சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK Liberal Democrats pledge support for coalition over EU summit crisis

இங்கிலாந்தின் தாராளவாத ஜனநாயகவாதிகள் ஐரோப்பிய உச்சிமாநாட்டு நெருக்கடி குறித்து கூட்டரசாங்கத்திற்கு ஆதரவை உறுதியளிக்கின்றனர்

By Julie Hyland
15 December 2011

use this version to print | Send feedback

பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஐரோப்பிய உச்சிமாநாட்டில் உடன்பாடு மாற்றங்கள் குறித்து தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு ஐரோப்பிய ஒன்றிய சார்பு தாராளவாத ஜனநாயகவாதிகள் கூட்டரசாங்கத்தில் எத்தகைய தாக்கத்தை கொடுப்பர் என்பதாக பிரிட்டிஷ் விமர்சகர்களின் கவலை இருந்தது.

உச்சிமாநாட்டில் ஒரே ஒரு சிறுபான்மை நாடு என்று குறைமதிப்பிற்கு உட்பட்டபின், அரசாங்கமே வீழ்ச்சியடைந்துவிடும் என்ற அச்சம் இருந்தது.

துணைப் பிரதம மந்திரியும் தாராளவாத ஜனநாயகவாதிகளின் தலைவர் நிக் கிளெக் திங்களன்று பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாதபோது, லண்டன் நகரை காப்பாற்ற அது முக்கியம் என்ற கருத்தில், காமெரோன் தன் தடுப்பதிகாரத்தை பயன்படுத்தியது குறித்து பாதுகாத்துப் பேசியபோது என் நிலையில், அத்தகைய கவலைகள் நன்கு நியாயப்படுத்தப்பட்டவை எனக் கருதப்பட்டன. தாராளவாத ஜனநாயகவாதிகளின் முன்னாள் தலைவர் பாடி ஆஷ்டௌன் இன்னும் பல கட்சிப் பிரமுகர்கள் ஐரோப்பாவில் இங்கிலாந்து  தனிமைப்படுத்தப்பட்ட வகையில் நடந்து கொண்டதற்கு காமெரோனை தாக்கிய நிலையில் இவர் பாராளுமன்றத்திற்கு வராததும் நிகழ்ந்தது.

கன்சர்வேடிவ் கட்சியின் கணிசமான யூரோ அவநம்பிக்கைப் பிரிவு காமெரோனை ஒரு வெற்றிபெற்ற வீரர் எனப் பாரட்டிய உண்மையும் விடயங்களுக்கு அதிகம் உதவவில்லை. கூட்டணிப் பங்காளிக்கு உரிய மரியாதையை செலுத்துமுகமாக வெற்றிக்களிப்பை மிகைப்படுத்தவேண்டாம் என்ற பலமுறை எச்சரித்தும்கூட, பலரும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மூத்த டோரித் தலைவர் சேர் பீட்டர் டாப்செல் பாராளுமன்றத்தில் அவர்களுடைய உணர்வைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் காமெரோனுடைய செயல்களுக்குத் தன்பாராட்டையும் முழு ஆதரவையும் அறிவித்தார்; அதே நேரத்தில்அச்சுறுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய வங்கி முறையை காப்பாற்றுவதற்கு உச்சிமாநாடு மூலோபாய மதிப்பு எதையேனும் சாதித்ததா என்று குறும்புத்தனமாக வினவி, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஜேர்மன் மத்தியவங்கியின் நீடிக்கப்பட்டுள்ள தாமதம் இன்னும் உறுதியளிக்கப்படாத பெரும் ஆதரவு இல்லாவிட்டால், சான்ஸ்லர் மேர்க்கல் கூறியபடி யூரோவும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் அழிந்துவிடும்.” எனக் கூறினார்.

ஆனால் காமெரோனுக்கு வந்துள்ள ஐரோப்பிய அவநம்பிக்கையாளர்களின் ஆதரவு இருபுறமும் கூரான கத்தியைப் போன்றது ஆகும். அவருடைய தடுப்பதிகாரத்தால் உந்துதல் பெற்று, யூரோப்பகுதியில் நடைபெறும் நெருக்கடியினாலும் உந்துதல் பெற்று, இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனின் உறவுகள் குறித்து வாக்கெடுப்பு தேவை என்னும் அழுத்தத்தை அதிகரித்துள்ளனர். பல காரணங்களுக்காக பிரதம மந்திரி பெருமுயற்சியுடன் இதைத் தவிர்க்க முயல்கிறார்.

குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கேனும், பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு உச்சிமாநாட்டில் காமெரோன் பாதுகாப்பளித்த  அதேதேசிய நலன்களை ஒட்டி யூரோப்பகுதியை பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்குகாப்பாற்ற விரும்பவில்லை. பிரிட்டனின் வங்கிகள் மிகப் பெரிய அளவில் ஐரோப்பிய அரசாங்கங்க கடன்களில் ஈடுபட்டுள்ளன; எனவேதான் வாஷிங்டனுடன் இணைந்து இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி (அதாவது ஜேர்மனியின் மத்தியவங்கி) “கடைசிப்பட்ச கடன்கொடுக்கும் நிறுவனமாகச் செயல்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது.

ஐரோப்பிய உச்சிமாநாட்டின் ஐரோப்பா முழுவதையும் ஒரு மிகப் பெரிய சிக்கனப்பகுதியாக மாற்றுதல் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட கொள்கைக்கும் இவர்கள் உரத்தகுரலில் ஆதரவு கொடுக்கின்றார்கள். ஏனெனில் முதலாளித்துவம் இந்த நெருக்கடியை வேலைகள், ஊதியங்கள், சமூகநலன்கள் ஆகியவற்றை கண்டம் முழுவதிலும் அழிக்கப் பயன்படுத்த விரும்புகின்றது.

ஐரோப்பாவில் அத்தகைய மூலோபாயத்தைக் கொண்டுவருவதற்கு வேண்டுமேன்றே முன்னோடியாக முயன்றது பிரிட்டினின் கூட்டரசாங்கம் ஆகும். ஏனெனில் கடந்த மே மாதம் அது பதவிக்கு வந்த உடனேயே 1930களுக்குப் பின் மிகக் கடுமையான செலவுக் குறைப்புக்களைச் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பின்வாங்குதலுக்கு பெரும் ஆதரவு எதிர்பார்க்கப்படலாம் என்று உள்ள ஒரு வாக்கெடுப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்துஉள்நாட்டிலும் சிக்கன நடவடிக்கை உந்துதலை தடை செய்யும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது.

எனவேதான் பைனான்சியல் டைம்ஸ்கூட்டணி அரசு வீழ்ச்சியடைவது பிரிட்டனுக்குப் பெரும் பின்னடைவு ஆகும். இந்த அராசங்கத்தின் சாதனை ஒரு சந்தைப் புயலுக்கு நடுவே நிதியக் கப்பலை உறுதியாகச் செலுத்துவது என்று உள்ளது. உடைவு என்பது அதைப் புயலின் சீற்றத்திற்கு விட்டு ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மூழ்கடித்துவிடும்.” என்று தலையங்கத்தில் எழுதியுள்ளது.

தற்பொழுது கிளெக் பாராளுமன்றத்திற்கு வராதது அவரது அங்கத்தவர் மத்தியில் உள்ள அதிருப்பதியை சமாளிக்கும் நோக்கத்துடன் அரசியல் அரங்கின் நாடகத்தன்மையைக் கொண்டுள்ளது. தாராளவாத ஜனநாயகவாதிகளின் தலைவர் ஒருதிசைதிருப்பம் ஏற்படுத்தக்கூடாது என்பதால் பாராளுமன்றத்திற்குத் தான் வராமல் இருப்பது நல்லது எனத்தான் நினைத்ததாகக் கூறினார்.

கூட்டரசாங்கத்தை வீழ்ச்சியடைய வைக்கும் நோக்கத்தை கிளெக் கொண்டிருக்கவில்லை. முதலில் அது அரசியல்ரீதியாக  தற்கொலைக்கு ஒப்பாகும். பல ஆண்டுகளாக அவரது கட்சி ஈராக் போரை எதிர்த்தல், பல்கலைக்கழகக் கட்டணத்தை கண்டித்தது, “சமூக ஐரோப்பா என அழைக்கப்படுவதற்கு ஆதரவைக் கண்டித்தது போன்றவற்றில் தொழிற்கட்சிக்கு ஒருஇடது மாற்றீடு எனக் காட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் கூட்டசியில் அது லிபியாவில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்து, பயிற்சிக் கட்டணத்தை மும்மடங்காக ஆக்கியதற்கு ஆதரவு கொடுத்து மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவையும் கொடுத்தது. இதனால் அதற்கான வாக்காளர் ஆதரவு சரிந்துவிட்டது.

தாராளவாத ஜனநாயகவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை முன்பு பாதுகாத்தல் என்பது கட்சி கடப்பதற்கு விருப்பமாக உள்ள மற்றொருசிவப்புக் கோடு ஆகும்.

