சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Mass protests continue in defiance of Egypt’s government and military

எகிப்திய அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு கீழ்படிய மறுக்கும் வெகுஜன எதிர்ப்புக்கள் தொடர்கின்றன

By Chris Marsden
31 January 2011

Use this version to print | Send feedback

கெய்ரோ, அலெக்சாந்திரியா, போர்ட் சையத், சூயஸ் இன்னும் எகிப்தில் பல நகரங்களிலும் ஞாயிறன்றும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் நிறைந்த எதிர்ப்புக்கள் தொடர்ந்தன.

இராணுவம் சுமத்திய ஊரடங்கு உத்தரவைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீறி, புதிய மந்திரிசபையை கூடுதலான ஜனநாயகத்தை நோக்கிச் செல்லுவதற்கு ஒரு படி என்று சித்தரிக்க முற்படும் ஹொஸ்னி முபாராக்கின் முயற்சிகளை இகழ்வுணர்வுடன் நிராகரித்தனர். சனிக்கிழமை எகிப்திய பொது உளவுத்துறை இயக்கத்தின் (EGID) இயக்குனர் ஒமர் சுலைமானை துணை ஜனாதிபதியாக நியமித்தது குறிப்பிடத்தக்க வகையில் ஆத்திரமூட்டும் தன்மை எனக் கருதப்படுகிறது.

ஹொஸ்னி முபாரக், ஒமர் சுலைமான், நீங்கள் இருவரும் அமெரிக்கர்களுடைய முகவர்கள்”, “முபராக், முபாரக், விமானம் காத்திருக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர்.

நாடெங்கிலும் பல சிறைகள் தாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கைதிகள் நான்கு சிறைகளில் இருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்த்தரப்பு முஸ்லிம் பிரதர்ஹுட்டைச் சேர்ந்த 34 தலைவர்கள் உட்பட, இவர்கள் வாடி நட்ரௌன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் கூடினர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசுக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது 150 பேராவது இறந்து போயினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றனர். சிறு நகரங்கள், மற்ற நகரங்களில் இருந்து தகவல்கள் குறைவாக வந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரக்கூடும்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய அலெக்சாந்திரியாவில், உறுதியான எதிர்ப்பை விடையிறுக்கும் வகையில் பொலிசார் ஊரடங்கு உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை. பெரிய அளவு எதிர்ப்புக்கள் பொலிஸ் தாக்குதலில் இறந்துவிட்ட நபர்களின் இறுதி ஊர்வலங்களுக்குப் பின் வெடித்தன.

எகிப்தில் எழுச்சியை அடக்குவதில் முக்கிய சக்தியாக இராணுவம் உள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. முபாரக்கின் 30 ஆண்டு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்கத்தின் முதல் ஐந்து நாட்களில்மக்களின் இராணுவம் என்று எதிர்க்கட்சிகளின் தலைமையினால் பரந்த முறையில் சித்திரிக்கப்பட்ட இராணுவம், 450,000 கட்டாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டது, பொலிசுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் பின்புலத்தில் இருந்தது. ஆனால் பொலிஸ் நிலையங்கள் எரிக்கப்பட்டு, அதிகாரிகள் கொலை செய்யப்படும் நிலைமையில், பொலிஸ் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டு இராணுவம் செயல்படுகிறது.

அப்பொழுது முதல் செய்தி ஊடகம் பொலிஸ் இல்லாத நிலையில் கொள்ளைகள் பரந்து நடந்துவருவது பற்றிச் செய்திகளைக் கொடுத்தன. செல்வந்தர்கள் பகுதியிலுள்ள தனிப்பட்ட வீடுகள் மற்றும் சில கடைகள் உட்பட, கொள்ளையர்கள் கெய்ரோவின் எகிப்திய புராதனப் பொருட்கள் அருங்காட்சியகத்தையும் தாக்கி, இரு மம்மிகளின் தலைகளைச் சிதைத்து மற்ற பொருட்களையும் சேதப்படுத்தினர்.

இராணுவம் இக்கொள்ளையை கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றிஒழுங்கை நிலைநாட்ட அதனுடன் ஒத்துழைக்குமாறு கோரியது. “அனைத்துக் குடிமக்களும் துல்லியமாக ஊரடங்கு உத்தரவின் கீழ் நடக்க வேண்டும் என்று இராணுவப் படை வலியுறுத்தி, மீறுபவர்கள் கடுமையாகவும் உறுதியாகவும் தண்டிக்கப்படுவர் என்று கூறியுள்ளது என அரசாங்கத் தொலைக்காட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆனால் கொள்ளையர்கள் பொதுவாகச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள், பின்னர் அரசால் இவ்வாறு இயக்கப்படுகின்றனர், உண்மையில் போலிசின் நிழலில்தான் செயல்படுகின்றனர் என்பதற்குப் பரந்த சான்றுகள் உள்ளன.

