சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Egypt shuts down internet access

எகிப்து இணைய சேவையை நிறுத்துகிறது

By Andre Damon
29 January 2011

Use this version to print | Send feedback

வெள்ளியன்று நடக்கவிருந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்கூட்டியே தொலைத்தொடர்புகளை முடக்கும் ஓர் முயற்சியாக, வியாழனன்று இரவு பன்னிரெண்டரை மணிக்கு நாட்டில் பெரும்பாலான இணைய சேவை பரிமாற்றங்களை எகிப்திய அரசாங்கம் முடக்கியது. பொலிஸால் ஓர் ஆர்ப்பாட்டக்காரர் சுட்டுக் கொல்லப்படும் ஒரு கேமிரா-போன் படக்காட்சியை அசோசியேடட் பிரஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.

இணைய தொலைத்தொடர்புமீது முன்னொருபோதும் இல்லாத கட்டுப்பாடுகளை இந்த நடவடிக்கை உட்கொண்டிருக்கிறது. ஏனைய நாடுகளும் குறிப்பிட்ட வலைத்தளங்களை அணுகுவதை முடக்கியுள்ளன அல்லது இணைய பரிமாற்ற வேகத்தைக் குறைக்க முயன்றுள்ளன. ஆனால் மக்கள் இணையத்தை ஒட்டுமொத்தமாக அணுகாமல் தடுப்பதில் அவற்றால் வெற்றி பெறமுடியவில்லை.

எகிப்தில் நான்கு இணையச்சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இவையனைத்தும் ஏறத்தாழ ஒரேநேரத்தில் சேவையை நிறுத்தின. ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்த ஆட்சி, வியாபார நம்பிக்கையைக் கெடுக்காமல் போராட்டங்களை ஒடுக்க முயற்சித்ததால், இராணுவம் மற்றும் பங்குச்சந்தைக்கு மட்டும் சேவை தடுக்கப்படாமல் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செல்பேசி சேவை வழங்கும் வோடாபோன் நிறுவனம் அதன் சேவையை நிறுத்திய போது, செல்பேசி தொலைபேசி சேவையும் நிறுத்தப்பட்டது. “எகிப்திலுள்ள அனைத்து செல்பேசி சேவை வழங்குனர்களுக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகளை நிறுத்தும்படி தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,” என்று அரசு தொலைதொடர்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மற்றொரு எகிப்திய செல்பேசி நிறுவனம் Mobinilஇன் உரிமையாளர் பிரான்ஸ் டெலிகாம் கூறியது, “எகிப்திய அதிகாரிகள் தொழில்நுட்ப முறைமைகளை எடுத்துள்ளனர், இது Mobinil அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதைத் தடுக்கிறது.” மீண்டும் சேவை எப்போது பழைய நிலைமைக்குக் கொண்டு வரப்படும் என்பது குறித்து தமக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அது, “எகிப்திய சட்டஅமைப்பின்கீழ், இதுபோன்ற ஓர் உத்தரவை வழங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும்,” என்றது.

இணைய கண்காணிப்பு நிறுவனம் Renesys, வெள்ளியன்று எகிப்தில் 93 சதவீத இணைய முகவரிகள் ஆஃப்லைனில் இருந்ததாக அறிவித்தது. "இணையத்தை ஒட்டுமொத்தமாக உடனடியாக பயன்பாட்டிலிருந்து நிறுத்த முடியாது; ஒவ்வொரு சேவை வழங்குனரும் எகிப்திய இணைய சேவையின் அதன் பாகத்தைத் தனித்தனியாக தான் நிறுத்த முடியும்" என்பதை அவர்கள் பகுப்பாய்வு காட்டியது. இணைய சேவை நிறுத்தக் கோரி சேவை வழங்குனர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தனித்தனியாக தகவல்கள் அளிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

எகிப்திய இணைய சேவைகளில் தொடர்ந்து ஆன்லைனில் இருக்கும் சிறிய பிரிவு பெரும் வியாபாரங்களோடு தொடர்புபட்டது என்று தெரியவருகிறது. அந்நாட்டின் நான்கு இணைய சேவை வழங்குனர்களில் ஒன்றான Noor, நாட்டின் பங்குச்சந்தை சேர்ந்தவை உட்பட, சில இணைப்புகளை ஆன்லைனில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

