சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Sri Lanka: Terror campaign against Tamils reemerges

இலங்கை: தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத பிரச்சாரம் மீண்டும் தலைநீட்டியுள்ளது

By S. Jayanth
25 January 2011

Use this version to print | Send feedback

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், இராணுவத்துடன் கூட்டாக இயங்கும் கொலைப் படைகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை அச்சுறுத்துவதை மீண்டும் தொடங்கியுள்ளன.

டிசம்பர் முழுவதிலும், வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டில் ஒரு தொகை கொலைகள், கடத்தல்கள், காணாமல் போன சம்பவங்கள் மற்றும் கொள்ளையடிப்புக்களும் நடந்துள்ளன. முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

2006 நடுப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கிய பின்னர், குறிப்பாக வெள்ளை வான்களில் அல்லது மோட்டார் சைக்கிள்களில் இயங்கும் இத்தகைய தாக்குதல் படைகளால் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். யுத்தகாலத்தில் செறிவான இராணுவ நிலைகொள்ளல் இருந்த போதிலும், மாற்றமின்றி கொலைகாரர்கள் தப்பிச் சென்றதோடு எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

அண்மையில் நடந்த தாக்குதல்களின் பட்டியல் இங்கே:

* டிசம்பர் 11 அன்று ஒரு ஆயுதக் கும்பலொன்று முருகமூர்த்தி கோயிலின் பிரதான பூசகர் நித்தியாநந்த சர்மாவை, 56, சங்கானை கோயிலில் வைத்து சுட்டுக் கொன்றதோடு அவரது மகன்கள் இருவரையும் காயப்படுத்தியது. அவரைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கி, இராணுவத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கியின் வகையைச் சேர்ந்ததாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுறுசிங்க இராணுவத்தின் தொடர்பை மறுத்த போதிலும், ஒரு இராணுவக் கோப்ரல் சம்பந்தப்பட்டிருப்பதை பின்னர் ஏற்றுக்கொண்டார்.

* டிசம்பர் 26 அன்று, ஒரு ஆயுதக் கும்பலால் வலிகாமம் வலய துணை கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் யாழ்ப்பாணத்தில் உரும்பிராயில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பொலிசார் எவரையும் கைதுசெய்யவில்லை. 2004ல் தாக்கிய சுனாமியை நினைவுகூற யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வின்போது, தமிழ் பாடசாலை மாணவர்களை தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுமாறு நெருக்கியதை சிவலிங்கம் எதிர்த்ததாலேயே அவர் உயிரிழந்தார் என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ. சரவணபவன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

* கடந்த மாதம் மஹேந்திரன் செல்வம், 28, மீசாலையில் சடலமாகக் கிடந்தார். அவர் காணாமல் போன பின்னர் 85 இலட்சம் ரூபா (76,000 அமெரிக்க டொலர்) கப்பம் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இராசையா சந்திரசிறி, 42, யாழ்ப்பாணத்தில் காணாமல் போய் மூன்று நாட்களின் பின்னர் டிசம்பர் 30 அன்று தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

* புத்தாண்டு தினத்தில், தபால் ஊழியரும் சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டியவருமான கேதீஸ்வரன் தவராஜா, 28, யாழ்ப்பாண குடாநாட்டில் வடமராட்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆயுதக் கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார். ஜனவரி 3, ஐந்து பிள்ளைகளின் தந்தையான மஹாலிங்கம் அமிர்தராசா, 35, உரும்பிராயில் காணாமல் போனார்.

* ஜனவரி 6, வெள்ளை வானில் வந்த ஒரு கும்பலால் ஆறு பேர் கடத்தப்பட்டனர். ஏனையவர்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் ஆகாயத்தில் சுட்டு அவர்களை அச்சுறுத்தினர். இராணுவச் சோதனைச்சாவடியொன்றில் சோதனைக்குட்படுத்தாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அந்த வாகனத்தை பலர் பின்தொடர்ந்து சென்றனர். ஆறுபேரில் ஐந்து பேர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் காலை பொலிசாரினால் அவர்களது குடும்பத்தாரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர்.

