சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Heroic resistance in Cairo to state-orchestrated repression

கெய்ரோவில் அரசு முடுக்கிவிட்டுள்ள அடக்குமுறைக்கு எதிரான வீரஞ்செறிந்த எதிர்ப்பு

By Chris Marsden
4 February 2011

Use this version to print | Send feedback

ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆட்சியின் மாறுவேடம் தரித்த பொலிஸ் மற்றும் கூலிப்படைக் குண்டர்களின் மிருகத்தனத் தாக்குதல்களுக்கு எதிராக கெய்ரோவில் அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீரமாகப் போராடியுள்ளனர்.

வியாழன் அதிகாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் 120 பொலிஸைரையும் முபாரக் விசுவாசுகளையும் பிடித்துள்ளதாகவும் ஊடுருவியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு அடையாள அட்டைகளின் படங்களை ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறினர். இவர்கள் வாடிக்கையாகமுபாரக்-சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று செய்தி ஊடகத்தால் குறிக்கப்பட்டு வந்தனர்.

செய்தி ஊடகத்தால் அதேபோல் இழிந்த முறையில் போட்டி முகாம்களுக்கு இடையில்மோதல் நிகழாமல் நடுநிலையில் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்ட இராணுவமும் பல மணி நேரம் முபாரக்கின் எடுபிடிகள் நடத்திய தாக்குதல்களை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டிருந்தது. மோதல்களை நிறுத்துவது போன்ற சுருக்கமான தலையீடுகளை மட்டுமே அவர்கள் செய்தனர்அதுவும் அரசாங்கத்திற்காக தாக்குதல் நடத்தும் கூட்டம் தோற்கும் போன்ற நிலை ஏற்பட்டால்.

அப்பொழுது முதல் ஸ்னைப்பர் பிரிவினர் சுற்றியிருக்கும் கட்டிட மேல் பகுதிகளில் இருந்து எதிர்ப்பின்றிச் சுடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமுற்றனர், பலர் கொல்லப்பட்டனர். இயந்திரத் துப்பாக்கிகளின் சூடும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. இதற்கிடையில் பெட்ரோல் குண்டுவீசுபவர்களைக் கைது செய்யும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. நகரெங்கிலும் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு தடையின்றி அனுமதி கொடுக்கப்பட்டது.

இறப்பு எண்ணிக்கை இப்பொழுது 13 என உயர்ந்துவிட்டது எனச் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. இதில் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு வெளிநாட்டினரும் அடங்குவார். குறைந்தபட்சம் 1,200 பேராவது காயமுற்றுள்ளனர். இன்னும் பல இறப்புக்கள் தகவலின்றி நடந்துள்ளன.

இத்தாக்குதல்களில் பல வெளிப்படையாக சீருடை அணிந்த பொலிசாரால் செய்யப்பட்டன. இதைத்தவிர, முபாரக்கின் குண்டர்களும் பொலிசாரிடமும், இரகசியப் படையினரிடமும் மக்களை அடித்துக் காவலில் வைப்பதற்காக ஒப்படைக்கின்றனர். YouTube வெளியிட்டுள்ள ஒரு வீடியோக் காட்சி ஆட்சியை எதிர்ப்பவர்கள் கூட்டம் ஒன்றின் மீது பொலிஸ் வாகனம் மோதி ஊடுருவிச் சென்றதைக் காட்டுகிறது.

அமெரிக்க உளவுத்துறையின் வலைத் தளமான Stratfor நேற்று எகிப்திய செய்தித்தாளான Al-Mesryoon, “எகிப்தின் ஆளும் கட்சித் தலைவர்கள், மக்கள் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புக் கமாண்டோக்கள் பெப்ருவரி 2ம் தேதி இரகசியக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கானகுண்டர்களை திரட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டத் திட்டமிட்டனர்…. கூட்டத்தில் பங்கு பெற்ற ஆதாரங்கள் கூற்றின்படி மக்கள் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் 250,000 எகிப்திய பவுண்டுகளை ($42,700) தாக்குதலுக்கு நிதியாக அளிக்க முன்வந்தனர், பாதுகாப்பு அதிகாரிகள் நூற்றுக்கணக்கான தடிகளையும் வெடிக்கும் கருவிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கும் அளித்தனர் என்று வந்த தகவலை உயர்த்திக் காட்டியுள்ளது.

அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி மற்றும் மனித உரிமை கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவரும் 8 முதல் 12 பேர் வரை கைது செய்யப்பட்டவர்களில் உள்ளனர். இவர்கள் ஒக்ஸ்பாமின் துணை அமைப்பான Hisham Mubarak Law Centre ல் நடந்த சோதனையின் போது தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பொருளாதார, சமூக உரிமைகள் மையமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

“Sandmonkdy” என்னும் வலைத் தளப் பதிப்பாளர் தஹ்ரிர் சதுக்கத்திற்கு மருந்துகளை கொண்டுவர முற்படுகையில் பிடிக்கப்பட்டார். அவருடைய காரும் கைத்தொலைபேசியும் அழிக்கப்பட்டன. அவரும் அவருடன் இருந்தவர்களும் உதைக்கப்பட்டனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

சர்வதேச செய்தி ஊடகம், அடையாளம் தெரியாத குண்டர்கள் மற்றும் சீருடை அணிந்த பொலிஸார் என இருவராலும் தேர்ந்த முறையில் தாக்குதலுக்கு உட்பட்டது. குண்டர்கள் செய்தியாளர்களைத் தேடி ஹோட்டல்களில் சீற்றத்துடன் நுழைந்து அவர்களுடைய கருவிகளையும் திருடினார்கள்.

மோசமான நிகழ்வுகள் ஒன்றில் ABC செய்திக் குழுவின் கார் ஒன்று கடத்தப்பட்டு அதில் இருந்த பயணிகள் கழுத்துத் துண்டிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டனர். பல செய்தியாளர்கள் உதைக்கப்பட்டனர். எகிப்திய உள்துறை அமைச்சரகம் 20 வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கும் மேலாக கெய்ரோவில் கைது செய்தனர். இதில் வாஷிங்டன் போஸ்ட் பிரிவின் தலைவரும் அடங்குவார். BBC யின் கருவிகள் கைப்பற்றப்பட்டு அதன் செய்தியாளர்கள் சிலர் காவலில் வைக்கப்பட்டனர். ராய்ட்டர்ஸ் மற்றும் அல்ஜசீரா ஆகியவற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஸ்வீடன் நாட்டுத் தொலைக்காட்சியின் Bert Sundstrom ஒரு கட்டத்தில் காணமற் போய்விட்டதாக அஞ்சப்பட்டது. ஆனால் கத்திக் குத்துக்களுக்காக சிகிச்சை பெற்றுவந்தது பின்னர் அறியப்பட்டது. ஒரு கிரேக்க நிருபரும் மத்திய கெய்ரோவில் குத்தப்பட்டார்.

அலெக்சாந்திரியாவில் முபாரக் ஆதரவு குண்டர்களால் செய்தியாளர்கள் இஸ்ரேலிய ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர். அரசாங்கத் தொலைக்காட்சிபார்வையாளர்கள் இஸ்ரேலிய முகவர்கள் செய்தியாளர்கள் வேடத்தில் வருவது பற்றியும், நாட்டின் தோற்றத்தையும் நலனையும் சேதப்படுத்தும் முயற்சி பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒளிபரப்பிய பின்னர் இந்த சம்பவம் நடந்தது.

அரசாங்கம் மற்றும் அதன் ஆத்திரமூட்டுபவர்களால் அல்ஜசீரா குறிப்பிடத்தக்க வகையில் இலக்கு கொள்ளப்பட்டது. அதன் கெய்ரோ அலுவலகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. அதன் நிருபர்கள் பலர் காவலில் வைக்கப்பட்டனர்.

இச்செயற்பாட்டின் அப்பட்டமான நோக்கம் பெரும்பாலும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள மிருகத்தனமான வன்முறை பற்றிய தகவல்களை ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்வதுதான்.

