ஆழமாக ஈடுபடுகிறது.

அனைத்திற்கும் மேலாக, புக்கூஷிமா அணுசக்தி பேரழிவு சூழல் மற்றும் பல ஐரோப்பிய அரசுகள் அணுசக்தியைக் கைவிடும் அறிவிப்புகளைச் செய்ய முடிவெடுத்த சூழலில், பிரெஞ்சு கொள்கையில் செய்யப்படும் எவ்வித மாற்றமும் அத்தொழில்துறை நிலைமைக்கு குழிபறிக்கும் என்பதால், அவை அதை ஆழமாக எதிர்க்கின்றன.

பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் தோன்றுவதற்கு முயல்வது, சீற்றத்தைக் காட்டுவது, அவரின் பங்களிப்புகளை இரத்து செய்யும் பொறுப்பு ஆகியவை EELV ஜனாதிபதி வேட்பாளரிடமும், முன்னாள் புலனாய்வு நீதிபதி Eva Joly யிடமும் விடப்பட்டுள்ளது. சோசலிஸ்ட் கட்சிஅணுசக்தி தொடர்பான அரசியல் நடவடிக்கை குழுவை மிகவும் கூச்சல் குழப்பத்தோடு கையாள்வதற்காக" அவர் சோசலிஸ்ட் கட்சியை விமர்சித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சோசலிஸ்ட் கட்சியினர் மரப்பொம்மைகளா என்ற சந்தேகத்தை இப்போது சிந்திக்க வேண்டியதிருக்கும்,” என்றார்.

உண்மையில், சோசலிஸ்ட் கட்சி பிரெஞ்சு முதலாளித்துவத்தின் கட்சியென்பதும், அது வெளிப்படையாகவே பிரதான பெருநிறுவனங்களிடமிருந்து அதன் உத்தரவுகளைப் பெறுகிறது என்பதும் நன்கறிந்த விஷயமாகும், அதில் "சந்தேகப்பட" நிறைய ஒன்றுமில்லை. இந்த விஷயத்தில், எப்போதும் போல, EELV சோசலிஸ்ட் கட்சியின் புதியதும் இறுதியாக சேர்ந்த கூட்டாளியின் பாத்திரத்தை வகித்தது. அதன் நூலை இழுக்கும் ஒரு இயக்குபவரின் பாணியால் ஒருவர் நொந்து போயிருப்பதற்கு இடையில், Joly யும், சோசலிஸ்ட் கட்சியைக் குறித்த அவரின் விமர்சனங்களுமே ஒரு கைப்பாவை குணாம்சத்தைக் கொண்டிருக்கின்றன.

ஹோலண்ட்டிற்கும், சோசலிஸ்ட் கட்சிக்கும் அவர் அளிக்கும் தொடர்ச்சியான ஆதரவை ஜோலி விரைவிலேயே தெளிவுபடுத்தி இருந்தார். ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாவது சுற்றில் ஹோலண்ட்டின் மீது ஒரு வாக்கெடுப்பிற்கு அவர் அழைப்புவிடுப்பாரா என்று RTL ரேடியோவில் கேட்கப்பட்ட போது, அவர் ஆரம்பத்தில் பதிலளிக்க மறுத்தார். ஆனால், நவம்பர் 16 வாக்கில் "யார் எதிரியென்று எனக்கு தெரியும், நான் நிக்கோலா சார்கோசியை தோற்கடிக்க விரும்புகிறேன்,” என்றும் தான் விலகினால் ஹோலண்ட்டிற்கு வாக்களிக்க அழைப்புவிடுப்பதாக அவர் சமிக்ஞை செய்தார்.

பசுமை கட்சியினரின் நீண்டகால இற்றுப்போன உடன்படிக்கைகள் மற்றும் வலதுசாரி கொள்கைகளின் வரலாற்றால், அதுவும் குறிப்பாக சோசலிஸ்ட் தலைமையிலான Lionel Jospin னின் பன்முக இடது கூட்டு அரசாங்கத்தின் (1997-2002) (Plural Left government) பாகமாக இருந்த வரலாற்றால், அவர் களங்கப்படாததைப் போல அவர் காட்டிக்கொள்ள முடியுமென்பதற்காக, ஜொலி EELVஇன் 2012 ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1990களின் போது, Elf விவகாரம் போன்ற பிரெஞ்சு எண்ணெய் நலன்களும், அரசியல் நிதியளிப்புகளும் சம்பந்தப்பட்ட அரசியல் ஊழல்களை அவர் விசாரித்தார். 2007இல் வலதுசாரி Modem (ஜனநாயக இயக்கம்) தலைவர் François Bayrou உடன் ஏற்பட்ட அறுதியிட்டுகூறமுடியாத அணுகுமுறைகளுக்குப் பின்னர், அவர் பசுமை கட்சியில் சேர்ந்தார். 2008இல், Daniel Cohn-Bendit தலைமையில் அமைந்த ஒரு வேட்பாளர் பட்டியலில் அவர் ஐரோப்பிய தேர்தல்களில் நின்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதான அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான அரசியல்-நிதியியல் ஊழல்கள் இன்று நீதிமன்றங்களில் போராடி வருகின்ற நிலையில், அவர் சுத்தமான அரசாங்கத்திற்கான ஓர் ஆலோசகராக காட்டிக்கொள்கிறார். இது முற்றிலும் மோசடியாகும். பசுமை கட்சியினரோடு சேர்ந்த அவரின் அரசியல் திட்டமானது, பிரெஞ்ச் ஏகாதிபத்தியத்தின் ஒரு துணை முதலாளித்துவ "இடது" முகமையான EELVக்கு ஒரு புதிய முகத்தை அளிப்பதன் மூலம், பிரெஞ்சு முதலாளித்துவ "இடதில்" ஏதேனும்விதத்தில் அலங்காரத்தை மாற்றியமைக்கவே ஆகும்.

பிரான்சின் பசுமை கட்சியினரும், Eva Joly யும் அவர்களின் ஜேர்மன் எதிர்பலத்தார்களைப் போலவே, லிபியாவில் நேட்டோவின் நவ-காலனித்துவ தலையீட்டை ஆதரித்தனர். அவர்கள் மாலி நாட்டிலும் மற்றும் நைஜெர் நாட்டிலும் அரேவாவின் யுரேனிய சுரங்க நடவடிக்கைகளைப் பாதுகாக்க, அவர்கள் மாலி நாட்டில் பிரான்சின் இராணுவ பிரசன்னத்திற்கு எவ்வித எதிர்ப்பு அறிக்கையையும் அளிக்கவில்லை.