இங்கு அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்களுக்கு எதிராக சுமத்தப்பட உள்ளநிதியக் கட்டுப்பாட்டு அபராத நடவடிக்கைகளுக்கு தாராளவாத ஜனநாயகவாதிகள் ஆதரவு கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் ஜேர்மனியும் பிரான்ஸும் கூறும் வணிகம், யூரோ நாணயப் புழக்கம் உள்ள நிதிய நடவடிக்கைகள் யூரோப் பகுதியுடன் மட்டுமே இருக்க வேண்டும், என்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

எனவேதான் காமெரோன் வெள்ளி அதிகாலை இவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நகரத்திற்கு உடன்பாட்டு மாற்றங்களில் எந்தப் பாதுகாப்பும் இராது என்ற கூறியபோது, அதற்கு கிளெக் ஒப்புக் கொண்டார்.

முன்னாள் நிதியமைச்சரகத் தலைமைச் செயலாளரான டேவிட் லாஸ் அவருடைய கட்சிக்கும் டோரிக்களுக்கும் இடையே உள்ள, “ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் நம்பக்கூடிய மற்ற நட்பு நாடுகள் இல்லாததின் விளைவு குறித்த வேறுபாடுகள்தந்திரோபாயமானவை என்றார்.

இது பிரிட்டனின் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கும் கவலை அளிப்பது என்றார் லாஸ். அவை அப்பொழுதுநாம் பங்குபெறாமல் பிற ஐரோப்பிய நாடுகள் ....நிர்ணயிக்கும் விதிகளை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளனர்.”

தாராளவாத ஜனநாயகவாதிகள் துணைத் தலைவர் சைமன் ஹ்யூஜிஸ் இன்னும் வெளிப்படையாகக் கூறினார்: “கூட்டணிக்கு அபாயம் ஏதும் இல்லை. நாங்கள் தேசிய நலனை ஒட்டி ஓர் உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்....ஏனெனில் பொருளாதாரத்தைச் சீர்படுத்த நாட்டிற்கு எங்கள் தேவை இருந்தது என நாங்கள் அறிந்தோம். எனவேதான் கூட்டுச் சேர்ந்தோம்.”

தொழிற்கட்சி தலைவர் எட் மிலிபண்ட் காமெரோன்பிரிட்டனுக்கு மோசமான நிலையை தோற்றுவித்துள்ளார் என்று குறைகூறினாலும், அது முற்றிலும் பிரதம மந்திரியின் தடுப்பதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களைத் தடுக்க முடியாததுடன், லண்டன் நகரத்தை ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது என்றார்.

தன்னுடைய விடையிறுப்பில் காமெரோன் சுட்டிக்காட்டியதுபோல், தொழிற்கட்சித் தலைவரின்உரத்தக் குரல், சீற்றம் ஆகியவை இருந்தாலும், முன்வைக்கப்பட்டுள்ள உடன்பாட்டில் அவர் கையெழுத்திட்டிருப்பாரா எனக் கூறவில்லை என்றார்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது, பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கூட்டுக்கள் கட்டமைப்பதை, தன் நலன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் மாற்றங்களுக்கு குழிபறிக்க கவனம் காட்டி வருகிறது.

உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட அரசாங்கத்திற்கு இடையேயான உடன்பாடு சர்வதேச நிதியச் சந்தைகளைத் திருப்தி செய்யப் போதுமான நிதிகளை அளிப்பிதல் தோல்வி காணும் என்ற உண்மையை அது நம்பியுள்ளது. யூரோ தொடர்ந்து அழுத்தத்தைப் பெறுகையில், பல தாமதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தலில், ஒருவேளை பல நாடுகள் வெளியேறக்கூட வேண்டும் என்ற நிலையில் (மிகவும் குறிப்பாக கிரேக்கம் உள்ளது) பிரிட்டிஷ் முதலாளித்துவம் புதிய நண்பர்களைப் பெறலாம் என நம்புகிறது. இதைத்தவிர, புதிய உடன்பாட்டிற்கு டென்மார்க், பின்லாந்து, செக் குடியரசு ஆகியவை ஒப்புதல் அளிக்கும் என்பது ஒன்றும் உறுதியல்ல. மேலும் அயர்லாந்து ஒரு வாக்கெடுப்பு நடத்தும் கட்டாயத்திற்கு உட்படலாம், அதில் அது நிச்சயம் தோற்றுவிடும்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் காமெரோனுடைய நடவடிக்கைகளைக் கடுமையான சொற்களில் விவரித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஒலி ரேஹான் பிரதம மந்திரியின் தடுப்பதிகாரம்வங்கியாளர்களையும் லண்டன் நகரின் நிதிய நிறுவனங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடாது என்ற நோக்கத்தில் இருந்தால், அவ்வாறு நடக்கப்போவது இல்லை என்று எச்சரித்தார்.