இதில் எதையும் தடுக்க இராணுவம் முயலவில்லை. “பாதுகாப்பு பற்றி அது கொண்டுள்ளதாகக் கூறப்படும் முயற்சிகள், இரு தரப்பையும் மோதவிடாமல் வைத்தல் என்னும் நிலைப்பாடு என்பதற்கு மருத்துவர்கள், மருத்துவ உதவிகள் பொறியில் அகப்பட்டுக் கொண்டுள்ளவர்களுக்கு சென்றுவிடாமல் தடுப்பது என்பதாகத்தான் உள்ளது.

BBC யின் John Simpson, இராணுவத்திற்கு நம்பகத் தன்மை அளிக்கும் முறையில், முபாரக் ஆதரவு சக்திகளை நோக்கி இரு டாங்குகளின் சுடும் பகுதி இருந்ததுகுறிப்பிடத்தக்கது என்று கூறினார். இதையும் விட முக்கியமானது அக்கட்டம் வரை அனைத்து டாங்கிகளின் சுடும் பகுதி தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்த எதிர்ப்பாளர்களை நோக்கி இருந்தன என்பதுதான்.

உடந்தைக்கான நேரடிச் சான்றிற்கு குறிப்பிடத்தக்க நிகழ்வு அரசாங்கம் பல கைத்தொலைபேசி இணையங்கள் மூலம் அதன் சக்திகளைத் திரட்ட முற்பட்டுத் தகவல்களை அனுப்பியது ஆகும். Flickr ல் வந்த ஒரு தகவல் கூறுவதாவது: “இராணுவப் படைகள் எகிப்தின் நேர்மையான, விசுவாசமான மனிதர்களை துரோகிகள் மற்றும் குற்றவாளிகளை எதிர்கொள்ளும்படியும் நம் மக்கள், நாட்டின் கௌரவம் மற்றும் விலைமதிப்பற்ற எகிப்தைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்ளுகிறது.”

இராணுவமும் பொலிசும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே நபர்களின் தலைமையில்தான் உள்ளது. முபாரக்கினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான் முக்கிய குற்றவாளியாகச் செயல்படுகிறார்.

ஆரம்பத்தில் பிரதம மந்திரி அஹ்மத் ஷபிக் கொடுத்த பேட்டி ஒன்றில் வன்முறைஆபத்தான தவறு என்று விளக்கி அதற்காக மன்னிப்பும் கேட்டார். “விசாரணையின் மூலம் இக்குற்றத்திற்குப் பின்னால் எவர் இருந்தனர் என்பது அறியப்பட்டபின், இதை நடக்க அனுமதித்தவர்கள் யார் என்று தெரிந்தபின், அவர்களைப் பொறுப்பேற்கவும் தண்டனை பெறவைக்கவும் நான் உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

சில மணி நேரத்திற்குப் பின் சுலைமான் தன்னுடைய தொலைக்காட்சிப் பேட்டியைக் கொடுத்தார். “அகலும் வெள்ளிக்கு முன்பு துணை ஜனாதிபதி இன்னும் ஆத்திரமான முகத்தைதான் காட்டினார். முபாரக்கைதந்தை, தலைவர் என்று விளக்கிய அவர் வன்முறைக்குக் காரணம் அரசாங்க எதிர்ப்பு நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தான் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாகவெளிநாட்டு செயற்பட்டியலை பிரதிபலிப்பவர்கள் என்றார். “இந்த வன்முறை பற்றி ஆராய்வோம், அது ஒரு சதித்திட்டமா என்று ஆராய்வோம் என்றார்

தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்தவர்கள்வெளிநாட்டவர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.” முபாரக் பதவி விலக வேண்டும் என்பவர்கள்எகிப்திய பண்பாட்டின் ஒரு பகுதியினர் அல்ல.” இதுபெரும் குழப்பத்திற்கான அழைப்புத்தான்.” “செப்டம்பர் தான் கெடுக்காலம் என்பது ஏற்கப்பட வேண்டும், இல்லாவிடின் நமக்கு ஒரு அரசியலமைப்பு வெற்றிடம் ஏற்பட்டுவிடும் என்று சுலைமான் கூறினார்.

முபாரக் இப்பொழுது அகல மாட்டார் என்றார் சுலைமான். தேர்தல்கள் முடியும் வரை அவர் இருப்பார். அவரோ அவருடைய மகன் கெமலோ அதில் நிற்க மாட்டார்கள், “உங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள், உங்கள் கோரிக்கைகளுக்கு விடையளிக்கப்பட்டுவிட்டன என்று எதிர்ப்பாளர்களை அவர் அச்சுறுத்தினார்.

