சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

“Left” figurehead of German Left Party praises meritocracy and the market

ஜேர்மனிய “இடது” கட்சியின் பிரதிநிதித்துவத் தலைவர் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை மற்றும் சந்தை முறையைப் பாராட்டுகிறார்

By Peter Schwarz
20 June 2011
Use this version to print | Send feedback

இதுவரைநடைமுறைப்படுத்தக்கூடிய முக்கிய கருத்துக்களைமட்டுமே கொண்டிருந்த ஜேர்மனிய இடது கட்சி, ஏர்ஃபேர்ட்டில் அக்டோபர் மாதம் கட்சியின் ஒரு  முழுவேலைத்திட்டத்தையும் நிறைவேற்றவுள்ளது. இதற்குத் தயாரிப்பாக, கட்சி ஒரு தெளிவான சிந்தனைப்போக்கு மற்றும் அரசியல் மாற்றத்தை வலதிற்குச் செய்வதற்கு முயன்று வருகிறது. இதற்கு அடையாளம் கட்சியின் பிரதிநிதித்துவத் தலைவர் ஷாரா வாகன்கினெக்ட் இன் சமீபத்திய புத்தகமானமுதலாளித்துவத்திற்கு பதிலாக சுதந்திரம்” (Freedom instead of Capitalism)” என்பதாகும்.

1989 இல் பேர்லின் சுவர் வீழ்ச்சிக்கு சற்று முன்னதாக அவருக்கு 20 வயதான போது வாகன்கினெக்ட் கிழக்கு ஜேர்மன் (GDR) ஆளும் ஸ்ராலினிச கட்சியான ஜேர்மன் ஐக்கிய சோசலிசக் கட்சியில் (SED) சேர்ந்திருந்தார். அதன்பின் அவர் SED யின் பின்வழித்தோன்றலான   ஜனநாயக சோசலிசக் கட்சிக்குள் (PDS) இருந்து கம்யூனிஸ்ட் மேடை (Communist Platform) என்று அழைக்கப்பட்ட பிரிவின் பிரதிநிதித்துவத்தலைவராக இருந்தார். இவருடைய குழு முக்கியமாக பழைய SED உறுப்பினர்களைத் தளமாகக் கொண்டிருந்தது. அவர்கள் கிழக்கு பேர்லினை ஆட்சி செய்த ஸ்ராலினிச ஆட்சியை குற்றம்சாட்டி கிழக்கு ஜேர்மனியின் சரிவில் தங்கள் செல்வாக்கையும், பங்கையும்  இழந்துவிட்ட பழைய SED உறுப்பினர்களைத் தளமாகக் கொண்டிருந்தது. வாகன்கினெக்ட் பலமுறையும் மார்க்ஸ் பற்றிக் குறிப்பிட்டதோடு, ரோசா லுக்சம்பேர்க் போலவே உடையுடுத்தியும் இருந்தபோதிலும்அவருடைய கருத்துக்கள் மார்க்சிசத்துடன் எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. பொதுவாக ஸ்ராலினிசக் கருத்துக்களாகத்தான் இருந்தன.

இதற்கிடையில் வாகன்கினெக்ட், PDS இன் வழித்தோன்றலான இடது கட்சியின் துணைத் தலைவரானார். கூட்டாட்சிப் பாராளுமன்றத்தில் கட்சியின் பொருளாதார  செய்தித்தொடர்பாளராக உள்ளார். கம்யூனிஸ்ட் மேடையில் அவருடைய அங்கத்துவம்  கடந்த ஆண்டுஓய்வு பெற்றிருந்தது”. அவருடைய சமீபத்திய புத்தகத்தில் இருந்து மார்க்ஸும் லுக்சம்பேர்க்கும் மறைந்துவிட்டனர்; அவர் மேற்கோளிடும் ஒரே மார்க்ஸ் முனிச்  நகர  திருச்சபையின் ஆண்டகையான  ரைன்ஹார்ன் மார்க்சே அன்றி சோசலிச  கார்ல் மார்க்ஸ் அல்ல.

