சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Banks demand savage austerity measures in Greece

கிரேக்கத்தில் வங்கிகள் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை கோருகின்றன

By Patrick O’Connor 
31 May 2011

Use this version to print | Send feedback

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), சர்வதேச நாணய நிதியம் (IMF), மற்றும் ஐரோப்பிய ஆணையம் (EC) ஆகியவற்றின் அதிகாரிகள்; இந்த வாரம் ஏதென்ஸுக்கு கிரேக்க அரசாங்கத்துடன் மற்றொரு சுற்று மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தப்படுவதற்கான திட்டங்களை முடிவு செய்ய அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

மாபெரும் பொதுத்துறை பணியாளர்கள் நீக்கம், ஊதிய வெட்டுக்கள் மற்றும் பொதுநலச் செலவுகள், சமூகக் கட்டுமான திட்டங்கள் தகர்ப்புக்கள் ஆகியவற்றின் ஆரம்பச் சுற்றினால் கிரேக்க மக்களின் பரந்த அடுக்குகளை வறிய நிலைக்குத் தள்ளிவிட்டன. அப்படியிருந்தும் அது ஐரோப்பிய வங்கிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவைகள் இப்போது நாட்டின் பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கோருகின்றன. ECB, IMF மற்றும் EC (முக்கூட்டு என அழைக்கப்படுவது) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கிரேக்கத்தின் பொதுத்துறைச் சொத்துக்களை விற்று ஒரு தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு வங்கிகளுக்கு நிதிகள் மாற்றப்படுவதற்கு இப்பிரதிநிதிகள் நேரடிப் பொறுப்பில் இருத்தப்படுவார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக கிரேக்க அரசாங்கத்தின் உடனடி அக்கறை கூடுதல் நிதிக்கான விதிகளை இறுதிப்படுத்துவதாகும் இது 12 பில்லியன் யூரோக்கள் ($17 பில்லியன்) ஆக அடுத்த மாத இறுதிக்குள் கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது கடன் திருப்பியளிக்கப்படாமல் போவதை தவிர்ப்பதற்கும் கடன்களை திருப்பிக் கொடுப்பதற்கும் தேவைப்படும். இன்னும் கூடுதலான 30 பில்லியன் யூரோக்கள் அடுத்த ஆண்டு தேவைப்படும், 2013ல் அதையும் விட அதிகம் தேவைப்படும். IMF மற்றும் யூரோப் பகுதி அரசாங்கங்கள் ஒரு கடன் பொதியாக 110 யூரோக்கள் பில்லியன் கொடுத்திருந்த போதும், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட இலக்குகளை கிரேக்கம் அடையத் தவறிவிட்டது. நாடு இப்பொழுது தனியார் பத்திரச் சந்தைகளுக்கு 2012ல் மீண்டும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது கூட உண்மையில் நடக்கும் எனத் தோன்றவில்லை.

புதிய பிணை எடுப்புப் பொதியின் மையத்தில் ஒரு தனியார்மயமாக்குதலின் உந்துதல் உள்ளது. இது 2015 க்குள் 50 பில்லியன் யூரோக்களை திரட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான எரிசக்தி, நீர் நிறுவனங்கள், துறைமுகங்கள், முன்னாள் தொலைத்தொடர்பு ஏகபோக நிறுவனம், இரயில் நிறுவனங்கள் இன்னும் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய லாட்டரி மற்றும் விளையாட்டு பந்தய நிறுவனமான Opap போன்ற நிறுவனங்கள் விற்பனைக்கு உள்ளாவதில் இருக்கும். இதைத்தவிர, இன்னும் அதிகமாக செலவுக் குறைப்புக்களும் இருக்கும். 12 மாதங்களுக்கள் 6 பில்லியன் யூரோ அல்லது கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதத்திற்குச் சமமான தொகையாகும் இது. இதைத்தவிர தொழிலாள வர்க்கத்தை இலக்கு கொள்ளும் பிற்போக்குத்தனமான கட்டாய வரி உயர்வுகளும் இருக்கும்.

ஞாயிறன்று பைனான்சியல் டைம்ஸ், புதிய கடன்கள் வழங்குவதுகிரேக்கப் பொருளாதாரத்தில் முன்னோடியில்லாத வெளியார் தலையீட்டு நிபந்தணையையொட்டி இருக்கும். இதில் வரி வசூல் செய்வதில் சர்வதேச ஈடுபாடு, அரசச் சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படல் ஆகியவையும் அடங்கும்என்று எழுதியுள்ளது. நேற்று கிரேக்க நாளேடான கதிமெரினி, முக்கூட்டு (அதன் தனியார்மயமாக்கப்படுவதற்காக அமைக்கப்படும் குழுவின் பிரதிநிதிகள்) முடிவுகளின் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதையொட்டி அவர்கள் தங்களுக்கு உடன்பாடு இல்லாத நடவடிக்கைகளைத் தடுத்துவிட முடியும். அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எவரும் அந்த அமைப்பில் பங்கு பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அது எடுக்கும் முடிவுகள் மற்றொரு அரசாங்கம் வந்தால் மாற்றப்படாமல் இருக்குமாறு சட்டத்தின் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.”