பல குண்டர்கள் அரசாங்கம் அளித்த ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கெய்ரோப் பகுதியில் ஹெலியோபொலிஸ் சந்தைக் பகுதியில் பிடிபட்ட ஒரு கொள்ளையர் குழு, பாதுகாப்புப் படையினரின் அடையாள அட்டைகளை வைத்திருந்தது என்று Telegraph  எழுதியுள்ளது. நசர் நகர மக்கள் கொள்கையர்களை அவர்கள் பிடித்தபோது உள்துறை அமைச்சரகம் தான் அவர்களை அனுப்பிவைத்தது என்று அவர்கள் கூறினர் என்ற தகவலைக் கொடுத்துள்ளனர். அலெக்சாந்திரியாவில் ஒரு வங்கியைக் கொள்ளயடிக்க முயன்ற பொலிசுக்கு தகவல் கொடுப்பவர்கள் இருவரை எதிர்ப்பாளர்கள் பிடித்தனர்.

ஞாயிற்றுகிழமைக்குள், இராணவம் பெருமளவில் குவிக்கப்பட்டது. விமானப்படை ஜெட்டுக்கள் இன்னும் ஒரு ஹெலிகாப்டரும் தக்ரிர் சதுக்கத்திற்கு மேலே தாழ்வாகப் பறந்து சென்றன. கவச வாகனங்கள் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. சாலைகளும் பாதைகளும் தடுப்பிற்கு உட்பட்டன. முக்கிய அரசாங்க நிறுவனங்கள் பாதுகாப்பிற்கு உட்பட்டன. ஒரு பெரிய டாங்குகளின் பிரிவு உத்தரவை மீறிய எதிர்ப்பாளர்களால் நகர முடியாமல் தடைக்குட்பட்டது.

சுற்றுலா தளமான Sharm el Sheikh லும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று தான் அல் ஜசீரா விற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒலிபரப்பு உரிமையை இரத்து செய்வதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கெய்ரோவிலுள்ள அதன் அலுவலகமும் மூடப்படும். ஞாயிறு பிற்பகுதியில் பொலிசார் மீண்டும் இன்றிலிருந்து ரோந்து சுற்றுவர் என்று அறிவிக்கப்பட்டது. பொலிசார் போக்குவரத்துக் கட்டுப்பாடு, குற்றங்களை தடுத்தல் இன்னும் சில பணிகளைச் செய்வர் ஆனால் எதிர்ப்பாளர்களுடன் மோதுதலுக்கு அனுப்பப்பட மாட்டர்கள் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. இதையும் விடப்  பயங்கரமான செய்தி முபாரக் இராணுவத்திற்கு அது உகந்தது என்று நினைப்பவர்களைச் சுட்டுக் கொல்ல அனுமதி கொடுத்துள்ளாதாகக் கூறப்படுவதுதான்.

சுலைமானை நியமித்துள்ளது எந்த அளவிற்கு முபாரக் தான் அதிகாரத்தைத் தொடர்வதற்கு இராணுவத்தை நம்பியுள்ளார் என்பதை நிரூபிக்கிறது. ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் வரக்கூடிய வாய்ப்பையும் இது குறிக்கிறது. தேர்தல்கள் நடத்தப்படுவதற்குசுமுகமான மாற்றம் அப்பொழுதுதான் உறுதியளிக்கும் என்ற போர்வையில் இது நடைபெறுகிறது.

அமெரிக்காவுடனான எகிப்திய உடன்பாட்டில் சுலைமான் ஒரு முக்கிய பங்கைக் கொண்டவர். அவர்தான் பாலஸ்தீனிய மக்களைக் கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பதுடன் CIA இன்ஆட்கடத்தல் திட்டத்திலும் பங்கு பெற்றவர். இராணுவத்தின் நீண்ட கால விருப்புத் தேர்வாக முபாரக்கிற்குப் பின் பதவிக்கு வரக்கூடியவர் என்று கருதப்படுபவர். முபராக்கோ தன் மகன் கெமல் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று விரும்புகிறார்.

