சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government embarrassed by its ties to North African dictatorships

பிரெஞ்சு அரசாங்கம் அதன் வட ஆபிரிக்க சர்வாதிகாரங்களுடனான உறவுகளால் சங்கடம் அடைகிறது

By Antoine Lerougetel and Alex Lantier
9 February 2011

Use this version to print | Send feedback

எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் ஜனவரி 14ம் தேதி தன் நாட்டை விட்டு ஓடிய துனிசிய ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலி ஆகியோருக்கு எதிரான வட ஆபிரிக்க மக்கள் எதிர்ப்புக்கள் பிரெஞ்சு அரசாங்கத்தை அதிர்விற்கு உட்படுத்தியுள்ளன. தற்போதைக்கு கவனம் வெளியுறவு மந்திரி மிஷேல் அலியோ மரி மீது குவிப்பைக் கொண்டுள்ளது; பல பிரெஞ்சு அரசியல்வாதிகளைப் போல் இவரும் துனிசிய ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார்.

அலியோ மரி மற்றும் அவரது கணவர் பாட்ரிக் ஒலியேர் அவரும் ஒரு அரசாங்க மந்திரிதான் துனிசியாவின் பல மில்லியன்களுக்கு உரியவரான அசீஸ் மிலாட் இன் தனி ஜெட்டில் இலவசமாகப் பயணித்து அவருடைய ஆடம்பர ஓட்டலிலும் கிறி!ஸ்துமஸ் விடுமுறையைக் கழித்திருந்தனர்; பென் அலிக்கு எதிரான எதிர்ப்புக்கள் தொடர்கையிலேயே இது நடந்தது. மிலாட்டின் ஜெட், பென் அலியின் உறவுக்காரரான பெல்ஹாசென் ட்ரபெல்சிக்குச் சொந்தமான கார்தகோ விமான நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. ட்ரபல்சி இப்பொழுது ஒரு சர்வதேசப் பிடி ஆணையில் கைது செய்யப்படத் தேடப்பட்டுவருகிறார்.

அலியோ மரி மிலாட்டின் விருந்தோம்பலை அனுபவித்தபோது, பென் அலியின் பொலிசார், வேலையின்மை, வறுமை, பென் அலியின் சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திவந்த இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை சுட்டுக் கொன்று வந்திருந்தனர். குறைந்தபட்சம் 218 பேராவது கொல்லப்பட்டனர் என்று அரசாங்கப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஜனவரி 11ம் தேதி, மீண்டும் பணிக்குத் திரும்பியபோது, அலியோ மரி துனிசிய எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கு பிரெஞ்சு கலகமடக்கும் பொலிஸ் பிரிவை அனுப்பிவைக்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்தார்.

அலியோ-மேரியின் செயற்பாடுகள் மிகத் தெளிவாக பாரிசுக்கும் முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ நாடான துனிசியாவில் இருந்த சர்வாதிகாரத்திற்கும் இடையே உள்ள உடந்தைத் தன்மையைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. அலியோ-மரி தன்னுடைய பிரச்சினைகளை அதிகரிக்கும் வகையில் பென் அலியின் ஆட்சிகளில் இருந்து தன் உறவுகள் பற்றிய கவனத்தைத் திசை திருப்புவதற்கு மட்டமான முயற்சிகளில் ஈடுபட்டார்.

பென் அலியினால் பாதிப்பிற்கு மிலாட் உட்பட்டிருந்தார் என்று இவர் கூறினார். உண்மையில் Le Nouvel Observateur குறிப்பிட்டுள்ளபடி, “மிலாட் 2004 பென் அலியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை அமைத்தவர்களில் ஒருவரும், 2014ல் நடக்க உள்ள ஜனாதிபதித் தேர்தல்களில் முன்னாள் வலிமை பெற்றவருடைய வேட்புத்தன்மைக்கு ஆதரவு தரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டவரும் ஆவார்.”

அலியோ-மரி அமெரிக்க-எதிர்ப்பு உணர்விற்கும் முறையிட்டார்: இது கேலிக்கூத்து போல் பென் அலி அகற்றப்பட்தற்கு வாஷிங்டன் மீது குற்றம் கூறினார். “அமெரிக்கா நிலைமையின்மீது கட்டுப்பாட்டை எடுத்துள்ளது அமெரிக்கர்கள் நமக்கு இது பற்றித் தெரிவிக்கவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை.” இத்தகைய கருத்துக்கள், நிலைமை பற்றிய அவருடைய முக்கிய எதிர்ப்பு, பென் அலி அதிகாரத்தில் இல்லை என்பது பற்றித்தான் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

தேசிய சட்டமன்ற பிரதிநிதிகள், அவரை சபையில் வினாவிற்கு உட்படுத்தியபோது, அவர் எதிர்ப்புக்கள் பற்றியும் டிசம்பர் 17ம் தேதி மக்கள் எதிர்ப்புக்களைத் தூண்டிய, இளம் பழ விற்பனையாளரான முஹ்மத் பௌவாசிசி தன்னையே தீக்கிரையாக்கிக் கொண்டது பற்றியும் தன் உதாசீனத்தை வெளிப்படுத்தினார். அவர் இறந்த தினத்தைப் பற்றி தவறாகக் கூறி, “என் பயண முடிவில் தற்கொலை நடந்தது என்று நினைக்கிறேன். அதுதான் எனக்கு ஞாபகம் உள்ளது.” என்றார்.