இத்தகைய அசாதாரண நிகழ்வுகள் ஐரோப்பிய நிதியத் தன்னலக்குழுக்கள் கிரேக்கத்தின் தேசிய இறைமையின் அடிப்படை ஜனநாயக நெறிகள் மற்றும் கொள்கைகளை பாதுகாத்தல் என்ற போலித்தனத்தைக் கூட கைவிடுவதைத்தான் தெளிவாக்கியுள்ளன.

பெரும்பாலான மக்கள் திட்டமிடப்படும் நடவடிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கின்றனர். கடந்த ஏழு நாட்களாக இளம் மாணவர்களும் தொழிலாளர்களும் கிரேக்கப் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்ட அணிவகுப்பு செய்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் “Los Indignados” எதிர்ப்பு இயக்கத்திற்குப் பின்னர், தங்களைஇகழ்ச்சி காட்டுபவர்கள் (indignant)” என்று வெளிக்காட்டிக் கொள்ளும் இளைஞர்கள் சமூக இணைய தள வலைத் தளங்களின் மூலம் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளனர், தொழிற்சங்கங்கள் மற்றும் பாராளுமன்ற அரசியல் கட்சிகளிடத்தில் இருந்தும் சுயாதீனமாக செயல்படுகின்றனர்.

ஞாயிறன்று கிட்டத்தட்ட 50,000 எண்ணிக்கை என மதிப்பிடப்பட்ட மக்கள் கூட்டம் ஏதென்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. “கூட்டத்தில் இருந்த சில கோஷ அட்டைகள் காட்டிக் கொடுத்த எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவைக் காட்டவில்லை. இது பொதுவாக கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை அமைக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் இதில் பங்கு பெறாத நிலையைக் காட்டியது என்று கதிரமெரினியில் வந்துள்ள தகவல் ஒன்று குறிப்பிட்டுள்ளது. பல டஜன் மாணவர்களும் வேலையின்மையில் வாடுபவர்களும் இதைத் தொடர்ந்து நகரத்தின் மையச் சதுக்கத்தில் ஒரு கூடார நகரை நிறுவினர்.

EU-IMF ஆகியவற்றின் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கைக் கொண்டு பாப்பாண்ட்ரூ அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் வெகுஜன எதிர்ப்பு வெடிப்பைக் குறைக்கின்றன. கடந்த ஆண்டு தொடர்ச்சியான 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்டன. இவை வெறும் அடையாள நடவடிக்கைகள் என்றுதான் இருந்தன. வெட்டுக்கள் சுமத்தப்படுவதற்கு பாதிப்பு இல்லாமல் தொழிலாளர்கள் தங்களுடைய சிறிய சக்தியை வெளிப்படுத்தத்தான் இவைகள் அனுமதித்தன.

ஜூன் மாதம் இன்னும் அதிக வேலைநிறுத்தங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ADEDY பொதுத்துறைத் தொழிற்சங்கம் இந்த சனிக்கிழமை ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ADEDY தலைவர் இலியஸ் இலியோபௌலஸ் வெளிப்படையாக தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் ஒன்று வெளிப்படுவதைத் தடுப்பது தனது முக்கிய அக்கறை என்று விளக்கினார். “மக்களுக்கு எதிராக இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அவர்கள் தொடர்ந்தால் நாடு வெடித்தெழும்என்று இலியோபௌலஸ் யூரோ நியூஸ் வலைத் தளத்திடம் கடந்த வாரம் கூறினார். “மக்கள் எதிர்ப்பு ஏற்படும், அதை ஒட்டி கட்டுப்பாட்டிற்கு உட்படாத விளைவுகள் நிகழும்என்றார் அவர்.

சிக்கன திட்டத்திற்கு ஆதரவாக அரசியல் ஸ்தாபனம் தனக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று பிரதம மந்திரி அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்திய நாட்களில் பாப்பாண்ட்ரூ பெரும்பாலான கிரேக்கப் பாராளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தினார். இதில் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆன்டோனிஸ் சமரஸுடனான பேச்சுக்களும் அடங்கும். மற்றும் கிரேக்க ஸ்ராலினிச கட்சி, தீவிர வலதுசாரி LAOS கட்சி ஆகியவற்றின் தலைவர்களுடனான பேச்சுக்களும் அடங்கும். சமரஸ் தான் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கு இல்லை என அறிவித்தார். தான் சிக்கனத்தை ஏற்பதாகவும் வரி உயுர்வுகளை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். பெருநிறுவன வரிவிதிப்பு 15 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஐரோப்பிய வங்கியாளர்களிடம் இருந்து பாப்பாண்ட்ரூவின் கொள்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் சமரஸ் உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, நிதியப் பிரிவின் ஆணையர் ஒல்லி ரெஹ்ன் அனைத்துக் கட்சிகளும் உடன்படுவதுமிகவும் முக்கியம்என்று அறிவித்தார்.