முபராக் அகற்றப்படுதல் ஆரம்பத்தில் சுலைமான் ஜனாதிபதியாக, குறைந்த பட்சம், புதிய தேர்தல்கள் நடக்கும் வரையிலேனும் இருப்பார் என்ற பொருளைத் தரும். ஆனால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிடாது. சுலைமான் நியமிக்கப்பட்ட அன்றே, முன்னாள் விமானப் படைத் தளபதியான அஹ்மத் ஷபிக்கும் முபாரக்கால் பிரதம மந்திரி என்று நியமிக்கப்பட்டார்.

முபாரக்கும் அவருடைய கையாட்களும் ஞாயிறு பெரும்பகுதியை இரகசியக் கூட்டங்களில் இராணுவத்துடன் பேச்சு நடத்தினர். முதலில் உள்துறை மந்திரி ஹபிப் அல் அடில் சுலைமானையும் பாதுகாப்பு மந்திரி மஹ்மத் ஹுசைன் தன்டவியைச் சந்தித்தார். முபராக்கே பின்னர் சுலைமான், தன்டவி, படைகளின் தலைமை அதிகாரி சமி அல் அனன் இன்னும் பல மூத்த தளபதிகளுடன் பேசினார்.

இக்கூட்டங்கள் பற்றிய வீடியோக் காட்சிகள் பின்னர் அரச தொலைக்காட்சியால் முபாரக்கிற்கு தளபதிகள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ஒளிபரப்பப்பட்டன. மேலைத்தேய தூதர்கள் ஜனாதிபதியை இராணுவம் கைவிடுவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை என்று கூறினர்.

அமெரிக்க எதிர்ப்பு கோஷங்கள் எகிப்தின் அனைத்து எதிர்ப்புக்களிலும் முக்கிய கூறுபாடாக இருந்தன. இதற்கு காரணம் வாஷிங்டன் முபாரக்கிற்கு ஆதரவு கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் இரண்டாவது மிகப் பெரிய அமெரிக்க உதவி நிதியை எகிப்து பெறுகிறது. ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டொலர், F-4 ஜெட் விமானம், F-16 ஜெட் போர் விமானங்கள், படையினருக்கு கவசன வாகனங்கள் வாங்க மற்றும் அபச்சே ஹெலிகாப்டர்கள் வாங்க என்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது கடைசி வகை ஹெலிகாப்டர்கள்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டுகிறது.

எகிப்திய இராணுவம் கெய்ரோவில் ஆட்சி செய்வது யார் என நிர்ணயிக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னணியில் இராணுவம் எதிர்கொள்ளும் விதம் வாஷிங்டனுடன் விவாதிக்கப்பட்டு, அதன் உடந்தையுடன்தான் முடிவு செய்யப்படுகிறது. வெள்ளியன்று, ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்க-எகிப்திய இராணுவ ஒத்துழைப்புக் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த உயர்மட்ட எகிப்திய இராணுவ அதிகாரிகள் பென்டகனுக்குச் சென்றிருந்த பயணம், முன்கூட்டி முடிக்கப்பட்டு அவர்கள் கெய்ரோவிற்குத் திரும்பினர். மறுநாள் சுலைமான் மற்றும் ஷபிக் ஆகியோர் முபாரக்கால் நியமிக்கப்பட்டனர்.

முபாராக்கை அகற்றத் தான் இன்னும் தயாரில்லை என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அவர் சுமை என்று நிரூபணமானால், அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிராந்திய சக்தியாக எகிப்திய அரசிற்கு துணை நின்று பாதுகாப்பதற்கு அனைத்தும் செய்யப்படும்.

வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் நேற்று ஐந்து அமெரிக்க செய்தி உரையாடல் நிகழ்வுகளில் தோன்றி எகிப்தில் அதிகாரம்முறையாக மாற்றப்படுவதற்கான அழைப்பை விடுத்தார்.

