சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Private providers skim millions from UK health budget

தனியார்துறை வழங்குனர்கள் இங்கிலாந்து சுகாதார வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மில்லியன் கணக்கான பவுண்டுகளை சுரண்டுகின்றனர்

By Robert Stevens
21 February 2011

Use this version to print | Send feedback

டிசம்பர் 2002ல் பிரதம மந்திரி டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம்பெருகும் திறன், சுயாதீன துறை நோய்கள் கண்டுபிடிப்பு, சிகிச்சை மையங்கள் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு, தேசிய சுகாதாரப் பணிகள் தனியார் துறையிலிருந்து கூடுதலான திறனைப் பெற வேண்டும் என்று வாதிட்டது.

2003ல் அரசாங்கம் சுகாதாரப் பெருநிறுவனங்களை சுயாதீனத் துறை சிகிச்சை மையங்களை (ISTC) நடத்துவதற்கு அழைத்தது. அதிக சுமையுடைய தேசிய சுகாதார அமைப்பான NHS ன் அழுத்தத்தை இது குறைக்கும் என்று போலிக் காரணம் கூறப்பட்டது. இதையொட்டி காத்திருப்போர் பட்டியல் குறைக்கப்படும், விருப்புரிமைகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ISTC க்கள் £5 பில்லியன் பவுண்டுகள் மொத்த செலவில் அறிமுகப்படுத்தப்பட்டதானது NHS ஐ தனியார்மயமாக்கும் முயற்சியில் கணிசமான நடவடிக்கை ஆகும்.

கிட்டத்தட்ட 23 ISTC க்கள்முதல் கட்டத்தில்” NHS க்கு  £1.7 செலவில் நிறுவப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை வரம்பு பற்றிய திட்டம்இரண்டாம் கட்டம் மார்ச் 2005ல் £2.75 குறிப்பிட்ட சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டும் £1 பில்லியன் நோய் கண்டறியப்படுவதற்கும் பயன்படுத்தப்பட்டாலும், நிர்ணயிக்கப்படவில்லை.

பொதுப் பணத்தில் பில்லியன் கணக்கான பவுண்டுகள் தற்பொழுது செயல்படும் 10 ISTC வழங்குனர்களின் கரங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்த எண்ணிக்கையில் செய்யப்படாத அறுவை சிக்கைச்சைக்காகக் கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன்களும் அடங்கும்.

டெய்லி டெலிகிராப் சமீபத்தில் சுதந்திரத் தகவல் கோரிக்கை மூலம் பெற்ற அறிக்கை செஸ்டர்பீல்டிற்கு அருகே பார்ல்பாரோவிலுள்ள ISTC ஒன்று ஏப்ரல் 2010ல் முடிந்த ஐந்து ஆண்டு காலத்தில் £98.3 மில்லியனை பெற்றது. ஆனால் அறுவை சிகிச்சைகள் £84.6 மதிப்பிற்குத்தான் செய்யப்பட்டது. இதையொட்டி £13.7 குறைவு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு ISTC, டார்பிஷயர், எக்கிள்ஸ்ஹில்லில் இருப்பதற்கு £45.1 மில்லியன் கொடுக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை மதிப்பு £37.8 தான் மேற்கோள்ளப்பட்டது. இதையொட்டி £7.3 மில்லியன் குறைவு ஏற்பட்டது.

இந்த மையங்கள் அவை பெற்ற பணத்திற்கு 85 சதவிகிதம் தான் பணிபுரிந்தன. இதே சதவிகிதம்தான் சுகாதாரத் துறையினாலும் செப்டம்பர் 2008 வரையிலான காலத்திற்கு நாடெங்கிலும் ISTC க்கள் செய்துள்ள பணி பற்றியதற்கும் மேற்கோளிடப்பட்டுள்ளது. பார்ல்பாரோ, டார்பிஷயர் மற்றும் எக்கிள்ஸ்ஹில் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் ஆராயப்படும்போது, ISTC க்கள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 50 மில்லியன் பவுண்டுகள் பெறுகின்றன, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யாத பணிக்கு 200 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாகப் பெற்றுள்ளன.

