சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy’s right-wing policies bolster French neo-fascist

பிரெஞ்சு நவ-பாசிசத்தை ஊக்கப்படுத்தும் சார்கோசியின் வலது-சாரி கொள்கைகள்

By Anthony Torres
3 January 2011

Use this version to print | Send feedback

நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) தலைவர் என்ற முறையில் ஜோன் மரி லு பென்னின் மகளும், அவரது அரசியல் வாரிசுமான மரின் லு பென் விடுத்துள்ள அறிக்கைகள், பிரெஞ்சு அரசியலில் FN மற்றும் நவ பாசிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தில் ஊடகங்கள் கவனம் செலுத்துவதில் ஒரு புத்துயிரை ஏற்படுத்தியுள்ளது.  

மரின் லு பென்னின் அறிக்கைகள் பூர்சுவா கட்சிகளிடமிருந்து ஏராளமான கருத்துத் தெரிவிப்புகளைப் பெற்றன. டிசம்பர் 10 ஆம் தேதியன்று, லியோனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உள்ளே தொழுகை நடத்த போதிய மசூதிகளின்றி, வீதிகளில் தொழுகை நடத்தும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குதலை மரின் லு பென் தொடங்கினார். "வீதிகளில் தொழுகை நடத்தும் முஸ்லிம்களின் தொழுகையை (இரண்டாம் உலகப் போரின்போது) பிரான்சில் நடந்த ஜேர்மன் இராணுவ ஆக்கிரமிப்புடன்" ஒப்பிட்டார் மரின் லு பென்.

2010 ன் போது பல்வேறு நிதி நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட யூரோ நாணயம் குறித்தும் ஐரோப்பிய ஒற்றை நாணயத்தை கைவிடுவது பிரான்சுக்கு நல்லது என்று அவர் பல விமர்சனங்களையும் கூட செய்தார்.

லு பென்னின் விமர்சனங்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகள், அவர் என்ன சொன்னாரோ அதன் சாரம்சத்தை மறுக்காமல் அவற்றுக்கு இடமளிக்க முயற்சித்தோ அல்லது இலேசான விமர்சனங்களையோ செய்தோ பதிலளித்தன.

சோசலிஸ்ட் கட்சியின் தேசிய பேச்சாளர் பெனுவா ஹாமன், முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்துவது குறித்த லு பென் கூறியதிலிருந்து அடிப்படையில் ஒரு மாறுபட்ட நிலையை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக, அவர் இப்படி சொன்னார்: "நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இந்த சூழ்நிலைகள் உள்ளன, அருகிலுள்ளவர்களுடன் ஒரு பதட்டமான நிலையை கொண்டிருக்கும் நாம், அதற்கு தீர்வு காணவேண்டும்".

டிசம்பர் 14 ஆம் தேதியன்று, யூரோப் 1 இணைய தளம் எழுதியது: "ஆளும் UMP (Union for a Popular Movement) கட்சியின் வலது-சாரி தலைவர், Jean-François Copé ன் விமர்சனங்களை பற்றி கேட்ட கேள்விக்கு, 'மரின் லு பென் அவருடைய தந்தையை போன்றவர்' என்று அவர் பதிலளித்தார். அப்படியே நடந்ததால், Jean-François Copé, தேசிய அடையாளம் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்க விரும்பினார். UMP இந்த விடயம் குறித்து எதுவுமே சொல்லவில்லை என்ற உண்மையை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அவர் எனது சிறந்த கூட்டாளி. உண்மையில் 2012 ல் சார்க்கோசி தோற்க வேண்டும் என்று Jean-François Copé விரும்புவதாகவே நான் எண்ணுகிறேன்" என்று அவர் கூறினார்.

