சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The Sri Lankan ex-lefts and the FTZ workers

இலங்கையின் முன்னாள் இடதுகளும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களும்

By K. Ratnayake
8 June 2011

Use this version to print | Send feedback

முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்தவைப்பதில் பல்வேறு முன்னாள் இடது மற்றும் போலித் தீவிரவாத அமைப்புகளின் கூட இருந்து காட்டிக்கொடுக்கும் பாத்திரம் கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களிடையே வெடித்திருக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான வெளிநடப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பத்தாயிரக்கணக்கான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டங்கள் எல்லாம் பெருமளவில் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி நிகழ்ந்திருக்கின்றன என்பதோடு வாழ்க்கைத் தரங்கள் சீர்கெட்டுச் செல்வதை எதிர்த்து தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான ஒரு பரந்த கிளர்ச்சியையும் தூண்ட அச்சுறுத்தியது.  

மே 30 அன்று நடந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதில் ஆயிரக்கணக்கான போலிசார் ஈடுபட்டுத் தோற்றனர். ஆனால் அவர்களின் வன்முறை நடவடிக்கைகள் 40,000 எண்ணிக்கையிலான ஒட்டுமொத்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் பிரிவினரையும் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டி விட்டது. தொழிலாளர்கள் இடையேயான கோபத்தைத் தணிப்பதில் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாததற்காக பத்திரிகைத் தலையங்கங்கள் எல்லாம் ஜனாதிபதி மகிந்த இராஜபக்க்ஷவின் பெருந்தவறை விமர்சனம் செய்தன

தொழிற்சங்கங்கள் எல்லாம் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் இயக்கத்தைத் தணிக்க இப்போது தட்டுத்தடவி முயன்று வரும் வேளையில், நவ சம சமாஜக் கட்சியைச் (NSSP) சேர்ந்த முன்னாள் இடதுகள் எல்லாம் தொழிலாளர் உரிமைகளை தொழிற்சங்கத் தலைவர்கள் பாதுகாப்பார்கள் என்பதான பிரமைகளைத் தொழிலாளர்களிடையே  புதுப்பிக்க வேறுவழியேதுமற்று பரிதாபகரமாக முயன்று கொண்டிருக்கின்றனர் சென்ற ஞாயிறன்று Irida Lakabimaவில் எழுதிய வாராந்திரப் பத்தியில் NSSP தலைவரான விக்ரமபாகு கருணாரத்னா கொஞ்சமும் வெட்கமின்றி வரலாற்றை பொய்மைப்படுத்திக் கூறினார். ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருக்கும் பாட்டாளி வர்க்கத் தலைவர்களாக அவர் தன்னையும் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் (JTUA) நிர்வாகிகளையும் காட்டிக் கொண்டார்.

மற்ற நாடுகளில் போலவே இலங்கையிலும் அரசியல் மற்றும் பெருநிறுவன தட்டினருக்கு தொழிற்துறை காவல்காரர்களாய் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்களிடையே பரவலான அவநம்பிக்கையும் குரோதமும் நிலவுவது கருணாரத்னாவுக்கு நன்கு தெரியும். “உழைக்கும் மக்களின் எழுச்சி என்று ஒன்று நிகழாது என்று தான் பலரும் நினைத்தார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள் பலரும் அரசாங்கத்தில் இணைந்ததால் தொழிலாளர்களைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றே பலரும் கருதினர்....ஆனால் சமீபத்திய காலங்களின் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு JTUA ஆல் இயன்றிருக்கிறது என்று அவர் எழுதினார்.

மே 24 அன்று நடந்த சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் முதல் போராட்டத்திற்கு ஆதரவளிக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் அதன் சங்கங்களையும் கூட NSSPஇன் தலைவர் கடுமையாகச் சாடினார். பங்குபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களையும் பட்டியலிட்ட அவர் அவற்றின் தலைவர்களை தொழிலாள வர்க்கத்திற்கான எதிர்காலப் போராளிகள் என்று அழைத்தார். சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொதுச் சேவைகள் சங்க (FTZGSU) தலைவரான அன்டன் மார்கூஸுக்கு இந்தப் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த பாத்திரம் வகித்தவர் என சிறப்புப் பாராட்டு அளிக்கப்பட்டது. NSSP தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாள வர்க்கத் தலைவர்களாக சித்தரிக்கப்பட்டனர்.  

