சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union officials demand brutal austerity in Greece

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரேக்கத்தில் மிருகத்தனமான சிக்கனங்களை கோருகின்றனர்

By Stefan Steinberg
8 June 2011

Use this version to print | Send feedback

திங்களன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பொருளாதாரக் குழு நடாத்திய கூட்டதில் முக்கிய ஐரோப்பிய அதிகாரிகள் கிரேக்க அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டில் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் புதிய சுற்று சுமத்தப்படுவது பற்றி ஒருமித்த கருத்தை அடையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இத்தகைய நடவடிக்கைகளின் இதயத்தானத்தில் கிரேக்கப் பொதுத் துறையின் பெரும் பிரிவுகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளது. மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வங்கிகளின் ஆணையில் கோரும் வெட்டுக்கள் ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒப்பானதாக உள்ளன.

திங்களன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரக் குழுக் கூட்டத்தில் யூரோக்குழுவின் தலைவரான Jean-Claude Juncker, சர்வதேச நாணய நிதி (IMF) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளிலும் கடுமையான சிக்கனத் திட்டங்களை சுமத்துவதற்கு அனைத்து அரசியல் பிரிவுகளின் ஒருமித்த உணர்வைக் கொண்டுள்ளதாக கூறினார். இப்பொழுது அனைத்து கிரேக்க அரசியல் கட்சிகளும் இதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இடர்பாடுகள் இருக்கும் நாடுகளில், அந்நாட்டிலுள்ள முக்கிய அரசியல் சக்திகள் பின்பற்ற வேண்டிய வழிபற்றி உடன்பாடு கொள்ளுதல் அறிவுடைமையாக இருக்கும்என்றார் Junker. “அதைத்தான் நாம் போர்த்துக்கல்லில் செய்தோம். அயர்லாந்திலும் அதுதான் நடைபெற்றது. அதைத்தான் கிரேக்கத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் செய்யவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”

Junker உடைய அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய பொருளாதார விவகாரங்கள் ஆணையர் ஒல்லி ரெஹ்ன் ஒப்புதல் கொடுத்தார். அவரும் கிரேக்க அரசியல்வாதிகள் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்குதலில் ஓர் அரசியல்ரீதியான ஒருமித்த உணர்வை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Junker மற்றும் ரெஹ்ன் ஆகியோர் திங்களன்று கூறிய கருத்துக்கள் முக்கியமாக கிரேக்கத்திலுள்ள எதிர்க்கட்சிகளை இலக்கு கொண்டன. அவை கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ அறிவித்துள்ள சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் சுற்று பற்றி சில எதிர்ப்புக்களை எழுப்பியுள்ளன. கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சி அதன் பெருநிறுவன ஆதரவாளர்களுக்கு வரிவிதிப்புக்களை சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கு ஈடாக அளிக்குமாறு கோரியுள்ளது.

ஆளும் PASOK கட்சியின் சில உறுப்பினர்களும் பாப்பாண்ட்ரூவின் சிக்கன நடவடிக்கைச் செயற்பட்டியல் பற்றி சில உளைச்சல்களை கொண்டுள்ளனர். ஏதென்ஸின் நாளேடான கதிமெரினி PASOK பாராளுமன்ற உறுப்பினர்கள்புதிய குறிப்பை அவர்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் அரசியலில் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு ஒப்பாகும் என அறிந்துள்ளனர்என்று எழுதியுள்ளது.

எப்படியும், பாப்பாண்ட்ரூ செவ்வாயன்று இன்னும் கூடுதல் வரிவிதிப்புக்களையும் பொதுநலச் செலவுகள் குறைப்பையும் அறிவித்தார். இவை அரச வரவு செலவுத் திட்டத்திலிருந்து இன்னும் 6.4 பில்லியன் யூரோக்களைக் குறைக்கும் நோக்கத்தை உடையவை.

