சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Israeli workers and the Egyptian revolution

இஸ்ரேலிய தொழிலாளர்களும், எகிப்திய புரட்சியும்

Chris Marsden
17 February 2011

Use this version to print | Send feedback

எகிப்திய புரட்சி மத்தியகிழக்கு முழுவதிலும் அதிர்ச்சி அலையைப் பரப்பிவிட்டுள்ளது. ஒவ்வொரு அரபு அரசின் தலைநகரங்களிலும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும், ஊழலில் ஊறிக்கிடக்கும் அரசாங்கங்களும், கெய்ரோவிலிருந்து பொங்கிவரும் மக்கள் கிளர்ச்சியைப் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்று விவாதித்து வருகின்றன. எகிப்திய மக்களின் இந்த பாரிய பேரெழுச்சி, இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தில் ஏற்படுத்திய சிக்கல்களையும்விட, வேறெங்கும் அந்தளவிற்கு கூர்மையாக ஏற்படுத்தி இருக்க முடியாது.

பின்யமின் நெடன்யாஹின் இஸ்ரேலிய அரசாங்கம், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் முதன்மை தளபதி மற்றும் மொசாட் உளவுத்துறை அனைத்துமே ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு அவர்களின் வெறுப்பைத் தெளிவுபடுத்தினர். இணையத்தை முடக்க தேவையான நடைமுறை உதவிகள் மற்றும் செனாயில் எகிப்திய துருப்புகளை நிறுவ ஒப்பு கொண்டமை உட்பட இஸ்லாமிய தீவிரவாத அபாயத்தை எடுத்துக்காட்டி, அந்த ஆட்சிக்கு அவர்கள் அளித்த ஆதரவை நியாயப்படுத்த, அப்பிராந்திய ஸ்திரப்பாட்டிற்கு உத்திரவாதம் அளிக்கும் ஒருவராக முபாரக் இருந்ததாக அவர்கள் புகழ்ந்தனர்.

முபாரக்கின் வீழ்ச்சி, அவர்களைக் பொறுத்த வரையில், மூடிமறைக்க முடியாத ஒரு துக்க சம்பவமாகும். கெய்ரோவிற்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ஜிவி மஜெல், Ynetக்கு கூறியது, “இஸ்ரேல் தற்போது ஒரு கொந்தளிப்பான நிலைமையை முகங்கொடுத்து வருகிறது. அப்பிராந்தியத்தில் இப்போது ஒரு தொடர்ச்சியான எழுச்சிகளை நம்மால் காண முடிகிறது. முபாரக்கின் வீழ்ச்சி, யேமனிலிருந்து அல்ஜிரியா வரையில், எல்லா இடங்களிலும் புரட்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.”

தேர்தலை நோக்கி "அவசரஅவசரமாக எந்த நடவடிக்கைகளையும்" எடுக்க வேண்டாம் என்று கூறி, பீல்ட் மார்ஷல் முஹம்மது சய்யத் தன்தாவி தலைமையிலான இராணு ஆட்சிக்கு இஸ்ரேலிய அரசு ஆதரவளித்து வருகிறது. இதற்கிடையில், சாத்தியமானால் எகிப்தையும் சேர்த்தே, அது யுத்தத்திற்குத் தயாராகி வருகிறது.

ஓய்வுபெறும் IDF முதன்மை இராணுவ தளபதி கபி அஷ்கெனாஜி இத்தகைய விவாதங்களின் இயல்புகளை மிக ஆழமாக எடுத்துக்காட்டி இருந்தார். திங்களன்று ஜெருசலேமில் முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கெடுத்து பேசுகையில் அவர் தெரிவித்தது, “கடந்த மூன்று தசாப்தங்களில் வெளிக்காட்டப்பட்ட எல்லா விமர்சனங்களோடு முபாரக், அப்பிராந்தியத்தின் நங்கூரமாக இருந்தார். நாம் இதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.” இஸ்ரேலுடனான 1979 அமைதி உடன்படிக்கையை புதிய ஆட்சி இரத்து செய்ய வேண்டுமா, “நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்; அத்தகையவொரு சூழ்நிலைக்குத் தகுந்த திட்டங்களையும் நாம் தயாராக கொண்டிருக்க வேண்டும்,” அவர் கூறினார்.

