சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US-China summit

அமெரிக்க-சீன மாநாடு

Barry Grey
20 January 2011

Use this version to print | Send feedback

சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டோவின் வாஷிங்டன் விஜயத்தில் எவை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றனவோ, அந்த பகட்டாரவாரங்களுக்கும் இராஜாங்க உறவுகளுக்கும் பின்னால், உலகின் அந்த இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களிடையே அதிகளவில் பதற்றங்களும் உள்ளன.

பெய்ஜிங்கை வம்புச்சண்டைக்கு வருவதாக வர்ணிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் வர்ணிப்பை எதிரொலிக்கும் அமெரிக்க ஊடகங்கங்களின் பொதுவான சித்தரிப்புகளுக்கு முரண்பாடாக, கிழக்கு ஆசிய பதற்றங்கள் தீவிரப்பட்டிருப்பதற்கான முக்கிய பொறுப்பு அமெரிக்காவின் மீது தான் தங்கியுள்ளது. வெளியுறவு விவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் 18 மாதங்களுக்கு முன், அமெரிக்காமீண்டும் கிழக்கு ஆசியாவிற்குள் திரும்பியுள்ளது என்று அறிவித்ததிலிருந்து, வாஷிங்டன் ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அதன் செல்வாக்கை உயர்த்தவும், சீனாவை தனிமைப்படுத்தவும் விடாமல் முயற்சித்துள்ளது.

இதில் மூன்று கூர்மையான தாக்குதல்களும்பொருளாதார, இராஜாங்க மற்றும் இராணுவ தாக்குதல்கள்உள்ளடங்கும். ஒரு மாதத்திற்கு முன்னர், கொரிய தீபகற்பத்தில் யுத்தம் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் உலகம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. இரண்டு தென்கொரிய கடற்படை சிப்பாய்களையும், இரண்டு அப்பாவி பொதுமக்களையும் கொன்ற ஓர் இராணுவ ஒத்திகையை வடகொரியா எங்கே நடத்தியதோ அதே பிரச்சினைக்குரிய கடல்பகுதியில் தென்கொரியாவும் ஓர் நேரடி-தாக்குதல் இராணுவ ஒத்திகையை அமெரிக்க ஆதரவுடன் மற்றும் பங்களிப்புடன் நடத்தியது.

இதுபோன்றவொரு எரிச்சலூட்டலுக்கு நேருக்குநேர் இராணுவரீதியில் பதிலடி அளிக்கும் அதன் அச்சுறுத்தலை, சீன அழுத்தத்தின்கீழ் வட கொரியா திருப்பி எடுத்துக் கொண்டது. ஆனால் இது, சீனாவை விலையாக கொடுத்து ஆசியாவில் தனது செல்வாக்கை தக்கவைக்க, அங்கே பதற்றங்களைத் தூண்டிவிட்டு வரும் அமெரிக்காவின் கொள்கையை மாற்றிவிடவில்லை.

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான விரோதம், வடகொரியாவையும் அதன் முக்கிய கூட்டாளி சீனாவையும் பேயாட்டம் ஆட்டுவிக்க அமெரிக்க வழிகாட்டுதலின்பேரில் பயன்படுத்தப்பட்ட இரகசிய கடற்படை நிகழ்வுகள் உட்பட, கிழக்கு ஆசியாவின் ஒரு தொடர்ச்சியான நெருக்கடிகளில் மிக சமீபத்திய ஒன்றாக இருந்தது.

கடந்த ஜூலையில் அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலாளர் கிளிண்டன், சீனாவிற்கு எதிராக குறைகளாக கொட்டித்தீர்த்தும், தென்சீனாவில்கடல் போக்குவரத்து சுதந்திரம் என்பது அமெரிக்காவின் முக்கிய நலன் என்று அறிவித்தும், சீனாவிற்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் இடையில் தென்சீன கடலிலுள்ள தீவுகளின் மீது நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைகளில் தலையீடு செய்தார். சீனாவின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவையாக அதன் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கடற்வழிப்பாதைகளுக்கு இது ஒரு நேரடி மிரட்டலாக உள்ளது.

அணுஆயுதந்தாங்கிய யுத்த விமானம் கார்ல் வின்சனையும் உட்கொண்டிருந்த ஒரு கூட்டு இராணுவ ஒத்திகையை அமெரிக்கா தென்கொரியாவுடன் சேர்ந்து கடந்த வாரம் தான் நடத்தி இருந்தது.