2015க்குள் 50 பில்லியன் யூரோக்களை திரட்டுவதற்காக அரசாங்கத்திற்கு முழுவதும் அல்லது பகுதி சொந்தமான 30க்கும் மேற்பட்ட வணிகங்களை விற்பதின் மூலம் அடைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார். இவற்றுள் தண்ணீர் நிறுவனங்கள், பைரீயஸ் மற்றும் தெசலோனிகி துறைமுகங்கள், ஏதென்ஸின் குதிரைப் பந்தய மைதானம், போஸ்ட்பாங்க், ஒரு காசினோ மற்றும் OPAP லாட்டரி நிறுவனம் ஆகியவை உள்ளன. அரசிற்குச் சொந்தமான இரயில் போக்குவரத்து முறைக்கு ஒரு முதலீட்டாளரையும் அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கிறது.

பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தின் கூற்றுப்படி, பாப்பாண்ட்ரூவின் திட்டங்கள் முற்றிலும் போதுமானவை அல்ல என்று உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு ஒரு புதிய கடன் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கான முக்கிய நிபந்தனை இன்னும் கடுமையான அளவில் தனியார்மயமாக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதில் நாட்டின் மிக மதிப்புடைய சமூகத்திற்குத் தேவையான சொத்துக்களும் அடங்கும்.

பல முக்கிய யூரோப்பகுதி நாடுகள் கிரேக்கப் பொதுச் சொத்துக்களை விரைவில் விற்பதற்கான வகையில் சிறப்பு அறக்கட்டளை ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவைக் கொடுத்துள்ளன. செவ்வாயன்று Suddeutsche Zeitung ல் வந்துள்ள அறிக்கை ஒன்றின்படி, திட்டமிடப்பட்டுள்ள அறக்கட்டளை கூடுதலான அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் விற்பனைக்குப் பொறுப்பு ஏற்கும். இவற்றுள் மருத்துவமனைகள் மற்றும் பஸ் நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இக்கட்டுரை கிரேக்க அரச சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 300 பில்லியன் யூரோக்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றுகுறிப்பிடுகிறதுஇது பாப்பாண்ட்ரூ திரட்ட விரும்பும் 50 பில்லியன் யூரோக்களைவிட மிகவும் அதிகமாகும்.

இக்கட்டுரை பங்குகளை வெளியிடும் முனைப்பு அறக்கட்டளைக்கு வேண்டும் என்பதை விரிவாகக் கூறுகிறது. அறக்கட்டளை அவற்றை உடனடியாக அக்கறை உடைய நபர்களுக்கு விற்றுவிடலாம். இது கிரேக்க அரசாங்கத்தின் மீது கூடுதலான அழுத்தம் கொடுக்கும் வழிவகை என்று கருதப்படுகிறது. இதையொட்டி தனியார்மயமாக்கல் விரைவிலும் கடுமையாகவும் செயல்படுத்தப்பட முடியும்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மற்றும் யூரோப்பகுதி அரசாங்கங்களின் சமீபத்திய திட்டங்கள் ஓரளவு சர்வாதிகாரச் சக்திகளை தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புக்களுக்கு வழங்கும். அவை சமூகத்திற்கு தேவையான நிறுவனங்கள், பணிகள் என்று உள்ள மருத்துவமனைகள், எரிசக்தி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றை அதிக விலைக்கு ஏலம் கேட்போருக்கு விற்றுவிடும். இதன் விளைவு அடிப்படைப் பணிகளுக்கு உயர்ந்த அளவு நுகர்வோர் விலை கொடுக்க வேண்டும் என்பதுடன் தேவை உடையவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள பாதுகாப்பு வலை முற்றிலும் தகர்க்கப்பட்டுவிடும் என்பதாகும்ஏற்கனவே இப்பிரிவினர் வெகுஜன வேலையின்மையின் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.

