சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian government pursues anti-China relations with India

சீனாவிற்கு எதிரான உறவுகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்கிறது

By James Cogan
16 December 2011

use this version to print | Send feedback

இம்மாதம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி ஸ்டீபன் ஸ்மித் இந்தியாவிற்கு வருகை புரிந்தமை இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வணிகத்தினை அதிகரிக்கவுமான ஆரம்ப முயற்சிகளுக்கு உந்துதல்கொடுத்ததில் முடிவடைந்தன. பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டின் தொழிற்கட்சி அரசாங்கம் இந்தியாவிற்கு யுரேனிய விற்பனைகள் கூடாது என்று இருந்த தடையை நீக்கிய பின்னரும் மற்றும் நவம்பர் மாதம் வடக்கு ஆஸ்திரேலியா இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக இருக்கும் என்ற அறிவிப்பையும் அடுத்து இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ஆசியப்-பசிபிக் பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது என்னும் அமெரிக்க செயற்பட்டியலின் விரிவாக்கத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் என்பது பிரிக்க முடியாதவை ஆகும். கில்லர்டின் அரசாங்கம் இந்தியா மீது காட்டும் ஆர்வங்கள் வாஷிங்டனால் ஆணையிடப்பட்டவை ஆகும். நவம்பர் 9ம் திகதி, ஆஸ்திரேலியாவிற்கு நவம்பர் 16-17 திகதிகளில் பாரக் ஒபாமா செல்வதற்கு முன், கான்பெர்ராவில் இருக்கும் அமெரிக்க தூதர் ஜேப்ரி ப்ளீச் ஆஸ்திரேலியன் பைனான்சியில் ரிவ்யூவிடம் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே இருந்த உறவுகளில் யுரேனிய விற்பனைத் தடை ஒருதடங்கலாக இருந்து வந்தது என்றார்.

அமெரிக்க, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகள் கிழக்கு இந்திய பெருங்கடலில் கூடுதலாக ஒருங்கிணைந்து, கூட்டு நடவடிக்கைகளைமுக்கூட்டு உடன்படிக்கை காணமுடியும் என்பது அமெரிக்காவின் முன்னோக்கு ஆகும். இந்தியா அணுவாயுத தடை உடன்பாட்டில் (NPT)  கையெழுத்திடவில்லை என்பதால் அதற்கு யுரேனிய விற்பனை இல்லை என்று ஆஸ்திரேலியா மறுத்து வந்தது இந்நடவடிக்கைகளுக்காகக் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவிற்கு ஒபாமா வருவதற்கு ஒரு நாள் முன்பு, நவம்பர் 15ம் திகதி, கில்லர்ட் ஒருதலைப்பட்சமாக அவருடைய அரசாங்கம் இந்தியாவிற்கு யுரேனிய விற்பனையை அனுமதிக்கும் தொழிற் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றுவதை அறிவித்தார். தொழிற் கட்சியின் தேசிய மாநாடு இம்மாதம் கில்லர்டின் அழைப்பிற்கு ஒப்புதல் கொடுத்தது.

நியூ டெல்லியின் டிசம்பர் 7 அன்று பாதுகாப்பு மந்திரி ஸ்மித் வந்து சேர்ந்து, அமெரிக்கா கோரிய பங்காளித்துவமுறையை இணைக்கும் முயற்சியை ஆரம்பித்தார். இந்தியப் பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அன்டோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய ஆயுதப்படைகளில் தலைவர்கள் ஆகியோரை ஸ்மித் சந்தித்தார். பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க தூதர் பாவித்த வார்த்தைகளில் ஸ்மித் ஆஸ்திரேலிய அரசாங்கம் யுரேனிய விற்பனை மீதான தடையை அகற்றியவகையில்தடங்கலை அகற்றிவிட்டது என்றார்.

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில்நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளன. “கடற்பிரிவுப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகியவை உரையாடல்களில் ஒரு பகுதியாக இருந்தன என்று அவர் வலியுறுத்தினார். தென் சீனக்கடல் பகுதி மீது சீனா இறைமை உரிமை கொண்டாடுவது குறித்து, ஸ்மித்தும் இந்திய அதிகாரிகளும் அமெரிக்க நிலைப்பாடானகப்பல்கள் தடையின்றிச் செல்லும் சுதந்திரம் பற்றி எதிரொலித்துப் பேசினர்; சீனாவிற்கு மூலோபாயக் நுண்ணுணர்வுப் பகுதியான தென் சீனக் கடலிலும் இது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றனர். வியட்னாமால் உரிமை கோரப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் உடன்பாடுகளை செய்வதன் மூலமாக  இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென் சீனக்கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதுகின்றன.

