சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU leaders discuss further austerity measures           

ஐரோப்பியத் தலைவர்கள் இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கின்றனர்

By Stefan Steinberg
5 February 2011

Use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.

கடந்த ஓராண்டில் கிரேக்கம் மற்றும் அயர்லாந்தின் வரவுசெலவு திட்டப் பற்றாக்குறைகளைக் குறைக்கும் வகையில் பல வெட்டுக்களைக் கொண்டுவந்தன. இவை மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை பெரிதும் வீழ்ச்சியடைய செய்துவிட்டன. போர்த்துக்கல், ஸ்பெயின் இன்னும் பல கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளிலுள்ள மற்றய பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளும்  நிதியச் சந்தைகளின் அழுத்தத்தின் கீழ் இதேபோன்ற நடவடிக்கைகளை சுமத்தியுள்ளன. இவற்றுள் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியக் குறைப்புக்கள் அடங்குவதுடன் மதிப்புக்கூட்டு வரியை (value-added tax) உயர்த்தியதின் மூலம் அடிப்படைப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதும் அடங்கும்.

இப்பொழுது, ஐரோப்பாவில் இரு பெரிய பொருளாதாரங்களான ஜேர்மனி மற்றும் பிரான்சின் அழுத்தங்களின் பேரில் இந்த வழிவகை தீவிரப்படுத்தப்பட்டு, விரிவாக்கப்படும்.

முதலில் எரிசக்திக் கொள்கை பற்றி விவாதிக்கப்படுவதற்காக அழைக்கப்பட்ட வெள்ளிக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஆறு-அம்சத் திட்டம் ஒன்றை பிரான்ஸ்-ஜேர்மனிய அறிக்கை ஒன்றின் மூலம் சமர்ப்பித்தனர். இது செய்தி ஊடகத்தால்போட்டித்தன்மைக்கான உடன்பாடு என்று விவரிக்கப்பட்டது. 200 பில்லியன் ஈரோக்கள் அதிகரிப்பிற்கு ஐரோப்பியப் பிணை எடுப்பு நிதியான 440 பில்லியன் ஈரோக்களுக்கு ஈடாக, ஜேர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் வரவு-செலவுத் திட்டக் கொள்கைகளை ஆணையிட முற்பட்டுள்ளன.

இந்த உடன்பாட்டின் முக்கிய கூறுபாடுகளில் எல்லா இடங்களிலும் ஓய்வூதிய வயதை 67 ஆக ஆக்குதல், பணவீக்க விகிதத்துடன் தொடர்பான ஊதிய அதிகரிப்பை பாதுகாக்கும் உடன்பாடுகள் பல நாடுகளில் இருப்பதை அகற்றுதல் மற்றும் அரசியலமைப்பால்  கட்டுப்படுத்தப்பட்ட  வகையில் சமூகநலச் செலவுகளை குறைத்தலை ஏற்றல் ஆகியவை அடங்கியுள்ளன.

ஓய்வூதிய வயதை 67 ஆக ஆக்குதல் மற்றும் மாநிலங்கள் கடன் வாங்குதலை நிறுத்துதல் என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு விதி ஆகியவை ஜேர்மனியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. இந்த நாட்டில் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியங்களை சமப்படுத்தும் கொள்கை எப்பொழுதுமே இருந்ததில்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இக்கொள்கை அகற்றப்படுவதால் இங்கு எந்தப் பாதிப்பும் இராது.

பிரான்சின் உடன்பாட்டுடன் ஜேர்மனியினால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் நீண்டகாலமாக வணிகம் மற்றும் நிதிய வட்டங்களால் கோரப்பட்டு வருகின்றன. ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் டாவோஸில் சமீபத்தில் நடந்த உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்  தன்னுடைய பங்களிப்பில் இக்கருத்தை மையமாகக் கொண்டுவந்தார். அத்தகைய சிக்கன நடவடிக்கைகளின் சிறப்புக்களைத்தான் துல்லியமாக சுவிட்சர்லாந்தும் பாராட்டியுள்ளது. இது கூடியிருந்த வங்கியாளர்கள் மற்றும் முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றது.