கார்ல் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடுகளுக்குப் பதிலாக இவர் இப்பொழுது வால்டர் ஒய்கென் மற்றும் ஆல்பிரெட் முல்லர் ஆர்மாக்கின், ஒர்டோ-லிபரலிசம் என அழைக்கப்படும் கருத்துக்களின் கோட்பாடுகளை இயற்றியவர்களின் உபதேசங்களைப் பாராட்டுகிறார்.  கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் –CDU- பொருளாதார மந்திரியும் போருக்குப் பிந்தைய காலத்தில் சான்ஸ்லராக இருந்தவருமான லுட்விக் ஏர்ஹர்ட் கிழக்கு ஜேர்மன் தலைவர்களான வால்டர் உல்பிரிக்ட் மற்றும் எரிக் ஹோனேக்கர் ஆகியோருக்குப் பதிலாக அவருடைய அரசியல் முன்மாதிரியாக உள்ளார்.

புத்தகத்தில் முதல் அத்தியாயம் முழுவதும் லுட்விக் எர்ஹர்டைப் புகழ்வதற்கும்அதே போல் ஒர்டோ-லிபரல் பயிலகத்தையும் பாராட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிலகம் 1930களின் பொருளாதாரத் தத்துவங்களில் இருந்து வளர்ச்சி அடைந்தது ஆகும். நாஜி ஆட்சி பற்றி ஒய்கென் குறைகூறி பல முறை அத்துடன் முரண்பட்டிருந்தாலும், முல்லர்-ஆர்மாக் 1933ல் இருந்த நாஜிக் கட்சி உறுப்பினர் ஆவார் (இதைப்பற்றி வாகன்கினெக்ட் ஏதும் கூறவில்லை); மேலும் அவர் நாஜி ஆட்சிக்கு ஆலோசகராகவும் இருந்தார்.

ஒர்டோ-லிபரலிசம் என்பது ஜேர்மனிய நவ-தாராளவாதத்தின் விஷேடமான வடிவமைப்பு ஆகும். இது தனியார் சொத்துரிமை மற்றும் தடையற்ற சந்தை ஆகியவற்றிற்கு ஆதரவாகவுள்ளது. ஆனால் இவை அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குட்பட்டு இயங்க வேண்டும் என விரும்புகிறது. இதன் மையக் கருத்தாய்வுசந்தைகள் தங்கள் நன்மை பயக்கும் செல்வாக்கை ஒரு வலுவான கட்டுப்பாட்டு வடிவமைப்பிற்குள், அதுவும் அரசாங்கத்தின் கீழ் இருப்பதின்மூலம்தான் செயற்படுத்த முடியும்என்பதாகும். இவ்வகையில்தான் Ifo Institute உடைய பழைமைவாத தலைவரான ஹென்ஸ்-வெயனர் சின் எழுதியுள்ளார்.

தன்னுடைய பெரிய படைப்பை 1939ல் வெளியிட்ட ஒய்கென் அரசாங்கம் பொருளாதாரத்தை இயக்குதல் என்னும் கருத்தை உறுதியாக நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை, சந்தைப் பொருளாதாரம் (market economy) என்பது நாஜி ஜேர்மனி மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றில் அவர் கண்ட மத்தியில் இருந்து நிர்வாகிக்கப்படும் பொருளாதாரத்தில் (command economy) இருந்து முற்றிலும் எதிரிடைத் தன்மையைக் கொண்டது. சந்தைப் பொருளாதாரம் அரசியல் சுதந்திரத்திற்கு அடிப்படையான முன்னிபந்தனை என்றும் கருதினார். ஆனால் சந்தைப் பொருளாதாரம் என்று கூறும்போது அவர்தடையற்ற, எவரும் எதையும் செய்யலாம் என்ற” laissez-faire முறையைக் கூறவில்லை. மாறாக அரசாங்கம் வடிவமைப்பை கொடுக்க வேண்டும். அதனால் ஏகபோக உரிமைகள் அல்லது பிற பொருளாதார சக்திகளின் குவிப்பு வளர்ச்சியுறாமல் போய், “முழுப் போட்டிஉறுதியளிக்கப்படும்.

