சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Egyptian military asserts authority as strikes, protests spread

வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் பரவுகையில், எகிப்திய இராணுவம் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்கிறது

By Andrea Peters
14 February 2011

Use this version to print | Send feedback

ஹொஸ்னி முபாரக்கின் நீண்டகால சர்வாதிகாரத்தின் சரிவிற்குப் பின் முபாரக் தேர்ந்தெடுத்த அதிகாரிகளைக் கொண்ட ஆயுதப் படைகளின் தலைமைக் குழுவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருத்திய ஆணையை வெளியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் செயல்களில்  எகிப்திய இராணுவம் ஈடுபட்டது. அதே நேரத்தில் புதிய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஆறு மாத காலத்திற்குள் நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அளித்துள்ளது

சர்வாதிகாரத்தின் மிக இழிந்த சில கூறுபாடுகளை கலைத்தபின்-அரசியலமைப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்தல், கடந்த இலையுதிர்காலத்தில் தில்லுமுல்லு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை கலைத்தல் போன்றவை-இராணுக்குழு அரசியல் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு 31 ஆண்டுகளாக அடித்தளமாகவுள்ள அவசரகால அதிகாரத்தைத் தக்க வைத்துள்ளது. இரவில் 10 மணி நேரம் என்பதற்கு பதிலாக மணி நேரமாகக் குறைத்து ஊரடங்கு உத்தரவையும் அது தக்க வைத்துள்ளது.

தலைநகரத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதில் முதல் கட்டமாக இராணுவம் கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முயற்சியையும் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மீண்டும் பல ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை தெருவிற்கு கொண்டுவந்துள்ளது.

அறிக்கை எண் 5” என்று பெயரிடப்பட்டுள்ள ஆணை, இரண்டு வாரங்களுக்கு முன் தேர்தல் வரை இருக்கும் எனக்கூறப்பட்ட முபாரக்கினால் நியமிக்கப்பட்ட மந்திரிசபையையும் உறுதிப்படுத்தியது. ஜனவரி மாதம் முபாரக்கினால் பிரதம மந்திரி என்று கூறப்பட்ட விமானப்படைத் தளபதி அஹ்மத் ஷபிக் பதவியில் தொடர்ந்து இருப்பார். அவர், செய்தியாளர் கூட்டத்தில்வடிவமைப்பு, வழிவகை அல்லது செயல்முறையில் எந்த மாற்றமும் இல்லை. விடயங்கள் முற்றிலும் உறுதியாக உள்ளன என்றார்.

ஆயுதப்படைகளின் தலைமைக்குழு இடைக்காலத்தில் சட்டங்களை வெளியிட்டு அரசியலமைப்பை திருத்தும் அதிகாரமுடைய குழுவை நியமித்து, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மீது பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான விதிகளையும் நிர்ணயிக்கும்.

விக்கிலீக்ஸ் தகவல் ஆவணங்கள் மூலம்முபாரக்கின் நாய்க்குட்டி என்று நன்கு அறியப்பட்ட இராணுவக்குழுவின் தலைவரான பீல்ட் மார்ஸல் மஹ்மத் ஹுசைன் தன்தாவி, அரசின் நடைமுறைத் தலைவர் ஆகியுள்ளதுடன், வெளிநாடுகளுடனான உறவுகளில் எகிப்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்க உறுதி கொண்டிருப்பதை சனிக்கிழமை தெளிவாக்கிய இராணுவம் தான் எகிப்தின் அனைத்து சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களை மதிக்கும், முபாரக் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளது.

காசாவில் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்கள் முபாரக் வீழ்ச்சி அடைந்த செய்தியை மகிழ்ந்து வரவேற்றனர். அவர் தான் காசாவில் இருந்து எகிப்துக்கு செல்லும் எல்லையை மூடிவைத்த வகையில் இஸ்ரேலானது மக்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு உதவி புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார். கெய்ரோவிலுள்ள இராணுவக்குழு பாலஸ்தீனத்தின் இடர்பாடுகள் தொடரும் வகையில்தான் செயல்பட இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த வார இறுதியில் தஹ்ரிர் சதுக்கத்தில் முழுமையாக குவிந்திருந்த பெரும் கூட்டம் கலைக்கப்பட்டுவிட்டது என்றாலும், பல நூறு எதிர்ப்பாளர்கள் அங்கு இன்னும் முகாமிட்டுள்ளனர். ஞாயிறு காலையில் இராணுவத்தினர், தடிகளைக் கொண்டு அவர்களை அகற்ற முற்பட்டு, கூடாரங்களை கீழே இழுத்தனர். ஆனால் தகவல்களின்படி நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேற மறுத்து, புரட்சியில் காவலாக இராணுவம் நடக்கும் என்ற விருப்பங்கள் பற்றி சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

