சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s illegal war against Libya

லிபியாவிற்கு எதிரான ஒபாமாவின் சட்டவிரோதப் போர்

8 June 2011
Patrick Martin

Use this version to print | Send feedback

காங்கிரஸின் ஒப்புதலைக் கோராமலும், பெறாமலும் அறிவிக்கப்படாத போர் ஒன்றை லிபியா மீது நடத்துவது அமெரிக்க அரசியலமைப்பையும் போர் அதிகாரங்கள் சட்டங்களையும் (War Powers Act) மீறிய ஒபாமா நிர்வாகத்தின் செயற்பாடு என்னும் குற்றச்சாட்டுக்களை நிர்வாகம் உதறித்தள்ளியுள்ளது. ஜனாதிபதி, போர்புரியும் அதிகாரத்தில் உள்ள சட்டப்பூர்வ தடையை இப்படி வெளிப்படையாக மீறுவது என்பது, அமெரிக்க ஜனநாயகம் பல தசாப்தங்களாக விரிவடைந்துவரும் நீண்ட வீழ்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை காட்டுகின்றது.

முயம்மர் கடாபியின் லிபிய ஆட்சிக்கு எதிராக தலையிடுவதற்கு வலுவான நிலைப்பாட்டை நிர்வாகம் காட்டவில்லை என்றும் அமெரிக்க-நேட்டோப் போரின் நோக்கம் மற்றும் எதிர்காலத் தன்மை பற்றிய தொடர்ந்த விமர்சனங்களுக்கு விடையிறுக்குமாறு மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியபின் திங்களன்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே, செய்தியாளர் கூட்டத்தில் அப்பிரச்சினை பற்றிப் பேசினார்.

சட்ட ஆலோசகரின் அலுவலகத்தில் இருந்து சட்டபூர்வக் கருத்தை நிர்வாகம் கோரியதா என்று கார்னே நேரடியாக கேட்கப்பட்டதுடன், அல்லது இது போர் அதிகாரங்கள் சட்டத்திற்கு உட்பட்டுள்ளதா என்றும் வினவப்பட்டார். போர் அதிகார சட்டத்தின்படி ஆரம்பிக்கப்படும் எந்த இராணுவ நடவடிக்கைக்கும் ஜனாதிபதி 60 நாட்களுக்குள் சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். இக்காலக்கெடு மே 20ல் முடிந்துவிட்டது.

எவ்வித சிறப்பு வழிகாட்டு நெறியையும் நாங்கள் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் போர் அதிகாரங்கள் தீர்மானத்துடன் இணைந்த வகையில்தான் நாங்கள் நடக்கிறோம் என்று நம்புகிறோம். இதற்கு காங்கிரசுடன்கலந்து ஆலோசித்தல்தேவை என்று அவர் பலமுறை அறிவித்தார். இது லிபியாமீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதலுக்கு முறையான காங்கிரஸ் வாக்கெடுப்பைப் பெறவேண்டும் என்ற சட்டப்பூர்வ கடமையை வெளிப்படையாக தவிர்த்தல் ஆகும்.

இதே போன்ற கருத்தைப் பல முறை கார்னே கூறியதும், மற்றொரு நிருபர்: “நீங்கள் ஒன்றும் மன்றத்தின் இத்தீர்மானத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகக் காட்டவில்லைஎன்றார். எந்தச் செய்தி ஊடகப் பிரதிநிதியும் வெள்ளை மாளிகையின் நடத்தை பெரிய குற்றவிசாரணைக்கு உட்படுத்தக்கூடிய செயல் என்று கூறுவது ஒருபுறம் இருக்க, சட்ட விரோதம் அல்லது அரசியலமைப்பிற்கு முரணானது என்று தெரிவிக்கவில்லை.

லிபாயிவிற்கு எதிரான அறிவிக்கப்படாத போர் எழுப்பும் அடிப்படை அரசியலமைப்புப் பிரச்சினைகள் ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட்டில்  தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கக் கட்டுரையில் செனட் வெளியுறவுக் குழுவில் குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டர் ஆக இருக்கும் ரிச்சார்ட் லுகரால் எழுப்பப்பட்டது. “இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ஒபாமா நிர்வாகம் போருக்குச் செல்வதற்கு ஒரு ஜனாதிபதி காங்கிரஸின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்னும் தெளிவான அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற நிலைப்பாட்டை ஒதுக்கி வந்துள்ளதுஎன்று அவர் சுட்டிக்காட்டினார்.

