சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Bombing, mass shooting kill at least 87 in Norway
நோர்வேயில் குண்டுத்தாக்குதல், பாரிய துப்பாக்கிச் சூடுகள் குறைந்தபட்சம் 87 பேரைக் கொன்றன
By Mike Head
23 July 2011

Use this version to print | Send feedback

ஒரு குண்டுத் தாக்குதல் மற்றும் பெரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் வெள்ளியன்று நோர்வேயில் நடைபெற்றதில் குறைந்தது 87 பேரைக் கொன்றுவிட்டது. தலைநகர் ஓஸ்லோவில் அரசாங்கக் கட்டிடங்களுக்கு எதிராக பெரிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ஒரு வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு அதிதீவிரவாதி தானியங்கி ஆயுதத்தைப் பயன்படுத்தி யுடோயா தீவில் ஆளும் தொழிற் கட்சி நடத்திய இளைஞர் முகாம் ஒன்றின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

வெள்ளியன்று பிற்பகல் 3.30க்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்கள் ஓஸ்லோ நகர மையத்தில் இருந்த அரசாங்கப் பகுதியை அதிர்விற்கு உட்பட்டன. இந்த இடம் நோர்வேயின் பிரதம மந்திரி Jens Stoltenberg, நிதி அமைச்சரகம் மற்றும் நாட்டின் மிகப் பெரிய பரபரப்புச் செய்தித்தாள் Verdens Gang (VG) ஆகியவற்றின் அலுவலகங்களையும் கொண்ட இடம் ஆகும். இங்கு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 7 பேர் இறந்தனர், 15 பேர் காயமுற்றனர்.

இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், இளைஞர் முகாமில் பெரும் படுகொலை நிகழ்ந்தது; இதில் 600 பேர் கலந்துகொண்டிருந்தனர். துப்பாக்கியை ஏந்தியவர், ஒரு பொலிஸ் அதிகாரி போல் உடையணிந்து முகாமில் பங்கு பெற்ற 15,16 வயதுள்ள இளைஞர்கள் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டு, குறைந்தபட்சம் 80 பேரைக் கொன்றார். பொலிசும் மீட்புக் குழுக்களும் தீவிலும், மற்றும் சுற்றியுள்ள ஏரி ஆகியவற்றிலும் சடலங்கள், காயமுற்றுத் தப்பித்தவர்களை ஆகியோரைத் தேடும்போது இன்னும் பல இறப்புக்கள் உறுதிப்படுத்தப்படும்.

பின்னர் பொலிஸ் அதிகாரிகள் Anders Behring Breivik என்னும் 32 வயதுடைய நோர்வே நாட்டைச் சேர்ந்தவரை, நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்புக் கிறிஸ்துவ அடிப்படைவாதக் குழுக்களுடன் தொடர்புடையவரை கைது செய்தனர். பிரெவிக் பல வலதுசாரித் தொடர்புகளைக் கொண்டிருந்தார், ஒரு கிறிஸ்துவ கன்சர்வேடிவ் என்று தன்னையே பேஸ்புக் கணக்கில் குறித்துக் கொண்டார் என்று நோர்வேயின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் தேசிய ஒளிபரப்பு அமைப்பு NRK இன்னும் பிற செய்தி ஊடகம் பிரெவிக்கின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. நோர்வீஜிய TV2 ன் படி சந்தேகத்திற்கு உரியவர் கிழக்கு நோர்வேயிலுள்ள வலதுசாரிக் குழுக்களைச் சேர்ந்தவராக இருக்கலாம், இரு பதிவு செய்யப்பட்ட ஆயுதங்களையும் வைத்திருந்திருக்கலாம்ஒரு தானியங்கி ஆயுதம் மற்றும் ஒரு க்ளோக் வகை பிஸ்டல்அவை குழு ஒன்றின் பெயரில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனின் செய்தித்தளம் Expressen அவர் தன்னைத்தானே தேசியவாதி எனக் கூறிக்கொண்டார் என்றும் இஸ்லாமைக் குறைகூறி பல கட்டுரைகளை எழுதியுள்ளார் என்றும் தெரிவிக்கிறது.

தீவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் ஆகும். பயங்கரத்திற்குள்ளான சாட்சிகளான இளைஞர்கள் ஏரியில் குதித்தும், கட்டிடங்களுக்குப் பின்னே மறைந்து கொண்டும் துப்பாக்கிச் சூட்டு ஆபத்திலிருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டதை விபரித்துள்ளனர். 21வயது டானா பெர்ஜிங்கி, போலிப் பொலிஸ் அதிகாரி மக்களை அருகே வருமாறு உத்திரவிட்டு பின் ஆயுதங்களையும் அதற்கான ரவைகளைளையும் ஒரு பையிலிருந்து எடுத்துச் சுடத் தொடங்கினார் என்று கூறினார்.

