சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Protests, teacher walkouts mount in Wisconsin

Milwaukee schools closed

விஸ்கான்சனில் எதிர்ப்புக்கள், ஆசிரியர்கள் வெளிநடப்புக்கள் பெருகுகின்றன மில்வாக்கி பள்ளிகள் மூடப்பட்டன

By Tom Eley
19 February 2011

Use this version to print | Send feedback

வரவு செலவுத் திட்டத்தில் வெட்டுக்கள் மற்றும் அரசாங்க தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான விஸ்கான்ஸன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் வெள்ளியன்று தொடர்ந்தன. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேறினர். மாடிசனில் முக்கிய ஆர்ப்பாட்டம் குறைவின்றித் தொடர்ந்தது.

திங்களன்று எதிர்பாராமல் 1,200 விஸ்கான்ஸன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு, பட்ட முன்படிப்பு மாணவர்கள் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள் இன்னும் நூறாயிரக்கணக்கானவர்களை போராட்டத்திற்குள் ஈர்த்துள்ளது. காபிடோல் கட்டிடத்தை சுற்றி வெள்ளியன்று சூழ்ந்த கூட்டம் 13,000 த்தில் இருந்து 20,000 வரை பெருகியது. புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டமானது 20,000த்தில் இருந்து 30,000 வரை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்களிலேயே வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டம்தான் மிகப் பெரியது எனலாம். மில்வாக்கி, எயூ கிளேர், லா கிறோசி, சுபீரியர், ரிவர் பால்ஸ், க்ரீன்பே மற்றும் ஸ்டௌட் ஆகிய இடங்களிலிருந்து விஸ்கான்ஸன் பல்கலைக்கழக வளாகங்களின் 11,000 மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் பஸ்கள் மூலம் மாடிசனுக்கு வந்தடைந்திருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் அரசாங்க ஊழியர்களும் தொடர்ந்து ஏராளமான எண்ணிக்கையில் வரத் தொடங்கினர்.

கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை வீழ்த்திய எதிர்ப்புக்களால் உந்துதல் பெற்று, ஆயிரக்காணக்கான ஆக்கிரமிப்பளார்கள், முக்கியமாக மாணவர்கள், தொடர்ந்து செவ்வாய் முதல் காபிடோல் கட்டிடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்.

மாடிசனின் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் இது மிகவும் அமைதியாக நடக்கிறது. ஆனால் மிக அதிக பொலிஸ் பிரசன்னம் காணப்படுகிறது. ஆனால் இதற்குப் பின் கவர்னர் ஸ்காட் வாக்கர் தேசிய பாதுகாப்புப் படையை நிலைநிறுத்தும் அச்சுறுத்தல் உள்ளது.

வலதுசாரி Tea Party குழுக்கள் சனிக்கிழமையன்று மாடிசன் மாநில காபிடோல் அருகே எதிர்-ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஒரு Tea Party குழு, ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது, ஆதரவாளர்களைநம்முடைய வீட்டில் தாராளவாத தொழிற்சங்க குண்டர்கள் விட்டுச் சென்றுள்ள பன்றிக் கூடம் போன்ற நிலையங்களை தூய்மைப்படுத்துவதற்கு தேவையானதைக் கொண்டுவருமாறு கூறியதாக அறிவித்துள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுக் கட்சியை சேர்ந்த கவர்னரான வாக்கர், அரசாங்கத் தொழிலாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய நிதிகளுக்கு தங்கள் கைகளில் இருந்து இருமடங்கிற்கும் அதிகமாகச் செலவழிக்க வைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தும் சட்டவரைவை இயற்ற முற்பட்டுள்ளார். இது தொழிலாளர்களின் ஊதியங்களை 8 முதல் 20 சதவிகிதம் குறைத்துவிடும் என்று பல மதிப்பீடுகள் கூறுகின்றன. தங்கள் பணி பற்றிய விதிகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் உறுதி செய்யும் உரிமையை தொழிலாளர்கள் இழப்பர். ஊதிய உயர்வுகள் நுகர்வோர் விலை அதிகரிப்பு அல்லது அதற்கும் குறைவாக முடக்கப்பட்டுவிடும். இந்த நடவடிக்கை கவர்னருக்கு நெருக்கடிக்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு புதிய அதிகாரங்களையும் கொடுக்கிறது