இன்னும் திமிர்த்தனமாக அவர் கூறியது: “அந்த நேரத்தில் அடக்குமுறை ஏதும் இல்லை.” பின்னர் தன்னை விமர்சித்தவர்கள்மீது தாக்குதல் நடத்தும் முறையில், அவர்கள்என்னை இழிந்த தன்மைக்குத் தள்ளும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் என்றார்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதனுடைய வார்த்தைஜாலஇடது பின்தொடர்பாளர்களான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை அவர் வெளியேறவேண்டும் என்று கூறின. சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த தேசிய சட்டமன்றப் பிரதிநிதி Pierre Moscovici, “பிரான்சின் வெளியுறவுக் கொள்கை திருமதி அலியோ-மரி போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படக்கூடாது என்றார்.

மற்றொரு சோசலிஸ்ட் கட்சி தேசிய சட்டமன்றப் பிரதிநிதியான Olivier Dussopt, அரசாங்கத்திடம்: “உங்கள் வெளியுறவு மந்திரி, தகுதி இழந்துவிட்டார். பொறுப்புடன் நடந்து கொண்டு நம் பங்காளிகளுக்கு வேறு ஒரு செய்தித் தொடர்பாளரை நியமியுங்கள்.” என கூறினார்.

அலியோ-மரி, பென் அலியைப் பாதுகாத்துப் பேசியது குறிப்பிடத்தக்க வகையில் வெட்ககரமானது, பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் புகழை மீட்கும் முயற்சியையொட்டி அவர் முற்றிலும் இழிந்த முறையில் உண்மைக்குப் புறம்பாகப் பேசினார்.

பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன், அலியோ-மரி இராஜிநாமா செய்யவேண்டும் எனக் கோரியவற்றை எதிர்த்துள்ளார்; ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இவ்விடயத்தில் மௌனம் சாதிக்கிறார். ஆனால் பிய்யோனே எகிப்திய ஆட்சியின் கீழ் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது விருந்தாளியாக இருந்தார் என்ற அண்மைய செய்திகளுக்கு இடையே, அழுத்தங்கள் தொடர்ந்து எழுகின்றன.

பென் அலிக்கான ஆதரவு என்னும் கொள்கை முழு பிரெஞ்சு அரசாங்கத்தால் மட்டும் பகிர்ந்து கொள்ளப்படாமல், சோசலிஸ்ட் கட்சியினாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது; இது வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின மூலோபாய நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது.

பிரான்ஸ், தனது முன்னாள் வட ஆபிரிக்க காலனிகளை தனக்குத் தேவையான விசை மற்றும் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பாக வளர்க்க முற்பட்டுள்ளது (see “France: Continental offers €137-a-month jobs in Tunisia”). வட ஆபிரிக்க சர்வாதிகாரங்களுக்கு பிரான்ஸ் ஆதரவு கொடுப்பதற்கு எதிரான எந்த காத்திரமான போராட்டங்களும், அதன் அரசியல் அடிப்படையை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு சோசலிசப் போராட்டமாக கொள்ள வேண்டும்.

பிரெஞ்சு அரசாங்கம் பென் அலிக்குக் கொடுத்துள்ள ஆதரவிற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. ஜனவரி 8 மற்றும் 12ம் திகதிகளில் ஏழு தொன் கண்ணீர்ப்புகைப் பொருட்கள், தடிகள் மற்றும் பிற பொலிஸ் கருவிகள் துனிசிய போலிசால் பிரெஞ்சு நிறுவனங்களில் விலைக்கு கோரப்பட்டன. இவை ஏற்றுமதி செய்யப்படலாம் என்று பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவு அமைச்சரகங்களின் இசைவைப் பெற்றன.

இதைப்பற்றி பெப்ருவரி 2ம் திகதி, தேசிய சட்டமன்ற PS குழுத் தலைவர் Jean Marc Ayrault க்கு அனுப்பப்பட்ட கடிதம் உறுதிபடுத்துகிறது. இத்தளவடாங்கள் பென் அலி ஓடுவதற்குச் சில மணிநேரம் முன்பு பிரெஞ்சு சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன. இவற்றைத் தடுக்க வேண்டும் என்ற உத்தியோகபூர்வ உத்தரவு சுங்க அதிகாரிகளுக்கு அலியோ-மரியிடம் இருந்து கொடுக்கப்பட்டதுஆனால் ஜனவரி 18 அன்றுதான்.

PS ஐப் பொறுத்தவரை, சோசலிஸ்ட் கட்சித் தலைமையான ஜனாதிபதி பிராசுவா மித்திரோன்திருப்திகரமான விடுமுறை நாட்களை முபாரக்கின் அழைப்பில் பேரில் எகிப்தில் கழித்தார் என்று Dauphine Libéré சுட்டிக் காட்டியுள்ளது. இன்னும் சமீபத்தில் லியோனல் ஜோஸ்பன் உடைய பன்முக இடது அரசாங்கம் (1997-2002) வட ஆபிரிக்க சர்வாதிகாரிகளுடன் நல்ல உறவுகளைத் தக்க வைத்திருந்தது.

அது எகிப்திய மற்றும் துனிசிய ஆளும் கட்சிகள் சமூக ஜனநாயக சோசலிஸ்ட் இன்டர்நேஷனல் உடன் முறையாக இணைந்திருந்தது. ஜனவரி மாதம்தான் துனிசிய அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியை (RCD) வெளியேற்றியது; எகிப்தின் தேசிய ஜனநாயகக் கட்சியை (NDP) பெப்ருவரி 5ம் தேதிதான் வெளியேற்றியது.