நியூ டெல்லியின் பெரிய சக்தி என்ற உரிமை கொண்டாடுவதற்கு ஒப்புதல் கொடுக்கும் வகையில், ஸ்மித் இந்தியாஉலகின் மூன்று உயர்மட்ட சக்திகளாக அமெரிக்கா, சீனாவுடன் வரும் தசாப்தங்களில் வந்துவிடும் என்று அறிவித்தார். நாட்டின் வடபகுதியில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை அறிவிப்பதற்கு முன் நான்கு நாடுகளுக்கு மட்டுமே அது குறித்து முன்கூட்டித் தகவல் அளிக்கப்பட்டது. அதில் இந்தியாவும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

அணுவாயுதப் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாவிட்டாலும் இந்தியா ஒருவிதிவிலக்கான நாடு என்று ஆஸ்திரேலியா கருதுவதாக ஸ்மித் வலியுறுத்தினார். ஏனெனில் 2008ல் அது அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டைக் கொண்டுள்ளது. அணுவாயுதப் தடை உடன்பாட்டிற்கு வெளிப்படையான மீறலான அமெரிக்க-இந்திய உடன்பாடு இந்தியாவை அதன் அணுவாயுதங்கள் மற்றும் இராணுவ அணுசக்தித் திட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிப்பதுடன், அதே நேரத்தில் பொதுதேவைகளுக்கான அணு உலைகள், தொழில்நுட்பம் மற்றும் யுரேனியத் தாதுப் பொருட்களை வாங்க அனுமதிக்கிறது. தொழிற்கட்சி அரசாங்கம் இந்தியாவின் வரலாற்றுரீதியான போட்டி நாடும் அதற்கு எதிராக மூன்று போர்களை நடத்தியுள்ள பாக்கிஸ்தானுக்கு யுரேனிய விற்பனையைத் தொடர்ந்து தடைக்கு உட்படுத்தும் என்றும் ஸ்மித் கூறினார்.

உயர்ந்த தரமுடைய யுரேனியம் கிடைக்கக் கூடிய உலக இருப்புக்களில் ஆஸ்திரேலியா 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இப்பொழுது அது வரம்பற்ற அளவில் இந்திய எரிசக்தி நிறுவனங்களுக்கு அவற்றை விற்கமுடியும். எனவே இந்தியாவின் குறைந்த யுரேனிய இருப்புக்கள் நாட்டின் அணுவாயுத இருப்பை விரிவுபடுத்தப் பயன்படுத்த முடியும். பாக்கிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு என்று கருதப்பட்டாலும், இந்தியாவின் அணுவாயுத இருப்பு சீனாவிற்கு ஒப்பாக வரவேண்டும் என்று கருதப்படுகிறது. அதுதான் ஆசியாவில் இந்தியாவின் பூகோள அரசியல் முன்னுரிமைகளை உறுதிப்படுத்த உதவும்.

மிகச் சமீபத்திய இந்திய அணுசக்தித் திறன் கொண்ட ராக்கெட்டான அக்னி V நாட்டின் செய்தி ஊடகத்தால் தூண்டுதல் தன்மை தரும் வகையில்சீனா கொலையாளி என்ற புனைப் பெயரைப் பெற்றது. ஏனெனில் 5,000 கி.மீ. தாக்குதல் திறனைக் கொண்ட இது சீனாவின் ஒவ்வொரு இலக்கையும் தாக்க முடியும்.

