சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Massive anti-government protest on Egypts day of departure

எகிப்தின் வெளியேறும் தினத்தில் மாபெரும் அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

By Chris Marsden
5 February 2011

Use this version to print | Send feedback

வெள்ளியன்று நடந்த வெளியேறும் தினம் முபாரக் ஆட்சிக்கு எதிரான பெரும் எதிர்ப்பைக் காட்டிய நிகழ்வாகும். ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் கெய்ரோ தெருக்களுக்கு வந்தனர், நூறாயிரக்கணக்கானவர்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் அரசாங்கக் குண்டர்கள், இராணுவத் தடுப்புக்களை மீறி ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் குழுமினர்.

அரசு முடுக்கிவிட்ட தாக்குதல்களினால் குறைந்தபட்சம் 10 பேர் இறந்து, கிட்டத்தட்ட 1,000 பேர் காயமுற்று இரு நாட்களுக்குப் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் திறமையுடன் ஒழுங்குபடுத்தப்பட்டனர். வந்தவர்கள் சதுக்கத்தில் நிலையாக முகாமிட்டிருந்தவர்களுக்கு உணவு, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்தனர். தற்காலிகமாக நிறுவப்பட்ட மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஊடுருபவர்கள் உள்ளே நுழையாமல் வருபவர்களைச் சோதித்தனர்.

தஹ்ரிர் ஆர்ப்பாட்டம் அமைதியாக இருந்தது. ஆனால் கெய்ரோவின் மற்ற இடங்களில் நடந்த எதிர்ப்புக்களில் முபாரக் ஆதரவு பெற்ற குண்டர்களுடன் மோதல்கள் நிகழ்ந்தன. மோசமான மோதல்கள் தலாட் ஹர்ப் சதுக்கம் என்பதைச் சுற்றி இருந்த தெருக்களில் நடைபெற்றன. துப்பாக்கிகள் முழங்கின. மக்கள் இரும்பு கம்பிகளோடு சண்டையிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத்தான் வெற்றி என்று CNN அறிவித்தது. பல மணி நேர மோதல்களுக்குப் பின் போராளிகள் கிழக்குப் புறம் முன்னேறி தலாத் ஹர்ப் சதுக்கத்தைச் சுற்றியுள்ள சிறந்த 19ம் நூற்றாண்டு கற்கட்டிடங்களைச் சுற்றி தடுப்புக்களையும் சோதனைக் கூடங்களையும் நிறுவினர். மாலை 7 மணியை ஒட்டி எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தலாட் ஹர்ப்பில் இருந்து நகரத்திற்குச் செல்லும் பல பகுதிகளில் தெருக்களையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்க வேண்டும் என்னும் சீற்றம் மிகுந்த கோரிக்கைகளுடன் அவருடைய ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் இணைந்தன. முபாரக் வாஷிங்டன் தயவில்தான் ஆட்சியில் தொடர்கிறார் என்ற உணர்வைக் கோஷங்கள் பிரதிபலித்தன: கொண்டலீசா, கொண்டலீசா முபாரக்கிற்கு ஒரு நுழைவு அனுமதி கொடுங்கள் என்று கோஷம் இருந்தது. மற்றொன்று ஹில்லாரி, ஹில்லாரி, மதுபான வடிசாலைகளுக்கு முபாரக்கை அழைத்துச்செல்லவும் என்று கூறியது.

இரண்டாவது நகரான அலெக்சாந்திரியாவில் இங்கிலாந்தின் Channel 4 ன் லிண்சே ஹில்சம் தெருக்களுக்கு நூறாயிரக்கணக்கான மக்கள் வந்துவிட்டதாகத் தகவல் கொடுத்துள்ளார். அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னமும் அலெக்சாந்திரியாவில் எங்கள் சன்னலுக்குக் கீழே சென்ற வண்ணம் உள்ளனர். அணிவகுப்பின் முடிவையே காண்பதற்கில்லை என்று அவர் எழுதியுள்ளார். வெள்ளிப் பிரார்த்தனையின் போது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக கிறிஸ்துவர்கள் சுற்றி நின்றனர் என்று அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது. ஆயுதமேந்திய பொலிசார் நிருபர்களை தேடி நிற்கையில், ஒரு இரகசியப் பொலிஸ்காரர் எதிர்ப்பாளர்களால் இழுத்துச் செல்லப்பட்டதை காண முடிந்தது. அவர் அடித்து உதைக்கப்பட்டு ஒரு காரில் ஏற்றிச் செல்லப்பட்டார். எல்லா இடங்களிலும் துருப்புக்களையும் டாங்குகளையும் காண முடிந்தது.