மதசார்பின்மை மற்றும் குடியரசு மதிப்புகளின் பாதுகாவலனாக தன்னைத்தானே காட்டிக்கொள்ளவே மரின் லு பென் தற்போது முயற்சிக்கிறார். Marianne பத்திரிகையில், "பிரெஞ்சு குடியரசின் உண்மையான பாதுகாவலர்களில் நானும் ஒரு நபர்! "என்று  மரின் லு பென் கூறினார்.(சோசலிச கட்சித் தலைவர்) Martine Aubrey மற்றும் Jean François Copé ஆகியோரது பதிலளிப்புகளுக்கு மாறாக அவர் மேலும் கூறினார் இவ்வாறு: "இந்த விதத்தில் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக்கொள்வதன் மூலம், மதச்சார்பின்மை மீதான தாக்குதலுக்கான பதிலளிப்பு தங்கள் பக்கமிருந்து வரவில்லை என்று UMP/சோசலிஸ்ட் கட்சி கூட்டணி என்று காட்டியுள்ளது."   

மதசார்பின்மை மற்றும் குடியரசின் பாதுகாவலராக தன்னைத்தானே காட்டிக்கொண்டு மரின் லு பென் அளித்த பதில், 20ஆம் நூற்றாண்டு பாசிஸ்டுகளின் பாரம்பரிய உரையை சுக்குநூறாக உடைத்தெறிகிறது. பிரெஞ்சு குடியரசு-குறிப்பாக 1940 ல் நாஜிக்களுக்கு சரணடைவதற்கு முன்னதாக- மற்றும் கத்தோலிக்க அடிப்படைவாதத்தால் அடிக்கடி தூண்டப்பட்டதற்கு பின்னர் “வேசித்தனமாக” இருந்தது என்று கண்டனம் செய்தது.

அரசியல் சொல்லகராதியின் இந்த திருப்பம், "மதச்சார்பின்மை" மற்றும் "குடியரசு" கோஷங்களுக்கு பூர்சுவாக் கட்சிகள் ஏற்கனவே அரசியல் ரீதியாக என்ன பதிலடி கொடுத்தார்களோ அதே அளவு பதிலடியையே காட்டுகிறது."  

"மரின் லு பென்னின் ஆதரவாளர்கள் 2012 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் மதச்சார்பின்மையை ஒரு பிரச்சனையாக ஆக்க விரும்புகிறார்கள்" என்ற தலைப்பில் டிசம்பர் 15 ஆம் தேதியன்று Le monde ல் வெளியான ஒரு கட்டுரையில், Abel Mestre இப்படி எழுதினார்: " ஒரு அழகான வார்த்தை விளையாட்டை அனுமதிக்கும் மதச்சார்பின்மையின் மைய விடயம், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை நியாயப்படுதுத்துவதாக இருப்பது மரின் லு பென்னுக்கு புதிதல்ல. 2009 இறுதியில், தேசிய அடையாளம் மற்றும் மசூதி ஸ்தூபிகளை தடை செய்ய சுவிஸ் அளித்த வாக்கு ஆகியவற்றின் மீதான விவாதத்தின்போது, மதச்சார்பின்மைக்கான கடைசி பாதுகாவலராக அம்மையார் லு பென் ஏற்கனவே தன்னைத்தானே அடையாளப்படுத்தி காட்டிக்கொண்டார்."

உண்மையில், மதச்சார்பின்மையின் தவறான முகமூடியின் கீழ் முஸ்லிம்களை தாக்குதவதைக் கொண்டிருக்கும் "அழகான வார்த்தை விளையாட்டை" மரின் லு பென் கண்டுபிடிக்கவில்லை. பிரெஞ்சு அரசாங்கங்களின் பழைய தந்திர திட்டமான அதனை, கன்சர்வேட்டிவ் ஜனாதிபதிகளான Jacques Chirac மற்றும் அப்போதைய நிக்கோலா சார்க்கோசி ஆகியோர், சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) ஆகியவற்றின் உதவியுடன் சமீபத்தில் பயன்படுத்தினர்.

