சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe’s crisis

ஐரோப்பாவின் நெருக்கடி

Peter Schwarz
23 July 2011
Use this version to print | Send feedback

54 ஆண்டுகளுக்கு முன் ரோம் உடன்பாடு (Treaty of Rome) என்பது ஏற்கப்பட்டதில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னோடி அமைப்புக்கள் கடந்த வாரம் பெரும் பள்ளத்தில் விழும் விளிம்பில் நின்றது போன்ற நிலைமை ஏற்பட்டதில்லை. வியாழன் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் கடன் நெருக்கடிக்கு அரசாங்கத் தலைவர்கள் யூரோப்பகுதி நாடுகளில் இருந்து உரிய விடையைக் கண்டறியாவிட்டால், அது யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு என்று பொருளாகிவிடும் என்று வல்லுனர்கள் ஒப்புக்கொண்டனர்.

அத்தகைய தோல்வியின் விளைவுகள் பொருளாதாரத் துறையுடன் நின்றுவிடாது. 17ம் நூற்றாண்டில் நடைபெற்ற முப்பதாண்டுப் போர்க் காலத்தில் இருந்து ஐரோப்பா பலமுறையும் போர்களால் பெரும் அழிவிற்குட்பட்டதுடன், 1914, 1939 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் போர்களில் அதன் உச்சகட்டம் அடையப்பட்டது. அப்பொழுது முதல் ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கு முன்பு இருந்த அமைப்புக்களும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே புதிய ஆயுதமேந்திய மோதல்களை தடுக்கும் முக்கிய கருவியாக விளங்கின. எனவே உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கருத்துக்களை வெளிப்படையாகக் கூறிய பல மூத்த அரசியல் வாதிகள் Spiegel Online கூறியுள்ளதுபோல் ஐரோப்பாவில் இன்னமும் யூரோக்கள், சென்ட்டுக்கள் என்ற பிரச்சினைக்குப் பதிலாக போர், சமாதானம் என்ற பிரச்சினைகள் உள்ளன.புருஸெல்ஸ் அவசர உச்சிமாநாடு தோற்கக் கூடாது என்பது பற்றி அவர்கள் வலுவாக எச்சரித்தனர்.

உச்சிமாநாடு நெருக்கடியை தீர்க்கவில்லை, வெறுமே அதை ஒத்திவைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அடிமட்டத்திலுள்ள பிரச்சினைகளை மேலும் விரிவாக்கிவிட்டுள்ளது.

உச்சிமாநாட்டில் பங்கு பெற்றவர்கள் நீண்டகாலமாக திட்டமிட்ட கிரேக்கத்திற்கு 109 பில்லியன் யூரோ மதிப்புடைய புதிய இரண்டாம் கடன் திட்டத்தை ஏற்றனர். இதுவும் முதல் பொதியைப் போலவே கடுமையான சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட வேண்டும் என்பதுடன் பிணைக்கப்பட்டிருந்தது. பணம் திருப்பிக் கொடுத்தலை வசதி செய்யும்வகையில் கிரேக்க அரசாங்கக் கடன் மீதான வட்டி விகிதம் 4.5 என்பதில் இருந்து 3.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, ஏழரை ஆண்டுகளில் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய கடன் 15 முதல் 30 ஆண்டுகளில் திருப்பிக் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மீட்பு நிதியின் (EFSF) அதிகாரங்கள் விரிவாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இது சந்தையில் பத்திரங்களை வாங்கி பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகளுக்கு தீவிரமாக உதவும். ஆனால் அதன் மொத்த தொகை அதிகரிக்கப்படமாட்டாது.