நாளின் பிற்பகுதியில் கூட்டம் மீண்டும் பெருகியது. எதிப்பாளர்கள் ஒலிபெருக்கிகள், கைத்தொலைபேசிகள், சமூகச் செய்தி ஊடகங்கள் மூலம் இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குகிறது என்று அறிவித்தபின் இது நடந்தது. செய்தி ஊடகத் தகவல்களின்படி பல ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் தஹ்ரிர் சதுக்கத்திற்கு இச்செய்தியைக் கேட்டபின் வந்துவிட்டனர்.

இராணுவத்தினர் எங்களை போக வேண்டும் என்றனர். எங்கள் முகாம்களை கலைத்தனர், ஆனால் நாங்கள் தொடர்ந்து தங்குவோம். மற்றொரு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். ஒரு பொதுமக்கள்  ஆட்சி வேண்டும். இவர்கள் நம் புரட்சியைத் திருட முற்படுகின்றனர் என்று கார்டியனிடம் 54 வயது கட்டிட ஒப்பந்தக்காரர் அடெல் எல்-கெண்டி  கூறினார்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. குறைந்தபட்சம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள்இராணுவ வளாகத்திற்கு, எகிப்திய அருங்காட்சி அரங்கிற்கு அருகே அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முன்பு காவலில் இருந்தவர்கள் அடித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது.

நாங்கள் செல்ல விரும்பவில்லை என்று மஹ்மத் ஷாஹீன் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் கூறினார். “அவர்கள் ஒருபோதும் அவசரகாலச்சட்டத்தை கைவிடமாட்டார்கள். மக்களை மீண்டும் சிறையில் அடைக்க அதைப் பயன்படுத்துவர் என்று அவர் எச்சரித்தார்.

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரறான 36 வயது கணினிப் பொறியாளர் Ahmed Abed Ghafur வாஷிங்டன் போஸ்ட்டிடம், “இது ஒரு புரட்சி, அரைகுறைப் புரட்சி அல்ல. நமக்கு தேர்தல் பற்றிய கால அட்டவணை தேவை. ஒரு இடைக்கால அரசாங்கம் தேவை. புதிய அரசியலமைப்பு பற்றி ஒரு குழு தேவை. இவை அனைத்தும் கிடைத்த பின் நாங்கள் சதுக்கத்தை விட்டு நகர்வோம் என்றார்.

உள்துறை அமைச்சரகத்தின் முன்பாக பல ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் ஊதிய உயர்வு, பணிநிலையில் முன்னேற்றங்கள் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்ற நிலையில் அழுத்தங்கள் பெருகின. பொலிசார் அவர்கள் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்காக பரந்த முறையில் வெறுக்கப்படுவதால் ஆர்ப்பாட்டக்காரர்களால் விரைவில் எதிர்கொள்ளப்பட்டனர்.

இராணுவத்தின் ஆதரவை போலிஸ் நாடி, “பொலிசும், இராணுவமும் ஒன்றுதான் என்று கூவினர். வானில் சுட்ட இராணுவத்தினர், கூட்டம் கலைவதற்காக புகைக் குண்டைப் போட்டனர். ஆனால் இவை பலனளிக்கவில்லை. இறுதியில் பொலிசார் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

முபாரக் வெளியேறியது, இராணுவம் ஆட்சியை எடுத்துக் கொண்டது இவற்றை எதிர்கொண்ட முறையில் தீவிர வேறுபாடு உள்ளது. முதலாளித்துவ கட்சிகளும் வருங்காலத் தலைவர்களும் பொதுவாக வெற்றி என்று அறிவித்து மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் ஆட்சிமாற்றம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரினர். தொழிலாள வர்க்கத்தினரும் இளைஞர்களும் நீண்ட கால சர்வாதிகாரி அகற்றப்பட்டதை தங்கள் கோரிக்கைகளான வேலைகள், ஊதிய உயர்வுகள், சிறந்த பணி நிலைமைகள், ஊழல் மிகுந்த வெறுக்கப்படும் அதிகாரிகள் அகற்றப்படுதல், இன்னும் கூடுதலான ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்துவதற்கான ஒரு அடையாளம் எனக் கருதினர்.

