சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obamas crocodile tears over Egypts violence

எகிப்து வன்முறைக்கு ஒபாமா முதலைக் கண்ணீர் வடிக்கிறார்

Bill Van Auken
4 February 2011

Use this version to print | Send feedback

எகிப்தில் வன்முறை முடிய வேண்டும், எகிப்திய மக்களின் உரிமைகளும் அபிலாசைகளும் பூர்த்தியாக வேண்டும், எகிப்துக்கு ஒரு நல்ல நாளாய் விடிய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். வியாழனன்று காலையில் தேசிய பிரார்த்தனை காலையுணவின் போது ஜனாதிபதி பராக் ஒபாமா அவரது பேச்சின் ஆரம்பத்தில் சலனமற்ற குரலுடன் கூறியதே இது.

உத்தியோகபூர்வ நீதிநிலையின் இந்த வருடாந்தரக் கொண்டாட்டமானது, வெளிநாட்டு சர்வாதிகாரிகளையும், அமெரிக்க அரசியல்வாதிகளையும் மற்றும் இராணுவ ஒப்பந்ததாரர்களையும் ஒன்றாய்க் கொண்டு வரும் பிரார்த்தனை வட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஒரு நெடிய வரலாறைக் கொண்ட ஒரு நிழலான, அரசியல் இணைப்பு கொண்ட குழுவான Fellowship Foundation இனால் கூட்டப்பட்டது என்பதே போதுமானது. இந்த நடைமுறையை ஆதரித்துப் பேசிய குழுவின் ஏற்பாட்டாளர் கூறினார்: பைபிள் முழுக்க பாரிய படுகொலையாளர்களால் நிரம்பியிருக்கின்றது

ஒபாமாவின் பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து எகிப்தில் நிகழும் வன்முறையைக் கண்டித்து வருந்தியும், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகங்களின் மீது ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கு தார்மீகரீதியான அவமானத்தை வெளிப்படுத்தியும் வெள்ளை மாளிகையில் இருந்தும் வெளியுறவுத் துறையில் இருந்துமான அறிக்கைகள் தொடர்ச்சியாய் வந்தன.

யாருடன் விளையாடிக் கொண்டிருப்பதாய் அவர்கள் நினைக்கிறார்கள்? 30 வருடங்களாக, அமெரிக்க நிர்வாகங்கள் (ஒபாமாவினுடையது உட்பட. இதில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை) முபாரக்கை ஆதரித்து வந்திருக்கின்றன என்றால் அதற்கு மிகச் சரியான காரணம் எகிப்திய மக்களின் ஏகோபித்த எதிர்ப்புக்கு எதிராக அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் கொள்கைகளை திணிக்கும் திறனை அவர் பெற்றிருந்தது தான். இதற்கு திட்டமிட்ட ஈவிரக்கமற்ற வன்முறை அவசியமாய் இருந்தது என்பதும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

இபோது கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா, சூயஸ் மற்றும் எகிப்தெங்குமான வீதிகளில் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் இறந்து ஆயிரக்கணக்கில் காயமுற்றுள்ள வன்முறை குறித்து ஒபாமா முதலைக் கண்ணீர் விடுகிறார் என்றால், அதன் காரணம் மேலே கூறிய அந்த வன்முறை இயங்காது போய் விட்டதுடன், எகிப்திய மக்கள் தொடர்ந்து எதிர்த்தும் போராடியும் வருகிறார்கள் என்பது தான்.

2009 ஜூன் மாதத்தில் கெய்ரோவில் உரையாற்றியபோது அவர் கண்ணீர் சிந்தவில்லை. முபாரக் ஆட்சியை விமர்சிக்கும் ஒரு வார்த்தையும் கூட அந்த உரையில் இடம்பெற்றிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஒரு தீரமான கூட்டாளி என்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கும் நன்மைக்குமான சக்தி என்றும் அவர் எகிப்திய சர்வாதிகாரியை போற்றியிருந்தார்.

