சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European workers face austerity and dictatorship

ஐரோப்பிய தொழிலாளர்கள்
சிக்கன நடவடிக்கைகளையும் சர்வாதிகாரத்தையும்
எதிர்கொள்கின்றனர்

Julie Hyland
13 December 2011

use this version to print | Send feedback

கடந்த வார ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உடன்பாடு காணப்பட்ட நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றி அதிகம் கூறப்படவில்லை. செய்தி ஊடகம் அநேகமாக பிரதம மந்திரி டேவிட் காமெரோன் பிரிட்டனின் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது பற்றித்தான் முற்றிலும் கவனம் காட்டின.

இப்பொழுது தயாரிக்கப்படும் அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் தாக்கங்கள் பற்றிக் கிட்டத்தட்ட முழு மௌனம்தான் உள்ளது என்பது ஐரோப்பிய செய்தி ஊடகம் மற்றும் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்திடம் கொண்டுள்ள இகழ்வுணர்வைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உடன்பாட்டு நடவடிக்கைகள் ஏராளமான வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மற்றும் சமூகப் பணிகள் என மில்லியன் கணக்கானவர்கள் நம்பியிருப்பவற்றை மாபெரும் அழிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஐரோப்பா முழுவதுமே ஒரு பாரிய சிக்கன நடவடிக்கை பிராந்தியமாக மாற்றப்படும்.

இந்த உடன்பாடு யூரோப்பகுதிக்குள்அடிமை நாடுகளுக்கான- “slave states” - ஒரு திட்டம் என விவரிக்கப்பட்டுள்ளது. இன்னும் துல்லியமாக ஐரோப்பிய தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதற்கு வரைபட அச்சு ஆகும். தொழிலாளர்கள் ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நிதியத் தன்னலக்குழுவிற்கு கட்டுண்ட தொழிலாளர் தொகுப்பு என்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.

இதற்கான சட்டபூர்வ வடிவமைப்பு ஒவ்வொரு நாட்டிலும்நிதியக் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கு தோற்றுவிக்கப்படும். ஐரோப்பிய ஆணையமும் ஐரோப்பிய நீதிமன்றமும் தேசிய வரவு-செலவுத் திட்டங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். “தொழிலாளர்துறைச் சந்தைச் சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு சட்டரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளை அகற்றுவதுடன்,  வேலைநேரங்களை விரிவாக்கும், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், பிற நலன்களை அழிக்கும். இதற்கு தன்னியல்பாக இயங்கும் பொருளாதாரத் தடைகளும் பயன்படுத்தப்படும். அவற்றினை செயல்படுத்தாத நாடுகளுக்கு முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும், பின்னர் யூரோப்பகுதியில் இருந்தே அவற்றை அகற்றிவிடும் சாத்தியமும் உள்ளது.

இதில் தொடர்புடையது பற்றிய அடையாளத்தை கிரேக்கத்தில் காணலாம். அங்கு தொடர்ந்த சிக்கன வரவு-செலவுத்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களை பணிநீக்கம் செய்துவிட்டன, வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 20% என உயர்ந்துவிட்டது, இளைஞர்களுக்கு அதையும் விடக் கூடுதலாகிவிட்டது. ஓய்வூதியங்கள் ஜனவரி மாதம் இன்னும் 15% குறைக்கப்படும், 40,000 பொதுத்துறைத் தொழிலாளர்கள் 40% ஊதிய வெட்டுக்களை எதிர்நோக்க நேரிடும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக முறையில் செயல்படுத்தப்பட முடியாது என்பதை ஆளும் உயரடுக்கு நன்கு அறியும். ஏற்கனவே அவை கிரேக்கத்திலும் இத்தாலியிலும் ஆட்சி சதியைக் கொண்டுவந்து, வங்கியாளர்கள் தலைமையில்தொழில்நுட்பவாத” (technocratic) நிர்வாகங்களை இருத்தியுள்ளன. எல்லா முக்கிய முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவைக் கொண்டு, இந்த அரசாங்கங்கள் மிகப் பிற்போக்குத்தன சக்திகளை இணைத்துள்ளன. குறிப்பாக கிரேக்கத்தில் புதிய பாசிச LAOS கட்சி ஆட்சியில் பங்கு கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் முக்கிய ஈடுபாடு அதன் நிதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த போலியான சட்ட இயக்கமுறையை காண்பது ஆகும். அதே நேரத்தில் சில நாடுகளில் சர்வஜனவாக்கெடுப்பிற்கான அரசியலமைப்புரீதியான  தேவைகளைத் தூண்டிவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுமாகும்.