இங்கிலாந்து அரசாங்கம்நிதியப், பொருளாதாரக் கண்காணிப்பை இறுக்குவதற்கு ஆதரவு கொடுத்துள்ளது என்றார் ரேஹான். எனவே, “இங்கிலாந்தின் மிக அதிகப் பற்றாக்குறை மற்றும் கடன் மற்ற அங்கத்துவ நாடுகளுடையதைப் போலவே கண்காணிப்பிற்கு உட்பட்டிருக்கும். கண்காணிப்புக் கருவி பொதுவாக யூரோப்பகுதி நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும்.”

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே உறவுகள் சரிவு என்பதும் குறிப்பாகக் கவனத்திற்கு உரியது.

பல நாட்களாக அனைத்துக்கட்சி அரசியல்வாதிகளும், செய்தி ஊடகத்தின் ஆதரவுடன், உச்சிமாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிஉருவாக்கிய வகையில் காமெரோன் ஒரு பாதிப்பாளர் எனக் கூறிவந்துள்ளனர். உடன்பாட்டு மாற்றங்கள் யூரோப்பகுதியில் உள்ள 17 உறுப்பு நாடுகளாலும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரெஞ்சு ஜனாதிபதி தெளிவாக்கியிருந்தார். இதில் இங்கிலாந்து ஒதுக்கப்பட்டு இருந்தது. மிக அதிகாலையில் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் கூட்டத்தை சார்க்கோசி கூட்டி பிரிட்டனின் பிடிவாதத் தன்மையைக் கண்டித்தது என்பது காமெரோன் உத்திமுறையில் வீழ்த்தப்பட்டார் என்பதற்கு மற்றொரு நிரூபணம் ஆகும் என்றார்.

தேர்தல்களை எதிர்கொள்ளும் சார்க்கோசிக்கும், பிரெஞ்சு முதலாளித்துவம் முழுமைக்கும் நிறைய பணயங்கள் உள்ளன. தரம் நிர்ணயிக்கும் அமைப்புக்கள் பிரான்ஸின் கடன்தரங்களைக் குறைப்பதாக அச்சுறுத்தி வருகையில், சார்க்கோசி இதுவரை ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பாவிற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் செயல்பட அனுமதித்து, அதையொட்டி பிரெஞ்சு வங்கிகளும் ஏற்றம் காணலாம் என்பதற்கு ஜேர்மனியிடம் முயன்று தோற்றுவிட்டார்.

இதன்பின், சார்க்கோசி தூண்டுதல்தரும் வகையில் உச்சிமாநாடுஒரு புதிய ஐரோப்பாவின் தோற்றத்தைக் குறிக்கிறது என்றார். “இரண்டு ஐரோப்பாக்கள் உள்ளன என்பது தெளிவு. ஒன்று அதன் அங்கத்துவநாடுகளுக்கு இடையே கூடுதலான ஒற்றுமை, கூடுதல் கட்டுப்பாடு ஆகியவற்றை விரும்புகிறது. மற்றொன்று உட்சந்தையின் தர்க்கத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.”

சார்க்கோசியின் கூற்றுக்கள் போலித்தனமானவை. அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஒரேஒற்றுமையுணர்வு ஜேர்மனி மற்றும் பிரான்ஸுக்கும் இடையே அவற்றின் ஆணைகளை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துதல் என்பதுதான்.

ஆனால் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில், சார்க்கோசியின் Union for a Popular Movement உடைய உறுப்பினரான ஜோசப் டோல், காமெரோனின்ஒற்றுமையுணர்வு மீறலுக்குப் பதிலடியாக இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பெறும் கழிவுத் தொகையைப் பெறக்கூடாது என வாதிட்டார். சவால் விடப்பட்டதற்கு டோல் சிரித்த வண்ணம் கூறினார்: “கவலைப்படாதீர்கள், நாங்கள் ஒன்றும் கிறிஸ்துமஸ்ஸிற்கு முன் (பிரிட்டனுக்கு) டாங்குகள், கலாஷினிகோவுடன் வந்துவிட மாட்டோம்.”

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே உறவுகளில் சரிவு என்பது ஐரோப்பாவில் இப்பொழுது வளரும் சக்தி வாய்ந்த மையத்தில் இருந்து விலகும் அழுத்தங்களைக் குறிக்கிறது. இவற்றிற்கு நீண்டகால விளைவுகள் உள்ளன. ஒரு சில மாதங்கள் முன்புதான் இரு நாடுகளும் லிபியாவில் ஏகாதிபத்திய தலையீட்டில் நட்பு நாடுகளாக இருந்து, இராணுவ ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தன.