67 வயதில்தான் ஓய்வு என்பது முதலில் சமூக ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. பின்னர் அது சட்டமாக தற்போதைய ஜேர்மனிய பழமைவாத கூட்டணி அரசாங்கத்தால் சட்டமாக இயற்றப்பட்டது. இந்த நடவடிக்கை ஓய்வூதியங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை சேமிக்கும் நோக்கத்தைக் கொண்டது. கண்டம் முழுவதும் இது செயல்படுத்தப்படுவது என்பது ஐரோப்பிய தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் உடல்நலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெருக்களுக்கு வந்து பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வூதிய வயதை 62 ஆக உயர்த்தியதைச் செயல்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்பொழுது அவர்களுடைய உழைக்கும் வாழ்வு 67 வரை உயர்த்தப்படவுள்ளது. இது ஒரு தொடக்கம்தான். ஐரோப்பிய ஒன்றியம் 2010ல் வெளியிட்ட ஒரு பச்சைக் காகித அறிக்கை (Green Paper) ஓய்வூதியத் தகுதி வயதை நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் படிப்படியாக 70 க்கு உயர்த்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது. பல மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சராசரி வாழ்வு 70 என்று கொண்டுள்ளன. இதையொட்டி பல தொழிலாளர்கள் கல்லறைக்குச் செல்லும் வரை உழைத்தாக வேண்டும் என்பதுதான்.

ஜேர்மனி முன்வைத்துள்ள மற்றொரு முக்கிய நடவடிக்கை, “கடன் வாங்குதலை நிறுத்துதல் என்று அழைக்கப்படுவதாகும். இதன் பொருள் மாநில அரசாங்கங்கள் தங்கள் அரசியலமைப்பு விதிகள் மூலம் பொதுப் பணித் திட்டங்களுக்கு நிதியளிக்கவோ, சமூகநலச் செலவுகளுக்காகவோ கடன் பெறுதல் தடுத்து நிறுத்தப்படும். இத்திட்டம் எந்த அரசியல் கட்சியும் மக்கள் அழுத்தத்திற்கு அடிபணிவதைத் தடுக்கும் என்பதுடன், வரவு-செலவுத் திட்டக் கொள்கைகளிலும் குறைந்த சலுகைகளை மட்டுமே கொடுக்க முடியும் என்பதை ஏற்படுத்தும். ஜேர்மனியில் இது செயல்படுத்தப்பட்டதையடுத்து, மேர்க்கெல் அரசாங்கம் அதைத் தன் செலவுக் குறைப்பு வெட்டுக்கள் தொகுப்பில் 80 பில்லியன் ஈரோக்களை சேமிப்பதை நியாயப்படுத்தியது.

பிரஸ்ஸல்ஸில் முன்வைக்கப்பட்ட மூன்றாவது திட்டம் ஊதியங்கள் பணவீக்கத்தை ஒட்டி சமப்படுத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறது. இது குறிப்பாக அத்தகைய சரிசெய்தல்கள் சில காலமாக நடைமுறையில் இருக்கும் உடன்பாடுகளைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக இயக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் லுக்சம்பேர்க் ஆகிவற்றிற்கு எதிராக. இக்கோரிக்கையும் முக்கிய வங்கிகள் மற்றும் ஐரோப்பிய வணிக உயரடுக்குகளின் முன்னுரிமைப் பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

ஐரோப்பிய அரச தலைவர்கள் தொழிலாளர்களுக்கு இயல்பான ஊதிய உயர்வை நீக்குவது பற்றி விவாதிக்கும்போது, இதே நடவடிக்கை முக்கிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இயக்கப்படுவதை எதிர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தங்களுடைய சொந்த ஊதியங்களுக்கு ஒப்புதல் கொடுத்தனர் (கடந்த ஆறு மாதங்களுக்கும் சேர்த்து). இந்த ஊதியங்கள் 2011ல் கிட்டத்தட்ட 200,000 யூரோக்கள் அதிகமாகிவிட்டன.

