சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Egyptian workers step up strike offensive

எகிப்தியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அதிகரிகின்றனர்

By Patrick Martin
17 February 2011

Use this version to print | Send feedback

இராணுவ உயர் கட்டுப்பாட்டகத்தின் முறையீடுகளைப் பல்லாயிரக்கணக்கான எகிப்திய தொழிலாளர்கள் புறக்கணித்து, புதனன்று நாடு முழுவதும் அதிக ஊதியம், நல்ல பணி நிலைமைகள் மற்றும் அகற்றப்பட்ட சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்குடன் தொடர்புடைய ஊழல் அதிகாரிகளை நீக்குதல் ஆகியவற்றை கோரித் தங்கள் வேலைநிறுத்தங்களை விரிவுபடுத்தினர்.

எகிப்தின் மிகப் பெரிய தொழில்துறை மையமான ஜவுளித்துறை உற்பத்தித் தலைநகரான மஹல்லா அல்-குப்ராவில் கிட்டத்தட்ட 12,000 தொழிலாளர்கள் மிசர் நூற்பு மற்றும் நெசவு ஆலையில் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இது ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இராஜிநாமாவையடுத்து மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிக ஊதியங்களுக்கான கோரிக்கைகளைத் தவிர, தொழிலாளர்கள் இரு உயர்மட்ட மேலாளர்கள் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோருவதை வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கூறினார்.

கடலோர நகரான டாமீட்டாவில் 6,000 துணி உற்பத்தித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் கெய்ரோவிற்கு தெற்கேயுள்ள மிசர் ஹெல்வன் நூற்பு மற்றும் நெசவு ஆலையில் ஊதிய அதிகரிப்புக் கோரிக்கைகளுக்காக வெளிநடப்புச் செய்தனர்.

எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்சாந்திரியா, நைல் டெல்டா மாநிலமான காலியுபியா மற்றும் அதிக தொழில்துறையுள்ள சூயஸ் கால்வாய் பகுதியிலும் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் நடப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சூயஸ் கால்வாயின் வடக்கு முடிவுப் பகுதியான சையத் துறைமுகத்தில் ஆயிரம் பேர் உள்ளூர் ஏரி ஒன்றை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் இராசயன ஆலை ஒன்று மூடப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்தியதரக்கடலுக்கும் சூயஸ் வளைகுடாவிற்கும் இடையேயுள்ள இஸ்மைலியாவில் பாசனம், கல்வி, சுகாதார அமைச்சரகங்களின் தொழிலாளர்கள் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஊதிய உயர்வு கோரி எதிர்ப்புக்களை நடத்தினர்.

கெய்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானத்துறைத் தொழிலாளர்கள் வெளிநடப்புச் செய்ததுடன், 11 விமானப் பயணங்கள் இரத்து செய்ய கட்டாயப்படுத்தினர். விமானங்கள் வந்துசேரும் பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அதிக ஊதியங்கள், கூடுதல் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நல்ல போக்குவரத்து மற்றும் பிற நலன்களுக்காக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஊதிய உயர்விற்காக வங்கித்துறை, போக்குவரத்துத்துறை, எண்ணெய் மற்றும் சுற்றுலாத்துறை இன்னும் பரந்த பல அரசாங்கப் பிரிவுகளிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன. ஒரு செயற்பாட்டாளர் செய்தி ஊடகத்திடம், “எத்தனை பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், எங்கு என்று கூறுவதும் கடினம் என்றும் யார்தான் வேலைநிறுத்தம் செய்யவில்லை?” என்றார்.

இராணுவம் நேரடியாகத் தலையிட்ட ஒரு சில நிகழ்வுகள் ஒன்றில், இராணுவச் சிப்பாய்கள் கெய்ரோவிற்கு வெளியே ஒரு ஒட்டுவேலை ஆலையின் தலைமையகத்தில் கெய்ரோ-அலெக்சாந்திரியா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்திப் போக்குவரத்தை 30 நிமிடங்கள் பாதிக்கச் செய்த 200 தொழிலாளர்களைக் கலைத்தனர். அதிக ஊதியம், கூடுதல் பணி நேரத்திற்கு ஊதியம், நிர்வாகம் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர்.