தொழிலாளர்கள் அவர்களுக்கு எதிராக இயற்றப்படும் கொள்கைகள் குறித்து எந்தக் கருத்தையும் கூறுவதற்கில்லை என்று 26 அங்கத்துவ நாடுகள் கொண்ட கருத்தில் இருந்து சிறிதும் வேறுபட்டதன்மையை பிரிட்டன் கொண்டிருக்கவில்லை. ஐரோப்பிய ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி போராடிப் பெற்ற சமூக, ஜனநாயக உரிமைகளை அழித்து, ஐரோப்பிய மூலதனம் அதன் ஆசிய, அமெரிக்கப் போட்டி நாடுகளை விட இன்னும் போட்டித்தன்மை உடையதாக அடைவதற்கு முற்படுள்ளது.

ஐரோப்பிய யூனியன் சக்திகளின் அதிகாரங்களை வலுப்படுத்தி, சமூகநலக் குறைப்புக்களை செயல்படுத்துவது என்னும் இந்த முன்னோக்குடன் காமெரோன் முழு ஒற்றுமையைக் கொண்டுள்ளார்; ஆனால் லண்டன் நகர நிதியத் தன்னலக்குழு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அதன் நிபந்தனை ஆகும்.

ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி உச்சி மாநாட்டில் வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய சீர்திருத்த வரைபட அச்சில் யூரோ ஆதிக்கம் உடைய நிதிய நடவடிக்கைகள் யூரோப் பகுதியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்களும் இருந்தன. யூரோவின் எஞ்சிய வணிகத்தில் 70%த்திற்கும் மேல் இப்பொழுது லண்டனில் செயல்படுத்தப்படுவதால், இங்கிலாந்தின் மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் இத்திட்டத்தை நகரத்தின் இதயத்தை குறிவைத்துள்ள ஒரு தோட்டா என்று கண்டித்தார். இறுதியில் காமெரோனும் பிரிட்டிஷ் முதலாளித்துவமும் பாதுகாக்கும் இறைமை என்பது லண்டனை சுற்றிய ஒரு சதுர மைலைத்தான்.

பிரிட்டன் வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால், உடன்பாட்டு மாற்றங்களை ஏற்கலாம் என்ற நிலைப்பாட்டை காமரோன் நம்பியிருந்தார். அதையொட்டி நகரத்தின் கோரிக்கைகள் நிறைவு செய்யப்படும், ஐரோப்பிய ஒன்றிய சார்பு தாராளவாத ஜனநாயகக் கட்சியினர், காமெரோன் அரசாங்கத்தில் இருப்பவர்கள், திருப்தி அடையமுடியும், அவருடைய டோரிக் கட்சியிலேயே உள்ள யூரோ அவநம்பிக்கையாளர்கள் குறைகளையும் சமாளிக்க முடியும். வெளியேறுவதற்கு உத்தரவாதங்கள் என்பது உடன்பாட்டு மாற்றங்களில் அதிகார மாற்றங்கள் இராது என்பதற்கு நிரூபணமாகப் பயன்படுத்தப்படும், அது கூட்டணியை முறித்து, காமெரோன் அரசாங்கத்தை வீழ்த்தக் கூடிய மக்கள் வாக்கெடுப்பைத் தவிர்க்க முடியும்.