தன்னுடைய கருத்தாய்வுகளை நாஜிசம் மற்றும் ஸ்ராலினிசத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒய்கென் அபிவிருத்திசெய்தார் என்றாலும், அவற்றின் வேர்களை வரலாற்றுரீதியாக ஜேர்மன் மரபுகளில் கண்டறிவது எளிதாகும். ஜேர்மனிய முதலாளித்துவம் ஒரு பொழுதும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க முன்மாதிரியில்மான்செஸ்டர் தாராளவாதத்தை”  அடையமுடியாது. ஏனெனில் அது பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசப் போட்டியாளர்களுக்கு பல ஆண்டுளுக்குப் பின்னர்தான் வளர்ச்சி அடைந்தது.

வெளிநாட்டில் தன் போட்டியாளர்களுக்கும் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர் இயக்கத்திற்கு  எதிராக நடத்தும் போரில் ஜேர்மனிய முதலாளித்துவம் ஒரு வலிமை படைத்த அரசாங்கத்தை நம்ப வேண்டி இருந்தது. இதற்காக ஜேர்மனிய முதலாளித்துவம் 19ம் நூற்றாண்டில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிட்டு பிஸ்மார்க் மற்றும் ஹோகென்ஜோலெர்ன் சர்வாதிகார ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனிய பெருவணிகம் தன்னையே கடிந்துகொள்ளும் நிலை உருவாயிற்று. நாஜி ஆட்சி மற்றும் அதன் குற்றங்களில் அது கொண்டிருந்த நெருக்கமான தொடர்புகளும், உடந்தையும் மிக வெளிப்படையானதால் அவைவணிகத்தை வழக்கம் போல் நடத்த முடியவில்லை. சோசலிச உணர்வுகள் மக்களிடையே பரந்த அளவில் வெளிப்பட்டிருந்தன.

இச்சூழ்நிலையில்தான் ஒர்டோ லிபரல்கள்சமூகச் சந்தைப் பொருளாதாரம்என்னும் கருத்தாய்வைக் கண்டுபிடித்தனர். அவர்களுடைய மையக் கருத்து அரசாங்கம் உரிய நிலைப்பாடுகளை உறுதி செய்தால் தொழிலாள வர்க்கத்தின் சமூகக் கோரிக்கைகளும் முதலாளித்துவத்தை அகற்றாமல் திருப்திப்படுத்த முடியும் என்பதாகும்.

 “ஒர்டோ-லிபரல்கள் கடுமையான விதிகள் மற்றும் பொருத்தமான சமூகச் சட்டங்கள் பொதிந்துள்ள ஒரு சந்தைப் பொருளாதாரம் பொது நலன்களுக்கு விரோதமானது அல்ல என்றும் பொதுநலனுக்குப் பணிபுரியலாம் என்ற முன்கருத்தைக் கொண்டுள்ளதுஎன்று ஷாரா வாகன்கினெக்ட் எழுதுகிறார்.

ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர் இச்சிந்தனைப் போக்கினால் வாகன்கினெக்ட் ஆர்வம் அடைந்துள்ளார். சோசலிசம்தான் தாராளவாதம் என்னும் கருத்தாய்வு இப்புத்தகம் முழுவதும் ஒரு நூலிழைபோல் ஓடுகிறது. ஒர்டோ லிபரல்கள் வரையறை செய்துள்ள போட்டி, தகுதிக்கு மதிப்பு மற்றும் தனிநபர் பொறுப்பு ஆகியவற்றிற்கு உருவகமாக அது உள்ளது. அவர்களுடைய படிப்பினைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் நேரடியாகச் சோசலிசத்திற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.