IDF தலைமையை லெப்டினண்ட் ஜெனரல் பென்னி கான்ட்ஜிடம் ஒப்படைக்கும் ஒரு விழாவில் பேசுகையில், அஷ்கெனாஜி அவருடைய இடத்திற்கு வரும் அந்த அதிகாரியிடம் கூறியது இது: “நான் காசா பகுதியிலுள்ள இலக்குகளின் பட்டியலைக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

காசாவை மட்டுமே குறிவைப்பது IDFஇன் நோக்கமல்ல. பல மோதல்களில் ஒரேநேரத்தில் வெவ்வேறு விதமான யுத்தக்களங்களில் போராடுவதற்கு IDF தயாராக இருக்க வேண்டுமென்று அஷ்கெனாஜி வெளிப்படையாகவே வலியுறுத்தினார். “அது மிகப்பெரிய சவாலை முன்னிறுத்துகிறது; அதிலிருந்து நாம் வேறுபல யுத்த வடிவங்களைப் பெற முடியும்,” என்றார்.

அரேபியர்களுக்கும், யூதர்களுக்கும் ஒரேமாதிரியான நாசகரமான விளைவுகளைத் தரும் ஒரு யுத்தத்திற்கு தயாரிப்பு செய்து வரும் நிலையில், எகிப்திய இராணுவ ஒடுக்குமுறையாளர்களோடு சேர்ந்து வேலை செய்வது தான், தங்களின் கட்டுக்களை அறுத்தெறியவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடிவரும் எகிப்திய மக்களுக்கு இஸ்ரேல் காட்டும் விடையிறுப்பாக உள்ளது.

இது, மத அடிப்படையில் தனிமைப்படுத்தல் மற்றும் பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக துரத்துவது மற்றும் ஒடுக்குவது ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் அரசை உருவாக்கும் சியோனிச திட்டத்தின் ஒரு நாசகரமான குற்றப்பத்திரிக்கையாக உள்ளது.

1979 கேம்ப் டேவிட் உடன்படிக்கைகள் எகிப்திய ஆட்சியுடனும், அதைத்தொடர்ந்து இதர அரேபிய அரசுகளுடனும் இஸ்ரேலின் உறவுகளைச் சமரசப்படுத்தியது. ஆனால் அது அமைதியைக் கொண்டு வந்துவிடவில்லை. மாறாக இஸ்ரேலிய ஆட்சி, ஊழலில் ஊறிக்கிடந்த மற்றும் பெரும் கொடுமைமிக்க முபாரக் ஆட்சியுடன் சேர்ந்து எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை ஒடுக்க வேலை செய்தது. பாலஸ்தீனர்கள்மீது காட்டிமிராண்டித்தனத்தை காட்டியும், காசா மற்றும் லெபனான்மீது தொடர்ச்சியாக யுத்தங்களைத் திணித்தும் ஜெரூசலேம் மற்றும் மேற்கு கரையில், அதன் பிடியை விரிவாக்க கருதிய அதன் இராணுவ விருப்பங்களைத் தொடர அது டெல் அவிவ்வை அனுமதித்துவிடவில்லை. ஆனால் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பைக் குழப்பிவிட அது உதவியது.

இஸ்ரேலிய மேற்தட்டைப் பொறுத்தவரையில், அரேபிய மக்களுக்குள் வெறுப்பையும், அச்சத்தையும் விதைப்பதென்பது பிரித்து-ஆளும் ஒரு கொள்கையாக அதாவது தொழிலாள வர்க்கதிலிருந்து வரும் ஓர் அரசியல் சவாலை முன்கூட்டியே தடுக்கும் ஓர் முக்கிய அரசியல் கருவியாக உள்ளது. தொழிலாளர்களுக்கும், அவர்களை சுரண்டுபவர்களுக்கும் இடையில் விரிந்துவரும் நிஜமான மோதலை மூடிமறைக்க, தேசிய ஒற்றுமையின் ஒரு பிம்பத்தை உருவாக்குவதும், ஒரு முடங்கிய மனநிலையை ஏற்படுத்துவதும் அவசியமாக உள்ளது.