மேர்க்கெலும் சார்க்கோசியும் பிரிட்டனுக்கு சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் கொடுக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்தினர்; ஏனெனில் அத்தகைய ஒப்புதல் ஐரோப்பா முழுவதும்பூதங்கள் அடங்கிய பெட்டியை” (Pandora’s box) திறப்பது போல் ஆகிவிடும். இறுதியில் காமெரோனின் வெளியே செல்லும் நிலைப்பாடு என்பது உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

உச்சிமாநாட்டின் முடிவைப் பற்றிப் புலம்புகையில், தொழிற் கட்சித் தலைவர் எட் மிலிபண்டும், லிபரல் தாராளவாதத் தலைவர் நிக் கிளெக்கும் ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு எதிரான தண்டிக்கும் வெட்டுக்களை குறித்துச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர்களுடைய ஒரே குறைகூறல் இத்தகையசெயற்பாட்டை நடத்துவதற்கு மேசையில் பிரிட்டனுக்கும் ஓர் இடம் வேண்டும் என்பதுதான்.

சமீபத்திய உச்சிமாநாடு ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய நிதிய மூலதனத்தின் ஒரு கருவி என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் பிற்போக்குத்தன காமெரோன் அரசாங்கத்தின் உடன்பாடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின்மீது முன்னோடியில்லான வகையில் தாக்குதல்களை சுமத்த முடியும்.

இதற்கு தொழிலளா வர்க்கத்தின் விடையிறுப்பு பின்வருமாறு இருக்கவேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வீழ்க, வங்கிகள் வீழ்க, சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரத்திற்கு எதிராக முழு ஐரோப்பிய தொழிலாள வர்க்கமும் ஒன்றுபட்ட இயக்கம் நடத்த வேண்டும்!

பல தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் குட்டி முதலாளித்துவஇடது இணைப்புக்கள் முன்வைக்கும் இந்த முன்னோக்கில் தொழிலாளர்கள் எந்த நம்பிக்கையையும் வைக்கக் கூடாது. தனிப்பட்ட தேசிய அரசாங்கங்கள்மீது அழுத்தம் கொடுப்பதற்கு என்று கூறப்படும் குறுகியகால தேசிய எதிர்ப்பு வேலைநிறுத்தங்களிலும் நம்பிக்கை கொள்ளக்கூடாது. ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள், பெரும் வெடிப்புத்தன்மை உடயை வர்க்கப் போராட்டங்கள் மற்றும் முதலாளித்துவத்துடன் ஒரு புரட்சிகர மோதல் என்ற நிலைப்பாட்டின் விளிம்பில் நிற்கின்றனர். முதலாளித்துவமோ அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மூர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வாஷிங்டனில் உள்ள அட்லான்டிக் குழு என்னும் சிந்தனைக்குழுவின் கூட்டத்தில் அமெரிக்கக் கூட்டுப்படைகளின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சி கூறிய கருத்துக்களின் முக்கியத்துவம் கீழ்க்கண்டதுதான்: “யூரோப் பகுதி பெரும் ஆபத்தில் உள்ளது என்று கூறிய அவர் அமெரிக்க இராணுவம் அந்த முறிவை எதிர்கொள்ளும் ஆபத்திலும் உள்ளது; “ஏனெனில் சமூக அமைதியின்மை ஏற்படும் சாத்தியம் உள்ளது.”

இக்கருத்துக்கள் மிகவும் அச்சுறுத்துபவை. ஏனெனில் அமெரிக்கா ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 80,000 துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளது. ஐரோப்பா முழுவதும் தலைநகரங்களில் இதேபோன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன என்பது பற்றியும் நாம் உறுதியாக இருக்கலாம். கண்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கள் முதலாளித்துவம் மிருகத்தன சக்தியை பயன்படுத்தி ஒரு சமூக எதிர்ப்புரட்சியை நடத்துவதில் பெரும் உந்துதல் கொண்டுள்ளது என்பதைத்தான்  அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பாவிலுள்ள தொழிலாளர்களும் இதேபோன்ற பெரும் உறுதியுடன் தங்கள் சொந்த வர்க்கக் கொள்கையை நிர்ணயிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெருவணிகத்தின் அரசாங்கங்களுக்கு எதிராக அவை முதலாளித்துவத்தை அகற்றுவதற்கும், தொழிலாளர்கள் அரசாங்கங்களை நிறுவவும், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதைத் தோற்றுவிக்கவும் வெகுஜன சமூக, அரசியல் இயக்கத்தை உருவாக்கவேண்டும்.