உச்சிமாநாட்டில் பங்கு பெற்றவர்கள் கிரேக்கத்தின் கடனில் தனியார் கடன்கொடுப்போரின் ஈடுபாடு குறித்துப் பெரிதும் பரபரப்பைக் காட்டினர். அவர்களுடைய தலையீட்டின் அளவு 2014க்குள் 50 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் ஒரு தீவிர ஆய்வு இது ஒரு போலித்தொகை எனக் காட்டுகிறது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் கடன்கொடுப்போர் தங்கள் கிரேக்கப் பத்திரங்களை 20% எனக்கூடிய குறைந்த சராசரி இழப்பில் மீட்கலாம் அல்லது புதிய, நீண்டக் கால பங்குப்பத்திரங்களை வாங்கலாம். அவற்றின் பணத்தை திரும்ப அடைவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவாதம் அளிக்கும். இவ்வகையில், தற்போதைய சந்தை மதிப்பைவிட மிக அதிகமான விலையில் கிரேக்கப் பத்திரங்களை விற்க முடியும். எதிர்கால அபாயங்கள் அனைத்தும் பொதுமக்கள்மீது சுமத்தப்படும்.

இன்னும் பல குழப்பமான கருத்துக்களையும் உறுதியற்ற விதிகளையும் கொண்டிருக்கும் புருஸெல்ஸில் ஏற்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விளைவாக, கிரேக்க அரசாங்கக் கடனான 350 பில்லியன் யூரோ என்பது 26 பில்லியன் யூரோக்கள்தான் குறையும். இது கடலில் ஒரு நீர்த்துளி போல் ஆகும்.

மிக அதிக கடன்பட்டுள்ள அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல்லும், மீட்பு நிதியின் குறைந்த வட்டி விகிதங்களில் இருந்து நலன்களைப் பெறும். ஆனால் வங்கிகள் பங்குபெறுதல் என்பது கிரேக்கத்துடன் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கடுமையான மட்டுப்படுத்தல் உள்ளது. ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு எந்த உதவிகளும் கூறப்படவில்லை. கடந்த வாரம் அவற்றின் பங்குப்பத்திரங்களுடைய வட்டிவிகிதம் உயர்ந்துவிட்டது. இரு நாடுகளின் கடன்களும் யூரோ நெருக்கடியின் முக்கிய பகுதியாகக் கருதப்படுகின்றன.

எனவே யூரோ மீதான அழுத்தம் வருவது என்பது குறுகிய காலத்திற்குள்ளேயே வந்துவிடும். அரசாங்கத் தலைவர்கள் மீண்டும் ஒரு அவசர உச்சிமாநாட்டில் சந்திக்கவேண்டியிருக்கும்.

கடன் நெருக்கடியின் அடிப்படைக் காரணங்கள் பற்றிய பிரச்சினை  உச்சிமாநாட்டில் விடையிறுக்கப்படாதிருப்பது ஒருபுறம் இருக்க, விவாதிக்கப்படக்கூட இல்லை. அரசியல்வாதிகளும் செய்தி ஊடகங்களும் பலமுறை நெருக்கடி சந்தேகத்திற்குரிய நிதியத் தலைமையின் விளைவு என்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் தகுதிக்கு மீறி வசதியாக வாழ்வதின் விளைவுஎன்றும் கூறுகின்றனர்.

உண்மையில் கடன் நெருக்கடி அரச கருவூலங்கள் திட்டமிட்டமுறையில்  கொள்ளையடிக்கப்பட்டதும், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் உயர் வகுப்பினரை செல்வக் கொழிப்பு உடையவராகச் செய்தது ஆகியவற்றின் விளைவுதான். மூன்று தசாப்தங்களாக பெருநிறுவனங்கள், உயர்ந்த வருமானங்கள் மற்றும் செல்வக்கொழிப்பின் மீதான வரிகள், தொடர்ந்து குறைக்கப்பட்டுவிட்டன. 2008 நிதிய நெருக்கடிக்கும் பின் வங்கிகளின் ஊகவணிக இழப்புக்களை ஈடு செய்ய பில்லியன் கணக்கான யூரோக்கள் கொடுக்கப்பட்டதும் பொது நிதிகளைச் சூழ்ந்துவிட்டது.

