சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Social conflict in Maghreb has international implications

மெஹ்ரெப்பின் சமூக மோதல் சர்வதேச முக்கியத்துவத்தை கொண்டிருக்கின்றன

Ann Talbot
14 January 2011

Use this version to print | Send feedback
 

துனிசியா மற்றும் அல்ஜீரியாவில் தொடரும் போராட்டங்கள் மெஹ்ரெப் (maghreb) பிராந்தியம் முழுவதிலும், மற்றும் அதையும் தாண்டி அதேபோன்ற வறுமை மற்றும் பாதுகாப்பின்மை நிலவும் மத்தியகிழக்கு வளைகுடாவிலும் பரவும் விதத்தில் அச்சுறுத்துகிறது.

உயர்ந்துவரும் உணவுப்பொருட்களின் விலைகள், அதிகரித்து வரும் சமத்துவமின்மையாலும் பெரும் வேலைவாய்ப்பின்மையாலும் ஏற்படும் சமூக பதட்டங்களைத் தினந்தோறும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், தூண்டிவிட்டு வருகிறது. உலகளாவிய நிதியியல் நெருக்கடி, வட ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் உள்ள அபாயகரமான நிலைமைகளுக்கு நெருப்பைப் பற்ற வைத்துள்ளன.

இது சர்வதேச ஆளும் உயர்தட்டுகளிடையே அதிகளவில் அமைதியின்மையை தூண்டிவிட்டுள்ளது. அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் டோஹாவில் நடந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “பல இடங்களில், பல வழிகளில், பிராந்தியங்களின் அஸ்திவாரங்கள் மண்ணிற்குள் புதைந்து வருகின்றன,” என்று தெரிவித்தார்.

"இந்த பிராந்திய மக்கள், ஊழல் நிறைந்த அமைப்புகளையும், ஒரு செயலற்றுப்போன அரசியல் அமைப்புமுறையையும் கண்டு சலித்து போயுள்ளனர்," என்று அவர் எச்சரித்தார்.

துனிசிய மக்களின் கோபத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாக, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான ஜனாதிபதி ஜென் அல்-அபிடைன் பென் அலி வியாழனன்று தொலைக்காட்சியில் தோன்றி, 2014இல் தற்போதைய பதவிகாலம் முடிந்த உடனேயே தாம் பதவி இறங்கிவிடுவதாக உறுதியளித்தார். முன்னதாக அவருடைய உள்துறை மந்திரியை பதவியிலிருந்து நீக்கி இருந்த அவர், சமீபத்திய போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட சிலரையும் விடுவித்தார்; மேலும் 300,000 புதிய வேலைகளை உருவாக்கவும் வாக்குறுதி அளித்தார். அல்ஜீரியன் அரசாங்கமும் எண்ணெய் மற்றும் சர்க்கரையின் விலையை, மொத்தம் 41 சதவீதம் குறைத்துள்ளது. உணவுப்பொருட்களின் மானியத்தை நீக்கியதால் எழுந்த கலகங்களைத் தொடர்ந்து இது செய்யப்பட்டது.

லிபியாவில் எந்த ஆர்பாட்டங்களும் நடக்கவில்லை என்றாலும் கூட, கோதுமை சார்ந்த பொருட்கள், அரிசி, தாவர எண்ணெய், சர்க்கரை மற்றும் குழந்தைகளுக்கான பால் ஆகியவற்றிற்கான வரிகளைக் அது குறைத்திருக்கிறது. மொரொக்கோவும் கோதுமைக்கு மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜோர்டான் எரிபொருள் மற்றும் சில உணவுப்பொருட்களுக்கான வரிகளை வெட்டியுள்ளது.

துனிசியாவின் தலைநகர் துனீசில், ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸ் விரட்டியடிக்கப்பட்டனர் என்ற செய்திகளைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பாவும் துனிசியாவிற்கு அழுத்தம் அளித்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட பென் அலியின் கொடூர ஒடுக்குமுறையை பிரெஞ்சு மந்திரிகள் வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒடுக்குமுறை பல நகரங்களிலும், பெருநகரங்களிலும் பலரின் உயிரைப் பறித்துள்ளது. பிரெஞ்சு குடிமக்கள் கொல்லப்பட்ட பின்னர் தான் பாரிஸ்  பாரபட்சமான" வன்முறை ஏவிவிடப்பட்டதாக தனது குரலை வெளிப்படுத்தியது.

பெருமளவிற்கு வடஆபிரிக்க மக்களைக் கொண்டிருக்கும் பிரான்சில், துனிசியா மற்றும் அல்ஜீரியா போராட்டங்கள் உடனடியான  உள்நாட்டில் தாக்கங்களைக் கொண்டிருக்கும். பிரான்சில் மூன்று மில்லியன் வட ஆபிரிக்கர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல பிரெஞ்சு நகரங்களிலும், பாரீஸ் புறநகரங்களிலும் 2005இல் ஏற்பட்ட சமூக எழுச்சியைப் போன்ற ஒன்று மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை அந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. அப்போது அவசரகாலநிலை  பிறப்பிக்கப்பட்டதுடன், அப்போதைய உள்துறை மந்திரியாக இருந்த தற்போதைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கைது செய்யவும் தயாரிப்புகளைச் செய்தார்.