NHS ஐவிட, தனியார்துறையில் இருந்து மலிவாக, “மொத்தமான பணிகளைப் பெறுதல்”, ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் அடிப்படையிலும் என்னும் கூற்று, இதையொட்டி மதிப்பற்றதாகிவிடுகிறது. இது தனியார் துறைக்குப் பெரும் நிதிப் பரிசு ஆகும். இதையொட்டி சிகிச்சைகள் அதிக செலவுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. வெற்றிகரமாக ஏலம் எடுப்பவர்கள் முதலில் ஐந்து ஆண்டு காலத்திற்கு உறுதியான ஒப்பந்தங்களைக் குறைந்தபட்சக் கட்டணம் அளிக்கும் உத்தரவாதத்துடன் பெருகுகின்றன. ஒவ்வொரு வழிவகைக்கும் அவை 11 சதவிகிதம் தேசிய NHS கட்டண முறையைவிடக் கூடுதலாகப் பெறுகின்றன.

ISTC க்கள் விரிவாக்கப்பட்டுள்ளது, NHS மருத்துவமனைகள் அளிக்கும் பணிகளையும் அச்சுறுத்தியுள்ளது. ISTC ஒப்பந்த விதிகளின்படி, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் NHS பணிகள் இன்னமும் குறைக்கப்படும், இறுதியில் இவை அனைத்தும் தனியார் சிகிச்சை மையங்களால் மேற்கொள்ளப்படும்.

இதைத்தவிர, ISTC க்கள் வாடிக்கையான அறுவை சிகிச்சைகளைச் செய்யும் திறனையும் ஒன்றும் கணிசமாக விரிவாக்கிவிடவில்லை. ISTC க்கள் பற்றிய ஒரு பாராளுமன்ற அறிக்கை 2006ல் கூறியது: “ISTC க்கள் திறனை அதிகரிப்பதற்கான முக்கிய நேரடி அளிப்பு எதையும் செய்துவிடவில்லை என்று சுகாதாரத்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. ISTC அளிக்கும் திறன் முதல்கட்ட ISTC க்கள் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேவை என்பது முற்றிலும் தெளிவு. இதற்கு மாறாக துறையின் தேவைத்திறன்கள் உள்ளூர் மட்டத்தில் மதிப்பு செய்யப்பட்டுள்ள கூற்றுக்கள் வெளிவந்தாலும்…. நிலைமையை பற்றித் தவறாக துறை கூறுவது பற்றி நாம் கவலை கொண்டுள்ளோம்.”

2009ல் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Allyson M.Pollocy, Graham Kirkwood ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று ISTC க்கள் பணத்திற்குத் தக்க கடைமையைச் செய்துள்ளன என்ற கூற்றைக் கடுமையாக நிராகரிக்கின்றன. “தனியார் துறை NHS ஐவிட பணத்திற்குக் கூடுதலாக ஏதும் சிறப்பாகச்செய்கிறதாஒரு ஸ்காட்டிஷ் ஆய்வு என்ற தலைப்பிலுள்ள இந்த அறிக்கை ஜூன் 2008ல் ஸ்காட்லாந்து வட்டார சிகிச்சை மையம் கொடுத்த அறிக்கைக்குச் சவால் விட்டுள்ளது. இது 10 மாத கால சிகிச்சையை மதிப்பிட்டுக் கொடுக்கப்பட்டது. NHS டேசைடின் நிதிய இயக்குனர் ISTC கொடுத்த பணத்தைவிட 11 சதவிகிதம் அதிக பணிகள் செய்ததாக கூறியிருந்தார். “தனியார் துறை NHS கொடுக்கும் பணியைவிட, ஏன் சற்று சிறப்பாகக்கூட பணிகளை கணிசமான குறைந்த செலவில் அளிக்க முடியும் என்று இயக்குனர் டேவிட் கிளார்க் கூறியிருந்தார்.

ஸ்காட்லாந்து ஒப்பந்தம் தென்னாபிரிக்க சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் Netcare ன் இங்கிலாந்து துணை நிறுவனத்திற்கு NHS டேசைட் குழு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த Amicus Healthcare ஆல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம்  £7.3 செலவில் NHS நோயாளிகள் 8,000 பேருக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு குறிப்பிட்ட வழிவகைகளை அளிப்பதற்காக ஏற்பட்டது.