Junker மற்றும் ரெஹ்ன் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் கூறிய கருத்துக்கள் கிரேக்கத்தின் முழு அரசியல் ஸ்தாபனமும் சமூக எதிர்ப்புரட்சி என்னும் இத்திட்டத்திற்கு இணங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் இலக்கைக் கொண்டவை. இத்திட்டமோ தேர்ந்தெடுக்கப்படாத குறைந்த எண்ணிக்கையிலுள்ள ஐரோப்பிய அதிகாரிகளால் ஆணையிடப்படுகின்றன. தங்கள் பங்கிற்கு அவர்கள் வங்கிகளிடம் இருந்து உத்தரவைப் பெறுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் Junker நிதி உயரடுக்கிற்கு தன் தாழ்ந்து நிற்றலை தெளிவாக்கும் வகையில் கருத்துக்களைக் கூறினார். கிரேக்கத்திற்கான அவருடைய திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டதற்கு Junker கூறினார், “தரம் பிரிக்கும் அமைப்புக்கள் எதிர்மறைத் தீர்ப்பு கொடுக்காமல் இருக்கக் கூடிய வகையில் ஒரு சூத்திரத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ளோம்; இதையொட்டி அந்நாடு கடன்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற நிலை காணப்படாது.”

மூடியின் தரம் பிரிக்கும் நிறுவனம் கடந்த வார இறுதியில் எட்டு கிரேக்க வங்கிகளின் தரங்களைக் குறைத்துவிட்டது. வாரத்தின் முன்னதாக இதே தரம் பிரிக்கும் அமைப்பு நாட்டின் அரசாங்கக் கடனை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி அதை ஒரு பயனற்ற பகுதியாக்கியது.

மூடி இவ்வாறு தரத்தைக் குறைத்துள்ளது, கிரேக்கத்தில் இருந்து தனியார் வங்கிகளின் மூலதனம் பெருகிய முறையில் வெளியேறியுள்ள பின்னணியில் வந்துள்ளது. சர்வதேச உடன்பாடுகள் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு வங்கிகள் 2010 ன் கடைசிக் காலாண்டுப் பகுதியில் கிரேக்கத்தில் இருந்து 7 பில்லியன் யூரோக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு முதலீட்டாளர்கள் கிரேக்க அரசப் பத்திரங்களில் தங்கள் இருப்பைப் பாதியாக்கிவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் சமீபத்தியத் தகவல்கள் வெளிநாட்டு வங்கிகள் கிட்டத்தட்ட 8 பில்லியன் யூரோக்களை கிரேக்க வங்கிகளில் இருந்து மார்ச் மாதம் திரும்பப் பெற்றன என்று தெரியவந்துள்ளது. இது கிரேக்க முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ள பல பில்லியன்கள் நடந்த அதே காலத்தில் நடந்துள்ளது.

இப்போக்கு ஏப்ரல் மற்றும் மே மாதம் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம். சில நிதியப் பகுப்பாய்வாளர்கள் ஏற்கனவே கிரேக்க அரசாங்கம் குறுக்கிட்டு அவை சரியாமல் இருப்பதற்காகப் பல கிரேக்க வங்கிகளைத் தேசியமயமாக்கும் கட்டாயத்திற்கு உட்படும் என்று கணித்துள்ளனர்.

நிதியச் சந்தைகளின் அழுத்தத்தை ஒட்டி, திட்டங்கள் இப்பொழுது வரிசெலுத்துபவர்களின் இழப்பில் கிரேக்க வங்கிகளைத் தேசியமாயமாக்கும் கருத்துக்கள் தயாரிப்பில் உள்ளன. அதே நேரத்தில் நிதியச் சந்தைகளும் ஐரோப்பிய நிறுவனங்களும் அரசாங்கம் அதன் முக்கிய சமூகச் சொத்துக்களை தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும் என்று கோருகின்றன!

Junker மற்றும் ரெஹ்ன் ஆகியோர் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த உணர்வை சிக்கன நடவடிக்கையைச் சுமத்த வேண்டும் என்று வலியுறுத்துவதின் பின்னணி நோக்கம், அதுதான் கிரேக்கப் பொருளாதாரத்திற்கு நிதி வருவதை நெரிக்காமல் தடுக்கும் என்ற அச்சுறுத்தல் ஆகும். அனைத்துக் கட்சி ஆதரவும் சிக்கன நடவடிக்கைகளுக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியார்மயமாக்கும் திட்டம் என்பது நாட்டிற்கு அடுத்து சில நாட்களில் இருக்கும் EU-IMF பிணை எடுப்பின் கொடுக்கப்பட வேண்டிய தவணைக்கு ஒரு முன்னிபந்தனை ஆகும்.