நிர்வாக அதிகாரிகள் ஒவ்வொரு தொழிலாளியும் வேலையை தொடங்குமுன் ஒரு இராஜிநாமாக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தொழிலாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதையொட்டி தொழிலாளர்கள் நிர்வாகம் விரும்பும்போது அவர்களைப் பணிநீக்கம் செய்ய முடியும். தொழிலாளர்கள் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட வேண்டும், அதையொட்டி வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டால் அவர்களுடைய ஊதியங்கள் கழிக்கப்பட முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

கெய்ரோவில் முக்கிய எகிப்திய வங்கிகளுக்கு எதிராக மூலோபாய வகையில் முக்கியமான வேலைநிறுத்தங்களில் ஒன்று நடைபெறுகிறது. இது பல வணிகங்கள் மற்றும் ஆலைகளை மூட வைத்துள்ளது. ஏனெனில் அவற்றின் வாடிக்கையாளர்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்குப் பணம் எடுக்க முடியவில்லை.

வங்கித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முடிக்கப்பட வேண்டும் என்ற முறையீட்டை எகிப்தின் மத்திய வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். “இதுதான் தேசியப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை உத்தரவாதம் செய்யும் என்று கூறுகின்றனர். திங்கள் முதல் வங்கிகள் மூடப்பட்டுள்ளன, குறைந்தபட்சம் அடுத்த பணி வாரம்வரை, பெப்ருவரி 20 ஞாயிறு வரை திறக்கப்படமாட்டா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு நடத்தும் செய்தித்தாள்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொழிலாளர்கள் ஒவ்வொரு வங்கியிலும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, மத்திய வங்கியின் ஆளுனர் முன்னிலையில் மூத்த நிர்வாகத்தினருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தொழிலாளர் தொகுப்பில் ஒரு சிறிய பகுதியினர் வேலைநிறுத்தம் செய்தாலும், பல இடங்களில் ஆலைகள் மூடப்படுகின்றன. இதற்குக் காரணம் அதிக அளவில் தொழிலாளர்கள் வெளிநடப்புச் செய்து கூட்டம் கூடுதலைத் தவிர்ப்பது ஆகும். ஜவுளித்துறை, இரசாயனத் தொழில், சிமென்ட் மற்றும் செரமிக் தொழிற்துறைகள் ஆகியவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

கெய்ரோவில் தேசிய அரசாங்க அமைப்புக்களின் ஊழியர்கள் வேலைநிறுத்த அலையில் சேர்ந்துள்ளனர். அல் மஸ்ரி அல் யோம் செய்தித்தாள் கொடுத்துள்ள ஒரு தகவலின்படி, “25 ஜனவரி எழுச்சியை தொடர்ந்து, பல துறைகளிலுள்ள தொழிலாளர்கள் இதில் அரசிற்குச் சொந்தமான பதிப்பகங்கள் மற்றும் விநியோகத்துறை இயக்குனரகம் (உணவுப் பகிர்வுப் பொருட்கள்) ஆகிவையும் அடங்கும் முதல் தடவையாக தெருக்களுக்கு வந்துவிட்டனர். அவர்கள் கோரிக்கைகள் அடிப்படையில் பொருளாதாரம் என்றாலும், அவற்றில் ஊழல், பாரபட்சத்திற்கு எதிரான முறையீடுகளும் உள்ளன.”

சமூக அநீதிதான் பெரும் பிரச்சினை என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது: “எதிர்ப்பாளர்களிடம் தெளிவான பொருளாதாரப் புகார்கள் இருந்தாலும், அவர்கள் அடிப்படையில் நியாயமற்ற வழிவகை என்று பல அரசாங்க நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு இடையேயுள்ள ஊதியம் குறித்தும் ஒருதலைப்பட்சமாக தொழிலாளர்களை பணி நீக்குவது பற்றியும் வருத்தப்பட்டுக் கூறுகின்றனர்.”

ஆயுதப்படைகளின் அதிஉயர் தலைமைக்குழு, முபாரக் இராஜிநாமாவை ஒட்டி அதிகாரத்தை எடுத்துக் கொண்டது, வேலைநிறுத்த அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி முறையீடுகளை விடுத்துள்ளது. ஆனால் அவற்றிற்குப் பலன் இல்லை. முஹம்மது நபிகளின் பிறந்த நாளையொட்டிய செவ்வாய் தேசிய விடுமுறைக்கு பின்னர் பலரும் வேலைக்குப் பொதுவாகத் திரும்பவில்லை, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் ஆகியவற்றை மீண்டும் திறக்கும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டனர். இவைகள் பெப்ருவரி 20 வரை மூடப்பட்டு இருக்கும்.