"குறிப்பிட்ட இணையத்தடங்கள் (routes) தடுக்கப்பட்ட துனிசியாவையோ அல்லது இணைய இணைப்புகளின் வேகத்தை மிக மோசமாக குறைக்கும் விதத்தில் கட்டண-விகிதத்தைக் கொண்டிருந்த ஈரானைப் போன்றோ அல்லாமல் மிதமான இணைய பயன்பாட்டிலிருந்து ஒரு முற்றிலும் வேறுபட்ட சூழலை எகிப்திய நிகழ்வுகள் கொண்டிருக்கின்றன" என்று Renesys ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டது. "எகிப்திய அரசாங்கத்தின் இன்றிரவு நடவடிக்கைகள் உலக வரைபடத்திலிருந்தே அவர்களின் நாட்டை துடைத்து விட்டுள்ளது,” என்றும் அந்நிறுவனம் எழுதியது.

இணைய பரிமாற்றத்தில் சீன அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் கூட, முபாரக் ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு நெருக்கமாக வரவில்லை. சீன அரசாங்கம் அது எந்த தளங்களை நிலைகுலைக்கும் வலைத் தளங்களாக கருதியதோ அதை மட்டுமே வெட்டி இருந்தது. ஆனால் சீன எல்லைகளுக்கு வெளியிலிருக்கும் புராக்சி சர்வர்களைக் கொண்டு அந்த தடைகளைப் பயனர்களால் தாண்டி வர முடிந்தது.

செல்பேசி குறுந்தகவல் செய்தி சேவைகளோடு சேர்ந்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சிறு-பதிவு தளங்கள் உட்பட, தொலைதொடர்பின் புதிய வடிவங்கள் எகிப்து மற்றும் துனிசியாவின் மக்கள் பேரெழுச்சிகளுக்கு முக்கிய தொலைதொடர்பு கருவிகளாக உதவியுள்ளன. எதிர்ப்புணர்வு மற்றும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பைப் பரப்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்திய பெருந்திரளான இளைஞர்களால், அந்த போராட்டங்கள் இட்டுச் செல்லப்படுகின்றன.

எகிப்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இணைய பரிமாற்றங்களின்மீது அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. ஜூன் 2010இல், செனட்டர்கள் ஜோ லிபெர்மன், சூசன் கொலின்ஸ், மற்றும் டாம் கார்பர் ஒரு சட்டவரைவை கொண்டு வந்தனர், அது இணையத்தை காலவரம்பின்றி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்துவதற்கான அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு அளிக்கக்கூடியதாகும்.

இந்த சட்டத்தை ஊக்குவித்து, லிபெர்மன் கூறியது, “ஒருவேளை யுத்தம் ஏற்பட்டால் சீனாவால், அந்த அரசாங்கத்தால், அதன் இணையத்தின் பகுதிகளை இப்போதே துண்டிக்க முடியும்.” அந்த சட்டவடிவின் தற்போதைய பதிப்பை இந்த ஆண்டிலேயே வாக்கெடுப்புக்குக் கொண்டு வர செனட்டர் வலியுறுத்தி வருகிறார்.

வெறும் நான்கை மட்டும் கொண்டிருக்கும் எகிப்தோடு ஒப்பிட்டால் நூற்றுக்கணக்கான இணைய சேவை வழங்குனர்களை அமெரிக்கா கொண்டிருப்பதால், அங்கு இணைய பரிமாற்றத்தை நிறுத்துவதென்பது மிகவும் சிக்கலான வேலையாக இருக்கும், அதற்கு பெரும் தயாரிப்புகள் தேவைப்படுகிறது என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

சமூக போராட்டங்களின் போது இதுபோன்று திட்டங்களை அமெரிக்க அரசாங்கம் அவ்வப்போது நிச்சயமாக தயாரித்து கொண்டிருக்கின்றன என்ற போதினும், இணைய நடவடிக்கையைத் தடுக்க அது ஏற்கனவே பகிரங்கமாகவே நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. விக்கிலீக்ஸ் அதன் இராஜாங்க விவகார கசிவுகளை வெளியிட்டதும், அமெரிக்க அரசாங்கம் அந்த அமைப்பின் வலைத் தளத்தை இராணுவம் அணுகாதபடிக்கு வெட்டியது, அத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் அவற்றின் சர்வர்களையும், ஏனைய தொழில்நுட்பங்களையும் அதற்காக பயன்படுத்துவதைத் தடுக்கவும் அழுத்தம் அளித்தது.