சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Obama defends Libya war, rejects need for Congress vote

லிபியப் போரை ஒபாமா பாதுகாத்து காங்கிரசில் வாக்கெடுப்பின் தேவையை நிராகரிக்கிறார்

By Bill Van Auken 
16 June 2011

Use this version to print | Send feedback

புதன் கிழமை அன்று, அறிவிக்கப்படாத அமெரிக்கப் போர்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவை என்று கூறும் போர் அதிகார சட்டம் கிட்டத்தட்ட மூன்றுமாதமாக லிபாயவிற்கு எதிராக நடக்கும் போருக்குப் பொருந்தாது என்று ஒபாமா நிர்வாகம் வாதிட்டுள்ளது.

காங்கிரஸிற்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், லிபியாவில் அமெரிக்க நடவடிக்கைகள் ஏற்கனவே $716 மில்லியன் செலவை கடந்துவிட்டதுடன், செப்டம்பர் இறுதிக்குள் $1.1 பில்லியனை எட்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிதி பென்டகனின் தற்போதைய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்தே செலவிடப்படும் என்றும் அது கூறியுள்ளது.

அதே நேரத்தில் இக்கடிதம் போரில் அமெரிக்க இராணுவத்தின் பங்கு மிகக் குறைவானது, அதனால் போர் அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் (War Powers Act) அது வரவேண்டிய தேவையில்லை என்றும் கடிதம் வலியுறுத்தியுள்ளது; அச்சட்டம் ஜனாதிபதிமோதல்கள் ஆரம்பித்த 60 நாட்களுக்குள் எந்த இராணுவ நடவடிக்கைக்கும் காங்கிரஸின் ஒப்புதலை ஜனாதிபதி பெறவேண்டும் என்று கூறியுள்ளது.

லிபியாவில் நடத்தப்படும் தற்போதைதைய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் போர் அதிகார தீர்மானத்துடன் இயைந்தவை, சட்டப்படி அவற்றிற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை, ஏனெனில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தீர்மானத்தில் 60 நாள் வரம்பு விதி என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்று ஜனாதிபதி கருதுகிறார் என்று புதன்கிழமை அங்கீகாரம் இல்லாமல் சுற்றுக்கு வந்த இக்கடிதத்தின் நகல் தெரிவிக்கிறது.

அமெரிக்க இராணுவப் படைகளின் பங்குமட்டுப்படுத்தபட்டது, அது ஆதரவைத்தான் கொடுக்கின்றது என்று கடிதம் விளக்குவதுடன், “அமெரிக்கச் செயற்பாடுகள் தொடர்ந்து போரிடுதலையோ விரோத சக்திகளுடன் தீவிர தாக்குதலையோ கொள்ளவில்லை, அமெரிக்க தரைப்படை அங்கு பிரசன்னமாக இல்லை, அமெரிக்க படையினரின் இறப்புக்களோ அல்லது அதுபோன்ற தீவிர அச்சுறுத்தலோ இல்லை, அல்லது இக்காரணிகள் இருக்கக்கூடிய தன்மை கொண்ட மோதல் விரிவாக்கத்திற்கான வாய்ப்போ இல்லை என்றும் அது கூறுகிறது.

இத்தகைய விளக்கம் குண்டு அல்லது ஏவுகணைத்தாக்குதல்கள் மூலம் தாக்கும் திறன் அற்ற, ஒப்புமையில் பாதுகாப்பு இல்லாத நாடுகள், மக்கள் ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா போரிடும் வரை போர் அதிகார சட்டம் பொருந்தாது எனக் காட்டுவது போல் தோன்றுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள்படி, ஒரு பறக்கக்கூடாத பகுதியை நடைமுறைப்படுத்த இசைவு கொடுத்தவற்றிற்கு உட்பட்டு, ஆயுதத் தடைகள் செய்தல் மற்றும் லிபியக் குடிமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என்பதற்கு உட்பட்டுத்தான் நடக்கின்றன என்ற போலித்தனத்தை மீண்டும் கூறுகிறது.

வாஷிங்டனிலோ அல்லது மேற்கு ஐரோப்பிய தலைநகரங்களில் எவரும் இக்கூற்றுக்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் வெளிப்படையாகஆட்சி மாற்றம் என்ற இலக்கைத் தழுவியுள்ளன. இவை கர்னல் முயம்மர் கடாபியின் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் உடைய ஒரு போரை நடத்துகின்றன; லிபியத் தலைவரை படுகொலை செய்து முக்கிய மேலைச் சக்திகள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு அவற்றின் பூகோள மூலோபாயம், இலாப நலன்களைத் தடையின்றித் தொடர அனுமதிக்கும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை லிபியாவில் இருத்த முயல்கின்றன.