ஒருவேளை துனிசியா மற்றும் அல்ஜீரியாவில் ஏற்பட்ட சமூக வெடிப்பு, அப்பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக இருக்கும் எகிப்திலும் அதேபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிடக்கூடும் என்ற பெரும் அச்சம் அரசியல் மேற்தட்டுகளிடையே உள்ளது. எகிப்தின் 77 மில்லியன் மக்கள்தொகை ஏனைய வடஆபிரிக்க நாடுகளையும் விட இரண்டு மடங்கு அதிகமாகும்; ஆனால் அது துனிசியா மற்றும் அல்ஜீரியாவையும் விட வறுமையில் உள்ளது. சுமார் 44 சதவீத மக்கள் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் கீழ் பெற்று வாழ்கிறார்கள்; கட்டுப்பாடற்ற சந்தை பொருளாதார நடவடிக்கைகள் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது. நீண்டகாலமாக இருந்து வரும் அவசரகால நிலைமைக்கு எதிராக, கடந்த ஆண்டு அங்கே கணிசமான அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அறிவிக்கப்பட்ட சலுகைகள் பெரும் மாற்றத்தை ஒன்றும் செய்துவிடவில்லை. கைதிகளை விடுதலை செய்ய பென் அலி உறுதியளித்திருந்த போதினும் கூட, துனிசியாவின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹம்மா ஹமாமி அவருடைய வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். பொலிஸ் அரசுமுறைகளால் தொடர்ச்சியாக தங்களின் ஆட்சியை நிர்வகித்து வரும் ஊழல்நிறைந்த ஆட்சிகளின் நல்ல நோக்கங்களில் நம்பிக்கை வைப்பதில் எந்த பயனும் இல்லை. இதற்கு பதிலாக போராட்டங்களைச் சர்வதேசரீதியில் பரப்ப எல்லாவிதத்திலும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும். காலனித்துவ ஆதிக்கத்தின்கீழ் ஒருதலைபட்சமாக உருவாக்கப்பட்ட எல்லைகளுக்குள் அவற்றை தடுத்து வைக்க அங்கே எந்த காரணமும் இல்லை.

ஏகாதிபத்தியத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் அல்லது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக மற்றும் சமூக தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்குவதற்கு கூட, தேசிய முதலாளித்துவம் இயலாமையுற்றுருப்பதை மீண்டுமொருமுறை துனிசியா மற்றும் அல்ஜீரியாவின் சமூக வெடிப்புகளும், அந்த இரண்டு அரசாங்கங்களின் கொடூரமான விடையிறுப்பும் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு மாறாக, துனிசியா அதன் முன்னாள் காலனியாதிக்க தலைவர், பிரான்சோடு மிக நெருக்கமாக இருந்து கொண்டு, “முதல் குடும்பத்தின்" நிலபிரபுத்துவத்தை ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறது. தேசிய விடுதலை முன்னணியின் (Front de Libération Nationale- FLN) தலைமையில் நடத்தப்பட்ட கடுமையான சுதந்திர போராட்டத்தின் மூலம் விடுதலைப் பெற்ற அல்ஜீரியாவும், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்குச் சளைக்காத ஓர் ஆட்சியாகவே வந்து முடிந்துள்ளது. ஜனாதிபதி அப்தெல்லாஸிஸ் பௌதிஃப்லிகாவுக்கு கடந்த போராட்டத்தின் நினைவுகள் இன்னும் கூட நினைவில் இருக்கக்கூடும். ஆனால் மக்கள் பட்டினி கிடைக்கையில், நாடுமுழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தின் மீது முதலாளித்துவத்தின் ஏகபோகத்தனத்தைச் சட்டமாக்கி கொண்டிருக்கிறார்.

போராட்டங்களை நசுக்குவதற்காக தொழிற்சங்கங்கள் அவற்றை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று வருகின்றன. Union Generale Tunisienne du Travail (UGTT) சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்தெஸ்சலேம் ஜெரால்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துனிசில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர், பென் அலியைச் சென்று சந்தித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பென் அலிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்த ஜெரால்ட், தேர்தலில் மற்ற வேட்பாளர்களைத் தடுத்து வைத்திருந்த அந்த சர்வாதிகாரி சீர்திருத்த நலத்திட்டங்களைச் செயல்படுத்துவார் என்று அறிவித்தார். “ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியின் தலைமையில் சீர்திருத்த போராட்டம் என்பது நவீன துனிசியாவை உருவாக்கும் வழிமுறையில் ஒரு நல்ல மாற்றமாகும்,” என்று அந்நேரத்தில் அவர் தெரிவித்தார்.

"சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மையின் ஒரு சூழலுக்கு" பென் அலி உத்திரவாதம் அளிப்பார் என்று அவர் தெரிவித்தார். தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி மறுவாழ்வு அளிப்பதை வரவேற்ற அவர், அந்த அரசாங்கத்துடன் இணைந்து இயங்குவதற்கும் முன்வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், பென் அலியும் அவருடைய குடும்பமும் நாட்டைக் கொள்ளையடிக்க தொடங்கியதுடன், அத்துடன் வேலைவாய்ப்பின்மையும் பெருகியுள்ளது. UGTT தற்போதிருக்கும் ஆட்சிக்கு ஒரு மாற்றீடாக இல்லை. அதுவும் அந்த ஆட்சியின் ஒரு பாகமாக இருக்கிறது.

இதே நிலை, ஒரு இடது மாற்றீடுகளாக தங்களை காட்டுக்கொள்ளும்  கட்சிகளுக்கும் பொருந்தும். “மக்கள் செல்வாக்கு, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அத்துடன் சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் அளிக்கும் மற்றும் வேலைவாய்ப்புகளை அளிக்கும், மற்றும் நம்முடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் ஒரு நாகரீகமான வாழ்க்கைக்கு அடித்தளங்களை அளிக்கும், ஊழல், உறவினர் ஆட்சி (ronyism), பிராந்திய பிரிவினை ஆகியவற்றைத் தவிர்க்கும் ஒரு தேசிய மற்றும் வெகுஜன பொருளாதாரத்தை அளிக்கக்கூடிய மற்றும் சமூகத்திற்கேற்ற கொள்கைகளை நிறுவும் ஒரு புதிய ஜனநாயக குடியரசிற்கு அஸ்திவாரமிடக்கூடிய,” “ஓர் இடைகால தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க" துனிசிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.

ஆனால் பொலிஸூம் துருப்புகளும் தெருக்களில் குவிக்கப்பட்டிருக்கும் போது இந்த "ஜனநாயக பட்டியலை" எவ்வாறு எட்ட முடியும்? மேலும் என்ன அடிப்படையில் இந்த நல்லெண்ண கோரிக்கைகள் வெளியிடப்படுகின்றன? மேலும் எந்த வர்க்கம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முக்கிய பிரச்சினையைக் குறிப்பிடாமல் உண்மையான  ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை எவ்வாறு ஸ்தாபிக்க முடியும்?

அல்ஜீரியா மற்றும் துனிசியாவின் தெருக்களில் இறங்கி பொலிஸிற்கு எதிராக சண்டையிட்டு வரும் தொழிலாளர்களும், இளைஞர்களும், உள்நாட்டு உயர்தட்டின் மற்றும் உலகளாவிய நிதியியல் பிரபுத்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகளோடு வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவிகளில் இருப்போரை மாற்றிவிடுவதனாலேயும், வாஷிங்டன் பாரீஸ் இலண்டன் ஆகியவற்றின் தொனிக்கு ஏற்ப இன்னமும் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவகையான தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதனாலேயும் அந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது. மெஹ்ரெப்பிலுள்ள அனைத்து சர்வாதிகார ஆட்சிகளையும் அதிகாரத்திலிருந்து இறக்குவதன் மூலமாக உருவாக்கப்படக்கூடிய, தொழிலாளர்களுக்கான அரசாங்கங்களால் மட்டும் தான் பெருந்திரளான மக்களின் நலன்களை நேர்மையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

அதை எட்டுவதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்தும், தற்போதிருக்கும் போலி-இடது கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக விலகி நிற்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். என்ன தேவைப்படுகிறதென்றால், தொழிலாளர்கள் இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் மற்றும் கிராமப்புற ஏழைகளை அரசியல் மேற்தட்டுக்களுக்கு எதிராகவும், நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிராகவும் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கை குழுக்கள் தான் தேவைப்படுகின்றன. இந்த குழுக்கள் மெஹ்ரெப்பில் தொடங்கிய போராட்டத்தை வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கி, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள் வரைக்கும் எட்ட செய்ய வேண்டும்.

துனிசியாவிலும் அல்ஜீரியாவிலும் ஏற்பட்டிருக்கும் சமூக வெடிப்பானது, முதலாளித்துவம் இதுவரை அறிந்திராத மிகப் பெரிய நிதியியல் நெருக்கடியால் உலகமெங்கும் எழுந்து வரும் வர்க்க பதட்டங்களின் ஒரேயொரு வெளிப்பாடாக இருக்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு பாரிய சமூக சக்தியைக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பான்மை மக்களின் மிக அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு, அதனால் மட்டும் தான் முடிவு கட்ட முடியும்.