தன்னுடைய வருகையைத் தொடர்ந்து இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு இடையே கூட்டுப் பயிற்சியை அதிகரிக்கும், பேர்சிய வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் நிலைப்பாடு கொண்டுள்ள அமெரிக்க ஏழாம் கடற்படையுடன் முக்கூட்டு பயிற்சிகள் நடைபெறும் என்று ஸ்மித் குறிப்புக் காட்டியுள்ளார். சீனாவிற்கு எதிராக இம்மூன்று நாடுகளாலும் முக்கூட்டு இராணுவ உடன்பாடு வளர்க்கப்படுகிறது என்பதை அவர் மறுத்தார். ஆனால் அவர் வருகையின்போது வந்த ஒவ்வொரு அறிவிப்பு இத்திசையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவிற்கு எதிராக ஒரு தெளிவான இராணுவ மூலோபாயத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் முக்கிய கடல்பாதைகளில் அது கடற்படை முற்றுகையைச் சுமத்த முடியும் என்பதைத் தளம் கொண்டுள்ளது. அதன் நோக்கம் சீனப் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அது மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து பெறும் முக்கியமான இருப்புக்கள், மூலப் பொருட்கள் ஆகியவற்றை அடைவதில் சிக்கலை ஏற்படுத்துவது ஆகும். இந்தியப் பெருங்கடல் நாடுகளில் முறையே மிகப் பெரிய, இரண்டாம் மிகப் பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அமெரிக்கத் திட்டத்திற்கு முக்கியமானவை ஆகும்.

அமெரிக்கப் படைகளுடன் கூட்டுப் பயிற்சிகள் உட்பட இந்தியக் கடற்படை நடவடிக்கைகள் இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளுக்கு அருகே பெருகிய முறையில் குவிப்புக் கொண்டுள்ளன; அத்தீவுகள் மலாக்கா ஜலசந்திக்கு நெருக்கமாக உள்ளவை. சீனாவின் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் ஆகியவற்றில் பெரும்பகுதி மலாக்கா ஜலசந்தி வழியே செல்பவை.

மலாக்கா ஜலசந்திக்கு அருகே இந்தியாவின் பயிற்சிகள் இன்னும் தெற்கே முடுக்கிவிடப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நடவடிக்கைகளுக்கு துணை போல் இருக்கும். மலாக்கா ஜலசந்தியின் குறுகிய பாதையில் மிகப் பெரிய கப்பல்கள் கடக்க முடியாது; அவை இன்னும் ஆழமான சுந்தா ஜலசந்தி மற்றும் இந்தோனிசியத் தீபகற்பத்தில் உள்ள லோம்பாக் ஜலசந்தி வழிகளில்தான் செல்ல முடியும். வடக்கு ஆஸ்திரேலிய நகரான டார்வின் இந்த ஜலசந்திகளுக்கு அருகே உள்ளது என்பதால் அமெரிக்க இராணுவச் செயற்பாடுகளை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியப் பகுதிகளான கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை நிறுவும் திட்டமும் ஆய்வில் உள்ளது. இவை இந்தோனிசிய கடல் வழிகளுக்கு இன்னும் நெருக்கமானவை ஆகும். ஆஸ்திரேலிய தரைப்பகுதியை அகதிகள் அடைவதைத் தடுக்கும் போலிக்காரணம் காட்டி, ஆஸ்திரேலிய இராணுவம் ஏற்கனவே கிறிஸ்துமஸ் தீவில் கண்காணிப்புத் தளங்களைப் பயன்படுத்துகிறது; இவை கூருணர்வுடைய ஜலசந்திகள் உட்பட கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியின் பெரும்பகுதியில் கடந்து செல்லும் கப்பல்களைப் பரந்த முறையில் கண்காணிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன.

கில்லர்ட் அரசாங்கம் பெரும் இருதரப்புப் பொருளாதார வாய்ப்புக்களையும் தொடர்கிறது. இந்தியா ஏற்கனவே $11 பில்லியன் மதிப்பு உடைய மூலப்பொருட்கள், விவசாய விளைப்பொருட்கள் மற்றும் கல்விப் பணிகளை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கியுள்ளது. முக்கியச் சுரங்க நிறுவனங்கள் இந்தியாவை நீண்டகாலச் சந்தையில் இலாபத்தை நிலக்கரி, தாமிரம், இயற்கை எரிவாயு, தங்கம் மற்றும் இப்பொழுது யுரேனியம் ஆகியவற்றில் அளிக்கும் என்று கருதுவதுடன், சீனச் சந்தைகளுக்கு ஒரு மாற்றீடு என்றும் கருதுகின்றன. பெரிய அளவில் ஆஸ்திரேலிய அரசாங்க மற்றும் வணிகத் தூதுக்குழுக்கள் சமீபத்திய மாதங்களில் இந்தியாவிற்கு வந்துள்ளன.

2012ல் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முக்கிய இராஜதந்திர செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றுள் அடுத்த ஆண்டு முன்பகுதியில் கில்லர்ட் இந்தியாவிற்கு வருகை புரிதல், பதில் மரியாதைக்கு இந்திப் பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லுதல் ஆகியவையும் அடங்கும்.