 “நாம் உண்மையான தடையற்ற சந்தைக் கருத்துக்களை அவற்றின் முடிவுவரைக்கும் சிந்திக்கும்போது, அது நேரடியாக சோசலிசத்திற்குச் செல்லுகிறது, அந்த சோசலிசம் மத்தியமயமாக்கலை முன்வைக்கவில்லை, மாறாக செயற்பாட்டையும் போட்டியையும் நிலைநிறுத்துகிறதுஎன்று நூலின் முகவுரையில் அவர் எழுதியுள்ளார்.

வாகன்கினெக்ட் தற்கால முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், கொந்தளிப்பு மற்றும் நெருக்கடி ஆகியவற்றை பற்றி அவர் நூல் முழுவதும் விளக்கமாக ஆராய்கிறார். ஒர்டோ லிபரல்களின் அறிவுரைகள் தொடர்ந்து பின்பற்றப்படாததால்தான் இவ்வாறு நேர்ந்தன என்று கூறுகிறார்; மேலும்லுட்விக் ஏர்ஹர்ட் முறித்து விட்ட உறுதிமொழியின் விளைவாகவும்அவ்வாறு நேர்ந்தது என்று புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு கூறுகிறது. “ஒய்கென், முல்லர்-ஆம்ரக் மற்றும் பிறரும் சிறப்பான முறையில் நாம் இன்று அனுபவித்து வரும் கெடுதல் விளைக்கக்கூடிய அமைப்புமுறை பற்றிச் சரியாக எச்சரித்துள்ளனர்என்று அவர் எழுதுகிறார். வேறு ஒரு இடத்தில் அவர் கூறுகிறார்: “இன்றைய முதலாளித்துவத்தின் தோல்வி தகுதியுடையவர்களுக்கு முன்னுரிமை நிலைப்பாடு என்பதால் அல்ல, அது தகுதியுடையவருக்கு முன்னுரிமை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதால்தான்.”

சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஜேர்மனி தோல்வியுற்றதை, ஒர்டோ லிபரல்கள் உணர்வு இல்லாமற் போனதால்தான் என்றும் வாகன்கினெக்ட் விளக்கமளிக்கிறார். தொழிலாளர்கள் ஜனநாயகம் அடக்கப்பட்டது, அதிகாரம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது, திட்டமிட்ட பொருளாதாரமுறை அதன் சலுகைகளை திருப்தி செய்வதற்காக தவறாகப் பயனபடுத்தப்பட்டது ஆகியவை அனைத்தும் இவருக்கு  அத்தியாவசியமற்றதாகின்றது. மாறாக வாகன்கினெக்ட் திட்டமிட்ட பொருளாதாரமே தோல்விக்குக் காரணம் என்கிறார்; “நிறுவனங்களுக்கு இடையே உள்ள சந்தை உறவுகளை முழுப் பொருளாதாரத்திற்கும் ஒரு விரிவான திட்டத்தால் மாற்றுவதுஎன்ற முயற்சியால்தான் தோல்வி ஏற்பட்டது.” மேலும், “கிழக்குப் பொருளாதாரங்கள் இந்த அணுகுமுறையினால் தோல்வியுற்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன; இது இல்லாதிருந்த அல்லது தவறான உந்துதல்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டது.”

இறுதியாக அவர் தன்னுடைய சொந்தக் கருத்தானபடைப்பாற்றல் மிகுந்த சோசலிசம்என்பதை கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் கூறுகிறார்: “படைப்பாற்றல் மிகுந்த சோசலிசம் திட்டமிட்ட பொருளாதார மத்தியமயமாக்கலை கைவிட்டுள்ளது. இது குறைந்து என்று இல்லாமல் இன்னும் கூடுதலான போட்டிக்கு அழைப்பு விடுகிறது. ஆனால் அங்கு போலித்தனமான போட்டிதான் நிகழ்கிறது, ஏனெனில் இயற்கையான ஏகபோக உரிமைகள், சில நிறுவனங்களின் ஏகபோக உரிமைகள் ஆகியவை சந்தைச் சக்தியைப் பயன்படுத்தி போட்டியைத் தடுக்கும்போது, அரசாங்கம் தலையிட அழைக்கப்படுகிறது. இதில் முதலாளித்துவம் இல்லாத சந்தைப் பொருளாதரமும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் இல்லாத சோசலிசமும் உள்ளன.”