லிபியாவிற்கு எதிரான போருக்கும் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கும் ஆதரவு கொடுக்கும் லுகர், போருக்கான மக்கள் ஆதரவை இல்லாதொழிக்கிறார் என்று கவலைப்படுகிறார். “ஜனாதிபதி தன் நிலைப்பாட்டை காங்கிரஸிற்குத் தெரிவிக்கவில்லை என்பதால், அமெரிக்க மக்களுக்கு லிபியாவில் எந்த அமெரிக்க நலன்கள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை, இதற்கு எவ்வளவு செலவு ஆகும், வேறு எந்த முன்னுரிமைகள் இதற்காகத் தியாகம் செய்யப்படுகின்றன என்பவையும் தெரியவில்லைஎன்று அவர் எழுதியுள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு திங்களன்று லுகரின் அரசியலமைப்பு மன உளைச்சல்கள் பற்றி விடையிறுத்தது. அன்றைய தலையங்கத்தில் அது ஒபாமா காங்கிரஸை மீறுவதில் அதிகளவு செல்லவில்லை என்றும் அது விமர்சித்தது. “ஒபாமா தன் பதவியின் அதிகாரங்களைக் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவர் தொடங்கும் போரில் வெற்றி அடைய வேண்டிய கட்டாயமும் உண்டுஎன்று செய்தித்தாள் எழுதியது. அது மேலும் கூறுவது: “திரு.ஒபாமாவும் அவருடைய சட்ட ஆலோசகர்களும் போர் அதிகாரங்கள் தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது, ஜனாதிபதி அதனால் அதற்கு கட்டுப்பட்டவர் அல்ல என்று தாங்கள் நம்புவதாக வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் வெள்கை மாளிகை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அதன் தேவையை விளங்கப்படுத்த உதவமுடியும்.”

அப்பட்டமாகக் கூறவேண்டும் என்றால், வெள்ளை மாளிகையில் இருப்பவர் காங்கிரஸிற்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள போரை நடத்தும் அதிகாரத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக எந்தச் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் (கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரிய அதிகாரத்தையும்) ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரம் கொண்டுள்ளது என்று ஜேர்னல் வாதிடுகிறது.

அமெரிக்க அரசியலமைப்பின் முதல் விதி, எட்டாம் பிரிவு ஜனாதிபதிக்கு இல்லாமல் காங்கிரஸிற்குத்தான் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இதில் ஒரு அடிப்படை ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. அமெரிக்க அரசியலமைப்புத் தன்மையின்படி ஜனாதிபதி பிரிட்டிஷ் அரசருக்கு ஒப்பானவராவார். பல நூற்றாண்டுக்கால போராட்டங்களுக்குப் பின், 1640-48 ஆங்கிலப் புரட்சி ஏற்பட்டு மன்னர் முதலாம் சார்ல்ஸ் தூக்கிலிடப்பட்ட பின்னர்தான் அரசரின்தனிச்சிறப்பு உரிமையான பாராளுமன்றத்தின் அனுதியில்லாமல் போரைத் ஆரம்பித்தல் என்பது இனிஇயலாது என முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஒன்றரை நூற்றாண்டிற்கும் மேல் அமெரிக்க அரசாங்கம் இந்த அரசியலமைப்பு நெறியை பின்பற்றி வந்துள்ளது. ஆனால் ஒரு முதல் உலக சக்தி என்ற அந்தஸ்திற்கு அமெரிக்கா ஏற்றம் பெற்று பின்னர் உலக மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைந்தது. இது, உள்நாட்டில் மக்கள் உணர்வு எப்படி இருந்தாலும், அரசியல் தடைகள் எப்படி இருந்தாலும் ஆளும் வர்க்கத்தின் அதிகரித்துவரும் நலன்களுக்கு ஜனாதிபதி உலகெங்கிலும் இராணுவச் சக்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு முக்கியமாயிற்று.  