திங்களன்று இராணுவம் கவனத்துடன் பயன்படுத்திய வார்த்தை கடந்த காலத்திலிருந்து கூடுதலான சர்வாதிகாரத் தன்மையானது குறிப்பிட்டத்தக்க ஒலிமாற்றத்தைக் கொண்டுள்ளது. இது பல தொழில்துறை நிர்வாகிகளை தூண்டிவிட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. ஒரு முதலாளி, உலோகத் தொழில் குழுவின் பொது மேலாளர் மஹ்மத் சயத் ஹான்பி, “இராணுவம் வலுவான மொழியை மக்களிடம் பயன்படுத்த வேண்டும். அவர்களில் பலருக்குப் பிரச்சினை ஏதும் கிடையாது, ஆனால் தற்போதுள்ள அரசியல் நிலைமை அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த முற்பட்டுள்ளனர் என்றார்.

இத்தகைய திமிர்த்தனம் எகிப்திய தொழிலாளர் வெகுஜனத்தை பல தசாப்தங்களாக மிருகத்தனமான அடக்குமுறையில் வைத்து இலாபம் அடைந்த ஆளும் உயரடுக்கிற்கு இயல்பாகும். அதேபோல் வெளிநாட்டு முதலீடு, முபாரக் சர்வாதிகாரத்திற்கு முக்கிய நிதிய, இராணுவ ஆதரவு அளித்த அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து செல்வக்கொழிப்பு மிக்க நலன்களைப் பெற்ற பிரிவுகளின் இயல்பும் ஆகும்.

பழைய சர்வாதிகாரத்தின் ஊழல்மிகுந்த பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிராக தொழிலாளர்கள் எழுச்சி செய்துள்ளனர். அரசாங்கம் மற்றும் வணிகம் என்று மட்டும் இல்லாமல், அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள எகிப்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பிற்கு எதிராகவும்தான். இந்த வாரம் ETUF தலைமையகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதன் தலைவர் ஹொசைன் மெகவெர், மற்றும் ஆளும் குழு உறுப்பினர்களுடைய இராஜிநாமாவைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும் முபாரக் ஆட்சியின் கைக்கூலிகள் ஆவர்.

எகிப்திலிருந்து வந்துள்ள செய்தித் தகவல்கள் அனைத்தும், நாடு முழுவதும் படர்ந்துள்ள எதிர்ப்பு உணர்வைக் குறிக்கின்றன. “நீண்டகாலத் தலைவர் ஹொஸ்னி முபாரக்கிடம் இருந்து வெள்ளி முதல் அதிகாரத்தை இராணுவம் எடுத்துக் கொண்டதில் இருந்து, எகிப்தியர்கள் அனைத்தைப் பற்றியும் எல்லா இடங்களிலும், அற்ப ஊதியங்களில் இருந்து மிருகத்தன பொலிஸ் நடவடிக்கை, ஊழல் ஆகியவை வரை எதிர்த்துக் குறைகளைக் கூறுகின்றனர் என்று அசோசியேட்டட் பிரஸ் கூறியுள்ளது. “தொழிலாளர்கள் தொடர்ச்சியான புகார்களை தெரிவிக்கின்றனர். அவர்களை ஒன்றுபடுத்துவது முபாரக்கிற்குப் பிந்தைய காலத்தில் கருத்துக்களை வெளியிட முடியும் என்ற உணர்வுதான் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

எகிப்தில் வர்க்க விரோதப் போக்கின் வளர்ச்சி பற்றி அமெரிக்கச்செய்தி இதழ் Time குறிப்பிடுவதாவது: “எதிர்ப்புக் கூட்டணி, முபாரக்கை வீழ்த்தியது, அரசியல் வழிவகைகளில் மட்டும் பிளவுற்றிருக்கவில்லை: சமூக வர்க்கப் பிளவும் உள்ளது. வேலைநிறுத்தங்கள் எகிப்திய பொருளாதாரத்தின் பெரும் பகுதியைத் தொடர்ந்து முடக்குகின்றன. இராணுவத்தின் முறையீடுகள் இருந்தாலும் இந்நிலை தொடர்கிறதுஅதேபோல் இளைஞர்களின் எழுச்சி பேஸ்புக் மூலம் நடந்ததற்கு உருவகமாக உள்ள எதிர்ப்பு நபர்களான கூகிளின் மேலாளர் வேல் கோனிம் போன்றோர் வேலைக்குத் திரும்புமாறு கோரியும் இந்நிலைதான் தொடர்கிறது.”