முபாரக்கை கண்டிக்கவோ, ஆதரவு கொடுத்தோ பேசாமல், அவர் அமெரிக்காஒரு முறையான மாற்றத்தைக் காண விரும்புகிறது அதையொட்டி ஒரு வெற்றிடத்தை எவரேனும் நிரப்ப வேண்டும் என்ற நிலை வரக்கூடாது. நன்கு சிந்தித்து கொண்டுவரப்படும் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் அதில் ஜனநாயமுறையில் மக்கள் அரசாங்கத்தில் பங்கு பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குழப்பம் அதிகரித்தல் அல்லது தெருக்களின் வன்முறை என்பது முன்னேற்றப் பாதை அல்ல என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முபராக் எடுத்துள்ளதாக அவர் நினைக்கிறாரா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் Fox இடம் கூறினார்: “இது யார் அதிகாரத்தைக் கொண்டுள்ளார் என்ற பிரச்சினை அல்லஎகிப்திய மக்கள் வெளிப்படுத்தியுள்ள முறையான தேவைகள், குறைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம், ஒரு புதிய பாதையை எப்படி வகுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.

எகிப்துடனான சமாதான ஒப்பந்தம் இஸ்ரேலுடன் இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டதில் முபாரக்கின் பங்கு பற்றி கிளின்டன் நேரிய வகையில் பாராட்டினார். அதே போல் வாஷிங்டனின்பயங்கரவாதத்தின் மீதான போருக்குக் கொடுத்த ஆதரவிற்கும் பாராட்டைத் தெரிவித்தார்அதாவது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கட்டுப்பாடு அதிகரிப்பதற்கு உதவுவதை. “ஆனால் இதற்கு எளிதான விடையும் இல்லை என்று அவர் ஒப்புக் கொண்டார்.

மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ள அறிக்கைகளை மறுத்த கிளின்டன், “இப்பொழுது எகிப்துக்கு உதவி அளிப்பதை நிறுத்திவிடுவது பற்றி எந்த விவாதமும் இல்லை என்றார்.

ஒரு முறையான மாற்றம் இக்கட்டத்தில் என்பது தெருக்களில் முபாரக்கை அகற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்தல் என்னும் பொருளாகும். விரும்பத்தக்க விருப்பத்தேர்வு சுலைமான் அல்லது வேறு இராணுவ நபர் ஒரு இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குதல் என்பதாக இருக்கும். ஆனால் அதில் இரு உட்குறிப்புக்கள் உள்ளன: அதாவது எதிர்ப்புக்களை அகற்றி, மக்கள் அணிதிரள்வை அகற்றுதல், மற்றும் எதிர்க்கட்சிகளுடன் அரசியல் மாற்றம் பற்றிய வழிவகையை விவாதிக்க வழிகாணல்.

இரு வகைகளிலும், அமெரிக்கா முஸ்லிம் பிரதர்ஹுட்டை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு உட்படும். ஆனால் இது நீண்டகாலமாக இஸ்லாமியவாத குழுக்களுக்கு விரோதப் போக்கைத்தான் காட்டி வருகிறது.

ஒரு அமெரிக்க சார்புடைய நிர்வாகம் ஏதோ ஒரு வகையில் அமைந்தால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்பதை பிரதர்ஹுட் தெளிவாக்கியுள்ளது. எதிர்ப்புக்களின் போது அது பின்புலத்தில்தான் இருந்து, ஜனாதிபதித் தேர்தல்களிலும் தான் வேட்பாளரை நிறுத்துவதாக இல்லை என்பதையும் குறிப்புக் காட்டியுள்ளது. மாறாக தான் முன்னாள் ஐ.நா.அணுசக்திக் கண்காணிப்பாளர் மஹம்த் எல்பரெடையை ஒரு மதச்சார்பற்ற எகிப்தின் இடைக்கால தலைவராக ஆதரிக்கும் என்று கூறியுள்ளது.

வாஷிங்டன் இன்னும் அதிக அளவில் ஏற்கும் எல்பரடெய்யுடன் பிரதர்ஹுட் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. அதே போல் அவருடைய மாற்றத்திற்கான தேசிய அமைப்புடன் இணைந்து பணிபுரியவும் தயாராக உள்ளது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறன் உடையவர்தான் எல்பெரடெய் என்று அது ஒப்புதல் கொடுத்துள்ளது.

France 24 க்குக் கொடுத்த பேட்டியில், முஸ்லிம் பிரதர்ஹுட்டின் மிக்குயர் வழிகாட்டியான மஹ்மட் Badie, முபாரக் பதவியிலிருந்து விலக வேண்டாம், தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த அரசாங்கம் பின் சுதந்திரத் தேர்தல்களை நடத்தி அதன் பின் முபராக் நீங்கலாம் என்று கூறியுள்ளார். “அவர் இப்பொழுது ஒரு தேசிய ஐக்கிய அரசாங்க அதிகாரத்தை அமைக்க வேண்டும், நீதித்துறையின் கட்டுப்பாட்டில் தேர்தல்களை நடத்த வேண்டும். இறுதியில் ஹொஸ்னி முபாரக் விலகிவிட வேண்டும் என்று Badie கூறினார்.