மார்ச் 2010ல் கிரேக்கம் முதலில் 110 பில்லியன் பிணை எடுப்பை EU-IMF மற்றும் ECB சேர்ந்து கொடுத்த மகத்தான செலவு வெட்டுக்கள் பட்டியலுடன் இணைந்திருந்தது. ஓராண்டிற்குப் பின்னர் நாடு இன்னமும் ஆழ்ந்த மந்த நிலைத் திட்டத்தில்தான் உள்ளது; அதன் கடன் தரங்கள் உயர்ந்துவிட்டன.

கிரேக்கப் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடுவதைத் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இப்பொழுது நாட்டில் இன்னும் ஒரு பிணைஎடுப்புப் பொதிக்கான வாய்ப்பை விவாதிக்கின்றனர். அது கிட்டத்தட்ட 60 முதல் 100 பில்லியன் யூரோக்கள் என்று இருக்கலாம். கிரேக்கத்திற்கு இன்னும் கொடுக்க வேண்டிய கடன் பற்றிய திட்டங்கள் அடுத்த யூரோக் குழு நிதி மந்திரிகளால் ஜூன் 20ம் திகித விவாதிக்கப்படும்; அதைத்தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் நடக்க உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நடத்தும் உச்சிமாநாட்டிலும் விவாதிக்கப்படும்.

ஆளும் பாப்பாண்ட்ரூவின் PASOK கட்சி, எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகம் மற்றும் நாட்டின் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் அனைத்தும் தாங்கள் வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களின் தேவையை ஏற்பதைத் தெளிவுபடுத்தியுள்ளதுடன் மக்களுக்கு தியாகம் செய்யுமாறு அறிவுறுத்தியும் உள்ளன. ஆனால் கிரேக்கத்தின் எதிர்ப்பு இயக்கம் பெருகிய முறையில் உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கட்டமைப்புக்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே வளர்கின்றன என்பதற்கான அடையாளங்கள் வந்துள்ளன.

தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த பயனற்ற எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்திய பின்அவை குறைந்த எண்ணிக்கையில்தான் பங்குபெற்றவர்களைக் கொண்டிருந்தனபுதிய எதிர்ப்புக்கள் அலை இப்பொழுது கிரேக்கத்தில் தொடங்கிவிட்டது. ஞாயிறன்று 70,000 க்கும் மேற்பட்டவர்கள் ஏதென்ஸின் சின்டக்மா சதுக்கத்தில் கூடி பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 12 இரவுநேர அணிவகுப்புக்கள் நடைபெற்றன. அவை பெரிதும் Indignant Citizens இயக்கங்கள் என்ற ஸ்பெயின், இத்தாலியில் உள்ளவற்றின் ஊக்கத்தினால் நடந்தன.

ஞாயிறு எதிர்ப்பின்போது ஒரு முக்கியமான பதாகைதிருடர்கள்-வழிப்பறியாளர்கள்-வங்கியாளர்கள்என்று கூறியது. ஆயிரக்கணக்கானவர்கள் மற்ற கிரேக்க நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு சமூக வர்ணனையாளர் கருத்துப்படி, கிரேக்கத்தில் வளரும் சமூக நெருக்கடி எதிர்ப்புக்களில் புதிய சமூக அடுக்குகளைச் சேருமாறு ஊக்கம் அளிக்கின்றன.

தீவிரமாக வேலையின்மை பெருகும் நேரத்தில் பாதுகாப்பான அரச வேலைகளை இழக்கும் வாய்ப்பு என்பது பல மக்களையும் முதல் தடவையாக தெருக்களுக்கு கொண்டு வந்து விட்டது. அவர்கள் அரசியல் பார்வை எத்தகைய வேறுபாடுகளை கொண்டிருந்தாலும்என்று டாகி மிஷஸ் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளிய புதிய அலையென எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது கிரேக்க ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் பலவற்றிற்கு பெருகிய தளர்ச்சியை கொடுத்துள்ளது. சிக்கனத்திற்கு எதிரான இயக்கம், கிரேக்க சமூக அமைப்பு முறை தகர்ப்பது என்பது வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் இன்னும் தீவிர வடிவங்களை கொள்ளும் என்று அவை அஞ்சுகின்றன.