வாகன்கினெக்ட் உடைய ஒய்கென், முல்லர்-ஆர்மக் மற்றும் லுட்விக் ஏர்ஹர்டை சோசலிசத்தின் முன்னோடிகள் என்று சித்தரிக்கும் முயற்சிகள் வரலாற்றுரீதியாக  அபத்தமானவையாகும். இன்றளவும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஜேர்மனியில் பிரகடனப்படுத்தும் சமூக சந்தைப் பொருளாதாரம்சோசலிசத்திற்கு ஒரு முன்னோடி அல்ல. மாறாக இது சோசலிசப் புரட்சி வருவதைத் தவிர்க்கவும் Krupps, Fricks  மற்றும் பிற போர்க்குற்றவாளிகளின் சொத்துக்களைக் காப்பாற்றவும்தான் உதவியது.

மேலும்சமூக சந்தைப் பொருளாதாரத்தின்ஒரு பகுதியாக, நெருக்கமான முறையில்  தொழிற்சங்கங்கள், வணிகம் மற்றும் அரசாங்கம் இணைந்துள்ளது சட்டத்திலையே பொதிந்துள்ளதுடன், இன்று அது வேலைகளை அழிக்கவும் பொதுநலன்களை அழிக்கவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

போருக்குப் பிந்தைய காலத்திய சமூக சீர்திருத்தங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த அரசியல் வாதிகள் அல்லது பொருளாதார வல்லுனர்களின் அன்பளிப்பு அல்ல. அவர்கள் ஒரு சமூக சந்தைப் பொருளாதார உயர்நிலை பற்றி நம்பியிருந்தனர். ஆனால் கடுமையான வர்க்கப் போராட்டங்கள் முன்னதாக நடந்த நிலையில் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டிய சலுகைகளைக் கொடுத்தனர். உதாரணமாக 1956-57ல் Schleswig-Holstein மாநிலத்தில் உலோகத் தொழிலாளர்கள் 16 வார கால வேலைநிறுத்தம் நடத்தியதை அடுத்து அவர்கள் நோய்ப்படும்காலத்திலும் தொடர்ந்து வழமையான ஊதியம் பெறும் உரிமையைப் பெற்றனர்.

அனைவருக்கும் செழிப்பு என்ற உறுதியைக் கொடுத்த லுட்விக் ஏர்ஹர்ட், வாகன்கினெக்ட் உடைய நூலின் தலைசிறந்த முன்மாதிரியாக உள்ளார். ஆனால் தொழிலாளர்களால் வெறுக்கப்படுகிறார். 1966ம் ஆண்டு சான்ஸ்லர் பதிவை விட்டு அவர் விலக வேண்டியதாயிற்று. இதற்கு முக்கியக் காரணம் அனைத்துச் சுரங்கங்களையும் மூடுவதற்கான வெகுஜன எதிர்ப்பு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதுதான். ஆனால் வாகன்கினெக்ட் ஐ பொறுத்தவரை தொழிலாள வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் இதில் பங்கு ஏதும் கொள்ளில்லை. இங்கு அவர் அவருடைய ஸ்ராலினிச மரபுகளுக்குத்தான் உண்மையாக நடந்து கொள்கிறார்.

