சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish anti-austerity protests spread to more cities

ஸ்பெயினில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மேலும் பல நகரங்களுக்குப் பரவுகின்றன

By our reporters
31 May 2011

Use this version to print | Send feedback

ஞாயிறு மாலை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மே 15 வெகுஜன ஆர்ப்பாட்டத்தை உடனடியாகத் தொடர்ந்து நிறுவப்பட்ட மட்ரிட்டின் Puerta del Sol சதுக்கத்தின், “முகாம் நகரத்தில் தொடர்ந்து ஆக்கிரமிக்கலாம் என்று வாக்களித்தனர்.

அங்கேயே தொடர்வதற்கு வாக்களித்தபின், எதிர்ப்பாளர்கள்நாங்கள் செல்லவில்லை! நாங்கள் செல்லவில்லை!” என்று கோஷமிட்டனர்.

இந்த அணிவகுப்பு தலைநகரில் வார இறுதியில் நடைபெற்ற கிட்டத்தட்ட 120 எதிர்ப்புக்களின் உச்சக் கட்டம் ஆகும். பார்ஸிலோனா, செவைல், வலென்சியா மற்றும் லோக்ரோனோ உட்பட ஸ்பெயினின் முக்கிய நகரங்களிலும் சிறு நகரங்களிலும் எதிர்ப்புக்கள் தொடர்கின்றன.

நாங்கள் Puerta del Sol இல் ஒன்றைத் தொடக்கியுள்ளோம். உலகம் முழுவதும் பரவப் போகும் இதை நாங்கள் தொடக்கியுள்ளோம். எனவே இதை நிறுத்துவதற்கு இப்போது உகந்த நேரம் இல்லை. சர்வதேச அளவில் நாங்கள் பெறும் ஆதரவு மிகவும் முக்கியம், இதுதான் எங்களை Puerta del Sol லிற்கு நகரச் செய்துள்ளது. குறிப்பாக பாரிஸ் திரண்டது இதற்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. கிரேக்கத்திலும் மக்கள் குழுமியதும் இதற்கு ஆதரவு ஆகும்என AFP செய்தி நிறுவன Puerta del Sol செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாகத் தெரிவித்துள்ளது.

தற்பொழுது நாங்கள் இங்கு காலவரையின்றித் தொடர்வதாக உள்ளோம். நிகழ்வுகளைப் பொறுத்துப் பின்னர் நாங்கள் முடிவெடுப்போம்என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

குழுமியவர்கள் கடுமையான பொலிஸ் மற்றும்பொலிஸ் அடக்குமுறையை எதிர்ப்புக்களின் போது எதிர்கொண்டவர்களுக்கு புகழாரம் தரும் வகையில் ஒரு நிமிட மௌனம் கடைப்பிடித்தனர். கடலுன்யாவிலுள்ள பார்ஸிலோனா ப்ளாசாவும் இதில் அடங்கும். வெள்ளியன்று பார்ஸிலோனாவில் பொலிசார் சதுக்கத்தில் இருந்து மக்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டனர். சனிக்கிழமை மாலை சம்பியன் லீக் கால்பந்து இறுதிப் போட்டி FC Barcelona வுக்கும் மான்செஸ்டர் யுனைட்டெட்டிற்கும் வெம்பிளியில் நடப்பது போலிக்காரணமாகக் கூறப்பட்டது. கிட்டத்தட்ட 120 மக்கள் கலகப்பிரிவுப் பொலிசார் தாக்கியபோது காயமுற்றனர். இவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தடிகளால் தாக்கினர், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

தாக்குதலைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ப்ளாசா டெ கடலுன்யாவிற்குத் திரும்பி வார இறுதியிலும் அங்கு எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.

சோசலிஸ்ட் கட்சி (PSOE) அரசாங்கம் சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வந்துள்ள மக்கள் சீற்றத்தால் இந்த எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இது குறிப்பாக இளைஞர்களைப் பாதித்துள்ளது. அவர்கள் கிட்டத்தட்டத 50 சதவிகிதம் என்ற அளவில் வேலையின்மையை எதிர்கொண்டுள்ளனர். Puerta del Sol ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள்சீற்றம் அடைந்த இளைஞர்கள் ஆவார்கள்.

ஆரம்ப வெகுஜன எதிர்ப்புக்கள் பல உட்பிரிவுத் தலைமையைக் கொண்ட செயற்பாடுகளினால் தொடக்கப்பட்டவை ஆகும். முகாம் நகரம் பலகூட்டுப்பிரிவுகளைக் கொண்டுள்ளதுஇதில் பெண் உரிமை ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் குழுக்கள் மற்றும்இப்பொழுதே உண்மையான ஜனநாயகம்—DYR குழு ஆகியவை உள்ளன. “நகரத்தில்பல சிறு கடைகள் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சட்டப்பூர்வ ஆலோசனை பெறலாம். அங்கு தொலைத்தொடர்புப் பகுதி ஒன்றும் உள்ளது. மேலும் உணவு உட்கொள்ள, உடைகளைச் சலவை செய்ய வசதிகள் உண்டு. ஒரு நூலகமும் உள்ளது.

“M 15” இயக்கத்தினால் உந்துதல் பெற்றுள்ள எதிர்ப்புக்கள் கடந்த வாரம் பல ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளன. இவற்றுள் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் அடங்கும். கிரேக்கத்தில் 30,000 பேர் தேசிய அளவில் கடந்த வாரம் எதிர்ப்பில் ஈடுபட்டனர். சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் சுமத்தியுள்ள சிக்கனத் திட்டத்தை எதிர்த்து 15,000 பேர் ஏதென்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் இதில் அடங்கும். ஞாயிறன்று கிட்டத்தட்ட 24,000 பேர் ஏதென்ஸின் மத்திய சின்டக்மா சதுக்கத்தில் கூடினர். 1,500 பேர் அடங்கிய ஆர்ப்பாட்டம் ஒன்று வட கிழக்கு கிரேக்க நகரமான தேசலோனிகியில் நடைபெற்றது.

 

உலக சோசலிச வலைத் தள  நிருபர்கள் மட்ரிட் கூட்டத்தில் கலந்து கொண்ட டானியாவிடம் பேசினர். அவர்  Confederacion Nacional del Trabajo எனப்படும் தேசியத் தொழிற் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவார். இது தற்பொழுது அதன் அராஜகவாத-சிண்டிகலிசக் கருத்துக்களின் செல்வாக்கிற்குத் தெளிவாக உட்பட்டுள்ளது.

Tania (centre) with friends at the Puerta del Sol
Puerta del Sol
இல் Tania (மத்தியில்) அவருடை நண்பர்களுடன்.

இங்கு நான் எதிர்ப்புத் தெரிவிப்பில் என்ன நடக்கிறது என்பதைக் காண வந்தேன். கடந்த வாரம் இங்கு பிற சதுக்கங்களில் நடக்கும் மற்ற கூட்டங்களுக்குச் சென்றிருந்தேன். இச்சதுக்கத்தில் நடப்பதையும் விட அதிகச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நிறையக் கூட்டங்கள், பொருளாதாரக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் என்று உள்ளன.

நகரத்தில் இரு வேறு செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மே 15ம் திகதி இணைய தளம் மற்றும் பேஸ் புக்கில் தொடங்கிய பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின் 40 பேர் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அங்கேயே தங்க முடிவெடுத்தனர். அங்கேயே தூங்குவது என்று முடிவு எடுத்தவுடன் இது தொடங்கியது. அவர்கள் இப்பொழுது நீங்கள் காண்பதைக் கட்டமைக்கத் தொடங்கினர்.

அவர்கள் சுயமாக தங்களை அமைப்பாக்கிச் செயல்படுவது, சமதளத்தில் பரவுவது என்ற முடிவை எடுத்தனர். அதிகாரப் படிநிலை கிடையாது, அரசியல்வாதிகள் கூடாது என்ற முடிவைக் கொண்டனர். அதன் பின் நிலைமை பற்றி எதிர்ப்புத் தெரிவிக்க முடிவெடுத்தனர், ஊழல் பற்றியும் அரசியல் கட்சிகள் பற்றியும், வேலையின்மை பற்றியும், ஒவ்வொரு நாளும் மோசம் அடைந்துவரும் ஸ்பெயினின் பொருளாதார நிலைமை பற்றியும் எதிர்ப்புத் தெரிவிக்க முடிவெடுத்தனர்.”