பொலிஸார்சிறந்த முறையில் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

முபாரக்கின் ஏகாதிபத்திய நட்பு நாடுகள் ஆட்சி மாற்றம் விரைவில் நடைபெற வேண்டும் என்று கோரியுள்ள அறிக்கைகளுக்கு விடையிறுக்கையில், சுலைமான்தவறானவற்றைக் கூறுவதற்காக சில நட்பு நாடுகளை நான் குற்றம் சாட்டுகிறேன் என்றார்.

அவர்களுடன் நாம் கொண்டுள்ள உறவுகளில் இது எதிர்மறை விளைவுகளைக் கொடுக்கும்…. நட்புத்தன்மையற்ற தொலைக்காட்சி நிலையங்களுக்கு ஆதரவு தரும் நட்பு நாடுகளை நான் குறைகூறுவேன். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்களை தூண்டுகின்றன என்றார் சுலைமான்.

எதிர்த்தரப்பு இயக்கங்களின் பிரதிநிதிகளுடன்ஒரு தேசிய உரையாடல் தேவை என்றார் அவர். இதில் முஸ்லிம் சகோதரத்துவமும் அடங்கும். அரசியல் சீர்திருத்தம் பற்றிய காலக்கெடுவை அது விவாதிக்கலாம். ஆனால் எதிர்ப்பாளர்கள் வீடு திரும்பும் வரை முறையான பேச்சுக்களுக்கு இடமில்லை என்றார் அவர்.

கெமல் ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளராக நிற்க மாட்டார் என்னும் உறுதிமொழி இராணுவத்தின் நலனுக்காக கூறப்பட்டுள்ளது. இப்பொழுது அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் தளபதிகள் முபாரக்கிற்கு  ஆதரவு கொடுத்த வணிகர்கள் சிலரை அகற்ற விரும்புகின்றனர். இதற்கு உதாரணம் கெமல். ஊழல் நலிந்த நிலை இதை இன்னும் மோசமான தன்மையில் காட்டுகிறது. பெரும் வணிக நலன்களைக் கட்டுப்படுத்தும் இதே தளபதிகள்-வணிகர்கள், அந்த நலன்களையே மக்கள் மற்றும் சிவிலிய போட்டியாளர்களுடைய நலன்களுடைய இழப்பில் காக்க விரும்புகின்றனர்.

சுலைமானின் கடின நிலைப்பாடு எதிர்த்தரப்பு மாற்றத்திற்கான தேசியக் கூட்டணித் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. பிந்தையதில் மஹ்மத் எல்பரடெய், முஸ்லிம் சகோதரத்துவமும், கெபயா இன்னும் பல அமைப்புக்கள் உள்ளன. ஒரு செய்தித் தொடர்பாளர்முபாரக் நகரும் வரையில் அரசாங்கத்துடன் பேச்சுக்களுக்கு இடமில்லை என்றார். ஆனால் அதற்குப்பின்சுலைமானுடன் பேசத்தயார் என்றும் சேர்த்துக் கொண்டார்.

தன் நலன்களைக் கூட்டும் வகையில், ABC இன் Christiane Amanpour உடன் ஒரு பேட்டியை கொடுக்கும் அளவிற்கு முபாரக் முன்வந்தார். எகிப்தியர்கள்ஒருவரோடு ஒருவர் மோதலிடுவது பற்றிய துயரத்தை வெளியிட்டு அறிக்கைகள் கொடுத்தபின், நாட்டின் நலனுக்காகத் தான் தொடர்ந்திருப்பது பற்றிக் கூறிய பின், “பின்னால் என்பதை விட விரைவில் பதவியை விட்டு அவர் நீங்க வேண்டும் என்னும் அமெரிக்காவின் மறைமுக கோரிக்கையை எப்படி எதிர்கொள்ளுகிறார் என்று அவர்  கேட்கப்பட்டார்;

ஜனாதிபதி பாரக் ஒபாமாவிடம்உங்களுக்கு எகிப்திய கலாச்சாரம் பற்றித் தெரியாது, நான் இப்பொழுது பதவியில் இருந்து இறங்கினால் என்ன நேரிடும் என்பதும் தெரியாது என்று கூறியதாக முபாரக் தெரிவித்தார்.

வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், எகிப்திய மக்கள் இத்தகைய பாசாங்குத்தன எதிர்க் கருத்துக்களையும் வாஷிங்டன், ஐரோப்பா ஆகியவற்றிடம் கேட்கும் கட்டாயத்தில் உள்ளனர்.

தேசிய காலைச் சிற்றுண்டிப் பிரார்த்தனையின் போது எகிப்தின் நலனுக்காக ஒபாமா ஒரு சிறிய பிரார்த்தனையை செய்தார். அங்கு வன்முறை முற்றுப்பெற வேண்டும், “எகிப்திலும் உலகம் முழுவதும் சிறந்த நாள் பிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.

ஒரு கூட்டறிக்கையில், பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் ஆகியவை எகிப்தில்அரசியல் மாற்றம் இப்பொழுது தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில்வன்முறைக்கு ஊக்கம் கொடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுவர்களையும் அது கண்டித்துள்ளதுஇருபுறத்தாரும் ஒரேமாதிரியான குற்றவாளிகள் போல்.

வாஷிங்டனோ, அதன் ஐரோப்பிய அரசாங்கங்களோ வெறும் உயர்கருத்துக்களை தவிர உருப்படியாக எதையும் அளிக்கவில்லை. இங்கிலாந்து அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் BBC இடம் எகிப்தில் பொருளாதார தடைகள் பற்றியவிவாதம் இல்லை என்றும்”, “மற்ற நாடுகளுக்கு அவர்களின் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடும் நிலைமைக்கு நாங்கள் செல்லமாட்டோம் என்றார்.

ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டவெல்ல வெற்றுத்தனமாகஎகிப்தின் அரசியல் கருத்து இயற்றுபவர்கள் தீர்மானிக்க வேண்டிய பொருள் இது என்பது முற்றிலும் வெளிப்படை. அவர்கள் தான் ஜனநாயக மாற்றம் எப்படி, எப்பொழுது உருவாக்கப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அதன் செய்தியாளர்களே கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரச செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரௌலி தன்னுடைய விடையிறுப்பை எகிப்திய அரசாங்கத்தின் பொய்கள், தவிர்ப்புக்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு மாற்றிக் கூறினார். இத்தாக்குதல் ஒரு திட்டமிட்ட முயற்சியின் பகுதியாகத் தோன்றினாலும், எவர் இதை இயக்கியது என்று கூறுவது கடினம் என்றார் அவர்.

ஒபாமா நிர்வாகத்தின் பெரும் கவலை நேரத்தைப் பெறுவது, எதிர்ப்பாளர்களை தெருக்களில் இருந்து அகற்றுவது மற்றும் எகிப்திய அரசாங்கம், இராணுவம் ஆகியவை இதேபோல் ஜனநாயக தன்மை அற்று, அப்பகுதியிலுள்ள அமெரிக்க நலன்களுக்கு ஆதரவு தரும் வகையில் அமைத்தல் என்பதாக உள்ளது. வியாழக்கிழமை அன்று நிர்வாகத்தின் அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நீண்ட காலமாக நெருக்கமாக இருக்கும் சுலைமான் செப்டம்பருக்கு முன்பே, இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்தை எடுத்துக் கொள்வது பற்றிய திட்டத்தை முன்வைத்தனர்.

வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் எகிப்தின்அரசாங்கம் மற்றும் பரந்த நம்பகத் தன்மை உடைய எகிப்தின் எதிர்த்தரப்புப் பிரதிநிதிகள், சிவில் சமூகம் மற்றும் அரசியல் பிரிவுகளின் பிரதிநிதிகள் உடனடியாக அமைதியான, ஒழுங்கான மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது வேண்டுமென்றே கூறப்படும் பொய் ஆகும். சுலைமானின் பொது அறிக்கைகள், பலநாட்கள் கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு பின் வருபவை, இவை இன்னும் குருதி கொட்டும் உத்தரவுகள் வரவுள்ளன என்பதற்கான தெளிவான அடையாளம் ஆகும்.