மற்றொரு சாட்சியான 15 வயது எல்சி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்: “அவர் முதலில் தீவில் இருந்து மக்கள் மீது சுட்டார். பின்னர் நீரில் இருந்த மக்களைச் சுடத் தொடங்கினார்.” துப்பாக்கியேந்தியவர் பல முறையும் சுடப்பட்டவர்கள் மீது சுட்டு அவர்கள் இறந்ததை உறுதிப்படுத்தினார் என்று மற்றவர்கள் கூறினர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது யுடோயாவில் இருந்த செய்தியாளர்களில் ஒருவரான Rule Thomas Ege, கொடுக்கும் தகவல்: “மக்கள் நீரில் இருந்து இழுக்கப்படுவதை நாங்கள் பார்த்தோம். கடற்கரையில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் அவர்களைக் கவனித்துக் கொள்ளுவதை நாங்கள் பார்த்தோம். இளம் சிறார்கள், சிலர் அழுது கொண்டிருந்தது, சிலர் மருத்துவ உதவியாளர்கள் தங்கள் சிறந்த நண்பர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருந்ததை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த போன்ற கொடூரமான காட்சிகள் இருந்தன.”

முன்னதாக நகரத்தில் பெரும் வெடிப்புக்கள் சன்னல்களைத் தகர்த்து கட்டிட அமைப்பிற்குச் சேதங்களையும் ஏற்படுத்தின. நோர்வேயின் தொலைக்காட்சியில் வந்த காட்சிகள் பிரதம மந்திரியின் அலுவலகம் மற்றும் பிற கட்டிடங்களை பெரும் சேதமுற்றதைக் காட்டின. நடைபாதைகள் முழுவதும் உடைந்த கண்ணாடித் தூள்கள் இருந்தன; பகுதி முழுவதில் இருந்தும் புகை வெளிப்பட்டது. “தெருக்களில் கிடந்த மக்கள் உடல் முழுவதும் இரத்தம் கொட்டியிருந்தது.” பொது வானொலியான NRK யில் செய்தியாளராக இருக்கும் இங்குன் ஆண்டர்சன் நிகழ்ச்சிகள் நடந்த இடத்தில் இருந்து மேற்கூறியவற்றைத் தெரிவித்தார்.

குற்றவாளி எனக் கூறுப்படுபவர் பற்றி விவரங்கள் வெளிவரும் முன், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் தலைவர்கள் இது இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று கூறியதுடன்பயங்கரவாதத்தின் மீதான போர் தொடரப்பட வேண்டிய தேவையை இந்த வன்முறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என அறிவித்தனர்.

ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் நேட்டோ உறுப்பு நாடான நோர்வேயுடன் தங்கள் ஒற்றுமை உணர்வை உறுதியளித்தனர்; நோர்வேயின் லேபர்-சோசலிஸ்ட் இடது-மையக் கூட்டணி அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் 500 துருப்புக்களைக் கொண்டுள்ளது, மற்றும் லிபியாவில் நடக்கும் வான்வழித் தாக்குதல்களிலும் பங்கு பெறுகிறது.

நோர்வேயின் பொலிஸ் இந்த ஆண்டு முன்னதாக வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்புக் குழுக்கள் தூண்டும் நடவடிக்கைகளை நடத்தலாம் என்று எச்சரித்திருந்தது. பெப்ருவரி மாதம் இரகசியம் நீக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் நோர்வேயின் உளவுத்துறை பொலிஸ் அமைப்பு (PST) கூறியதாவது: “சில இஸ்லாமிய எதிர்ப்புக் குழுக்களிடையே ஒரு அதிகரித்த அளவிலான செயற்பாடு என்பது அதிகரித்த துருவமயமாவதற்கு வழிவகுக்கலாம் மற்றும் குறிப்பாக நினைவு நாட்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அமைதியின்மையடைகிறது.”

ஐரோப்பா முழுவதும் மற்றும் ஸ்கன்டிநேவிய அரசுகள் உட்பட, முஸ்லிம் எதிர்ப்பு இனவெறி, குடியேறுவோர் எதிர்ப்பு சோவினிசம் ஆகியவற்றை மன்னித்து அல்லது ஊக்கம் கொடுக்கும் வகையில் அரசாங்கங்களும் செய்தி ஊடகங்களும் நடந்துவரும் சூழலில் வெள்ளியன்று நிகழ்ந்த பயங்கரம் வெளிப்பட்டுள்ளது. மிகுந்த பிற்போக்குத்தன மற்றும் பின்தங்கிய உணர்வுகளுக்கு முறையீடு என்பது மக்களுடைய எதிர்ப்பு சிக்கன நடவடிக்களுக்கு எதிராக இருப்பதைத் திசை திருப்பவும், பெருகும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான உணர்வைத் திசை திருப்பும் வகையிலும்தான் உள்ளது.