தனது வெள்ளை மாளிகை முன்னவர்களைப் போலவே ஒபாமாவும் முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுக்க அமெரிக்க உதவியில் இஸ்ரேலுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் 2 பில்லியன் டாலர் அளவுக்கான உதவியை வருடந்தோறும் அனுப்பி வந்திருக்கிறார். எகிப்து மற்றும் இந்த ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் மக்களை ஒடுக்கும் நோக்கத்திற்காக இராணுவத்திற்கும் போலிஸ் படைகளுக்கும் தான் இந்தத் தொகையின் பெரும்பகுதி சென்றிருக்கிறது.

ஆட்சியால் தினந்தோறும் நடாத்தப்பட்டு வந்த வன்முறை குறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கோ மற்ற உயர் அதிகாரிகளுக்கோ தெரியாமல் இருந்திருக்க முடியாது என்பது விக்கிலீக்ஸ் வெளியிட்ட கெய்ரோ தூதரகத்தில் இருந்தான இரகசிய தகவல்களில் ஆவணரீதியாக உறுதிப்பட்டிருக்கிறது. ஒபாமாவின் உரைக்கு ஒரு சில மாதங்கள் முன்னதாக கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதர் வாஷிங்டனுக்கு அனுப்பியிருந்த பதிவேட்டில் எகிப்து நடப்பினை விவரிக்கும்போது, போலிசின் மிருகத்தனம் வழமையாகி விட்டது, சர்வவியாபகமானதாய் உள்ளது, கெய்ரோ போலிஸ் நிலையங்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய நூற்றுக்கணக்கில் சித்திரவதைச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று கூறியிருந்தார்.

இது ஒரு செய்தியாகவே அங்கு இல்லை. முபாரக்கின் ஒட்டுமொத்த ஜனாதிபதி பதவிக் காலத்திலும் ஏறக்குறைய தொடர்ச்சின அவசரகால நிலையின் மூலமாகவே எகிப்திய அரசாங்கம் ஆண்டு வந்திருக்கிறது. விசாரணையின்றி நிர்வாகரீதியாய் கைது செய்வது, வேலைநிறுத்தங்களைக் குற்றமாக்குவது, மற்றும் ஐந்து அல்லது அதற்கு அதிகமான மக்கள் அனுமதியின்றி கூடுவதை சட்டவிரோதமென்பது ஆகியவற்றுக்கு இது அனுமதித்தது. 

நடைமுறையில் இதன் அர்த்தம் என்னவென்றால், வேலைநிறுத்தம் செய்யத் துணியும் தொழிலாளர்கள் கலகப் போலிசார் மற்றும் துருப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெரும் கைது நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுவதோடு தடிகளாலும் துப்பாக்கியின் பின்பக்கத்தாலும் தாக்கப்படுவர். தொழிலாளர் ஆர்ப்பாட்டங்களின் தலைவர்கள் வேட்டையாடப்பட்டு, சிறை வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வந்துள்ளனர். விசாரணைக்கு கொண்டு செல்வதற்கு ஆட்சியின் தயைபெறும் மனிதர்களும் பெரும்பாலும் ஆயுதமேந்திய பயங்கரவாத வழக்குகளைக் கையாள்வதற்கு உரிய சிறப்பு அரசு பாதுகாப்பு நீதிமன்றங்களின் முன்பாக நிறுத்தப்படுவர்.

ஒபாமா நிர்வாகமோ அல்லது வேறெந்த அமெரிக்க நிர்வாகமோ இந்த நடவடிக்கைகளைக் குற்றமாய்க் கருதியதில்லை. எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் நாடு கடந்த நிறுவனங்களுக்கும் மற்றும் பெருநிறுவனங்களுக்கும் தான் அவை மிக இலாபகரமான நிலைமைகளை உருவாக்க உதவின. எகிப்திய தொழிலாளர்கள் மீதான மிருகத்தனமான அடக்குமுறைக்கு உதவுகிற அமெரிக்க உதவியல் ஒரு சதம்  பணத்தைக் கூட நிறுத்தி வைப்பதற்கு எந்த அமெரிக்க அதிகாரியும் ஆலோசனை வழங்கியதில்லை.