சட்டவரைவு இயற்றுவது தாமதப்படுத்தவேண்டும் என்ற முயற்சியில் ஏனெனில் இது நிறைவேற்றப்படுவது சட்டமன்றத்திற்கும் வெகுஜன மக்கள் எதிர்ப்பிற்கும் இடையே வாக்கரின் வெட்டுக்கள் குறித்து வெடிப்புத் தன்மை உடைய மோதலை ஏற்படுத்தக்கூடும் ஜனநாயக மாநில செனட் உறுப்பினர்கள் நேற்று விஸ்கான்ஸனை விட்டு வெளியேறிவிட்டனர். இத்தந்திர உத்தி குடியரசுக் கட்சியினருக்கு சட்ட வரைவு இயற்றப்படுவதற்கு தேவையான குறைந்த பட்ச ஐந்தில் மூன்று பங்கு வாக்கு ஆதரவை அகற்றிவிட்டது.

ஆனால் ஜனநாயகக் கட்சியும் அத்துடன் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களும் வாக்கர் முன்வைக்கும் திட்டத்தைப் போலுள்ள சமூகச் செலவு வெட்டுக்களுக்கு மற்ற மாநிலங்களிலும் வாஷிங்டனிலும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், இச்செயல் வெறும் வெகுஜன திருப்தியைப் பெறுவதற்குத்தான்வாஷிங்டனில் ஜனாதிபதி பாரக் ஒபாமா தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்படவுள்ள 1 டிரில்லியன் டொலருக்கும் மேலான குறைப்புக்களைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து வருகிறார். ஜனநாயகக் கட்சியினரின் தந்திரோபாயம், அரசியல் நிலைமையை உறுதிப்படுத்தி பெருவணிகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் குறைப்புக்களை அனுமதிக்கும் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு அவகாசம் பெறுவதற்கு என்றுதான் உள்ளது.

ஆனால், மாநிலம் முழுவதில் இருந்தும் இன்னும் அதிகமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் வெளிநடப்புக்கள் மற்றும் பள்ளி மூடல்கள் அதிகரிப்பு என்னும் பெருகும் அலையில் சேர்ந்துள்ளனர். இது மிகத் திறைமையுடன் மாநில ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு தங்கள் போராட்டத்தை ஒப்படைக்க மறுப்பதைத்தான் காட்டுகிறது.

வெள்ளியன்று விஸ்கான்ஸன் பள்ளி ஆசிரியர்களின் வெளிநடப்பு இயக்கம் மில்வாக்கி பொதுப் பள்ளிகள் மூடலைக் கட்டாயப்படுத்தியது. இது இம்மாநிலத்தில் இதுகாறும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய மூடல் ஆகும். வெள்ளியன்று பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 600 ஆசிரியர்கள் 600,000 பேர் வசிக்கும் இந்நகரில், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நோய் விடுப்பு எடுத்துக் கொள்வதை அறிவித்தனர்இதையொட்டி நகரத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல் நாள்தான், மேலதிகாரி கிரிகரி தோர்ன்டன் செய்தி ஊடகத்திடம் இயக்கம் மில்வாக்கிக்கு வராமல் தான் தடை செய்வதில், ஆசிரியர்கள் மீதுகட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல் மூலம் வெற்றி அடைந்துவிட்டதாகப் பெருமை பேசிக் கொண்டார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக, மாநிலத்தின் பள்ளி மாவட்டத்தில் இரண்டாவது மிகப் பெரிய பள்ளியான மாடிசன் பொதுப் பள்ளிகள் ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் முற்றிலும் மூடப்பட்டன. மாடிசனில் மற்ற பள்ளி மாவட்டங்கள் 15ம் மூடப்பட்டிருந்தன. 60,000 பேர் வசிக்கும் தொழில்துறை நகரான ஜேன்ஸ்வில்லேயிலும் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நகரம் 2010ல் பல தசாப்தங்கள் செயல்பட்டு வந்த ஜெனரல் மோட்டார்ஸ் இணைப்பு ஆலை மூடலால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது. வெள்ளியன்று ஆசிரியர்கள் வராததால் பள்ளி முறையிலுள்ள டஜன் கணக்கான மற்ற பள்ளிகளும் மூடப்பட்டன.

