சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

More evidence of US war crimes

அமெரிக்க யுத்த குற்றங்கள் மீது மேலதிக ஆதாரங்கள்

Patrick Martin
24 January 2011

Use this version to print | Send feedback

ஒரு நீண்ட சட்டவிவாதத்திற்குப் பின்னர், தகவல்பெறும் சுதந்திரம் மீதான சட்டத்தின்கீழ் American Civil Liberties Unionஆல் (ACLU) பெறப்பட்ட இராணுவ ஆவணங்கள் அமெரிக்க யுத்த குற்றங்களுக்கு புதிய ஆதாரங்களை அளிக்கின்றன. இந்த ஆவணங்கள் கியூபாவின் குவாண்டனமோ வளைகுடாவிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட 190 கைதிகளின் மரணங்களின்மீது புலனாய்வு அறிக்கைகளையும், பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் கொண்டுள்ளது.

இந்த ஆவணத்தின் 2,600க்கும் மேற்பட்ட பக்கங்களை ஜனவரி 14இல் பெற்ற ACLU, ஐந்து நாட்களுக்குப் பின்னர் அதன் வலைத் தளத்தில் அவற்றை வெளியிட்டது.

ஒரு ACLU அறிக்கை குறிப்பிட்டதாவது, 25லிருந்து 30 சம்பவங்கள் "நியாயப்படுத்த முடியாத மனிதபடுகொலைகள்" ஆகும். அங்கே சிப்பாய்கள்மீது வெகுசில வழக்குகளும், தீர்ப்புகளும் இருந்தபோதினும், அமெரிக்க இராணுவ புலனாய்வாளர்களே கூட பல மரணங்களை மனிதப்படுகொலையாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

ACLU பின்வரும் அறிவிப்புடன் ஓர் அறிக்கையை வெளியிட்டது: “இதுவரையில், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் பதில்களையும்விட கேள்விகளையே அதிகமாக எழுப்புகின்றன. ஆனால் கைதிகளைப் பெரிதும் அவமதித்ததற்காக ஒரு மூத்த அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்துவது, மிகவும் வேதனைக்குரிய உண்மையாக உள்ளது. இந்த அவமதிப்புகளுக்கு உண்மையான தண்டனைகள் எதுவும் அளிக்கப்படாததால், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான அவமதிப்புகள் ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.”

சில மரணங்கள் அமெரிக்க சிப்பாய்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்களின் நன்கு அறியப்பட்ட விஷயங்களாக உள்ளன. அதாவது, 2007இல் நான்கு கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டு பாக்தாத் கால்வாயில் தூக்கி எறிந்தது போன்றவை. ஏனையவைக் குறித்து அறியப்பட்டிருக்கவில்லை அல்லது பரந்தளவில் பதிவுசெய்யப்படவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கைகள் படிப்பதற்கே அருவருப்பூட்டுகின்றன. ஓர் ஆவணம், பாக்தாத்திற்கு வெளியிலிருக்கும் பிரபலமல்லாத சிறைக்கூடமான அபு க்ரெய்ப்பில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, அபிட் மௌஹோஷ், 2003இல் அடித்து கொல்லப்பட்ட விபரங்களை விளக்குகிறது. அந்த இடம் பெரும் எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்ந்த இடமாக இருந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கை குறிப்பிடுவதாவது: “இந்த 56 வயது ஈராக்கிய கைதி மூச்சடைப்பு மற்றும் மார்ப்பழுத்தத்தால் இறந்திருக்கிறார். பிரேத பரிசோதனையின் நுட்பமான முடிவுகளின்படி, விலா எலும்புமுறிவுகளும், பல்வேறு இடங்களில் நசுங்கி இருப்பதும், இவற்றில்சில மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதன் அடையாளங்களும் உள்ளன.”