எகிப்தின் நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் அமெரிக்க மற்றும் பிற அந்நிய செய்தியாளர்கள் கைது செய்யப்படுவதற்கும் அச்சுறுத்தப்படுவதற்கும் இப்போது அமெரிக்கா தனது கவுரவக் குறைச்சலை வெளிப்படுத்துகிற அதே சமயத்தில், தனது ஏவலரான முபாரக், அவரது ஆட்சியில், தனது அமைச்சர்கள் கூறியதைத் திரித்தது”, தனது ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியது அல்லது தனது மகனும் அடுத்த வாரிசுமான கமால் குறித்து அவமதிக்கும் செய்திகளை வெளியிட்டது போன்றவை உள்ளிட்ட குற்றங்களுங்காக பல ஆண்டுகளாய் செய்தியாளர்களை கைது செய்த போது, சித்திரவதை செய்தபோது, மற்றும் காணாமல் போகும்படி செய்தபோது அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இஸ்லாமிய சகோதரத்துவ (Muslim Brotherhood) அமைப்பின் மற்றும் பிற இஸ்லாமியக் குழுக்களின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை குற்றச்சாட்டுகள் இன்றி சுற்றி வளைப்பதையும் கைது செய்வதையும் அங்கீகரிக்கும் விதமாகவே அமெரிக்கா பார்த்தது.

அதேபோல் ஆயிரக்கணக்கில் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிருகத்தனமான சித்திரவதை வகைகளுக்கு அமெரிக்கா எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை. மார்பிலும் கால்களிலும் சூடு வைப்பதில் தொடங்கி அவர்களின் நாக்குகளில், மார்பகக் காம்புகளில் மற்றும் பிறப்புறுப்புகளில் மின்குச்சிகளைச் செருகுவது வரை, அவர்களைத் தலைகீழாய் தொங்க விடுவது வரை, அடிப்பதும் பாலியல் வன்முறை செய்வதும் வரை இந்த சித்திரவதை வகைகள் இருந்தன.

மாறாக, முபாரக்கின் சித்திரவதைகளை அமெரிக்க அரசாங்கமும் அதன் உளவு அமைப்புகளும் ஒரு ஆதாரவளமாய்க் கண்டன. தரிர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கூலிப்படையினர் தாக்குவதை தொலைக்காட்சியில் காணும் சிஐஏ அதிகாரிகள் அவர்களை ஏவி விட்டவர்கள் யாராயிருக்கும் என அடையாளம் கண்டிருக்கக் கூடும். ஏனென்றால் கெய்ரோவின் Lazoughli Street இரகசிய போலிஸ் தலைமையகத்தில் உள்ள அல்லது மவுல்ஹக் அல்-மஸ்ரா சிறைச்சாலையில் உள்ள சித்திரவதை அறைகளில் அவர்களின் தோளோடு தோளாக நின்றவர்கள் இவர்கள் அல்லவா.

1990களில் கிளிண்டன் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு கைதிகளை சித்திரவதை நாடுகளிடம் ஒப்படைக்கும் மேலதிகத்திட்டத்தின்'' கீழ் உலகின் வேறெங்கிலும் சிஐஏவினால் பயங்கரவாதிகளாய் சந்தேகிக்கப்பட்டு கொண்டுவரப்படும் கைதிகள் சங்கிலிகளுடனும் விலங்குகளுடனும் நேராய் எகிப்துக்கு அனுப்பப்படுவார்கள், சித்திரவதையின் கீழ் விசாரிக்கப்படும் அவசர நோக்கத்திற்காக. எகிப்தின் சித்திரவதை ஆட்சிக்கும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டிற்கும் இடையில் ஒரு பிசிறில்லாத ஒருங்கிணைப்பை ஏற்படுத்திய இந்த படுபயங்கர ஏற்பாடு அமெரிக்க உளவுத் துறைக்கும் முபாரக்கின் இரகசிய போலிஸ் படைத் தலைவரான ஓமர் சுலைமானுக்கும் இடையில் உருவானதாகும். சமீபத்தில் துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட சுலைமான் வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன், துணை ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்த தொலைபேசி விவாதங்களில் பங்குபெற்று வந்திருக்கிறார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின்தீரமிக்க கூட்டாளியாக எகிப்திய ஆட்சியின் பாத்திரமானது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கி லெபனான் மற்றும் காஸா பகுதியில் இஸ்ரேலியப் போர்கள் வரை பெரும் வன்முறைக்கு வழிவகை செய்திருக்கிறது