கெய்ரோவிற்கு வட மேற்கில் 100 மைல் தொலைவிலுள்ள Damanhour ல் 100,000 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கூடினர். மன்சௌராவிலும் 100,000 க்கும் மேலானவர்கள் கூடினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சூயசில் குழுமினர்.

இராணுவமும் பொலிசும் தஹ்ரிரில் வெளிப்படையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றாலும், அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள், குடிமக்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் செய்தியாளர்ளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரென் நெட்வொர்க்கைச் சேர்ந்த ஹர்னிஷ், எகிப்திய தொலைக்காட்சி கட்டிடத்திற்கு பின்புறம் இப்போதுதான் இராணுவத்தினால் நிறுத்தப்பட்டேன். அங்கு பிடிபட்டவர்கள் கேபிள்களால் கட்டப்பட்டு சிறு மின்னதிர்விற்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

உளவுத்துறை தலைமையகத்தில் இரவு கைதுசெய்யப்பட்டு காவலிலுள்ள அமெரிக்கரான ரோசா நவரோ, நான் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுற்றிலும் 50 அல்லது 60 மேலை நாட்டைச் சேர்ந்தவர்களுடன் உட்கார வைக்கப்பட்டேன். அனைவரும் ஒரு பஸ்ஸுக்கு, அல்லது வாடக்கைக்காருக்கு காத்திருக்கும்போது அல்லது வெறுமே தெருக்களில் சென்றுகொண்டிருந்தபோது பிடிக்கப்பட்டனர் என்ற தகவலைக் கொடுத்துள்ளார்.

கார்டியனின் Peterr Beaumont, Jack Shenker ஆகியோர் எகிப்திய இராணுவத்தால் விசாரிக்கப்பட்டு கத்தியேந்திய பாதுகாப்பினராலும் அச்சுறுத்தப்பட்டனர். ஒரு குண்டர் கூட்டத்துடன் வந்த மூத்த பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் வலைத் தள அலுவலகத்திற்குள் பரபரப்புடன் புகுந்தார்.

கடந்த 10 நாட்களில் 5,000 பேர் காயமுற்றுள்ளனர் என்று எகிப்தின் சுகாதார மந்திரி அல்-அரேபியா இணைய தளத்திடம் கூறினார். காயமுற்றோருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரான ஜமால் மொஹெப் வியாழன் நிகழ்வுகளைப்பற்றி, துப்பாக்கியினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் உடலில் தோட்டங்கள் இன்னமும் உள்ளன என்றார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பெருகிய முறையில் முபாரக்கின் ஆட்சி கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்தில் உள்ளது பற்றிக் கவலை கொண்டுள்ளன. வாஷங்டன் தீவிரமாக முபாரக்குடன் பதவியில் இறங்குமாறு விவாதித்து வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் கூறியுள்ளது. ஆனால் கனேடிய பிரதமருடன் இணைந்து பேசிய ஜனாதிபதி பாரக் ஒபாமா வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தி அத்தகையை அழைப்பு விடுவதைத் தவிர்த்தார். இப்பொழுது தொடங்கி, ஒழுங்கான ஆட்சி மாற்றம் தேவை என்று அவர் கூறினார்.

முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்கப்பட்டதற்கு, ஒபாமா தான் அவரிடம் பழைய நாட்களுக்குச் செல்லுவது என்பது செயல்படாது. செய்யவேண்டிய ஒரே செயல் ஒழுங்கான ஆட்சி மாற்றத்தைக் காண்பதுதான் எனக்கூறியதாகத் தெரிவித்தார்.

இப்படிக் கூறப்படும் அமெரிக்கத் திட்டம் முற்றிலும் பூச்சுத்தனத்தைக் கொண்டது, முபாரக்கின் ஆட்சியை மக்கள் சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் இலக்கைக் கொண்டது. துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான் இடைக்கால ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியதாகத் தெரிகிறது. ஒரு மூவர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த ஆட்சியில் அமெரிக்கா ஒப்புக் கொள்ளும் எதிர்த்தரப்பு நபர் ஒருவரும் இருக்கலாம். சுலைமான் எகிப்தின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் கருவிகளின் தலைவர் ஆவார். இவருடைய அடியாட்கள்தான் இப்பொழுது அச்சுறுத்தலில் ஈடுபட்டுவருகின்றனர், ஆட்சியின் எதிர்ப்பாளர்களை அடிக்கின்றனர், கொல்லுகின்றனர். அவரால் தலைமை தாங்கப்படும் ஒரு இடைக்கால அரசாங்கம் என்பது மெல்லிய மாறுவேடம் தரித்த இராணுவக் குழு ஆட்சியாகவும், மில்லியன்கணக்கான மக்கள் அகற்ற விரும்பும் இப்போதுள்ள ஆட்சியின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். 