மற்றொரு பிரேத பரிசோதனை அறிக்கை, 2004இல் மோசூலில் நடந்த ஓர் இராணுவ சோதனையைத் தொடர்ந்து, பர்ஹத் மொஹமத் கொல்லப்பட்டதை விவரிக்கிறது: “ஈராக்கைச் சேர்ந்தவராக ஊகிக்கப்படும் இந்த சுமார் 27 வயது நிரம்பிய குடிமகன், பிடித்துச் செல்லப்பட்ட அண்ணளவாக 72 மணி நேரங்களில் அமெரிக்க காவலில் இருக்கும் போது உயிரிழந்தார். அறிக்கையின்படி, ஒரு சோதனையின் போது அவருக்குத் தொடக்கத்திலிருந்த பயத்தின் காரணமாக, உடலுக்குச் சக்தி தேவைப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் முகம் மூடப்பட்டு, தூக்கம் இழக்கச் செய்யப்பட்டு, அவருடைய உடலிலும், முகமூடியிலும் குளிர்ந்த தண்ணீரைப் பயன்படுத்தியது உட்பட, வெப்பமான மற்றும் குளிரான தட்பவெப்ப நிலைகளில் வாட்டி வதைக்கப்பட்டிருந்தார்.”

"நன்கு வளர்ந்த, ஆரோக்கியத்துடன் இருந்தவர்" என்று கூறப்பட்ட அந்த இளைஞர், ஆறடி உயரமும், 190 பவுண்டு எடையுடன் இருந்தார். அவர் மூன்று நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் உயிரிழந்தார். மேலே கூறப்பட்ட அந்த நுட்பங்கள்முகத்தை மறைத்தல், தூக்கம் இழக்க செய்தல், மற்றும் ஏதோவொரு விதத்தில் தண்ணீரை உட்கொள்ளச் செய்தல் போன்றவைஜெனிவா உடன்படிக்கைகளின்படி தடை செய்யப்பட்டவைகளாகும். அவருடைய மரணத்திற்குக் காரணமானவர்கள் யுத்த குற்றத்திற்காக குற்றவாளிகளாவர்.

ACLU ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுக் காட்டியது: அதில் காயப்பட்டு விழுந்துகிடக்கும் கைதியின் அறைக்குள் ஒரு சார்ஜென்ட் நுழைகிறார்; "அவரை கடுமையாக தாக்குகிறார் பின்னர் அவரை நோக்கி இரண்டுமுறை சுட்டு கொல்கிறார்.” பின்னர் அந்த சார்ஜென்ட் அந்த படுகொலை குறித்து பொய் கூறுமாறு அங்கிருக்கும் இதர சிப்பாய்களிடம் கூறினார். மற்றொரு சிப்பாய், ஒரு சவக்காவலர், அதன்பின்னரும் அந்த பிரேதத்தின் தலையில் சுட்டார்.

CNNஆல் தொகுக்கப்பட்ட அந்த ஆவணங்களின் ஒரு தொகுப்பின்படி, அமெரிக்க சிப்பாய்கள் 43 மரணங்களில் சந்தேகத்திற்குரியவர்களாக இருந்தனர். மீதி மரணங்கள் இயற்கையாகவும், அமெரிக்க சிறைக்கூடங்களுக்கு வெளியில் நடந்த தாக்குதல்களினாலும், அல்லது கைதிகளுக்குள்ளேயே நடந்த சண்டைகளாலும் ஏற்பட்டதாக இருந்தன. பதிமூன்று சம்பவங்களில், படுகொலை நடந்திருக்கலாம் என்பதாக கண்டறியப்பட்டது; மொத்தம் 19 அமெரிக்கர்கள், ஏதோவொருவகை அவமரியாதைக்காக தண்டிக்கப்பட்டிருந்தனர்.

முதலில் கைது செய்யப்படும் போது பெரும்பாலான கைதிகள் ஆரோக்கியமாக இருந்ததைப் போன்று தெரிந்தாலும்கூட, மொத்த மரணங்களில் நான்கில் ஒருபகுதிக்கும் மேலானவை இதய பிரச்சினையோடு தொடர்புபட்டிருந்ததாக ACLU குறிப்பிட்டது. அந்த அமைப்பு வரம்புமீறாத மொழியில் குறிப்பிட்டதாவது, “இது தடுப்புக்காவல் அல்லது கைதிகளின் புலன்விசாரணை நிலைமைகள் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பக்கூடும்,” என்றது.