ஆகையால், தவறாக பெயர் சூட்டப்பட்ட "இடது" தட்டுக்கள் உள்ளிட்ட, பிரெஞ்சு அரசியல் அமைப்பின் அனைத்து வலது-சாரி அரசியல்களும், மரின் லு பென்னின் அரசியல் தாக்குதலுக்கு அடித்தளமிட்டுள்ளதாக அது உள்ளது.

2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, Chirac மற்றும் ஜோன்-மரி லு பென் ஆகியோர் தேர்தலின் இரண்டாவது சுற்று போட்டியின்போது ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.  NPA (புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) யின்  முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் (LCR) போன்ற "தீவிர இடது" உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரெஞ்சு அரசியல் அமைப்புகளால் Chirac ஆதரிக்கப்பட்டார். இந்த மனோபாவங்களின் பங்கு, லு பென்னை விட Chirac "வித்தியாசமானவராகவும்" "கூடுதல் குடியரசுவாதியாகவும்" இருப்பார் என்ற மாயையை பரப்புவதாகத்தான் இருந்தது.   

2003-04 ல் Chirac அரசாங்கம், "மதச்சார்பின்மை"யை பாதுகாக்கும் பம்மாத்தின் கீழ் பள்ளிகளில் முஸ்லிம்கள் முக்காடு (முகமறைப்பு) அணிவதை தடை செய்யும் இனவாத மற்றும் முஸ்லிம் விரோத சட்டங்களை இயற்றியது. அப்போதைய உள்துறை அமைச்சரான நிக்கோலா சார்க்கோசி, மிக அதிக அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்திலிருந்து வந்த இளைஞரால் தாக்கப்பட்டார். ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சார்க்கோசி தனது கடும் சிக்கன நடவடிக்கைகளை 2009 ல் முடுக்கிவிட்டு, தேசிய அடையாளம் மற்றும் பர்க்கா அணிவதை தடை செய்யும் சட்டம் குறித்த தேசிய அளவிலான வலது-சாரி விவாதத்தை தொடங்கினார்.

பர்கா தடைக்காக ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற ஆணையத்தில் PS மற்றும் PCF உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அந்த சட்டத்திற்கு NPA அதிகாரபூர்வமாக ஆதரவளிக்கவில்லை என்றபோதிலும், அரச பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுடன் உடன்பட்டது. ஸ்தாபன கட்சிகளின் தேசியவாத பிரச்சாரத்திற்கு எதிரான எந்த வகையான கண்ணோட்டத்தையும் அது தெரிவிக்கவில்லை. மேலும், 2010 மார்ச் பிராந்திய தேர்தல்களுக்காக, பர்கா தடை சட்ட விளக்கத்தில் பங்கேற்ற கட்சிகளுடன் NPA தேர்தல் கூட்டணி அமைத்தது. 

பர்கா தடை சட்டத்திற்கு எதிரானவர்களாக தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் அதேநேரத்தில், பர்காவுக்கு தடைவிதிப்பதில் கொள்கை அளவில் தனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்று NPA குறிப்பாய் தெரிவிப்பதோடு, பொது இடத்தில் பர்கா அணிபவர்களுக்கு தண்டனையாக 150 யூரோ அபராதமாக விதிப்பது "நியாயமானதுதானா" என்று 2009 மே மாதம் கட்சியின் பேச்சாளர் Olivier Besancenot இடம் Le Parisen கேட்டது. அதற்கு Besancenot சொன்ன பதில்: "பிரச்சனை அபராதம் இல்லை, ஆனால் அதனை உருவாக்கிய அரசியல்வாதிகள் பயன்படுத்துவதில்தான் உள்ளது. பர்கா பெண்களை துன்புறுத்துகிறது, ஆனால் எந்த ஒரு சட்டமுமே பயனற்றதாகவும், அநீதியாகவும்தான் இருக்கும்."  