நிஜத்தில், எகிப்தில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்ட அதே வர்க்க பகைமைகள், இஸ்ரேலிலும் உள்ளன. அவை பாலஸ்தீனியர்கள் மற்றும் அரேபிய இஸ்லாமியர்களிடம் மட்டுமின்றி, யூத தொழிலாளர்களிடமும் கூட நிலவுகின்றன. அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமையால் பாத்திரப்படுத்தப்பட்ட ஒரு சமூக வெடிமருந்து பீப்பாயாக இஸ்ரேல் உள்ளது. அது டெல் அவிவ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் பாதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு டசின் குடும்பங்களால் ஆட்சி செய்யப்படுகிறது.

கூலிகள் குறைந்து வருகின்றன. அங்கே கூர்மையான சமூக கோபம் நிலவுகிறது. தொழிற்சங்க கூட்டமைப்பு Histadrut இதைத் திட்டமிட்டு கட்டுப்பாட்டில் வைத்திருந்த முயன்று வருகிறது. Histadrut தலைவர் நெடன்யாஹ் உடனான ஓர் உடன்படிக்கையை கோரும்போது, Ofer Eini, இஸ்ரேலும் எகிப்தைப் போல மாறிவிடாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினார். இராணுவ வானொலியில் அவர் பேசியது, “நாம் எகிப்தில் இல்லை. தங்களின் முடிவான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத குடிமக்களுக்கு உதவ, நாம் ஒன்றுகூடி ஒரு வழியைக் காண்போம் இந்த நாட்டை இன்னும் சற்று கூடுதலாக சமூகமயமாக்க செய்வோம்.”

ஆளும்வர்க்கத்தால் பரப்பப்பட்டு வரும் தேசியவாத மற்றும் சோவினிசத்தின் ஓர் அரசியல் நிராகரிப்பிற்கு அப்பாற்பட்டு, தாங்கள் முகங்கொடுக்கும் திகைப்பூட்டும் சமூக நிலைமைகளை எதிர்த்து போராடுவதைத் தவிர, இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை. இதில் Histadrut போன்ற முகமைகளும் உள்ளடங்கும்.

மத்தியகிழக்கு அபிவிருத்தியின் எதிர்கால போக்கை நிர்ணயிக்கும் பொறுப்பு இப்போது தொழிலாள வர்க்கத்திடம் தங்கியுள்ளது. எகிப்திய உழைக்கும் மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு இஸ்ரேலிற்குள் பெரும் அனுதாபம் உள்ளது. ஆனால் எகிப்திலும் அப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் எழுந்துவரும் புரட்சிகர போராட்டங்களை தங்களின் உடைமையாக ஏற்றுக் கொண்டு, அரேபிய-யூத ஒற்றுமையை அவர்களின் மூலோபாய நிலைநோக்காக ஸ்தாபித்துக் கொண்டும், தொழிலாளர்கள் இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டும்.

இத்தகைய ஒற்றுமையை எட்டுவதென்பது, நடைமுறையிலுள்ள எகிப்து இராணுவ ஜண்டாவின் ஒத்துழைப்பு உட்பட, அப்பிராந்திய ஏதேச்சதிகாரர்களுடன் உறவுகளை விதைக்க முயலும் உத்தியோகபூர்வ முயற்சிகளுக்கு காட்டப்படும் பரந்த எதிர்ப்பில் தான் தங்கியுள்ளது. இது தங்களின் பொதுவான ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக அதாவது எகிப்திய இராணுவ ஆட்சி மற்றும் டெல் அவிவில் உள்ள அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக அரேபிய தொழிலாள வர்க்கமும், ஏழை விவசாயிகளும் நட்புறவுடன் கைகோர்த்து, ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்துவது என்பதையே குறிக்கிறது.

ஒரு சோசலிச அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்பி போராடுவது தான், தற்போது எழுச்சி பெற்றுவரும் எகிப்திய புரட்சிகர போராட்டத்திற்கு இஸ்ரேலின் தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் காட்டும் அவசியமான அரசியல் பிரதிபலிப்பாக உள்ளது. இத்தகையவொரு இயக்கத்திற்கு ஓர் அரசியல்ரீதியிலான தலைமையை தோற்றுவிப்பதென்பது, மத்தியகிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான மற்றும் சர்வதேச சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில், தேச எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட போராடி வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஓர் இஸ்ரேலிய பிரிவைக் கட்டியெழுப்புவதையே குறிக்கிறது.