* ஜனவரி 20, மன்னாரில் ஒரு அடையாளந்தெரியாத கும்பல் இரு மாணவர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்கியதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்தது. கடத்திச் சென்றவர்கள் ஒரு மாணவனின் தந்தையைப் பற்றி விசாரித்தனர். அவரது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்ட ஒரு வியாபாரியாவார். பின்னர் அந்த மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் முன்னாள் புலி போராளிகளைப் பற்றிய விபரங்களை திரட்டுவதிலும் இராணுவம் ஈடுபட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர், சுமார் 12,000 தமிழ் இளைஞர்களை கைது செய்த இராணுவம் அவர்களை இரகசிய தடுப்பு முகாங்களுக்கு அனுப்பியது. அவர்கள் அங்கு வழக்கோ விசாரணையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 5,000 பேரை விடுதலை செய்துவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. ஆனால், அவர்கள் ஒவ்வொரு வாரமும் அல்லது அன்றாடம் தடுப்பு முகாமுக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதோடு இன்னமும் ஆபத்தில் உள்ளார்கள்.

சில முன்னாள் கைதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் முறைப்பாடு செய்துள்ளதோடு பாதுகாப்பும் கோரியுள்ளனர். ஜனவரி 10 அன்று, 32 வயது நபர் ஒருவர் ஆணைக்குழுவின் உதவியை நாடியதை அடுத்து, அவரை பாதுகாப்பு காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் முன்னர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஒரு அரசாங்க-சார்பு கும்பல் அவரை பின் தொடர்ந்திருந்தது.

யாழ்ப்பாண குடாநாடு இறுக்கமான இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 40,000 பேரைக் கொண்ட படை நிலைகொண்டுள்ளது. ஒவ்வொரு சந்தியிலும் துருப்புக்கள் காவலில் நிற்பதோடு வாகனங்களில் ரோந்தும் செல்கின்றன. அரசாங்கத்தின் கூட்டணிப் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பீ.டி.பீ.) துணைப்படை குழு, இராணுவத்துடன் செயற்படுகின்றது. வன்னி மாவட்டத்தில் பத்தாயிரக்கணக்கான சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அறிவுக்கெட்டாமல் இந்த கொலைகளும் கடத்தல்களும் இடம்பெறுவது சாத்தியமற்றதே.

குற்றவியல் தாக்குதல்கள் சம்பந்தமாக அதிகரித்து வந்த மக்கள் அதிருப்தியை எதிர்கொண்ட ஈ.பீ.டி.பீ. தலைவரும் அரசாங்க அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தனது அமைப்பின் நடவடிக்கைகள் சம்பந்தமான கவனத்தை திசை திருப்ப முயற்சித்தார். ஜனவரி 4, பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இத்தகைய கொலைகளுக்கு பொறுப்பானவர்களை சட்டித்தின் முன் கொண்டுவருமாறு பாதுகாப்பு படைகளுக்கு அழைப்புவிடுத்தார்.

யாழ்ப்பாண தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவும் பாதுகாப்பு படையினர் சம்பந்தப்படவில்லை என மறுத்த தோடு, கொலைகள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களுக்கு பொது மக்களின் குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட குரோதங்களே காரணம் எனக் கூறினார். அதே சமயம், குடாநாட்டில் புலிகள்-சார்பு சக்திகளை இராணுவம் தொடர்ந்தும் தேடிவருகின்றது எனவும் பிரகடனம் செய்தார்.

அரசாங்க பேச்சாளர் கெஹலியே ரம்புக்வெல்ல, அரசாங்கத்தின் மதிப்பை சிதைக்க முற்படும் அரசாங்க-விரோத சக்திகளே இந்தக் கொலைகளுக்கு பொறுப்பு என ஜனவரி 7 நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் நகைப்புக்கிடமான முறையில் கூறினார். இந்தக் கருத்துக்கு அவர் ஆதாரம் காட்டவில்லை.

தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் கடத்தல்கள் மற்றும் கொலைகளை செய்யும் வல்லமை கொண்டிருந்த அரசாங்க-சார்பு கொலைப் படைகளின் இயக்கம் சம்பந்தமான கணிசமானளவு ஆதாரங்களை காட்டிய கடந்த நான்கு ஆண்டுகள் பற்றிய சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் தொடர்ச்சியான அறிக்கைகளின் எதிரில், பொறுப்பை மறுக்கும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முயற்சிகள் காற்றில் பறக்கின்றன.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு இரகசிய அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்று ஆவணம், துணைப்படை குழுக்களுடன் இலங்கை அரசாங்கத்தின் கூட்டைப் பற்றி வாஷிங்டன் அறிந்திருந்ததை அம்பலப்படுத்தியது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரொபட் பிளேக், 2007 மே மாதம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய குறிப்பில், விபச்சாரம், போதைப் பொருள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுவது உட்பட ஒரு தொகை ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளுடன் சேர்த்து, சட்டத்துக்கு புறம்பான கொலைகளில் ஈ.பீ.டி.பீ. யும் ஏனைய துனணப்படை குழுக்களும் சம்பந்தப்படுள்ளதாகவும், இவற்றை அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் கண்டும் காணாதது போல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 “சர்வதேச ஆராய்வின் காரணமாக இராணுவத்தால் செய்ய முடியாத வேலையை அவர்கள் செய்கின்றனர் வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஏனைய சட்ட விரோத நடவடிக்கைகளை- என்ற அடிப்படையில், துணைப்படையினரின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என யாழ்ப்பாண இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ கட்டளையிட்டுள்ளார் என அந்த ஆவனம் அறிவித்துள்ளது. துணைப்படைகளுடன் நெருக்கமான செயற்படும் இராணுவப் புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகளிலும் தலையிட வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு உயர் மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. துணைப்படை குழுக்கள் கொழும்பிலும் இயங்கியுள்ளன. பிளேக்கின்படி, அங்கு துணைப்படை குழுக்கள் அடிக்கடி மேற்கொண்ட கடத்தல்களால் இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை பீதியுடனும் மௌனமாகவும் வைத்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்ட வெட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் பேரில் உண்மையான சம்பளம், சமூகச் செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அரசாங்கம் வெட்டிச் சரிப்பது சம்பந்தமாக மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையிலேயே கடந்த மாதங்களில் கொலைப் படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. வாழ்க்கை நிலைமைகளும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இன்மையும் விசேடமாக தீவில் யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் சூழ்ச்சி செய்வதாக புலிகளின் மிச்ச சொச்சங்கள் மீது குற்றஞ்சாட்டுவதன் மூலம், அரசாங்கம் தமிழர்-விரோத உணர்வை கிளறுவதற்கு முயற்சிக்கின்றது. இந்த இனவாத பிரச்சாரம் உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதை மட்டுமன்றி, நாட்டின் அவசரகாலச் சட்டத்தை தொடர்வதையும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்துவதையும் இலக்காக் கொண்டுள்ளது.

இன்னுமொரு பேரினவாத ஆத்திரமூட்டலில், நாட்டின் ஒவ்வொரு பாகத்திலும் தேசியகீதம் சிங்கள மொழியிலேயே பாடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி இராஜபக்ஷ முன்வைத்த பிரேரணையை அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்தது. சிங்களத்தை பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாத மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது வழமையாகும்.

2009 மே மாதம் புலிகளை இராணுவ ரீதியில் நிர்மூலமாக்கிய பின்னர், அரசாங்கம் கூறிக்கொண்டது போல் சமாதானம் மற்றும் சுபீட்சமும் கொண்ட புதிய காலத்தை நோக்கி நகர்வதற்கு மாறாக, முழு தொழிலாள வர்க்கத்தினதும் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இனவாத ஒடுக்குமுறைகள் தொடர்ந்தும் ஆழமடைந்து வருகின்றது.