சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP-ISSE meeting to demand release of Sri Lankan political prisoners

இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி சோ...-.எஸ்.எஸ்.. கூட்டம்

2 December 2011

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி முன்னெடுத்திருக்கும் பிரச்சாரத்தின் பாகமாக, டிசம்பர் 8 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. இந்தப் பிரச்சாரம், அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கான பரந்த போராட்டத்தின் பாகமாகும்.

2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் முடிவின் பின்னர் "பயங்கரவாத சந்தேக நபர்களாக" சுமார் 11,000 தமிழர்கள் வரை தடுத்து வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு முற்பகுதியில் நாட்டின் அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்ட போதிலும், 6,000க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும் இந்த பகிரங்க ஜனநாயக உரிமை மீறலுக்கு உடந்தையாக இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் யுத்தத்துக்கும் தடுத்து வைப்புக்களுக்கும் முழுமையாக ஆதரவளித்தன. இதே போல், தடுத்து வைப்பதற்கான சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், "அவர்கள் மீது குற்றஞ்சாட்டுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்" என்றே அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது.

சோ.ச.க. ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் யுத்தத்தை எதிர்த்து வந்ததோடு, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சளைக்காமல் பாதுகாத்து வந்துள்ளது. தடுத்து வைப்புக்களை கண்டனம் செய்கின்ற, சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோருகின்ற ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, முதலாளித்துவ முறைமைக்கு எதிராகவும் சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், தொழிலாளர்களையும் மற்றும் அவர்களுக்குப் பின்னால் கிராமப்புற வெகுஜனங்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதுடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ.யும் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் கூட்டத்திற்கு வருகை தருமாறும் எமது பிரச்சாரத்துக்கு செயலூக்கத்துடன் ஆதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றன.

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

 

திகதியும் நேரமும்: டிசம்பர் 8, மாலை 4.00 மணி

 

பிரதான உரை: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்