இதழ் தொடர்கிறது: “பொருளாதாரத் திகைப்பினால் உந்தப்பட்ட பல நூறாயிரக்கணக்கான எகிப்தியர்கள், முபாரக்கை அகற்ற தெருக்களுக்கு வந்தார்கள். வேலைகளைக் கொண்டுள்ள அதிருஷ்டசாலிகள் கூட, பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கமுடியாத பெருகிய ஊதிய முடக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுடைய சூழலும் நலன்களும் மத்தியதர வர்க்க பேஸ்புக் தலைமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.”

ஒரு தீய அடையாளம் என்னும் முறையில், முபாரக் 30 ஆண்டுகளுக்கு முன் சுமத்திய நெருக்கடிக்காலச் சட்டம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கூறிய கருத்தில் இருந்து அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் பின்வாங்கியுள்ளார். “எகிப்தில் இப்பொழுது நடைபெறும் நிகழ்வுகளை ஒட்டி, என்னுடைய அனுமானத்தை மாற்றப்போவதில்லை என்றார் அவர்.

புதிய இராணுவ அரசாங்கம் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மீது சுமத்திய தடுப்புக்களை நீக்க வேண்டுமா என்று அல்ஜசீராவால் கேட்கப்பட்டதற்கு, அவர் விடையிறுத்தார். “நான் கூறவில்லை. அவர்களுக்கு ஆலோசனை கூறுவது நான் அல்ல. இது ஒரு எகிப்திய வழிமுறை, எகிப்திய மக்களால் இயக்கப்பட்டு, வரையறுக்கப்பட வேண்டும்.”

எகிப்திய மக்களின் உணர்வுகளை மதித்தல் என்ற பாசாங்குத்தனம் முற்றிலும் இழிந்த தன்மை உடையது. ஏனெனில் முபாரக் நெருக்கடிக்காலச் சட்டங்களை எகிப்திய மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்க வேண்டும் என்ற குறிப்பான நோக்கம் மற்றும் ஆட்சிக்கு எதிர்ப்பைத் தடுக்க வேண்டும் என்ற கருத்துடன்தான் இயற்றியிருந்தார்.

வாஷிங்டனின் பெருகிய மனத்தளர்ச்சி பற்றிய குறிப்பு கன்சர்வேடிவ் பண்டிதர் Anne Applebaum வாஷிங்டன் போஸ்ட்டில் செவ்வாயன்று எழுதிய கட்டுரையில் காணப்படுகிறது. அவர் எழுதியதாவது: “புரட்சிக்குப் பின் மாற்றத்தில் மெதுவான வேகம்தான் இருப்பதில், ஏமாற்றம் வந்துள்ளது என்பதை புறக்கணித்துவிடக்கூடாது. எனவே வரலாற்றளவில் ஒரு புரட்சி முடிந்த சில மாதங்கள் புரட்சியைவிட ஆபத்துத்தன்மை கொண்டவை. 1917 பெப்ருவரி ரஷ்ய புரட்சி பற்றிய அதிருப்திதான் அக்டோபர் மாதம் போல்ஷிவிக்கினர் சதிக்கு இட்டுச்சென்றது.”

அக்டோபர் புரட்சியை Applebaum “சதி என்று இடித்துரைக்கிறார். ஆனால் அவரின் கருத்து மிகத் தெளிவு: எகிப்தில் நடக்கும் எழுச்சி முபாரக் போன்ற அமெரிக்கக் கைக்கூலிகளின் வீழ்ச்சியை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் முதலாளித்துவ அமைப்பு முறை அகற்றப்படும் அச்சுறுத்தலையே கொண்டுள்ளது.