இதுபோன்ற எரிச்சலூட்டும் பக்கம் திரும்பாமல், ஒபாமா புதனன்று ஜனாதிபதி ஹூ உடனான கூட்டு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், அமெரிக்கா சீனாவின் எழுச்சியை வரவேற்பதாக அறிவித்தார். அதேநேரத்தில், சீனா அதன் செலாவணியின் பரிமாற்ற விகிதத்தை அதிகமாக உயர்த்த வேண்டும் என்ற, மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு நல்ல சந்தைக்களத்தை அளிக்க அதன் (சீனாவின்) தொழில்துறைக்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்களை நீக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளையும் அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். சீனாவின் மனித உரிமைகள் ஆவணங்களையும் அவர் விமர்சித்தார்.

மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்த அந்த பத்திரிகையாளர் கூட்டம், ஒரு அமெரிக்க மற்றும் ஒரு சீன செய்தியாளர்களிடம் இருந்து இரண்டு கேள்விகளை மட்டும் தான் அனுமதித்தது. ஹூ மற்றும் சீனாவை நோக்கிய பகிரங்கமான விரோதத்தை வெளியிடும் பொறுப்பை ஒபாமா அமெரிக்க செய்தியாளர்களிடமே விட்டுவிட்டார்.

அசோசெடெட் பிரஸின் பென் பெல்லர் கேள்வி எழுப்பிய போது, “தம்முடைய மக்களை மிகவும் வறுமையில் வைத்திருப்பதாகவும், அதன் மக்களை ஒடுக்க தணிக்கையையும், படைகளையும் பயன்படுத்துவதாகவும் அறியப்படும் ஒரு நாட்டுடன் ஒபாமா எவ்வாறு ஒரு கூட்டணியை நியாயப்படுத்த முடியும் என்று வினவினார்.

இந்த கேள்வி எதிர்-ஜனநாயக நடைமுறைகளின்மீது அமெரிக்க ஊடகங்கள் காட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் போலித்தனமான கோபத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த ஆட்சியின் ஒடுக்குமுறை கரங்களின் பக்கம் திரும்பாமல், மனித உரிமைகள் மீது சீனாவிற்கோ அல்லது வேறு எவருக்கோ அறிவுரைகள் கூற சற்றும் தகுதியில்லாத ஒபாமாவிடம் இதற்கு முன்னர் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டதேயில்லை.

ஒபாமா, பெரிதாக ஒன்றுமில்லை, கௌன்டானாமோவில் குலாக்குகளைத் (தென்கிழக்கு கியூபா நகரத்தின் சிறைகூடங்களை) திறந்து வைத்துள்ளார்; அமெரிக்க குடிமக்கள் உட்பட சட்டவிரோத பயங்கரவாதிகளைப் படுகொலை செய்ய உத்தரவிட்டார்; எந்த வழக்கும் இல்லாமல் மக்களை ஆயுள்தண்டனையில் சிறையில் அடைக்க ஜனாதிபதியின் உரிமையை காப்பாற்றினார்; சித்திரவதையை நடைமுறைப்படுத்தி வரும் நாடுகளுக்கு மக்களை வழங்கும் வழக்கத்தைத் தொடர்ந்தார்; புஷ்-சகாப்த சித்திரவதைகள் மீதான வழக்குகளை நிராகரித்தார்; உள்நாட்டில் வேவு பார்ப்பதை அதிகரித்தார்; தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும், பொய்களையும் பகிரங்கப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸையும், ஜூலியன் அசான்ஜையும் அழிக்க விரும்புகிறார்.

இரண்டாவது அமெரிக்க செய்தியாளர் Bloombergஇன் ஹன்ஸ் நிகோலஸ், சீனாவைஒரு பொருளாதார அச்சுறுத்தலாக பார்க்கும் காங்கிரஸ் உறுப்பினர்களின் அச்சத்தை ஒபாமா எவ்வாறு போக்குவார் என்று வினவியதுடன், அதைத் தொடர்ந்து, சீனாவின்செலாவணி மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கை வெள்ளைமாளிகையின் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மையைக் குறைக்கும் முயற்சிகளை எவ்வாறு கடுமையாக பாதிக்கிறது என்றும் கேட்டார்.