அமெரிக்காவும் நேட்டோவும் லிபியக் குடிமக்களைக் காப்பாற்றுகின்றன என்ற போலித்தனத்தைப் பொறுத்தவை, காங்கிரஸிற்கு ஒபாமா கடிதத்தை அனுப்பிய அன்றே ஒரு நேட்டோ வான்தாக்குதல் லிபியத் தலைநகரான டிரிபோலிக்குத் தெற்கே உள்ள கிக்லா சிறுநகரில் இருந்த ஒரு பஸ்ஸைத் தாக்கியது, 12 பயணிகள் இறந்துபோயினர் என்ற தகவல் வெளிப்பட்டது. டிரிபோலியின் தீவிர குண்டுத்தாக்குதல் மீண்டும் ஏற்பட்டுள்ளதை அடுத்து இத்தாக்குதல் வந்துள்ளது; இவற்றில் பல குடிமக்களுடைய வீடுகள் மோசமாகச் சேதம் அடைந்தன, பல லிபியக் குடிமக்கள் காயமுற்றனர்.

திங்களன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் மற்றம் வடஆபிரிக்க நாடுகளுக்கு எதிராக நடத்தும் அமெரிக்க செயற்பாடுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிதி பயன்படுத்தப்படக்கூடாது என்று வாக்களித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகை அதன் 32 பக்கக் கடிதத்தை, லிபியா மீதான போரை சட்டபூர்வமானது, வெற்றிகரமானது என ஆதரித்துக் கூறி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைஇராணுவக் கட்டமைப்புமுன்னாள் படையினர் விவகார ஒதுக்கீட்டுச் திருத்த சட்டவரைவு ஒரு திருத்தம் என்பது 248 -163 என்ற வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற்றது. வாஷிங்டன் தற்பொழுது கிட்டத்தட்ட $40 மில்லியனை ஒரு மாதத்திற்குப் போரிடுவதில் செலவழிக்கிறது. முழுச் சட்ட வரைவும் இன்னும் மன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும்: திருத்தம் செனட்டினாலும் ஏற்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் லிபியப் போர் நிதி பற்றிய நிபந்தனை நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும்.

இத்திருத்தத்திற்கு கிடைத்த மட்டுமட்டான வெற்றி ஒபாமாகாங்கிரஸிற்கு லிபியா பற்றிய அமெரிக்காவின் இராணுவச் செயற்பாடுகள் குறித்து அவை எப்படி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களை தளமாகக் கொண்டுள்ளன என்பதை ஏற்கக்கூடிய உரிய காரணத்தை காங்கிரஸிற்கு முன்வைக்கத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டமை பற்றிய ஜூன் மாத வாக்கெடுப்பைவிட பரந்ததாக இருந்தது. அதில் மேலும் வெள்ளை மாளிகைக்கு 14 நாட்களுக்குள் காங்கிரஸ் ஒப்புதலைப் பெறத் தவறியதற்கான காரணத்தைக் கொடுக்குமாறும், லிபியாவில் அதன் இராணுவ நோக்கங்கள் பற்றிய விளக்கமும் அதற்கான வழிவகைகள் செலவுகள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

குடியரசுக் கட்சியை சேர்ந்த மன்றத் தலைவர் ஜோன் போஹ்னர் இயற்றிய தீர்மானம் இறுதி எச்சரிக்கை எதையும் தவிர்த்தது. முடிவாககாங்கிரஸ் லிபியாவைப் பொறுத்த அங்கீகாரம் இல்லாத நடவடிக்கைகள் உட்பட அமெரிக்க நாட்டின் ஆயுதப்படைகள் அங்கீகாரம் பெறாமல் பயன்படுத்தப்படுவதற்கான நிதியை நிறுத்திவைக்கும் அரசியலமைப்புரீதியான உரிமையைக் காங்கிரஸ் பெற்றுள்ளது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் இரு கட்சியில் இருந்து மன்றத்தில் உள்ள 10 பேர் கொண்ட குழு, ஜனநாயகக் கட்சியின் ஒகையோவின் டென்னிஸ் குஷிநிஷ் மற்றும் குடியரசுக் கட்சியின் வட கரோலினாவின் வால்ட்ர் ஜோன்ஸ் ஆகியோரின் தலைமையில், புதன் கிழமை அன்று லிபியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, ஏனெனில் அவை காங்கிரசின் ஒப்புதலைப் பெறவில்லை, என்று வழக்கைப் பதிவு செய்து நீதிமன்றம் அந்நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஒபாமாவிற்கு உத்திரவிடவேண்டும் என்று கோரியுள்ளது.

மார்ச் 19ம் திகதி லிபியாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவப் படைகள் பயன்படுத்தப்படும் என்று ஒபாமா அறிவித்து, பின்னர் உத்தியோகபூர்வமாக படைப் பயன்பாடு பற்றி காங்கிரசிற்கு தெரிவித்தார். இது இப்பொழுது அவர் கூறும் பொருந்தாது என்னும் சட்டத்தின்கீழ் செய்யப்பட்டது. வியட்நாம் போரில் ஜனாதிபதி அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்ததை எதிர்கொள்ளும் வகையில், 1973ல் இயற்றப்பட்ட போர் அதிகார தீர்மானம் காங்கிரஸில் ஒப்புதல் இல்லாமல் 60 நாட்களுக்கு மேலாக இராணுவ மோதல் ஒன்றில் அமெரிக்க ஆயுதப் படைகளை ஈடுபடுத்த ஜனாதிபதியைத் தடுக்கிறது. மற்றும் ஒரு 30 நாட்கள் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் என்றும் தீர்மானம் அனுமதிக்கிறது.