போலக் மற்றும் கிர்க்வுட்டின் ஆய்வு, “அதற்கு அனுப்பப்படும் நோயாளிகளுக்கு ஆகும் செலவின் மொத்தம் பற்றிப் பொருட்படுத்தாமல் மாதத்திற்கு எத்தனை பேர் அனுப்பப்படுகின்றனர் என்பதில் 90 சதவிகிதம் வரை நெட்கேருக்குக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவதாக, சுகாதாரக் குழு அனுப்பப்படும் நோயாளிகள் உண்மையில் சிகிச்சை பெற்றாலும் பெறாவிட்டாலும் பணத்தைக் கொடுக்கிறதுஸ்காட்லாந்து வட்டார சிகிச்சை மையம் குறிப்பிட்ட சிகிச்சையை செய்யவலில்லை என்பதை அது நிரூபித்தால் மட்டுமே கொடுக்க வேண்டிய தேவையில்லை. சிகிச்சை பெறாத நோயாளிகளுக்காகக் கிட்டத்தட்ட 3 மில்லியன் பவுண்குள் வரை நெட்கேர் கொடுத்திருக்கக்கூடும் என்று கூறுகிறது.

ஸ்காட்லாந்து வட்டார சிகிச்சை மையம் ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அனுப்பப்படுபவர்களில் 32 சதவிகிதம் மட்டுமே சிகிச்சை கொடுக்கிறது. இது அறுவை சிகிச்சை முடிந்து முதல் 13 மாதங்களில். பின்  ஆண்டு ஒப்பந்த மதிப்பில் 18 சதவிகிதத்திற்குத்தான். இங்கிலாந்தில் இதே நோயாளிகள் சிகிச்சை பெற்றிருந்தால் 1.5 பில்லியன் பவுண்டில் கிட்டத்தட்ட 927 மில்லியன் பவுண்டுகள் ISTC க்கு சிகிச்சை பெறாத நோயாளிகளுக்காக முதல்கட்ட ISTC ஒப்பந்தப்படி கொடுக்கப்பட்டிருக்கும்.”

ஸ்காட்லாந்து ஒப்பந்தம் வெளியிடப்பட்டது, அது பற்றிய பகுப்பாய்வு, ஸ்காட்லாந்து மையம் திறமை உடையது அல்லது கொடுக்கப்படும் பணத்திற்கு உரிய பணியைச் செய்கிறது என்பதற்குச் சான்று எதையும் கொடுக்கவில்லை என்று அறிக்கை முடிவுரையாகக் கூறுகிறது.

ISTC க்கள் பணம் செய்வதற்கான மற்றொரு வழிவகை அவை முதலில் குறைந்த ஆபத்து உடைய நோயாளிகளைத் தேர்ந்தெடுக்க அனுமதி பெற்றுள்ளதாகும். போலக்/கிர்க்வுட் அறிக்கை, “நம் பகுப்பாய்வு ISTC க்கள் ஒப்பந்தத்தினுள் இருக்கும் எளிய வழிவகைகளைச் செய்கின்றன என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக Information Services Divison இடம் இருந்து வந்துள்ள தகவல்கள் மூட்டுக்கள் மாற்றிற்காக அனுப்பப்படுபவர்களில் 6%, மற்றும் பொது அறுவை சிகிச்சையில் 11% ம் மட்டுமே உண்மையில் சிகிச்சை பெறுகின்றனர். இது சிறிய சிகிச்சைகளுக்கான அனுப்பப்படுபவர்களுடன் ஒப்பிடத்தக்கது. அவற்றில் சிகிச்சை விகிதங்கள் 80% க்கும் மேல் முழுமையாக நடைபெறுகின்றன என்று கூறுகிறது.

“Clamp அவருடைய சக ஊழியர்கள் நடத்திய NHS ஆய்வு ஒன்று உள்ளூர் ISTC திறக்கப்பட்டபின் NHS மருத்துவமனையில் இளம் மருத்துவர்களால் செய்யப்படும் மொத்த இடுப்பு மற்றும் முழங்கால் சிகிச்சைகளில் 19% குறைவு உள்ளதைக் காட்டுகிறது என்றும் அது கூறியுள்ளது.