இப்பொழுது நடப்பது அந்த இயக்கம் மையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளது என்பதுதான். மக்கள் அண்டைப் பகுதிகளுக்கும் செல்ல விரும்புகின்றனர். இங்கு தொடர்ந்து தங்குவதென்று அவர்கள் முடிவெடுத்துவிட்டனர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது நாங்களும் அண்டைப் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க உதவப் போகிறோம். உதாரணமாக பல குடும்பங்கள் தங்கள் வருமானங்களை இழந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் வலையமைப்பை அமைத்து தெருக்களில் மக்கள் தூங்காமல் இருக்க உதவுவோம்.”

ஸ்பெயினின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி எதிர்ப்பாளர்களின் மனப்பாங்கைப் பற்றிக் கேட்டபோது, டானியா கூறினார்: “இங்கு பலவிதக் கருத்துக்கள் உள்ளன. சிலர் அமைப்பு முறையை சீர்திருத்த வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றவர்கள் அமைப்பு முறை முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என விரும்புகின்றனர். சிலர் அமைப்பு முறையை வேரில் இருந்து உயர்நிலை வரை மாற்ற வேண்டும் என விரும்புகின்றனர். சிலர் அடித்தளத்தில் என்ன செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்க விரும்புவதாகக் கூறுகின்றனர்.

“PSOE மற்றும் கன்சர்வேடிவ் மக்கள் கட்சி (PP) இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன என்று நான் நினைக்கிறேன். அவை முடிவெடுப்பதில்லை. ஏனெனில் முடிவெடுக்க வேண்டியவர்கள் இவர்களைவிட உயர்மட்டத்தில் உள்ளனர். உதாரணமாக முந்தைய அரசாங்கம் PP உடையது, எல்லா வங்கி ஊகச் செயற்பாடுகளையும் செய்தது. இப்பொழுது PSOE வங்கி இழப்புக்களைச் சமூகமயமாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. PSOE வங்கிகளைக் காப்பாற்றுவதற்குப் பொதுப் பணத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நெருக்கடியை நாம் ஏற்படுத்தவில்லை. ஆனால் கடனைத் தீர்ப்பதற்காக வேலையின்மை, பொதுத்துறை தனியார்மயமாக்கப்படல், பணவீக்கம் ஆகியவற்றை விலையாகக் கொடுக்க உள்ளோம்.”

அதன் பின், “பார்ஸிலோனாவில் பொலிசார் நடத்திய தாக்குதல் சீற்றம் விளைவிப்பது என நான் நினைக்கிறேன், ஏனெனில் இது ஒரு அமைதியான இயக்கம் ஆகும். வங்கியாளர்கள்தான் வன்முறையில் ஈடுபடுபவர்கள். உலகில் போர்களை நடத்துபவர்கள். பார்ஸிலோனாவில் மக்கள் செய்தது எதிர்ப்பைக் காட்டுவதுதான். ஏனெனில் அவர்கள் வெளியேற விரும்பவில்லை, பொலிசாருக்கு அவர்கள் கூறுவது போல்சதுக்கம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்என்ற உத்தரவு இருந்தது.”

 

தொழிற்சங்கங்கள் குறித்து எதிர்ப்பாளர்களின் அணுகுமுறை எப்படி எனக் கேட்கப்பட்டதற்கு, டானியா விடையிறுத்தார்: “எதிர்ப்பாளர்கள் தொழிற்சங்கங்களை வெறுக்கின்றனர். CCOO [ஸ்ரானிலிசச் சார்பு உடையது] மற்றும் UGT [PSOE ஆதிக்கத்தில் உள்ளது] இரண்டுமே மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் அரசாங்கத்திடமிருந்து நிறைய நிதி பெறுகின்றன, அரசியல் முறைக்கு ஆதரவு கொடுக்கின்றன. ஒரு முறை ஒரு தொழிற்சங்கம் தொழிலாளர்கள் வேலையிழந்தும் கூட நிதி பெற்றது.  தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.