இன்றுவரை ஒரு வேலைநிறுத்த அலை என்று கூறக்கூடிய நிலைமையை ஒட்டி மூடப்பட்டுள்ள பள்ளிகள் எண்ணிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் இவை நூற்றுக்கணக்கில் இருக்கும். மில்வாக்கியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர், குறைந்தபட்சம் இது 200,000 மாணவர்களையாவது பாதித்திருக்கும்.

அதே நேரத்தில் நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களைப் பாதிக்கும் மாணவர் வெளிநடப்புக்கள் இயக்கம் மாநிலம் முழுவதும் தொடர்கிறது. டசின் கணக்கான பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு கொண்டுள்ளனர். எப்படிப் பார்த்தாலும், வெளிநடப்பு இயக்கம் மாணவர்களால்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, பேஸ்புக் மற்றும் பிற சமூகத் தகவல் தொடர்பு ஊடகம் மற்றும் வாய்மொழிப் பரவுதல் மூலம் என்று தெரிய வருகிறது.

பட்டப்படிப்பு, அதற்கு முன்படிப்பு ஆகியவற்றில் விஸ்கான்சன் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பங்கை கொண்டுள்ளனர். பட்டதாரி மாணவர்கள், ஆசிரியர்களாவும் ஆய்வு உதவியாளர்களாகவும் உழைப்பவர்கள், வாக்கரின் திட்டத்தை ஒட்டி தங்கள் கல்விக் கட்டணம் அகற்றப்படல், பல நலன்கள் வெட்டப்படுதல் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். பட்டப்படிப்பு படிப்பவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் ஏற்கனவே பெரிதும் உயர்ந்துவிட்ட கட்டணப் பயிற்சிச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவை வாக்கரின் ஜனநாயகக் கட்சியின் முந்தைய கவர்னர் ஜிம் டோய்லினால் தொடக்கப்பட்டன. அவை அடுத்த ஆண்டு முதல் ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்று உயரக்கூடும்.

விஸ்கான்சனில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இயக்கத்தினுடைய பரப்பு மற்றும் தீவிரம் தேசிய செய்தி ஊடகம் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர்கள் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் விரைவாக விஸ்கான்சனுக்கு அப்பாலும் பரவக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

இதற்கான அடையாளங்கள் ஏற்கனவே காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான அரசாங்கத் தொழிலாளர்கள் சமீப நாட்களில் ஒகையோ கொலம்பஸில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதுவும் இதேபோன்ற பிற்போக்குத்தன சட்டம் கவர்னர் ஜோன் காசிஷ் கொண்டுவந்ததற்கு எதிராக.

இந்தியானாவில் 600 எஃகுத் தொழிலாளர்கள் இந்தியானோபொலிஸ் காபிடோல் கட்டிடத்திற்கு அருகேவேலை செய்யும் உரிமை சட்டங்கள் என்று அழைக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மையில், இச்சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மேலும் பறிக்கின்றன.

நேற்று டெட்ரோயிட்டில் தென்மேற்கு உயர்நிலைப்பள்ளியிலிருந்து 100க்கும் மேலான மாணவர்கள் கவின் கலைக்கான நிதியத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வெட்டுக்களுக்கு எதிராக வெளிநடப்புச் செய்தனர்.