சீனா அதன் ஏற்றுமதி விலையைக் குறைக்கவும், நேர்மையற்ற முறையில் வர்த்தக ஆதாயத்தைச் சம்பாதிப்பதற்காகவும் அது அதன் செலாவணி மதிப்பைக் குறைத்தும், மோசடிசெய்தும் வருகிறது என்று அமெரிக்கா தொடர்ச்சியாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது. உண்மையில், இதுவரையில் மிகப்பெரிய செலாவணி மோசடிக்காரனாக இருப்பது அமெரிக்கா தான். வட்டிவிகிதங்களை பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொண்டும், மின்னணு இயந்திரத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை அச்சடித்தும், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஜேர்மனி, பிரேசில் போன்ற அதன் போட்டியாளர்களைக் கணக்கில் கொண்டு அதன் ஏற்றுமதிகளை மலிவுப்படுத்தியும் அமெரிக்கா தான் டாலர்களின் மதிப்பை பெருமளவிற்கு குறைத்து வருகிறது.

மேலும் அது கத்தைகத்தையாக பணத்தை உலகில் புழக்கத்திற்குள் விடுத்தும், ஒருசில நாடுகளின் பரிமாற்ற விகிதத்தை வலுக்கட்டயமாக உயர்த்தியும், பணவீக்கத்தை அதிகரித்தும், சொத்துக் குமிழிகளை உருவாக்கியும் வருகிறது. இதன் விளைவாக பணவீக்க உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனா, கடந்த சில மாதங்களிலேயே அதன் வட்டிவிகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

இந்த சந்திப்பிற்கு முன்னதாகவே கடந்த வாரம், அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் திமோதி கெய்த்னர் அவருடைய ஓர் உரையில், சீனா அதன் பரிமாற்ற விகிதத்தை கூடியமட்டிற்கும் உயர்த்துவதோடு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகளை நீக்குவதுடன், “அமெரிக்க நிறுவனங்களை ஓரங்கட்டும் கொள்கைகளிலும், பொருளாதாரத்திலும் சீனா அதன் பாத்திரத்தை குறைத்துக் கொண்டால் மட்டும் தான், அமெரிக்க சந்தையையும், தொழில்நுட்பத்தையும் பரந்தளவில் அணுகுவதற்கு அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறி, வாஷிங்டனின் பொருளாதார முறையீடுகளை விவரித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க முதலாளித்துவம் கட்டுபாடில்லாமல் சுரண்டுவதற்கு சீனா அதன் பொருளாதாரத்தைத் திறந்துவிட வேண்டும்; ஒரு பொருளாதார காலனிய அந்தஸ்தை அது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெள்ளியன்று பாதுகாப்புத்துறை செயலாளர் ரோபர்ட் கேட்ஸ் ஜப்பானில் பேசுகையில், குறிப்பாக ஜப்பான் அதன் படைகளின் ஒருங்குவிப்பை அதன் தென்மேற்கு தீவுகளுக்குத் திருப்பஅதாவது, சீனாவை நோக்கித் திருப்பமுடிவெடுத்திருப்பதைப் பாராட்டியதுடன், டோக்கியோ அதன் இராணுவத்தை விரிவாக்கிக் கொள்ளவும், அமெரிக்காவுடன் அதன் இராணுவ கூட்டுறவை மேம்படுத்திக் கொள்ளவும் அழைப்புவிடுத்தார். மேலும் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் ஓர் ஆயுந்தாங்கிய மோதல் வெடிக்கும் சந்தர்ப்பத்தில் இராணுவரீதியில் ஜப்பானுக்கும் உதவியாக அமெரிக்கா களமிறங்க, 1960 அமெரிக்க-ஜப்பான் உடன்படிக்கையின்படி கடமைப்பட்டுள்ளதையும் அவர் நினைவுபடுத்தினார்.

ஹூவின் அரசு விஜயத்தின் போது வெளிப்படையான சீன-எதிர்ப்பு வெறி, இரண்டு கட்சிகளின் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஹூவை ஒரு சர்வாதிகாரியாக அழைத்த ஜனநாயக கட்சியின் பெரும்பான்மை செனட் தலைவர் ஹேரி ரெய்ட், புதனன்று மரியாதை நிமித்தமாக அவருக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெள்ளை மாளிகையின் இரவு உணவு விருந்திலும் பங்கேற்க மறுத்தார். குடியரசு கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஜோன் போய்ஹனெரும் அந்த நிகழ்வைப் புறக்கணித்தார்.