நாட்டின் முக்கிய இஸ்லாமியவாத இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆரம்பத்தில் முபாரக் எதிர்ப்பு எழுச்சிக்கு எதிராக இருந்தது, பின்னர் இராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டதை வரவேற்றுள்ளது. இராணுவம் மக்களின்நம்பிக்கையை அதன் நடவடிக்கைக்காகப் பெற்றுள்ளதாகப் பாராட்டியது.

பல தசாப்த இடைவெளிக்குப் பின்னர் எகிப்திற்குத் திரும்பியுள்ள  சர்வதேச அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவரான மஹ்மத் எல்பரடெய் எதிர்ப்பாளர்கள் இராணுவத்தின் உத்தரவுகளைப் பின்பற்றிவீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவருடைய கருத்து தாராளவாத அல்காட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் அய்மன் நௌரால் எதிரொலிக்கப்பட்டது. இராணுவத்தின் நடவடிக்கைகள் “புரட்சிக்கு ஒரு வெற்றி” என்று கூறிய நௌர், “இது எதிர்ப்பாளர்களுக்கு திருப்தி அளிக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

எதிர்ப்புக்களில் தீவிரமாக இருந்த இளைஞர் குழுக்களின் பிரதிநிதிகள் சிலர் செய்தி ஊடகத்திடம், தாங்கள் அறிக்கை எண் 5 ஐ இராணுவம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை திருப்தி செய்யும் நோக்கத்தைக் கொண்டதின் அடையாளத்தை பெற்றுள்ளது என்று வரவேற்றனர். அவற்றுள் புதிய தேர்தல்கள் நடத்தப்படுவதும் அடங்கும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, அவசரகாலச் சட்டமும் அகற்றப்பட வேண்டும் என்றாலும், இராணுவத்தின் நோக்கங்கள் பற்றிய நப்பாசைகளைத்தான் அவர்கள் கொண்டுள்ளனர்.

ஆனால் செய்தி ஊடகத்தின் அறிக்கைகளின்படி, ஏப்ரல் 6 இயக்கம் மற்றும் மாற்றத்திற்கான மக்கள் ஜனநாயக இயக்கத்துடன் தொடர்புடைய மற்ற இளைஞர்கள் தஹ்ரிர் சதுக்கத்தைவிட்டு நீங்க மறுத்தனர்.

முபாரக்கை வீழ்த்த வேண்டும் என்று தொடங்கிய மக்கள் இயக்கம் தொடர்ந்து பரவுகிறது, பல புதிய வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் வார இறுதியிலும் நடந்தன.

எகிப்தின் தேசிய வங்கி ஊழியர்கள் ஞாயிறன்று எதிர்ப்புக்களை நடத்தி அதிக ஊதியங்களை கோரியதுடன் ஊழல், தமக்கு வேண்டியவர்களுக்கு எல்லா நலன்களையும் கொடுத்தல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்றும் ஆர்ப்பரித்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் கெய்ரோவின் வங்கிக் கட்டிடங்களுக்கு வெளியே கூடினர். உள்ளே இருக்கும் ஊழியர்கள் வெளியே இருப்பவர்களுடன் சேரக்கூடாது என்ற நோக்கத்தில் வாயில்கள் மூடப்பட்டன. நாள்முழுவதும் கூட்டம் அதிகரித்தது. இதையொட்டி திங்கள், செவ்வாய் ஆகியவை தேசிய வங்கி விடுமுறை நாட்கள் என அரசாங்கம் அறிவிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இராணுவப் படையினரை வங்கி ஊழியர்கள் எதிர்கொண்டனர். கெய்ரோவில் வங்கிகளைச் சுற்றிலும் இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டனர்.

வெளியேறு!, வெளியேறு!, வெளியேறு!” என்று கோஷமிட்டு வங்கித் தலைவர் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூவினர். அதன்பின் அன்று வங்கித் தலைவர் தரேக் அமெர் ஞாயிறன்று தான் தன்னுடைய இராஜிநாமாவை அளித்துவிட்டதாகவும், அது ஏற்கப்பட்டதா என இன்னும் தெரியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பி வைத்தார்.