கடந்த இலையுதிர் காலத்தில் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிரான தொழிலாளர் இயக்கத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னாள்- இடது கட்சிகளால் இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகம், சார்க்கோசியின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக அவர்களது பங்களிப்பாக எவ்வித எதிர்ப்பும் இருக்காது என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மேலும் அவரது இனவாத மற்றும் இஸ்லாமிய விரோத தாக்குதலுக்கு எந்த ஒரு திடமான எதிர்ப்பும் இருக்காது என்பதையும் இது தெரிவிக்கிறது. தொழிலாளர்களின் போராட்டங்கள் மீது திணிக்கப்பட்ட தோல்விக்கு பின்னர், அரசியல் சூழலை கெடுக்கும் இனவாத விடயங்களை நோக்கி அரசியல்வாதிகள் திரும்பியுள்ளனர்.

உண்மை என்னவெனில், யூரோ நாணயமானது ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிக்கன கொள்கைகள் அடிக்கோடிட்டுக்காட்டும், ஐரோப்பிய பூர்சுவாக்களின் பொருளாதார மற்றும் சமூக அடித்தளத்தை எந்த அளவிற்கு பலவீனப்படுத்தியது என்பதை எடுத்துரைத்து மரின் லு பென்னால் பிரச்சாரம் செய்ய முடியும். தேசிய முன்னணி தற்போது ஆதரிப்பதை நிறுத்திக்கொண்ட தீவிர வலது தேசியவாதத்தை ஆதரித்து பிரெஞ்சு பூர்சுவாக்கள் பதிலளிக்கிறார்கள்.

இது முக்காடு மற்றும் பர்காவுக்கு எதிரான, மற்றும் "குடியரசு மதிப்புக்கள்" என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு எதிரான அதி விரிவான பிரச்சாரங்களுக்கு எதிரான உலக சோசலிச வலைத் தளத்தின் கொள்கை, எதிர்ப்பின் நியாயத்தை உறுதிபடுத்துகிறது. இந்த பிரச்சாரங்கள் நவ-பாசிஸ்டுகளுக்காக பாதை ஏற்படுத்துவதற்கு சேவையாற்றியுள்ளது.

"பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியும், பர்கா எதிர்ப்பு பிரச்சாரமும்" என்ற தலைப்பில் வெளியிட்ட தனது கட்டுரையில் உ.சோ.வ.த. இப்படி சொன்னது: ரோமானியர்களை துன்புறுத்தி நாடுகடத்துவது, இளம் குற்றவாளிகளின் பெற்றோர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது உள்ளிட்ட பல கடுமையான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை சார்கோஸி தொடர்ச்சியாக அறிவித்ததோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பிரெஞ்சு குடியுரிமையை அரசாங்கம் பறிக்க அனுமதிக்கும் ஒரு சட்டத்தையும் வெளியிட்டார்.

"இந்த கொள்கைகள், கடந்த ஆண்டு பர்காவை தடை செய்ய சார்க்கோசியால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) யின் ஒப்புதலுடன் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத நடவடிக்கை, மத சுதந்திரங்கள் மற்றும் சட்ட விதிகளுக்கு எதிராக அரசாங்கத்தை அராஜகமாக மாற்ற வைத்தது."

தேசிய அடையாளம் குறித்த விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை என்ற போர்வையை பயன்படுத்திய NPA சம்பந்தமாக, உ.சோ.வ.த. எழுதியது: "இந்த அபத்தமான அறிவிப்பு, தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக கவலைப்படாத ஒரு கட்சியாக NPA வைப்பற்றி நிறையவே சொல்கிறது. வலதுசாரிகளின் ஆபத்தான அரசியல் திருப்பமான இனவாதத்தை, அது எவ்வளவு ஆபத்தானது என்பதை அதுவே வெளியிட்டுள்ளதால், அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்ற குறிப்பிடலுடன், ஒரு அற்ப விளையாட்டாக உள்ள அந்த எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தாம் தலையிடப்போவதில்லை என்று NPA அறிவித்தது."