செலாவணி மோசடி செய்யும் நாடுகள் மீது அபராதம் விதிக்கும், மற்றும் அத்தகைய நாடுகளின் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்பந்தமும் பெறுவதைத் தடுக்கும் ஒரு சட்டவரைவை ஜனநாயக கட்சியின் நியூயோர்க் செனட்டர் சார்லஸ் ஸ்கூமெர் கொண்டு வந்தார். “இந்த சட்டம், சீனாவிற்கு ஒரு குறிப்பைக் காட்டுகிறது, அதாவதுசெலாவணி மோசடியில் உங்கள் அரசாங்கத்தின் பிடிவாதத்தால் நாங்கள் நிலைகுலைந்துள்ளோம்,” என்பதை அது எடுத்துக்காட்டுகிறது என்று அறிவித்த அவர், “நீங்கள் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லையென்றால், நாங்கள் உங்களை அதன்படி நடக்க நிர்பந்திக்க வேண்டியதிருக்கும் என்று அவர் அறிவித்தார்.

நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு தலையங்கத்தில் எழுதியது: “திரு. ஒபாமாவைப் பொறுத்த வரையில், முக்கியமான விஷயங்களாக உள்ளடங்குபவை: சீனாவின் செலாவணி மோசடி, வடகொரியாவிற்கும் ஈரானுக்கும் அது உதவுவது; மனித உரிமைகளை மீறுவது; மேற்கத்திய பசிபிக்கில் அமெரிக்க கடற்படையின் மேலாதிக்கத்திற்கு அதுவிடுத்திருக்கும் அதன் சமீபத்திய சவால் ஆகியவை. சீனா அதன் அண்டைநாடுகளை அச்சுறுத்த முயற்சிக்கும் போது, திரு. ஒபாமா வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க மாட்டார் என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.”

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அதன் தலையங்கத்தில் சீனாவுடனான யுத்தம் மற்றும் மூன்றாம் உலக யுத்தம் மீதிருக்கும் வாய்ப்புகளை எடுத்து எழுதுகையில்: “ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கெய்சரின் ஜேர்மனி செய்ததைப் போன்றே, பெய்ஜிங் அதன் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும், உலக அமைப்பை சீர்கெடுக்கவும் விரும்புகிறது என்பதில் அதன் புதிய மிருகத்தனம் மீண்டுமொரு முறை கவலையை எழுப்பியுள்ளது.”

உண்மையில், வெளியுறவு விவகாரத்துறை செயலாளர் கிளிண்டனும், அப்போதைய ஆஸ்திரேலிய பிரதம மந்திரியும் தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரியுமான கெவின் ரூட், சீனாவுடனான யுத்தத்திற்கு முன்கூட்டிய தயாரிப்பு தேவைப்படுவதை விவாதித்தனர் என்பதை வெளியான விக்கிலீக்ஸ் கசிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்க கூட்டு படை தளபதியின், இந்த ஆண்டிற்கான கூட்டு நடவடிக்கை சூழல் அறிக்கைஇது முன்னிருப்பதாக உணரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தேவையான எதிர்கால அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் குறித்த ஒரு மூலோபாய கையேடுபின்வரும் திகிலான எச்சரிக்கையை உள்ளடக்கியுள்ளது: “சீனா எடுக்கும் பாதை 21ஆம் நூற்றாண்டின் இயல்பையும், குணாம்சத்தையும் தீர்மானிக்கும்ஒருவேளை அது மற்றொரு இரத்தந்தோய்ந்த நூற்றாண்டாக இருக்கலாம் அல்லது மற்றொரு அமைதியான கூட்டுறவாக இருக்கலாம்.”

பெரும்பாலும் நிச்சயமாக ஓர் உலகளாவிய காட்டுத்தீயாக தீவிரமடையக்கூடிய, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் யுத்த அபாயம், உலக பொருளாதாரம் மற்றும் சக்திகளின் உலக சமநிலையில்அதாவது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான சீனாவின் எழுச்சி மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலைமையில் வீழ்ச்சிஆழ்ந்து-ஊடுறுவிச் செல்லும் மாற்றங்களில் வேரூன்றியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட அதன் இராணுவ பலத்தை உபயோகிக்க இன்னும் அதிகளவிற்கு கொடூரமாக மாறியுள்ளது. மேலும் ஆசியாவின் மீதோ அல்லது ஏனைய எந்த பிராந்தியத்தின் மீதும் செல்வாக்கைச் சீனாவிற்கு அமைதியாக அது விட்டுக் கொடுத்துவிடாது.

பொதுவாக இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரியூட்டும் பாத்திரத்திற்கும் ஒரே பதிலாக இருப்பது, சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்டம் என்பது தான்.