BMA எனப்படும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் பொது சிகிச்சைக்குழுவின் துணைத் தலைவரான மருத்துவர் ரிச்சார்ட் வௌட்ரி, ISTC பயன்பாடு பற்றி குறைகூறும் வகையில், “முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் கூட்டணி அரசாங்கத்தின் கருத்து, தனியார் துறையை பயன்படுத்துவதின் மூலம் எப்படியும் செலவுகளைக் குறைத்து தரத்தை அதிகப்படுத்த முடியும் என்பது கிடைக்கும் சான்றுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. செலவினங்கள் அதிகரிக்கின்றன, தரம் குறைந்துவிட்டது என்பதைத்தான் சான்றுகள் காட்டுகின்றன எனத் தெரிவிக்கிறது.

இன்னும் கூடுதலான பொது நிதிதான் கூட்டணி அரசாங்கத்தின் சுகாதார, சமூக நலச் சட்டத்தின் கீழ் தனியார் துறைக்குக் கொடுக்கப்படுகிறது. ISTC க்களுக்கு ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் 14% அதிக ஊக்கத் தொகை கொடுப்பது என்பதும் பரிசீலனையில் உள்ளது.

இப்படி தனியார்துறைக்கு பணங்களை சுருட்டிக் கொடுப்பது என்பது முதலில் தனியார்துறைக்கு எதற்காக 11% அதிக ஊக்கத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய தகவலை சுகாதாரத் துறை கொடுக்காமலேயே நடைபெற்று வருகிறது.  2006ம் ஆண்டு பாராளுமன்ற அறிக்கையில் எம்.பி.க்கள் குழு சுகாதாரத்துறை “NHS க்குக் கொடுக்க வேண்டிய சரிசமமானச் செலவு பற்றி நிரூபிப்பதற்காக விரிவான புள்ளிவிவரங்களை கொடுக்கவில்லை. அத்தகைய தகவலைக் கொடுப்பது, விரிவான வழிவகை பற்றிக் கொடுப்பது, துறையின் திறனைப்பாதிக்கும், அடுத்து வர இருக்கும் ஒப்பந்தங்களில் பணத்திற்கு உரிய மதிப்பை NHS பெறுவதையும் பாதிப்பிற்கு உட்படுத்தும் என்று கூறியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாராளுமன்றக் குழுவிற்கே NHS ன் கீழ் இயங்கும் தனியார் சுகாதார நிறுவனங்கள் எந்த அளவிற்கு பெரும் இலாபம் ஈட்டுகின்றன என்பதை விசாரிக்கக்கூட முடியாமல் இருக்கும் உண்மை நிலை தனியார்துறை இப்பொழுது இங்கிலாந்தில் பொதுச் சகாதாரத்துறை மீது கொண்டுள்ள இரும்புப்பிடிக்கு நிரூபணம் கூறுகிறது.

பொது மருத்துவமனைகள் இருக்கும் NHS பிரிவுகளுக்குப் போட்டி என்று வெளிப்படையாக நிறுவப்பட்டுள்ள ISTC க்கள் விரிவாக்கத்தில் மூடல் என்னும் அச்சுறுத்தலைத்தான் எதிர்கொள்கின்றன. இவற்றுள் ஒன்று West Hertfordshire Hospitals NHS Trust ஆல் நடத்தப்படுகிறது. இது ஏற்கனவே 43 மில்லியன் பவுண்டுகள் கடனில் உள்ளது. அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி, “ISTC உள்ளூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, உள்ளூர் NHS க்கு வருமானத்தில் 15 மில்லியன் பவுண்டுகள் செலவைக் கொடுக்கும். St.Anhans ல் உள்ள நிறுவனத்தை அது தேவையற்றது எனக்கருதப்பட்டு மூடும் தேவையையும் எற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் தொழில்துறைக் கூட்டமைப்பின் பெப்ருவரி 2008 அறிக்கை ஒன்று, ISTC ன் பணம் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு ஆதரவாகப் பேசுவது, “சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புக் காட்டுதல், மரபார்ந்த NHS அளிக்கும் நலன்களையும் பாதுகாத்தல் என்பவை….. ISTC அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்னும் அச்சுறுத்தலை  நலன்கள் பகுதிக் குறைவு என்று ஆகும், NHS க்கு அளிப்பவர்கள் முந்தைய நடைமுறைக்கே திரும்பக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.