சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்த

Egyptian military tortured, “disappeared” thousands of demonstrators

எகிப்திய இராணுவம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைச் சித்திரவதை செய்துள்ளது, “காணாமற்போகச் செய்துள்ளது

By Tom Eley
11 February 2011

Use this version to print | Send feedback

ஜனவரி 25ல் முபாரக் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்த நிலையில், எகிப்திய இராணுவம் ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்துள்ளது, சித்திரவதை செய்துள்ளது மற்றும்காணாமற் போகுமாறும் செய்துள்ளது என்று கார்டியன் செய்தித்தாள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களின் தகவல்கள் கூறுகின்றன.

இக்கருத்துக்களின் வெளிப்பாடு எகிப்தின் இராணுவம் நடுநிலையாக நெருக்கடி தொடர்பாகவுள்ளது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கானமாற்றத்திற்கு தலைமை வகிக்க இயலும் என்னும் ஒபாமா நிர்வாகம் முன்வைத்துள்ள கூற்றைச் சிதறடிக்கிறது. வெறுக்கப்பட்ட அரசப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்கப்பட முடியும் என்றும் மஹம்த் எல்பரடெய் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினாலும் முன்னெடுக்கப்படும் இவ்வாதங்களையும் இக் கருத்துக்களானது பொய்யாக்குகின்றன. முகம்கொடுக்கும் புரட்சியை முறியடிக்க உண்மையில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மிருகத்தனமான பங்கைத்தான் இராணுவமும் எடுத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் கருத்துப்படி குறைந்தபட்சம் 302 எகிப்தியர்கள்  எதிர்ப்புக்களில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்புப் படையினராலும், அரசாங்க சார்புடைய குண்டர்கள் மற்றும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். கெய்ரோவில் மனித உரிமைகள் கண்காணிப்பின் ஆய்வாளராகவுள்ள Heba Morayef இந்த எண்ணிக்கையை தொகுப்பதில் பங்கு பெற்றவர் இறுதி எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

காணமற்போனவர்களின் எண்ணிக்கைஇராணுவத்தால் சான்றுகள் ஏதும் இல்லாமல், அவர்களின் விதி பற்றி எவ்வித அரசாங்கக் குறிப்பும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கைநூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில்கூட இருக்கலாம் என்று  கெய்ரோவிலுள்ள  Egyptian Initiative for Personal Rights அமைப்பின் இயக்குனர் ஹொசம் பஹ்கட் கூறியுள்ளார். அவர்களுடையகுற்றங்கள் அரசியல் துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்தது, ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதுஅல்லது அவர்கள் இருக்கும் இயல்பான தன்மையே போதுமானதாக இருந்தது என்று  செய்தித்தாள் கூறியுள்ளது.

இம்மக்களின் பின்னணி பரந்ததாக இருக்கிறது, எதிர்ப்புக்களில் பங்கு பெற்ற மக்கள், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் ஆகியோரிடமிருந்து இராணுவ அதிகாரியை எதிர்த்துப் பேசியவர்கள் அல்லது சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அல்லது வெளிநாட்டினர் இல்லை என்றாலும் அவர்களைப் போல் காட்சியளித்தவர்கள் என்று இருந்தனர் என பஹ்கட் கூறினார். “இது அசாதாரணமான செயல், நாங்கள் அறிந்தவரை இராணுவம் இவ்வாறு செய்வதற்கு முன்னோடி ஏதும் இல்லை.”

தடுப்புக்காவல்கள் முற்றிலும் தகவல் கொடுக்கப்படாமல் நடைபெறுகின்றன, அல்லது கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது விரும்பும் வக்கீலிடம் தடுப்புக்காவல் பற்றித் தொடர்பு கொள்ள முடியால் இன்னும் கடின நிலையில் உள்ளனர், அவர்களுக்கு உதவ இயலாமலுள்ளது. இராணுவப் பொலிசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்விதச் சட்ட வழிவகையையும் பெறுவதில்லை, ஏனெனில் இவர்கள் பற்றிக் கணக்கு அல்லது குறிப்புக் கிடையாது, தாங்கள் காவலில் உள்ளோம் என்பது பற்றி எவரிடமும் சொல்லவும் முடியாது என்று அவர் தொடர்ந்து கூறினார்.

தஹ்ரிர் சதுக்கத்திற்கு அருகே கைதுசெய்யப்பட்டு பின்னர்காணாமற் போனவர்களில் ஒருவர் கரீம் அமீர் ஆவார். இவர் வலைத் தளத்தில் எழுதுபவர், முபாரக் ஆட்சியின் எதிர்ப்பாளர், சமீபத்தில்தான் ஆட்சியைக் குறைகூறியதற்காக நான்கு ஆண்டுகால சிறைத்தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்.

பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் வாடிக்கையாகச் செய்வது போல், இராணுவமும் கைது செய்பவர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்துகிறது. “பெரும் அடிகளையும் உதைகளையும் மற்றும் திட்டுக்களை இராணுவத்திடம் இருந்து வாங்கியது பற்றிக் காவலில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட ஒரு மிரட்டல் பிரச்சாரத்தைப் போல்தான் தோன்றுகிறது என்று கார்டியன் எழுதியுள்ளது. சித்திரவதை செய்யப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ள வகைகளில் செய்தித்தாள் கைதிகளுக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒரு பெயரிடப்படாத செயற்பாட்டாளரை தவறாக இராணுவத்தால் நடத்தப்பட்டதைத் தெரிவிக்கிறது. அவர் ஒரு இராணுவச் சோதனைச் சாவடி முன் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு ஒரு ஜனநாயகச் சார்புடைய துண்டுப்பிரசுரம் அவர் பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் என்னைத் தெருவிலேயே தங்கள் ரப்பர்த் தடிகளால் அடிக்கத் தொடங்கினர், பின் ஒரு மின்சார Taser துப்பாக்கியைப் பயன்படுத்தி எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர் என்றார் அவர். “பின் அவர்கள் என்னை  அப்டின் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அங்கு அடைந்தபின், அங்கிருந்த படையினர்களும் அதிகாரிகளும் ஒருஉளவாளி வருகிறார் என்றனர். எனவே நான் போனவுடன் அவர்கள்நல்வரவு அடி என உதைத்தனர், முப்பது நிமிடங்கள் இது நீடித்தது.”

இதன்பின் அவரின் ஆடைகளை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். பின் சில மின்கம்பிகள் மூலம், “மின் அதிர்ச்சி கொடுக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அவர் உடலில் மின் அதிர்வு கொடுக்கப்பட்டது.

என் உடல் முழுவதும் அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அது ஒன்றும் உண்மையான விசாரணை அல்ல. அவர் என்னைப் பல கேள்விகள் கேட்கவில்லை. வெள்ளியன்று இருமுறை இதுபோல் சித்திரவதைப்படுத்தினர், சனிக்கிழமை இன்னும் ஒரு முறை சித்திரவதைப்படுத்தினார்கள் என்றார் அவர்.

அசரப் என்னும் 23 வயது நபருடன் கார்டியன் உரையாடியது. அவர் வெள்ளியன்று கெய்ரோவிலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தஹ்ரிர் சதுக்கத்திற்கு மருந்துப் பொருட்களைக் கொண்டுவர முயற்சித்தார். தான் எப்படி ஒரு தற்காலிக சிறைக்குள் தள்ளப்பட்டது, அது எகிப்திய தொல்பொருள் அருங்காட்சியகத்திற்குள், தஹ்ரிர் சதுக்கத்தின் முனையில் இருந்தது என்று அவர் கூறினார்.

நான் ஒரு பக்கத்துத் தெருவில் இருந்தேன் ஒரு சிப்பாய் என்னை நிறுத்தி எங்கு போகிறேன் என்று கேட்டார். நான் கூறியவுடன் அவர் வெளிநாட்டு விரோதிகளுக்கு நான் செயல்படுகிறேன் என்று குற்றம் சாட்டினார். மற்றய சிப்பாய்களும் விரைந்து வந்தனர், அவர்கள் அனைவரும் தங்கள் துப்பாக்கி மட்டையால் என்னை அடிக்கத் துவங்கினர்.”

அவர்கள் என்னை ஒரு அறையில் அடைத்தனர். ஒரு அதிகாரி உள்ளே வந்து அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட யார் எனக்குப் பணம் கொடுப்பது என்று கேட்டார். ஒரு நல்ல அரசாங்கம் வேண்டும் என்று நான் பதில்கூறியபோது அவர் என்னை தலையில் குறுக்கே அடித்தார், நான் தரையில் வீழ்ந்தேன். பின் என்னை சிப்பாய்கள் உதைத்து நசுக்கினர். ஒருவர் என் கால்களுக்கு இடையே என்னைத் தாக்கினார்.”

ஒரு துப்பாக்கிக் கத்தியை வைத்து அதன் மூலம் என்னைக் கற்பழிக்கப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதன் பின் அதை என் கால்களுக்கு இடையே பரவ விட்டனர். அங்கேயே நான் இறக்கலாம் அல்லது சிறையில் மறைந்து போகலாம், எவருக்கும் தெரியாது என்றனர். சித்திரவதை பெரும் வலியைக் கொடுத்தது. இராணுவச் சிறையில் காணாமற் போதல் என்னும் கருத்து உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தியது.”

பதிலடி கிடைக்கும் என்ற பயத்தில் தன் கடைசிப் பெயரைக் கூறாத அஷரப் பல மணி நேரம் அவ்வப்பொழுது உதைக்கப்பட்டதாகவும், பிறகு ஒரு டஜன் மற்றவர்களுடன் ஒரு அறையில் வைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் மோசமான முறையில்சித்திரவதைக்கு உட்பட்டிருந்தனர் என்றும் கூறினார்.

கடந்த வாரம் முபாரக் ஆதரவுக் குண்டர்களை, பலர் சீருடை அணியாத பாதுகாப்புப் பிரிவினர், மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை மொலடொவ் வெடிகள் மூலமும், இரும்புத் தடிகள் மூலமும் தாக்கவும், அதற்கு வாகனங்கள், குதிரைகள், துப்பாக்கிகளைப்பயன்படுத்த இராணுவத்தினர் அனுமதித்தனர். எண்ணிக்கை தெரியாதளவில் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் இத்தாக்குதல்களில் காயமுற்றனர்.

இராணுவம் பொதுவாக முபாரக் சார்பாக சண்டையிட்டவர்களை கைது செய்வதில்லை, அப்படிச் செய்தபோது, மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகள் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்அவர்கள்தான் ஒருக்கால் இவர்களை நியமித்தவர்களாக இருக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் கூறியுள்ளன.