வேலைநிறுத்தம் அலெக்சாந்திரியா வங்கி மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களுக்கும் படர்ந்தன. தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து அதிக தொலைவில் இல்லாத காப்பீட்டு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்த கூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் ராய்ட்டர்ஸ் பேசியது:

நான் இந்நிறுவனத்தில் ஐந்து ஆண்டு காலமாகப் பணி புரிகிறேன் என்று செய்தி ஊடகத்திடம் ஹலா பவ்ஜி கூறினார். “இறுதியில் நாங்கள் வெளியே வந்து பேச ஊக்கம் பெற்றுள்ளோம்.” 2 குழந்தைகளுக்குத் தாயாரான 34 வயதுப் பெண்மணிக்கு மாதம் 100 எகிப்திய பவுண்டுகள் ஊதியம் ஆகும்.  இது ஒரு பொதுப் பள்ளி ஆசிரியர் ஊதியத்தில் கால் பகுதி ஆகும்.

சினாய் தீபகற்பத்தில் 700 தொழிலாளர்கள், அப்பகுதியிலுள்ள சர்வதேச அமைதிப்படைக்குப் பணிகள் அளிக்கும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரு உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். ஷரம் எல் ஷேக் மற்றும் எல் கோராவின் தலைமையகத்திற்கு வெளியே கூடிய ஊழியர்கள் ஊதிய உயர்வைக் கோரினர். அரிஷ் என்னும் சினாய் சிறுநகரில் மருத்துவமனைகள் மற்றும் சுரங்கங்களிலுள்ள 300 தொழிலாளர்கள் நிரந்தர வேலை மற்றும் மருத்துவக் காப்பீடு கோரி வேலைநிறுத்தம் செய்தனர்.

ஞாயிறு வரை, ரயில் தொழிலாளர்கள் மற்றும் எஃகுத் தொழில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன.

நாட்டின் மிகப் பெரிய ஜவுளி ஆலையான மஹல்லாவில் மிசர் நூற்பு, நெசவு ஆலையிலுள்ள தொழிலாளர்கள் வார இறுதியில் வேலைநிறுத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனால் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளைத் தொடர இருப்பதாகக் குறிப்புக் காட்டினர். “நாங்கள் வேலைநிறுத்தத்தை இப்பொழுது நிறுத்துகிறோம், ஆனால் குறைந்தபட்ச ஊதியக் கோரிக்கையை எழுப்புவோம் என்று வேலைநிறுத்த ஏற்பாடு செய்த பைசல் நௌஷா AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கை என்னும் முறையில், ஒரு இராணுவ அதிகாரி ராய்ட்டர்ஸிடம் இந்த வார இறுதியில் ஆயுதப்படைகளின் தலைமைக்குழுதொழிற்சங்கங்கள், தொழில் இணையங்களின் கூட்டங்களுக்குத் தடைவிதித்து அதையொட்டி வேலைநிறுத்தங்களை தடுக்க விருப்பம் கொண்டுள்ளது என்றார். “குழப்பம், ஒழுங்கீனம் ஆகியவை மீண்டும் திரும்புவதை இராணுவம் பொறுத்துக் கொள்ளாது என்றார் அவர்.

அதிகாரத்திற்கு வந்த பின், இராணுவம் மக்கள் எதிர்ப்புக்களைக் கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. எகிப்தின் ஆளும் வர்க்கத்துடனும் வணிக உயரடுக்குடனும் ஆழ்ந்து ஒருங்கிணைந்துள்ள இராணுவம் ஊதிய உயர்வுகள், முன்னேற்றமான வாழ்க்கத் தரங்கள் மற்றும் பரந்த வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் என்னும் மக்கள் கோரிக்கைகளுக்கு விரோதப் போக்கைத்தான் காட்டுகிறது.

பொதுத்துறையில் ஊதிய உயர்வை அரசாங்கம் நிராகரிக்கும் என்பதைத் தெளிவாக்கிய பிரதம மந்திரி ஷபிக் எகிப்திய தொலைக்காட்சியில் இந்த வாரம் கூறினார்: “நாம் நடைமுறைத் தெளிவுடன் இருக்க வேண்டும். அரசாங்க ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பது என்பது மிகவும் கடினம். இயன்றது அனைத்தையும் அரசாங்கம் செய்யும்.” ஆனால் இது படிப்படியாகத்தான் நடக்கும், “பெரும் உறுதி மொழிகள் கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதில் தோல்வியடையக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.