இந்த புறநிலை மற்றும் வரலாற்றுப் பின்னணியில்தான், வன்முறைக்கு முடிவு வேண்டிப் பிரார்த்திக்கும் ஒபாமாவின் பிரார்த்தனையும் எகிப்தில் அடக்குமுறை குறித்த அவரது முதலைக் கண்ணீரும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

அமெரிக்க நிர்வாகம் அதன் போலி-ஜனநாயக வேடத்திற்குப் பின்னே தற்சமயத்திற்கு நாடகமாடுகிறது. வெகுஜன மக்களை ஒடுக்குவதில் முபாரக் வெற்றி பெற முடியுமா அல்லது அவரது ஆட்சிக்கு ஒட்டுவேலை செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதில் ஆளும் வட்டாரங்களுக்குள்ளும் மற்றும் அமெரிக்க இராணுவ-உளவு எந்திரத்திற்குள்ளும் பிளவுகளும் மாறுபட்ட மதிப்பீடுகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவுக்கும் கவலையளிப்பது என்னவென்றால்  சமீபத்தில் செனட்டர் ஜான் மெக்கெயின் லெனின் காட்சி என்று குறிப்பிட்டுக் காட்டிய ஒன்று தான். அதாவது, முபாரக்கிற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் எகிப்தில் நிலவும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவ ஆட்சிக்குமான நேரடிப் புரட்சிகர சவாலாய் அபிவிருத்தியுறக் கூடிய நிலைமையாகும்.

ஒரு ஜனநாயக ஆட்சிக்கு உருமாற்றமடைவது குறித்து அமெரிக்காவில் இருந்து வரும் அத்தனை பேச்சுகளும் இந்த அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் தான் வருகின்றன. அமெரிக்க ஆதரவில் இத்தகையதொரு மாற்றத்திற்கு எந்தவொரு நம்பகத்தன்மையும் கிடையாது. அதன் ஒரே நோக்கம் நடப்பு இராணுவ சர்வாதிகாரத்தை மறுஸ்திரம் செய்வது தான். அப்போது தான் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தை வேலையின்மை, வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தி விட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் ஒரு குறுகிய ஊழலடைந்த எகிப்திய நிதி உயரடுக்கிற்கும் ஆதாயமளிக்கக் கூடிய கொள்கைகளைச் செயல்படுத்துவதை அது தொடர முடியும்.

ஒபாமாவின் கபடவேடதாரித்தனமான கவலை வெளிப்பாடுகள் மற்றும் ஒரு ஜனநாயக உருமாற்றத்திற்கான அமெரிக்க வாக்குறுதிகள் ஆகிய இரண்டையுமே அவற்றிற்குத் தகுதியான அலட்சியத்தோடு எகிப்தின் தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும். அதிகாரம் தொழிலாளர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் மாற்றப்பட்டு எகிப்திய சமூகம் சோசலிசரீதியாய் உருமாற்றப்படுவதற்கு வழிசெய்யும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே அவசர அவசியத் தேவையாகும். சோசலிசப் புரட்சியின் வழியாக மட்டுமே எகிப்தை உண்மையான ஜனநாயகரீதியில் உருமாற்றுவதும், ஒடுக்குமுறைக்கும்  மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவதும் சாதிக்கப்பட முடியும்.