காங்கிரஸினால் பிரகடனம் செய்யப்பட்ட கடைசிப் போர் இரண்டாம் உலகப் போர்தான். அதன் பின்னர் நடந்த மோதல்கள் அனைத்தும் அறிவிக்கப்படாதவை. பொதுவாக ஒரு ஜனாதிபதி இராணுவ நடவடிக்கை எடுப்பது என்று முடிவிற்கு வந்தபின் காங்கிரஸ் அதற்கு ஒப்புதல் கொடுத்து தீர்மானங்களை இயற்றிவிடும் என்ற நிலை இருந்தது.

வியட்நாம் தோல்வியைத் தொடர்ந்து, மூன்று நிர்வாகங்களால் பிரகடனப்படுத்தப்படாத போர்கள் நடந்தன. ஜனநாயக மற்றும் குடியரசு ஆட்சிகள் வெள்ளை மாளிகையில் இருந்தன. எனவே காங்கிரஸ் 1973ம் ஆண்டு போர் அதிகாரங்கள் சட்டம் என்பனதை இயற்றியது. இது ஜனாதிபதியின் முனைப்பினால் தொடக்கப்படும் அறிவிக்கப்படாத போர்களின் வரம்புகளை நிர்ணயித்தது. இதன்படி சட்டம் நிர்ணயித்துள்ள 60 நாள் கெடுவிற்கும் ஜனாதிபதி காங்கிரஸின் ஒப்புதலைப் பெறத் தவறினால், அமெரிக்க இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு 30 நாட்கள் அவகாசத்தை பெறுவார்; அதற்குப் பின் போர் நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 38 ஆண்டுகளாக, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகள் எரிச்சலுடன் போர் அதிகாரங்கள் சட்டத்தின்படி நடந்து கொண்டனர். சட்டத்தில் கோரப்பட்டுள்ளபடி, அவர்கள் காங்கிரசிற்கு முறையான அறிவிப்பை இராணுவ நடவடிக்கை பற்றிக் கொடுத்தனர். அதே நேரத்தில் விரும்பியபோது இராணுவச் செயற்பாடுகளை தொடங்கும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ் கூட ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தன் போர்களை ஆரம்பிக்குமுன் காங்கிரஸின் தீர்மானங்களை நாடிப் பெற்றார். சட்டமன்றப் பிரிவிடம் இருந்து ஆதரவுத் தீர்மானம் பெறக்கூட முயற்சி செய்யாமல் ஒரு பெரிய போரில் ஈடுபட்டிருக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான்.

இந்த நடவடிக்கையும் மற்றும் அதன் தன்மையும் புஷ்-ஷென்னி ஆட்சியில் இழிந்த வெளிப்பாட்டைக் கண்ட இராணுவவாத, ஜனநாயக-விரோதப் போக்குகள் தொடர்தல், தீவிரமடைதல் என்பதைத்தான் ஒபாமா நிர்வாகமும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் முக்கிய அக்கறை உடைய ஒவ்வொரு துறைகளான வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு, ஈராக், ஆபிரிக்க மற்றும் இப்பொழுது லிபியப் போர், கூட்டாட்சி அரசாங்கத்தின் அடக்குமுறைச் சக்திகள் கட்டமைக்கப்படல், உள்நாட்டில் சமூகநலத் திட்டங்களின் மீது தாக்குதல் போன்ற அனைத்திலும் ஒபாமா இன்னும் வலதிற்குத்தான் திரும்பியுள்ளதைக் குறிக்கிறார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாளர்களின் சமூக நலன்களை பாதுகாத்தல் ஆகியவை அனைத்திற்கும் தொழிலாள வர்க்கம் ஒபாமா நிர்வாகத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தி, ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு, சோசலிச, சர்வதேச முன்னோக்கின் அடித்தளத்தில் வெகுஜன, சுயாதீன, அரசியல் இயக்கத்தை தொழிலாளர்களுக்குக் கட்டமைக்க வேண்டும் என்பது தேவையாகிறது.                                 

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்
The Libyan war and American democracy