செவ்வாயன்று ஒபாமாவிற்கு அனுப்பிய கடிம் ஒன்றில் Boehner, “லிபியாவில் நடத்தும் பணிக்கு போர் அதிகார தீர்மானம் பொருந்தாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்துள்ளீர்கள் அல்லது போர் அதிகார தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற முடிவில் உள்ளீர்கள். அமெரிக்க மக்களைப் பிரதிபலிக்கும் இந்த மன்றம் நீங்கள் என்ன முடிவெடுத்தீர்கள் என்பதை அறிந்து கொள்ளும் தகுதி உடையது என்று எழுதினார். போர் அதிகார தீர்மானத்தில் குறிக்கப்பட்டுள்ள காலக்கெடுவைத் அடித்தளமாகக் கொண்டு லிபிய தலையீடு ஞாயிறன்று சட்டவிரோதமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

காங்கிரசிடம் இருந்து ஒப்புதலை அது கேட்டுப் பெற்றால் ஒழிய அல்லது இப்பணியில் இருந்து அனைத்து அமெரிக்கத் துருப்புக்களையும் இருப்புக்களையும் திருப்பிப் பெற்றால் ஒழிய இன்னும் ஐந்து நாட்களில் போர் அதிகார தீர்மானத்தை நிர்வாகம் மீறுவதாகிவிடும் என்று போஹ்னர் எழுதினார்.

போர் அதிகார தீர்மானம் காங்கிரஸால் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மையில் இயற்றப்பட்டது; அது அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சனின் தடுப்பதிகாரத்தை ஒதுக்கித் தள்ளியது. பின் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் இச்சட்டத்தை சிறிதும் மறைக்கப்படாத விரோதப் போக்குடன்தான் கருதினர். இது அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள காங்கிரஸ்தான் போர் அறிவித்தல் என்னும் பிரத்தியேக உரிமையைக் கொண்டுள்ளது என்பதை மறு உறுதிப்படுத்தும் சட்டமாகவும், ஜனாதிபதியின் அதிகாரங்களில் ஊடுருவல் என்றும் கண்டனர்; ஜனாதிபதியின் அதிகாரங்களோ அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்பின் விரிவாக்கத்துடன் இணைந்துள்ளது.

வெள்ளை மாளிகையில் ஒபாமாவிற்கு முன் இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான, “பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான போர் என்ற பொய்களின் தளத்தில் இரு ஆக்கிரமிப்புப் போர்களில் அமெரிக்க மக்களை ஈடுபடுத்தினாலும்கூட, அவர் இரு போர்களையும் தொடக்குவதற்கு முன்னதாக இராணுவப் படைகள் பயன்படுத்துப்படுவதற்கு காங்கிரஸின் இசைவைப் பெற்றிருந்தார்.

தடையற்ற ஜனாதிபதி அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் ஒபாமா ஒருபடி மேலே சென்று லிபியாவிற்கு எதிராக, ஒரு போரைத் தொடக்குகையில், முன்னதாக என்பது ஒருபுறம் இருக்க, போர் தொடக்கப்பட்ட பின்னரும் கூட காங்கிரசின் ஒப்புதலைப் பெறவில்லை.

இச்சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர் ஆழ்ந்த செல்வாக்கற்ற தன்மையைத்தான் கொண்டிருக்கிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பு, Rasmussen Reports ஆல் திங்களன்று வெளியிடப்பட்டது, நான்கில் ஒரு அமெரிக்கர்தான் லிபியாவின்ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கப் போரை ஆதரிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.

பிரதிநிதிகள் மன்றத்தில் குடியரசுக்கட்சித் தலைமை சந்தேகத்திற்கு இடமின்றி போருக்கு உள்ள இந்த விரோதப் போக்கை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. 2008 ஜனாதிபதித் தேர்தலில் போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு அழைப்புவிட்டு தேர்தல் முடிந்தபின் பதவிக்கு வந்தபின் ஒபாமா ஈராக்கிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, வியத்தகு முறையில் ஆப்கானியப் போரையும் விரிவாக்கியதில் எந்த அளவு இழிந்த அரசியல் தன்மை காணப்பட்டதோ, அதே அளவுதான் குடியரசுப் பிரதிநிதிகளின் அணுகுமுறையிலும் உள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்தான், யேமன் மற்றும் பிற இடங்களில், அமெரிக்க மக்களின் விருப்பம் ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இரு முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியும் மற்றும் குடியரசுக் கட்சியும் வெளிநாட்டில் நடக்கும் போர்களுக்கு ஆளும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்களுக்காக ஆதரவு கொடுக்கின்றன. அதேபோல் தடையற்ற இராணுவவாதத்தின் அதிகரிப்புடன் இணைந்து வரும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் மீதான தாக்குதலுக்கும் ஆதரவைக் கொடுக்கின்றன.