“போட்டித்தன்மைக்கான உடன்பாட்டின்’ இறுதி விவரங்கள் மார்ச் மாதம் நடைபெறவுள்ள யூரோப் பகுதித் தலைவர்களின் உச்சிமாநாட்டிலும் அதைத்தொடர்ந்து வரும் மாதத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிலும் விரிவாக விவாதிக்கப்பட இருக்கையில், பிரஸ்ஸல்ஸில் வெளிவந்துள்ள சமீபத்திய திட்டங்கள்  ஐரோப்பாவிற்குள் பிளவுகளுக்கு தீவிரமாகத்தான் உதவும் என்பது தெளிவு. பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய அரச தலைவர்கள் வெள்ளியன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் தங்கள் திட்டங்கள் ஐரோப்பாவில் “இணக்கப்பாட்டை கொண்டுவரும்” என்று வாதிட்டனர். உண்மையில் முற்றிலும் எதிரானதுதான் இதையொட்டி விளையும்.

போட்டித்தன்மைக்கான உடன்பாடு யூரோப் பகுதியின் 17 உறுப்பு நாடுகளால் இயற்றப்பட்டது. பின் அது எஞ்சிய 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விதிகளை அவை ஏற்கின்றனவா என்பதை முடிவெடுப்பதற்காக அனுப்பப்படும். யூரோப் பகுதிக் குழுவிற்குள் ஜேர்மனியும் பிரான்ஸும் பெருகிய முறையில் கொள்கைகளை ஆணையிடுகின்றன. அவை நீண்டகால ஐரோப்பிய நிறுவனங்களை கடந்துசெல்லும் முறையில், அதாவது அது ஐரோப்பிய ஆணையம் போன்றவையாக இருக்கின்றன 

உச்சிமாநாட்டில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யூரோப் பகுதிக்கு வெளியே இருப்பவை பிராங்கோ-ஜேர்மனிய உடன்பாட்டைக் குறைகூறி, கண்டத்தின் இரு பெரும் பொருளாதாரங்கள் தங்கள் வலிமையைத்தான் காட்ட முற்பட்டுள்ளதாகக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மரபார்ந்த நட்பு நாடுகளும் ஐரோப்பிய உறுப்பு நாடுகளுமான பெல்ஜியம், ஆஸ்திரியா, நெதர்லாந்து போன்றவையும் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

Berliner Zeitung பத்திரிகையில் உடன்பாடு பற்றிக் கருத்துக்கூறிய, ஜேர்மனியப் பொருளாதார வல்லுனர் பீட்டர் போபிங்கர், “இந்த உடன்பாடுஜேர்மனிய உணர்வினால் ஐரோப்பா குணமடையட்டும் என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது ஒழுங்காகச் செயல்படாது என்று கூறினார்.

ஜேர்மனியப் பொருளாதாரம் சமீபத்திய ஆண்டுகளில் இலாபம் ஈட்டமுடிந்ததற்கு காரணமே ஏற்றுமதிகளில் அது காட்டும் குவிப்புத்தான். மேலும் அங்கு ஊதியத் தரங்கள் கணிசமாக குறைந்துவிட்டன, அரசாங்கச் செலவுகளும் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளன என்பதால்தான். மற்ற நாடுகள் இதே மருந்தைச் சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்டால், அதன் விளைவு ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பொருளாதாரத் தேக்கத்தை ஏற்படுத்துல் என்பதாக இருக்கும் என்று போபிங்கர் வாதிட்டுள்ளார்.

ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைளினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், விளவுகள் பற்றி நன்கு அறிந்துள்ளன. ஆனால் அவை ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் ஊகச் செயற்பாடுகளினால் விளைந்த 2008 நிதிய நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவாதப்படுத்துவதில் உறுதியாக உள்ளன.