ஆனால் கடன்களை தீர்ப்பதற்கு பயன்படுத்த ஐரோப்பாவில் நிதியங்களுக்கு ஒன்றும் பற்றாக்குறை இல்லை. இது தனியார் சொத்துக்களின் விரைவான பெருக்கம் மற்றும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் ஆகியவற்றின் மூலம் நிரூபணம் ஆகிறது. இவை நெருக்கடியை மீறிச் சற்றும் குறையாமல் அதிகரித்துள்ளன. அமெரிக்க முதலீட்டு வங்கி மெரில் லிஞ்ச் தொகுத்துள்ள உலகச் செல்வ அறிக்கையின்படி, ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 3.1 மில்லியனைகளை கொண்ட மில்லியனர்கள் உள்ளனர். மொத்தமாக இவர்களிடம் சொத்துக்கள் $10.6 டிரில்லியன் (7.5 டிரில்லியன் யூரோக்கள்) உள்ளன. இச் சொத்தின்மீது அவசரக்கால வரி 4.7 சதவிகிதம் என்று வசூலித்தாலே முழு கிரேக்கப் பொதுக்கடனும்  ஒரேதரத்தில் அகற்றப்பட்டுவிட முடியும்.

இச்சொத்துக்கள் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன, நிதிய நெருக்கடிக்குப் பின்னரும் கூட. ஜேர்மனியில் மட்டும், மத்திய வங்கியான Bundesbank இன் கருத்துப்படி, தனியார் பெரும் சொத்துக்கள் கடந்த ஐந்து காலாண்டுகளில் மொத்தம் 350 பில்லியன் என மொத்தமாக உயர்ந்துள்ளன. குறைவூதியங்கள் இன்னும் குறைந்துவிட்டன என்ற நிலையிருந்தும் நடுத்தர வருமானங்கள் 10 ஆண்டுகளாகத் தேக்கம் அடைந்துள்ள இந்நிலைமை நீடிக்கிறது. சொத்துக்கள் கிட்டத்தட்ட பிரத்தியேகமான முறையில் சமூகத்தின் மேல்மட்டத்தின் பத்தில் ஒரு பகுதியினரிடம் குவிந்துள்ளது; இப்பிரிவு மொத்த சொத்தில் 60%க்கும் மேலாகக் கொண்டுள்ளது.

ஆனால் இச்சொத்துக்கள் யூரோப் பகுதி அரசாங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. ஜனாதிபதி சார்க்கோசி தந்திரோபாய காரணங்களுக்காகக் கோரியுள்ள வங்கிகள்மீதான வரிவிதிப்புக் கூட புருஸெல்ஸில் உறுதியாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. கூடியிருந்த தலைவர்கள் நெருக்கடியை சமூகச் செல்வத்தை மறுபகிர்வு விரைவாக செய்யத்தான் பயன்படுத்தினர். புருஸெல்ஸில் நடைபெற்ற அவசர உச்சிமாநாடு ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற சிக்கனத் திட்டங்களை குறிப்பாக வரவேற்று, யூரோ நாடுகள் அனைத்திலும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2013க்குள் 3%க்கும் கீழே கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதன் பொருள் சமூகநலச் செலவுகளில் இன்னும் கடுமையான வெட்டுக்கள் ஏற்படும் என்பதாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இடதுமுதலாளித்துவக் கட்சிகளான சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகள், முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் அதிகத் தாக்குதல்கள் தேவை என்ற வலியுறுத்துகின்றன. அவை ஐரோப்பிய ஐக்கியத்தை பாதுகாப்பவர்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளுகின்றன. ஆனால் அவர்களுடைய ஐரோப்பாவை காப்பாற்றுகஎன்ற கருத்து முடிவிலா சிக்கன நடவடிக்கைகளுடன் ஒன்றாக இயைந்துள்ளது.