இந்த மொத்தப் பத்தியுமே ஒரு மோசடி வேலை. அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்திற்கு தொழிலாளர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்ததற்குப் பதிலிறுப்பு செய்யும் விதமாக 26 தொழிற்சங்கங்களின் கூட்டணியான JTUA  ஒருவழியாய் மே 24 அன்று ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. மற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளைப் போலவே இந்த நடவடிக்கையும், இராஜபக்ஷ அரசாங்கத்தை சவால் விடுவதற்காக அல்ல, மாறாக கொந்தளிப்பை இல்லாதுபோக செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட ஒன்றே ஆகும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாய் சாத்தியமான இடங்களில் விடுமுறை எடுத்துக் கொண்டு தொழிற்சாலைக் கூட்டங்களில் இணையுமாறும் தொழிலாளர்களிடம் கூறப்பட்டது. வேலை செய்பவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டும் பொருட்டு கறுப்பு ஆடை அணிந்து கொள்ளவும் கறுப்புக் கொடி ஏற்றவும் ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரமும் கூட ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான ஒரு அடையாள ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கு ஆதரவாய் பின்வாங்கப்பட்டது. இந்தத் தொழிலாள வர்க்கத் தலைவர்கள் மத்திய கொழும்புவில் தமது ஆதரவாளர்கள் சுமார் 300 பேரிடையே உரை நிகழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் தான் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் விடயத்தைத் தங்களின் கரங்களுக்குள் கொண்டுவந்தனர். மே 24 அன்று சுமார் 25,000 பேர் தங்கள் தொழிற்சாலைகளைப் புறக்கணித்து வெளியில் வந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் செல்கின்ற பாதையை மறித்ததோடு ஜனாதிபதி இராஜபக்க்ஷவின் ஒரு மிகப்பெரும் சுவரொட்டி ஒன்றை கிழித்தெறிந்தனர்.

ன்டன் மார்கூஸ் வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரம் என்னவென்றால் மத்தியக் கொழும்பில் இருந்து விரைந்து வந்தது  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை கொடுக்க அல்ல, மாறாக தொழிலாளர்களைக் கலைந்து போகச் செய்யக் கூறுவதற்கு. அரசாங்கம் தனது ஓய்வூதியச் சட்டத்தை கைவிட்டு விட்டதாகவும் தொழிலாளர்கள் வெற்றி பெற்று விட்டதாகவும் அவர் பொய்யாகக் கூறினார். உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் மார்கூஸுக்கு எதிராகக் குரல் எழுப்பியதோடு அவரது மைக்கைப் பிடுங்கி அவரை உடனடியாக வெளியேறுவதற்கும் நிர்ப்பந்தித்தனர். அதேபோல் NSSP தொழிற்சங்கத் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தை வந்தடைய தட்டுத்தடவிக் கொண்டிருந்தனரே தவிர, அதனை ஒழுங்கமைப்பதில் எந்தப் பாத்திரமும் வகிக்கவில்லை.

JTUA மற்றும் அதன் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் விடயத்தில் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கடுமையான அனுபவம் உள்ளது. 2009ல் மார்கூஸ் மற்ற தொழிற்சங்கத் தலைவர்களுடன் சேர்ந்து அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடனான பெருநிறுவனத்தனமான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். 50,000 வேலைகளை அழிப்பதற்கு இந்தப் பேச்சுவார்த்தை பச்சைக் கொடி காட்டியது.

ஊதிய அதிகரிப்பு என்பது இராஜபக்ஷ அரசாங்கத்தால் முற்றுமுழுதாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை எந்த ஒரு தொழிற்சங்கமும் சவால் செய்ததில்லை. சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் மாத ஊதியத்தில் 5,000 ரூபாய் (45 அமெரிக்க டாலர்) அதிகரிப்பு கோரி முன்னெடுத்த பரப்புரையை அவர்கள் துரிதமாய்க் கைவிட்டனர், அதற்குப் பதிலாய் இராஜபக்ஷ 2,500 ரூபாய் அதிகரிப்பு செய்வதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அவரைச் சந்தித்தனர். ஜனாதிபதி தனது வாக்குறுதியில் பின்வாங்கி விட்ட நிலையில், தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையையும் கைவிட்டு விட்டன.

மே 24 முதலாக, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் இயக்கத்தை மறுபடியும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு தொழிற்சங்கங்கள் வெகு மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கின்றன. மே 30 மோதலைத் தொடர்ந்து அரசாங்கம் ஓய்வூதியச் சட்டத்தை நிறுத்தி வைத்து விட்டதற்குப் பின்னர், எல்லா சங்கங்களும் வெற்றி கிட்டியதாய் பிரகடனம் செய்தன என்பதோடு வெற்றிக்கு உரிமை கோர ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டன. உண்மையில் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் உதவியுடன் திருத்தப்பட்ட வடிவத்தில் ஓய்வூதியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக அரசாங்கம் ஒரு அடி பின்னால் சென்றிருக்கிறது, அவ்வளவு மட்டுமே.

கருணாரத்னா, தனது பத்தியில், அரசாங்கத்தின் பிரிவுகளடனான கூட்டணியின் சாத்தியத்திற்கு கோடிட்டுக் காட்டியிருந்தார். “இப்போது அரசாங்கத்தின் ஆதரவாளர்களும், லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளிட்ட பழைய முன்னாள் இடது கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்களும் மற்றும் வாசுதேவ [நாணயக்கார] ஆகியோர் JTUA உடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றனர் என அவர் உற்சாகம் பொங்கக் கூறினார்.

லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கருணாரத்னாவின் முன்னாள் நவசம சமாஜக் கட்சி சகாக்களில் ஒருவரான நாணயக்கார அரசாங்கத்தின் சந்தை ஆதரவுத் திட்டங்களை எதிர்க்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் அவர்கள் ஆதரித்து வந்திருக்கின்றனர். இந்தக் கட்சிகளும் சங்கங்களும் JTUA உடன் கைகோர்க்கின்றன என்றால் அது தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான முன்னெடுப்புகளையும் இன்னும் கூடுதலாய் நசுக்குவதற்கும் குழிபறிப்பதற்குமே ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த ஓய்வூதியத் திட்டம், ஒரு வடிவத்தில் இல்லாவிட்டாலும் இன்னொரு வடிவத்தில், நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்பதில் கருணாரத்னா உட்பட இவர்கள் அனைவருமே அரசாங்கத்துடன் உடன்படுகின்றனர்.

சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டங்கள் வரவிருக்கும் போராட்டங்களின் ஒரு அறிகுறி மட்டுமே என்பதை கருணாரத்னா உணர்கிறார். அவர் இவ்வாறு அறிவித்து முடிக்கிறார்: “சுதந்திர வர்த்தக வலய எழுச்சியின் காரணத்தால், நிறுத்த முடியாத வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தக் கூடிய வண்ணம் நாட்டில் ஒரு பெரும் விழிப்பு தோன்றியிருக்கிறது.....அனைவருமே இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டுள்ளனர்.”

தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான அணிதிரட்டலையும் தடுப்பதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பவாத அணியை - இந்த முறை லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சேர்க்கக் கூடிய வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து - முடிச்சுப்போட நவசம சமாஜக் கட்சியின் சேவைகளை வழங்க இந்த சந்தர்ப்பத்தை கருணாரத்னா பயன்படுத்திக்கொள்கிறார்.

1978 இல் ஆரம்பிக்கப்பட்டது முதலே, நவசம சமாஜக் கட்சி தொழிலாளர்களை முதலில் இராஜபக்ஷவின் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) உடன், பின் ஜேவிபி உடன், பின் மிக சமீபத்தில், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உடன் என்று ஏதேனும் ஒரு முதலாளித்துவக் கட்சியுடன் கட்டிப் போடவே முயன்று வந்திருக்கிறது. மே 24 போராட்டத்திற்கு சற்று முன்னதாகத் தான், ஓய்வூதிய மசோதா விவகாரத்தில் ஒரு கூட்டுப் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்ய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரனில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க நவசம சமாஜக் கட்சி மற்றும் JTUA தொழிற்சங்கத் தலைவர்களை கருணாரத்னா அனுப்பி வைத்தார்.

தொழிலாளர்கள் இதற்கு நேரெதிரான முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் மீது உள்ளுணர்வினால் அவர்கள் கொண்டிருக்கும் குரோதமானது முழுக்க நியாயமானதே, ஆனால் கட்டவிழத் தொடங்கியிருக்கும் போராட்டத்திற்கு அது முழுமையாய்ப் போதாது. தொழிலாளர்களுக்கு அதைப் பற்றிய விழிப்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை நடத்துகின்ற அரசாங்கத்துடன் தொழிலாளர்கள் ஒரு அரசியல் மோதலில் நின்று கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை. இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டுமென்றால், இராஜபக்க்ஷ ஆட்சியுடன் ஒரு சமரசத்திற்கு முனையும் கட்சிகள் மற்றும் நபர்கள் அனைவரிடமிருந்தும் தங்களது அமைப்புரீதியான மற்றும் அரசியல்ரீதியான சுயாதீனத்தை தொழிலாளர்கள் நிலைநாட்டியாக வேண்டும்.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான தொழிலாளர்களின் தலைமையில் சாதாரண உறுப்பினர்களின் குழுக்கள் அமைக்கப்பட சோசலிச சமத்துவக் கட்சி அறிவுறுத்துகிறது. லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற பழைய துரோக அமைப்புகளை தொழிலாளர்கள் நம்பியிருக்க முடியாது, மாறாக இலங்கையிலும், ஆசியாவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும், தங்களது வாழ்க்கைத் தரங்களின் மீது இதேபோன்ற தாக்குதல்களுக்கு முகங் கொடுத்து நிற்கும் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளை நோக்கித் திரும்பியாக வேண்டும். முதலாளித்துவத்தை இல்லாதொழித்து சமூகத்தை, தனியார் இலாபத்திற்காக இல்லாது அவசரமான சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வகையில் மறுஒழுங்கு செய்வதற்கு ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதே தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான அடிப்படை ஆகும். அத்தகையதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு தொழிலாளர்களது மற்றும் விவசாயிகளது அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தைக் கையிலெடுப்பது அவசியமாகும். இந்த முன்னோக்கிற்காகத் தான் இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது