சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China reveals construction of aircraft carrier

விமானத்தளமுடைய கப்பல் கட்டுவதை சீனா வெளிப்படுத்துகிறது

By John Chan 
14 June 2011

Use this version to print | Send feedback

மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) உயர்மட்டத் தலைமை அதிகாரியான ஷென் பிங்டே முதல் தடவையாகக் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக சீனா விமானத்தளமுடைய கப்பலைக் கட்டமைப்பதாக உறுதிப்படுத்தினார். உக்ரைனிடமிருந்து சீனா ஒரு முற்றுப்பெறாத முன்னாள் சோவியத் விமானத்தளமுடைய கப்பலான வர்யாகை வாங்கிப் புதுப்பிக்கும் முயற்சி ஒன்றும் பெரிய இராணுவ இரகசியம் இல்லை. அதேபோல் இது தொடர்புடைய J-15 பரிசோதனை ஓட்டங்களும்ரஷ்ய தயாரிப்பு Su-33 விமானத்தளம்-ஏவுகணை விமானம் இயக்கும் போர்க்கப்பல், சீன மாதிரிஇரகசியம் அல்ல. ஆயினும்கூட, இப்புதுப்பிக்கப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்படைப் பிரிவில் அமெரிக்க-சீனப் போட்டி பெருகியுள்ளதின் ஓர் அடையாளம் இதுவாகும்.

இந்த விமானத்தளம் உடைய கப்பல் இந்த ஆண்டு செயற்பாட்டிற்கு வரும். ஒருவேளை அக்டோபர் முதலாம் திகதியான தேசிய தினத்தன்று சீன தேசபக்தவாதத்தைத் தூண்டும் ஒரு நிகழ்ச்சியாக. இதற்கு ஷி லியங் என்ற மறு பெயர் இடப்படலாம்; 17ம் நூற்றாண்டில் தைவானை மீண்டும் சீனாவுடன் இணைத்ததிற்கு சீனத் தளபதியை கெளரவப்படுத்தும் வகையில்.

PLA உயர்மட்ட அதிகாரிகளின் துணைத் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் Qi Jianguo கமர்ஷியல் டெய்லியிடம் கூறினார்: “உலகிலுள்ள அனைத்துப் பெரும் சக்திகளும், .நா. பாதுகாப்புச் சபையிலுள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட, இவற்றைக் கொண்டுள்ளன. இது ஒரு பெரிய நாடு என்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.”

சீனா எதிர்கொள்ளும் பெருகிய மூலோபாய அழுத்தங்கள் பற்றிக் குறிப்பிட்ட Qi, “நாம் முன்னரே சமுத்திரங்கள் பற்றி அறிந்து கொண்டு நாம் ஆழ்கடல்திறன்களை அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளுவது அனுகூலமாக இருக்கும். இப்பொழுது சமுத்திரங்களில் நாம் பெரும் அழுத்தங்களை எதிர்கொள்கிறோம்அது தென்சீனக் கடலாயினும் சரி, கிழக்குச் சீனக்கடல் ஆயினும் சரி, மஞ்சள் கடலாயினும், தைவான் ஜலசந்தியாயினும் சரிஎன்றார்.

விமானத்தளத்தைக் கொண்ட கப்பலைக் கட்டுமானம் செய்யும் சீனாவின் உறுதி சீன நிலப்பகுதியை உடனடியாக அடுத்து இருக்கும் கடற்பகுதியில் அமெரிக்க நிலைப்பாட்டைத் தக்க வைக்க முயலும் அமெரிக்காவின் பெருகிய ஆக்கிரோஷ நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, ஒபாமா நிர்வாகம் ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நட்பு நாடுகளுடன் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பிடையேயும் (ASEAN) சீனாவின் மூலோபாய தென்சீனக் கடலில் நிலப்பகுதிகள் உரிமைக்குச் சவால் விடுமாறும் வாஷிங்டன் ஊக்கம் கொடுத்துள்ளது.

சீனப் பொருளாதாரத்தின் ஏற்றம் அதன் வெளிநாட்டு வணிகம் மற்றும் முதலீடு ஆகியவை பரந்த விரிவாக்கம் செய்ய வகை செய்துள்ளனகுறிப்பாக ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில்; இப்பகுதிகளிடமிருந்து தன் எரிசக்தித் தேவைக்கு அது பெரிதும் நம்பியுள்ளது. ஆழ்கடல் கடற்படைக்கான பெய்ஜிங்கின் திட்டம் முக்கிய கடற்பாதைகளை பாதுகாக்கும் நோக்கம் உடையது. குறிப்பாக இந்து சமுத்திரத்திலிருந்து தென்சீனக்கடல் பகுதிக்கும் சீன நாட்டிற்கும் இடையே. இராணுவப் பாதுகாப்புப் பிரச்சினையை பெரிதாகக்கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், லிபியாவில் கடாபி ஆட்சியை வீழ்த்துவதற்கான நேட்டோ தலையீட்டால் சீன நிறுவனங்கள் குறைந்தபட்சம் 19 பில்லியன் டாலர் நஷ்டத்தை அடைந்துள்ளன.

சீனக் கடற்படை விரிவாக்கம் அமெரிக்காவின் முயற்சியான ஆசியா முழுவதும் உட்பட, உலக கடற்படை மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதுடன் மோதலுக்கு வருகிறது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இருந்தே, அமெரிக்க கடற்படை மூலோபாய வகுப்பாளர்கள் இந்திய பசிபிக் சமுத்திரத்தை இணைக்கும் முக்கியநெரிக்கும் பகுதிகளை”, மலாக்கா ஜலசந்தி போன்றவற்றை, கட்டுப்படுத்தும் கொள்கையை வலியுறுத்தி வந்துள்ளனர். இதையொட்டி எந்த ஆசியப் போட்டி நாட்டுடனும் மோதல் ஏற்பட்டால் முக்கிய எண்ணெய் அளிப்புக்கள் நிறுத்தப்படும் திறன் இருக்கும்.

கடந்த வாரம் ஒரு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடு ஸ்டடி டைம்ஸ் சீனாவின் வல்லரசு அந்தஸ்திற்கு ஏற்ப இராணுவத் திறன் வளர்க்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. “முன்னேறவேண்டும்என்ற மூலோபாயம் சீனாவால் செல்வாக்கு மண்டலத்திற்குப் போராடுவதற்காகச் செயல்படுத்தப்படவில்லை, மற்றும் அது போர்க் கப்பல்களையும் பீரங்கிகளையும் பாதை அமைக்க, காலனித்துவவாதிகள், ஏகாதிபத்தியத்தினர் போல் பயன்படுத்தாதுஎன்று கட்டுரை கூறுகிறது. “ஆனால் இராணுவ வலிமை நம் உரிமைகளான உலகம் முழுவதிலுமான சுதந்திரமான நடவடிக்கை உரிமைகள், பிராந்தியத்தில் நடவடிக்கை உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் திறன்கள் உறுதியளிக்கப்படும் வகையில் இருக்க வேண்டும்.”

விமானத்தளம் கொண்ட கப்பல் கட்டமைப்புத் திட்டம் சீனாவின் திட்டங்களில் மையமாக உள்ளது. ரஷ்ய கடற்படையால் இன்னும் செயல்படுத்தப்படும் ஒரே விமானத்தளத்தைக் கொண்ட கப்பலின் சகோதரிக் கப்பல்தான் வர்யாக் ஆகும். இக்கப்பல் 67,000 டன்கள் எடையைக் கொண்டது. முழு கனம் ஏற்றப்படும்போது; இதில் 50 விமானங்கள் தங்கிப் புறப்படமுடியும்; அமெரிக்காவின் 100,000 டன் அணுசக்தியால் உந்தப்படும் நிமிட்ஸ் கப்பல் 70 முதல் 90 கப்பல்கள் வரைத் தளத்தில் வைத்திருக்கும் என்பதோடு ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைந்த தன்மையுடையதுதான்.

மிக அதிக வேகம் கொண்டு, வரம்பிலா தாக்கும் சக்தி உடைய, அணுசக்தி உந்துதல் கொண்ட விமானத்தளக் கப்பல்கள் போல் இல்லாமல், சீனத் தளம் மரபார்ந்த வகையில் இயக்கப்படும், தொடர்ச்சியான காலம் செயல்படுவதற்கு எரிபொருளை நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்து சமுத்திரத்தில் பல துறைமுக வசதிகளைச் சீனா கட்டமைத்துக் கொண்டுவருகிறது. பாக்கிஸ்தான், இலங்கையிலும் இவை உள்ளன. இவை இந்த நோக்கத்திற்கான திறனைக் கொண்டிருக்கக்கூடும்.

சீனாவின் விமானத் தளக் கப்பல் பிரெஞ்சு De Gaulle தரத்தைவிட (45,000 டன்கள்) பெரியதாக இருக்கும். அல்லது பிரிட்டனின் Invincible தரத்தைவிட (25,000 டன்கள்) பெரியதாக இருக்கும். அதுவும் அழிக்கும் காவல் கப்பல்கள் மற்றும் அணுசக்தி உந்துதலிலுள்ள தாக்கும் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்களுடன் ஆசியாவில் இது இருப்பதே, அமெரிக்காவினால் கவனிக்கப்படும் என்பதோடு ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற ஆசியப் போட்டி நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கும்.

ஜப்பானில் வெளிவரும் Asahi Shimbun கடந்த டிசம்பரில் சீன அரச பெருங்கடல் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஒன்றிற்கும் மேலான விமானத்தளம் உடைய கப்பல்கள் பற்றிய திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளது எனத் தெரிவித்தது. இந்த அறிக்கைப்படி சீன இராணுவம் “2009ல் விமானத்தளமுடைய கப்பல்களை கட்டும் கண்ணோட்டம், திட்டங்களைக் கொண்டது”, அவை சீனாவை 2020க்குள்நடுத்தரகடல் சக்தியாக ஆக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் கூறியுள்ளது.

பெயரிடப்படாத சீன இராணுவ ஆதாரங்களை மேற்கோளிட்டு Asahi Shimbunஏப்ரல் 2009ல் நடைபெற்ற ஒரு CCP பொலிட்பீரோக் கூட்டம் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது எனக் கூறியுள்ளது. ஆரம்பத்தில் மற்றொரு மரபார்ந்த சக்தியில் இயக்கப்படும் விமானத்தளக் கப்பல் 2014க்குள் கட்டப்படும். அடுத்த கட்டத்தில் இரு அணுசக்தி உந்துதல் உடைய விமானத் தளக் கப்பல்கள் முன்னாள் சோவியத் சகாப்த காலத்திட்டப்படி (79,000 டன் யுல்யனோவ்வஸ்க் தரம்) இருக்கும். அவை கட்டி முடிக்கப்படவில்லை.

பெரும்பாலான அமெரிக்கப் பகுப்பாய்வாளர்கள் சீனா முழுமையாகச் செயல்படக்கூடிய விமானத்தளமுடைய கப்பல் தொகுப்புக்களைக் கொள்ளுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என நம்புகின்றனர். அமெரிக்க கடற்படைப் போர்க் கல்லூரியிலுள்ள டோஷி யோஷிஹரா சமீபத்தில் விளக்கினார்: “பலவித கப்பல் வகைகளின் தன்மைகள், தற்போதைய கடற்படையின் கூறுபாடுகளாக இருப்பவை உண்மையில் ஒரு தீவிர போர் நோக்கங்களுக்கு உதவாது. இவை இன்னும் திருப்திகரமான கப்பல் வடிவமைப்பில் நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கட்டத்தை அவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். பின்னர்தான் தொடர்ச்சியான உற்பத்தி தொடக்கப்பட முடியும். அதன் பின் ஒரு கடற்படைத் தொகுப்பு, விமானத்தளமுடைய கப்பலைச் சுற்றி நிறுவப்படும். இதையொட்டி சிறு துண்டுகள் ஒரு இயல்பான போர்ப் பிரிவாக மாற்றப்படுதல் அடுத்த கட்டமாக இருக்கும்.”

இதற்கு மாறாக அமெரிக்க பசிபிக் கட்டளை மையம் ஏற்கனவே ஐந்து விமானத் தளங்கள் கொண்ட கப்பல்களை வைத்துள்ளது, 180 கப்பல்கள் மற்றும் 2,000 விமானங்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர தென்கொரியாவிலும் ஜப்பானிலும் சீனாவிற்கு அருகே தளங்களையும் கொண்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளைத் தளமாக உடைய 6 விமானத் தளக் கப்பல்களையும் அது உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.

மேலும் அமெரிக்கா சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை வெறுமே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆசியாவில் தன்னுடைய இராணுவ பிணைப்புக்களை வளர்த்து வருகிறது, தன்னுடைய சொந்த கடற்படைத் திறனை வளர்க்கிறது. இந்த மாதம் முன்னதாக, அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் சிங்கப்பூரில் ஒரு பாதுகாப்பு பற்றிய அரங்கத்தில்ஆசியாவில் அமெரிக்க நிலைப்பாட்டின் பரப்பு, ஈடுபாடு ஆகியவற்றில் புதிய, கணிசமான வளர்ச்சி இருக்கும்என்று கூறினார்.

அமெரிக்கக் கடற்படை சிங்கப்பூரில் ஒரு தளத்தைக் கட்டமைக்க விரும்புவதாகவும், அதில் இப்பொழுது புதிதாக உள்ள நவீன லிட்டோரல் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட உள்ளன என்றும் கேட்ஸ் அறிவித்தார். இப்போர்க் கப்பல்கள் குறிப்பாக கடல்-தரைக்கு அருகே நடக்கும் போர்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன, குறுகிய மலாக்கா ஜலசந்திகள் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் தக்கவைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இதன்வழியேதான் சீனாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதிகளில் 77 சதவிகிதம் எடுத்துச் செல்லப்படுகிறது.

அமெரிக்கப் பகுப்பாய்வாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சீனா DF-21D  கடல் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பை வளர்ப்பதாக வந்துள்ள தகவல்கள் பற்றிக் கவலை கொண்டுள்ளது. இது சீன தரைப்பகுதியை ஒட்டிய நீர்நிலைகளில் அமெரிக்க விமானத்தளக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் திறனைக் கொண்டிருக்கலாம். இதை எதிர்கொள்ளும் வகையில் பென்டகன்வான்/கடல் போர் என்னும் புதிய மூலோபாயக் கோட்பாட்டை விவாதிக்கிறது. இது ஆசியப் பகுதி முழுவதும் அமெரிக்கக் கடற்படையின் ஆதிக்கம் எப்படித் தக்க வைக்கப்படலாம் என்பதை விவாதிக்கும்.

ஏப்ரல் மாத Aviation Week பதிப்புப்படி, இக்கோட்பாட்டில் “PLA விண்வெளித் தளமுடைய பெருங்கடல் கண்காணிப்பு முறைகளைச் செயலற்றதாக்கி, பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல் எதிர்ப்பு இலக்குகளைத் தடுக்கும் விமானப் படை விண்வெளி எதிர் செயற்பாடுகளும்அடங்கும். மேலும்தொலைதூர ஊடுருவும் தாக்குதல்கள் PLA தரைத்தளத்தை அழிக்கும், தொலைத் தூர கடற்படைக் கண்காணிப்பு முறைகள் (வான்வெளியை ஒட்டிய ராடர்கள் போன்றவை) மற்றும் கப்பல்கள் மற்றும் தளங்களை இலக்கு கொண்ட ஏவுகணைகளும் அடங்கும்.

இத்துடன் தொடர்புடைய கூறுபாடு அமெரிக்க X-47B ஸ்டெல்த் ட்ரோன் தாக்குதல் விமானமுமாகும். இதன் சோதனை ஒட்டம் பெப்ருவரியில் நடைபெற்றது. ஒரு விமானத்தளக் கப்பலில் இருந்து ஏவப்படும் வடிவமைப்பு கொண்ட X-47B ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல் எதிர்ப்புக்கள் தரையில் இருந்து இயக்கப்படுபவற்றை சீனப் பகுதியிலுள் இருப்பவற்றை அமெரிக்கா தாக்கக் கூடிய வகையிலுள்ள முக்கிய ஆயுதம் என்று பரந்த அளவில் நம்பப்படுகிறது. 2020ல் செயல்படத் தொடங்க இருக்கும் X-47B சீனாவின் ஏவுகணை இயக்கும் அமைப்புக்களைப் பாதுகாப்பான தூரத்தில் இருந்து தாக்கும் திறன் உடைய விமானத்தளக் கப்பல்கள் ஆகும்.

வான்/கடல் போர் கோட்பாடு அமெரிக்கா சீனாவிற்கு எதிராக ஒரு முழுப் போருக்கு தயாரிப்புக்களை நடத்துவதைத் தெளிவாக்குகிறது. அத்தகைய மோதல் பற்றிய ஆபத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. ஒப்புமையில் சிறிய கடற்படை நிகழ்வு தவிர்க்க முடியாமல் அமெரிக்க தாக்குதல்களைத் தூண்டும் திறன் உடையவை. இதில் சீனாவிற்குள் தொலைதூரத் தாக்குதல்களும் நடத்தப்படலாம். அது இரு சக்திகளுக்கும் இடையே பேரழிவு விளைவிக்கும் இராணுவ மோதலுக்கு வழிவகுக்கும்.