கிரேக்கத்தில் சமூக ஜனநாயக கட்சியான PASOK வெற்றிபெற்றதானது 2015க்குள் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத்தரங்களை 40% குறைக்கும் கடும் சிக்கன நடவடிக்கையை ஒரு முன்னிபந்தனையாகக் கொண்டுள்ளது. இத்தாலியில் முன்னாள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரான 86வயது ஜனாதிபதி ஜோர்ஜியோ நெபோலிடானோ, இப்பொழுது பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் சமீபத்திய சிக்கன நடவடிக்கைக்கு மத்திய-வலது எதிர்க்கன்னைகளின் ஆதரவை உத்தரவாதம் அளிக்கிறார். இவை முற்றிலும் நடுத்தர, குறைந்த வருமானம் பெறுவோருக்கு எதிராகத்தான் இயக்கப்படுகின்றன.

ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) யூரோ நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை இயற்றுவதற்கு மேர்க்கெல் அரசாங்கத்திற்குத் தன் ஆதரவைக் கொடுக்கிறது. Spiegel Online  இல் பசுமைக்கட்சித் தலைவர் செம் ஒஸ்டிமியர் கிரேக்கப் பிரதம மந்திரி பாப்பாண்ட்ரூவை மக்கள் எதிர்ப்பையும் மீறிச் சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதற்காகப் பாராட்டியுள்ளார்.

1920களில் ஐரோப்பிய முதலாளித்துவம் மக்கள் நலன்களின் அடித்தளத்தில்  ஐரோப்பாவை ஒன்றுபடுத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்று லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். தனியார் சொத்துரிமை, சுரண்டுதல், தனிப்பட்ட ஆதாயம், தேசிய நலன்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ முறை ஐரோப்பிய மக்களிடையே ஒற்றுமை உணர்வு, இணக்கமான நல்லுறவுடன் வாழ்தல் ஆகியவற்றை உறுதி செய்ய முடியாது. இந்த மதிப்பீடு இன்று இன்னும் வியத்தகு அளவில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீளும் பாதை குறித்த வலது மற்றும் இடதுமுதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையே விவாதம் ஒரு புறத்தில் அப்பட்டமான தேசியவாதமும், மறுபுறத்தில் மக்களை அழிப்பதின்மூலம் ஐரோப்பாவைக் காப்பாற்றுதல்ஆகிய கருத்துக்களுக்கு இடையே ஊசலாடுகிறது. 1930களில் இருந்ததைப் போலவே, இரு பாதைகளுமே  சமூக வீழ்ச்சி, சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றிற்குத்தான் இட்டுச் செல்லும்.

தொழிலாள வர்க்கம் இம்முகாம்களில் எதற்கும் தன்னைத் அடிபணியச்செய்து  கொள்ளக்கூடாது. நெருக்கடிக்குத் தன் சொந்த பிரதிபலிப்புக்காக அது போராட வேண்டும். அதாவது ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் மறு சீரமைத்தல் என்பது தேவையானது. பெருநிதியக் பெருநிறுவனங்கள் கைப்பற்றப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். பெரும் செல்வந்தர்களின் சொத்துக்கள் பெரும் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் அல்லது பறிமுதல் செய்யப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் தற்பொழுதைய நெருக்கடியைத் தீர்க்க முடிவதுடன், ஐரோப்பாவில் உள்ள சமூகப் பிளவு கடக்கப்படுவதற்காக, முழுசமூகத்தின் நலன்களுக்காக ஐரோப்பாவின் பரந்த வளங்கள் பயன்படுத்தப்பட முடியும்.

ஐரோப்பாவை போரிடும் தேசிய அரசுகளாக மாற்றும் பால்கன்மயமாக்குதலுக்கும், மூலதனம் மற்றும் அதன் அமைப்புக்கள் புருஸெல்ஸில் சர்வாதிகாரத்தை பெறும் என்ற நிலைக்கு மாற்றீடு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை உருவாக்குவதுதான்.