அத்தகைய ஆட்சியின் அடிப்படையில் எதிர்ப்பாளர்கள் கலைந்துவிட்டால், பின் சுலைமான் அடக்குமுறையைத்தான் தொடக்குவார்-தலைவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களைக் கைது செய்தல், இன்னும் ஆயிரக்கணக்கானவர்களை மிருகத்தனமாக நடத்துதல் மற்றும் அது மிகவும் அஞ்சும் பலரைக் கொன்றுவிடுதல் அல்லது காணாமற் போக்குதல் என்ற வகையில். இவ்விதத்தில்தான் இது ஜனாதிபதி தேர்தல்களுக்கான தயாரிப்பை நடத்தும்.

எகிப்தியர்களுடன் வாஷிங்டனின் விவாதங்களின் தன்மை பற்றிய வெளிப்பாட்டுப் பார்வை அமெரிக்க இராணுவத்தின் தலைவர் அட்மைரல் மைக் முல்லன், படைகளுடைய கூட்டுத் தலைவரால் கொடுக்கப்பட்டது. The Daily Show with Jon Stewart நிகழ்வில் அவர், இப்பொழுது என்னுடைய முக்கிய இலக்குகளில் ஒன்று தொடர்பு முறைகளை மூடிமறைக்காமல் வைப்பதுதான். அங்குள்ள இராணுவத்தலைவருடன் இரு முறைகள் பேசியுள்ளேன். நம்முடைய இராணுவமும் தேவைப்பட்டால், ஆதரவளிக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.

எகிப்தில் ஒரு பெரும் அடக்குமுறைக்கான தயாரிப்பு தேவை என்பதற்கு அமெரிக்கா உதவியளிப்பதற்கு இதைவிடத் தெளிவான உறுதிமொழி தேவையில்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாடான ஐரோப்பிய சபைக் கூட்டம் தெளிவற்ற முறையில் அரசியல் சீர்திருத்தம் தேவை, அடக்குமுறை அல்ல. அனைத்துத் தரப்பினரும் இப்பொழுது நிதானத்தைக் கடைப்படித்து வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று எகிப்திய அதிகாரிகளை அழைக்கிறது. மேலும் ஒழுங்கான வகையில் பரந்த மக்கள் தளத்தைக் கொண்ட அரசாங்கத்திற்கு மாற வேண்டும்.. இந்த மாற்ற முறை இப்பொழுது தொடங்க வேண்டும் என்று ஐரோப்பிய சபை அடிக்கோடிடுகிறது.

முபாரக் செல்ல வேண்டும் என்ற குரல் கொடுக்கப்படவும் இல்லை, அத்தகைய அழைப்பு பற்றி உடன்பாடு ஏதும் இல்லை. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன் வாஷிங்டன் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டில் இருந்து ஊக்கம் பெற்று எகிப்திய அரசாங்கம் மக்கள் நம்பகமான மாற்றம் வேண்டும் என்று கூறும் விழைவுகளைத் திருப்தி செய்யத் தவறிவிட்டது என்றார். ஆனால் இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி முபாரக்கை புகழ்ந்து அவர் செப்டம்பர் தேர்தல்கள் முடியும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்றார். எகிப்தில் ஜனநாயக முறையில் ஒரு மாற்றம் ஜனாதிபதி முபாரக்கை முறித்துக் கொள்ளாமல் வரமுடியும் என்று நம்புகிறேன். அவர் மேற்கில், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில், மிகவும் அறிவாளியாகக் கருதப்படுகிறார். குறிப்பான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளார்.

தொழிற் கட்சி சீமாட்டியும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவருமான ஆஷ்டன் சீமாட்டி அல் ஜசீராவால் பேட்டி காணப்பட்டார். முபாரக் ஒருவிதத் தேசிய உரையாடலை நாடிச் செல்வதாகத் தோன்றுகிறது என்றார் அவர்.