இராணுவம்எகிப்திய மக்களுக்கும் முழு அரபு உலகிற்கும் ஒரு கேடயம் போல் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு எல்பரடெய் உரையாற்றி, “அடுத்த சில தினங்களில் பல மாற்றங்கள் வரும் என்று கணித்தார்.

எகிப்திய மக்களின்ஒரு பகுதியாக உள்ளது என்று அவர் விவரித்த இராணுவத்துடன் புதிய அரசாங்கம் பற்றி பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில் இராணுவ ஹெலிகாப்டர்களும் F-16 போர் விமானங்களும் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. இத்தகைய வனப்புரை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அடக்கப்பட்டுள்ளவர்களை இராணுவம் கொடுக்கக் கூடிய உண்மையான ஆபத்துக்களை பற்றி போலித் தோற்றத்தைக் கொடுக்கும். இராணுவம் எதிர்ப்பாளர்களை நேரடியாக அடக்கும் பாதையை இன்னமும் கூடி முடிவெடுக்கலாம்.

புரட்சிகர எழுச்சிகளின் மையமாக உள்ளது எகிப்தின் பெரும், பெருகிய சமூக நெருக்கடி. இது பிராந்தியத்திலுள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்துள்ளது.

சனிக்கிழமையன்று பைனான்சியல் டைம்ஸ்கடந்த சில நாட்களில் நம்பமுடியாத காட்சிகள் ஒரு திருப்புமுனை எப்பொழுதும் உள்ளது என்பதை நிரூபித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. எகிப்தின் மக்கள் தொகை வளர்ச்சியுற்றிருக்கையில், “அதேபோல் செல்வம் உடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியும் அதிகரித்துள்ளது. மிக வறிய நிலையிலுள்ள மக்களின் விகிதம் 16.7 சதவிகிதம் என்பதில் இருந்து 19.6 சதவிகிதம் என்று 2000 க்கும் 2005க்கும் இடையே உயர்ந்து விட்டது என்று உலக வங்கிப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.”

சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்கத்திற்குள் உள்ள ஒரு பொருளாதாரக் குழு சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளதை, வணிகச் சமுதாயத்தால் பாராட்டப்பட்டுள்ளது. அது மிக அதிக வெளிநாட்டு முதலீட்டு வரத்திற்கு வழிவகுத்துள்ளது. ஆனால் பொருளாதாரம் சிறந்த புள்ளிவிபரங்களை காட்டுகையில், பெரும் திகைப்புக்களும், அல்லது ஒரு அரசாங்க மந்திரி குறிப்பிட்டது போல் பரந்த பிரிவிலான எகிப்திய மக்களின்வேதனை தீவிரமாகியுள்ளது.

அடிப்படை தேவைப் பொருட்களின் விலைகள் உயர்ந்த நிலையில், ஒரு சிறிய உயரடுக்கின் செல்வம் மிகவும் வெளிப்படையாக அதிகரித்து, ஆடம்பரமான பொருட்கள் புதிய கடைகளின் அலுமாரிகளில் நிறைந்துள்ளன. பெரும் அரண்மனை போன்ற வீடுகள், மதில் சுவர் கொண்டவை, கண்கவர் புல் தரைகளைக் கொண்டவை கெய்ரோவின் புறநகரங்களில் வந்துள்ளன. தலைநகரின் மாசுபடந்த நிலை, குழப்பங்கள் இவற்றில் இருந்து ஒதுங்கி இருக்கும் வசதி வாய்ந்த பாதுகாப்புத் தீவுகள் போல்.”

இரு நாட்களிற்கு முன்பு டைம்ஸ் ஆளும் உயரடுக்குகள் ஜனநாயகச் சீர்திருத்தம் பற்றியெழுந்த அழைப்பிற்கு கொண்டுள்ள அணுகுமுறையை பொருத்தமாக சுருக்கிக் கூறிய ஒரு இஸ்ரேலிய அதிகாரியை மேற்கோளிட்டது. “ஜாரின் ரஷ்யா ஒரு புரட்சியைக் கடந்தபோது, ஒரு ஜனநாயக இயக்கம் வந்தது, அது எப்படி முடிந்தது என்பது பற்றி நாம் அனைவரும் அறிவோம்.”