இந்த நெருக்கடி ஐரோப்பிய சக்திகளிடையேயுள்ள ஆழ்ந்த பிளவுகளை மேலும் அம்பலப்படுத்தியுள்ளன. ஜேர்மனிய அரசாங்கம் கிரேக்கத்திற்கு கூடுதல் கடன்கள் விரிவாக்கப்படுவதற்கு சில கடன் முறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. இதில் தனியார் கடன் பத்திரம் வைத்திருப்போருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் உள்ளது. இதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அது தரம் பிரிக்கும் அமைப்புக்களின் எச்சரிக்கையை உயர்த்திக் காட்டியுள்ளது. எவ்வித மறு சீரமைப்பும்கடன் நிகழ்வு என முத்திரையிடப்படுவது, அதாவது கடன் செலுத்துவதில் தோல்வி என்பதற்கு சமமாகிவிடும் என்று எச்சரித்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுவதாவது: “கடன் சீரமைப்பு மிகக் குறைந்தது என்றாலும், கிரேக்கத்தின் வங்கி முறையை கரைப்பிற்கு உள்ளாக்கிவிடும், ஐரோப்பாவில் கடன்பட்டுள்ள நாடுகளில் நிதியப் பீதியை ஏற்படுத்திவிடும் என்று ECB கடுமையாக எச்சரித்தது.”

ECB அதிகாரிகள் ஜேர்மனிய அதிகாரிகளை பெரிதும் கண்டித்துள்ளனர். வங்கி நிர்வாகக் குழு உறுப்பினரான Lorenzo Hini Smaghi பைனான்சியல் டைம்ஸிடம்,  “ஒரு கடன் மறுசீரமைப்பு அல்லது யூரோவிலிருந்து அகற்றப்படுவது என்பது மரண தண்டனைக்கு ஒப்பாகும்அதை நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீக்கிவிட்டோம்.” ஒருஒழுங்கானகடன் சீரமைப்பு என்பதுவளமான கடை என்று விவரித்த பினி ஸ்மகி பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று எவரேனும் கற்பனை செய்தால் அவர்கள்செப்டம்பர் 2008 நடுவில் சந்தைகள் லெஹ்மன் பிரதர்ஸின் தோல்வியைத் தாங்க முழுமையான தயாரிப்பில் உள்ளது என்று கூறுபவர்களை ஒத்து இருக்கும்என்றார்.

ECB மற்றும் பிரெஞ்சு வங்கிகள் கிரேக்கக் கடன் மறுசீரமைப்பில் பெரிதும் பாதிக்கப்படும். ஜேர்மனிய வங்கிகள் சிறிய அளவுபாதிப்பைத்தான்பெறும். மேலும் அவை சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கத்தினால் இழப்புக்களுக்கு உதவி நிதியையும் பெறலாம் என எதிர்பார்க்கும். ஜேர்மனி மற்றும் இதன் சிறிய யூரோப் பகுதி நட்பு நாடுகளைப் பொறுத்தவரை கிரேக்க மறுசீரமைப்பிலுள்ள ஆதாயம் அத்தகைய நடவடிக்கை பிரான்ஸ் மற்றும் போட்டி சக்திகளின் வங்கிகளுக்குள் தங்களுடைய செலுத்தப்படும் பொது நிதிகளின் அளவு கணிசமாகக் குறையலாம் என்பதாகும்.

இந்த வேறுபாடுகள் ஜூன் 20ம் திகதி நடக்கவிருக்கும் யூரோப் பகுதி நிதி மந்திரிகள் கூட்டத்திலும், ஜூன் 23-24 திகதிகளில் நடக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய அரச மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் கூட்டத்திலும் தீர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய வங்கி முறையில் பெருகிய நெருக்கடிக்கு எந்தப் போட்டிச் சக்தியிடமும் ஒரு விடை இல்லை. அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் இன்னும் பிற பொருளாதாரங்களில் பெருகும் கடன்கள் பற்றிய அச்சங்கள் அதிகரித்துள்ளன. இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகள் வேண்டும் என்று கூக்குரல்கள் எழுந்துள்ளன. இவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதை தவிர தேவை எனப்படுகின்றன. அவையே தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை வரலாற்றுத்தன பின்னடைவிற்குத் தள்ளிவிட்டன.

வேறுபாடுகள் எப்படி இருந்தாலும், அனைத்து முக்கிய சக்திகளும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதின் தேவையில் உடன்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த நிதியத் தன்னலக்குழு நடத்தும் தாக்குதல் ஐரோப்பா முழுவதும் பெருகி வரும் எதிர்ப்புக்களை அடக்குதல் என்பதைத்தான் கொண்டுள்ளன. ஸ்பெயினின் சிக்கன எதிர்ப்பு இயக்கம் அரபு எழுச்சிகளினால் ஊக்கம் பெற்றது. அதுவோ பல ஐரோப்பிய நாடுகளில் அதேபோல் வந்த நிகழ்வுகளினால் தூண்டுதல் பெற்றிருந்தது.