பெண்டகனின் ஒரு பெண் செய்திதொடர்பாளர், லெப்டினண்ட் கர்னல் தான்யா பிரட்ஷெர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூறுகையில், “கையிலிருக்கும் பல பிரேத பரிசோதனை அறிக்கைகளும், புலனாய்வு அறிக்கைகளும் கைதிகளை நடத்தும்விதம் மற்றும் பொறுப்புடைமை மீது அரசுத்துறைக்கு இருக்கும் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்பது உண்மை தான்.” இந்த குறிப்பிடத்தக்க தர்க்கம், காவலின்போது ஏற்பட்ட 190 மரணங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு மட்டுமின்றி, மாறாக அதன் மனிதாபிமான அக்கறைக்கும் சான்றாக உள்ளன.

அமெரிக்க ஊடகங்களின் பொறுப்பும் இதில் சம அளவில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஞாயிறன்று மதியம் வரையில், கூகுள் செய்தி தேடலில் ACLU அறிக்கையின் வெறும் ஆறு இணைப்புகள் மட்டுமே காணக்கிடைத்தன. அவற்றில் மூன்று ஈரானிய ஆங்கில-மொழி பத்திரிக்கை தொலைக்காட்சியினுடையது. New York Times, Washington Post மற்றும் CNN தவிர ஏனைய தொலைக்காட்சி வலையமைப்புகளிலும் இந்த ஆவணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

குவாண்டனமோ வளைகுடாவில் தற்போது வைக்கப்பட்டிருக்கும் CIAஇன் முன்னாள் கைதிகள் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள் என்று கூறும், மற்றும் CIA காவலில் இருக்கும் போது அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற அவதூறு பரப்பும் எழுத்துப்படிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஒபாமா நிர்வாகம் தொடரலாம் என்று ஒரு கீழ்-நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, ஒரு மத்திய முறையீட்டு நீதிமன்றம் தடைவிதித்த அடுத்த நாள், ACLU அந்த ஆவணங்களை வெளியிட்டது.

கைதிகள் "எதிரி போராளிகளா" என்பதைத் தீர்மானிக்க குவாண்டனமோவில் நடந்த விசாரணைகளில், இந்த கைதிகள் Combatant Status Review Tribunalகளுக்கு அளித்த அவர்களின் சொந்த வாக்குமூலங்களையே மறுத்து வருகிறார்கள். இந்த நீதிமன்றங்கள், தகவல்பெறும் சுதந்திரம் மீதான சட்டத்தின்கீழ் (கைதிகளின் பிரேத பரிசோதனை ஆவணங்களைப் பெற இதே சட்டம் தான் ACLUஆல் பயன்படுத்தப்பட்டது), இந்த விசாரணைகளின் மொத்த எழுத்துப்படிகளையும் அளிக்க கோரியிருந்த முறையீடுகளை அமுலாக்க மறுத்துள்ளன.

ACLUஆல் பொதுவில் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரத்தம்தோய்ந்த பாத்திரத்தை முற்றிலுமாக வெளிப்படுத்துவனவாக உள்ளன. அவர்கள் மேலும் ஆய்வுகள் மற்றும் கவனமான பகுத்தாய்வுகளைச் செய்ய உள்ளனர். விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட நூறு ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் சேர்ந்து, இவையும் அமெரிக்க அரசாங்கத்தின் தலைவர்கள் மீதான யுத்த குற்றங்களின் ஒரு குற்றப்பத்திரிக்கைக்கு உண்மையான அடித்தளத்தை உருவாக்குகின்றன.

புஷ், செனே & கம்பெனி, அவர்களைத் தொடர்ந்து வந்த ஒபாமா மற்றும் பீடென் ஆகியோரும், அந்த இரண்டு நிர்வாகங்களிலும் பதவி வகித்த மூத்த இராணுவ மற்றும் வெளியுறவு கொள்கை அதிகாரிகள் அனைவருமே மனிதயினத்திற்கு எதிரான மிக தீவிர குற்றங்களைச் செய்த குற்றவாளிகளாக உள்ளனர். இந்த அதிகாரிகள் அனைவருமே ஒரு சர்வதேச யுத்த குற்றங்களின் தீர்ப்பாயத்தை முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.