இப்பொழுது முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: இது எகிப்திய மக்களும் அரசாங்கமும் முன்னேறுவதற்காக செய்யப்பட வேண்டும். ஒரு திட்டம் முறையாக வகுக்கப்பட வேண்டும் என்றார் அவர்-இதைத்தான் சுலைமானிடம் விவாதித்ததாக அவர் கூறினார்.

முபாரக் நகர்ந்து சுலைமானுக்கு வழிவிட வேண்டும் என்னும் வாஷிங்டனின் முயற்சிகள் தற்போதைக்கு எகிப்திய அரசாங்கத்தின் கடினப் போக்கினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வியாழனன்று முபாரக் பதவியில் தொடர்வார் என்று சுலைமான் வலியுறுத்தினார். “…பல ஆண்டுகள் பொதுப் பணியில் ஈடுபட்டவர் இந்த ஐந்து மாதங்கள் அதிக வேறுபாட்டை ஏற்படுத்திவிடாது என்றார். நிதி மந்திரி அஹ்மத் அப்துல் கெய்ட் வெளிசக்திகள் அதிகார மாற்றம் பற்றி ஆணையிட முடியாது என்றும், தற்போதைக்கு முபாரக் தொடர்வார் என்றும் கூறினார். முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் இப்ரஹிம் கெமல் இத்தகைய கருத்துக்கள் காட்டிக் கொடுப்பு என்று கண்டித்து, எகிப்திய மக்களுக்கு எதிரான சதி என்றும் கூறினார்.

முபாரக்கின் ஆதரவாளர்கள் சொந்த விசுவாசத்தால் உந்துதல் பெறவில்லை. முபாரக் வீழ்ச்சி அடைந்தால், அது பரந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் அவர்களது தலைகளையும் கோருவதற்கு வழிசமைக்கும் என்று அஞ்சுகின்றனர்.

தான் விலகுவதைத் தொடர்ந்து பெரும் குழப்பம் வரும் என்று முபாரக் எச்சரித்துள்ள நிலைமையில் எதிர்ப்பு இயக்கத்தின் தலைமையில் இருப்பவர்கள் எனக்கருதப்படுபவர்கள் கூட அதிக அச்சமான நிலையில் தான் உள்ளனர். ஆனால் அவர்கள் முபாரக்கிற்குப் பின் வரும் எந்த ஆட்சிக்கும் உறுதியைக் கொடுக்கத் தங்கள் பணியை அளிப்பர். மேற்கினால் விரும்பப்படும் மஹ்மத் எல்பரடேய் நிருபர்களிடம் ஒரு தற்காலிக அரசியலமைப்பின் கீழ் ஓராண்டு ஜனநாயகத்திற்கான மாற்று அரசாங்கம் இருக்க வேண்டும்-அதில் ஜனாதிபதிக் குழு ஒன்று பல உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும், இராணுவப் பிரதிநிதி ஒருவரும் இருக்க வேண்டும் என்றார். தான் ஜனாதிபதி பதவிக்கு நிற்பதாக இல்லை என்று வெளிவந்துள்ள தகவல்களை அவர் மறுத்தார்.

அரபு லீக்கின் தலைமைச் செயலரான அமர் மூசா செய்தி ஊடகத்தால் எதிர்ப்பின் பிரதிநிதி என்றும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்பும் நபர் என்று கூறப்படுகிறார். அவர் உண்மையில் நேற்றுத்தான் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார், செப்டம்பரில் பதவிக்காலம் முடியும் வரை முபாரக் அதிகாரத்தில் இருப்பார் எனத் தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். புதிய தேர்தல்களுக்கு விரைவில் ஏற்பாடு செய்வது இயலாது என்றும் அவர் கூறினார். இடைக்கால அரசாங்கத்தில் ஒரு பங்கைக் கொள்ள விரும்புகிறாரா, ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவார் என்று கேட்கப்பட்டதற்கு, ஏன் கூடாது என்றார் அவர்.

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி அதன் எதிர்ப்பு வார்த்தைஜாலங்களை குறைத்துவிட்டுக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இராணுவ  ஆட்சிக்கும் மற்றும் வாஷிங்டனுக்கும் தான் ஒரு அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற உத்தரவாதம் அளிக்க மிகவும் கடின முயற்சி எடுக்கின்றது. தான் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கப்போவதில்லை என்று கூறியுள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி அதேபோல் புதிய மந்திரிசபையில் மந்திரிகளையும் நாடப்போவதில்லை என்று கூறியுள்ளது.