ஆனால் வாகன்கினெக்ட், அடினோவர் அல்லது ஏர்ஹர்ட் சகாப்தத்தை உயர்ந்த வகையில் சித்தரிக்கிறார் என்பதை நாம் ஒதுக்கித் தள்ளினாலும்கூட, அது ஒரு 80 வயதானவர் 20வயது இளைஞரின் தோலிற்குள் புகுந்து கொள்ளுவது இயலாது என்பதை உணர்ந்துகொள்வதற்கு ஒப்பானதுதான். போருக்குப் பிந்தைய காலத்திய பொருளாதார உயர்ச்சி, “சமூகச் சந்தைப் பொருளாதாரத்திற்குஓரளவு நம்பகத்தன்மையைக் கொடுத்தது, அதே நேரத்தில் அது தோல்வியடைவதற்கான நிலைமைகளையும் உருவாக்கியது. மூலதனதிரட்சியின்  உள்விதிகள் (அவை இல்லாவிடின் முதலாளித்துவம் தப்பிப் பிழைக்க இயலாது) தவிர்க்க முடியாமல் பொருளாதார, சமூக நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. இதை நிரூபணம் செய்தது கார்ல் மார்க்சின் பெரும் சாதனைகளில் ஒன்று எனலாம்.

வாகன்கினெக்ட் ஐ பொறுத்தவரை, நாம் பார்த்துள்ளபடி, நெருக்கடி முற்றிலும் அகநிலை  காரணங்களாலானது; “லுட்விக் ஏர்ஹர்டின் முறிந்த உறுதிமொழிகளின்விளைவு என்பதாகும். இவ்வகையில் அவருடைய புத்தகத்தையும் நாம் விளைவுதரக்கூடியது அல்ல மற்றும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனைப் படைப்பு என்று உதறித்தள்ள முடியும். ஆனால் அப்படி அல்ல. தவறான கருத்துக்கள் கூட நடைமுறையில் விளைவுகளை உடையவை.

போட்டித்தன்மை, தகுதியுடையோருக்கு சிறப்புரிமை நிலை மற்றும் லுட்விக் எர்ஹர்டிற்கு வாகன்கினெக்ட் காட்டும் பாராட்டுக்கள் பெருகிய முறையில் தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் மோதலை எதிர்கொள்ளும் நிலையில் ஆளும்வர்க்கத்தினை பாதுகாக்க  இடது கட்சி தயாராக இருக்கிறது என்பதற்கான ஒரு தெளிவான அடையாளம் ஆகும்.

வாகன்கினெக்ட் ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே ஒரு வலுவான அரசாங்கம் பற்றி அதிகரித்துவரும் ஆதரவை எதிர்பார்க்கப்படுகின்றது என்ற நம்பிக்கையை அறிவித்தார். வங்கிகள் மற்றும் பெருநிறுவங்களுக்கும் இடையேயான அரசாங்கத்திற்கும் ஒழுங்கமைக்கும் பங்கு பற்றியும் வாகன்கினெக்ட் வலியுறுத்துகிறார். ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்துவது என்பது தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் பிற அமைப்புக்களை அச்சுறுத்த முடியாமல் போகும். எனவே தொழிலாளர்களும் முதலாளிகளும் நெருக்கமாக ஒத்துழைப்பது மற்றும் தொழிலாளர் போராட்டங்களை நிராகரிக்கப்படுதல் ஆகியவற்றை கொண்ட கூட்டுழைப்புவாதம் (corporatism) இத்தாலிய பாசிசத்தால் முதலில் வளர்க்கப்பட்டது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.

வெளியுறவுக் கொள்கையில், ஒரு வலுவான இராணுவ வலிமை உடைய அரசாங்கம் பெருகியளவில் அதிகரிக்கும் தேசிய முரண்பாடுகளுக்கு மத்தியில் முக்கியத்துவத்தை அடைகிறது. இப்பின்னணியில், வாகன்கினெக்ட் இறக்குமதிக் காப்புவரிகள் குறைவூதிய நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவது முக்கியமானது. “பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் வறுமைத்தன ஊதியங்கள், தொழில் நிலைமைகள் உள்ள நாடுகளில் இருந்து ஒப்பிடமுடியாத வகையில் வரும் மலிவுப் பொருட்களை இறக்குமதி செய்தல்சிறுவர்கள் தொழில்முறையில் சுரண்டப்படுவது பற்றிக் கூறவும் தேவையில்லைஐரோப்பிய ஒன்றியத்திற்குள் காப்பவரிகள் விதிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும்போது அதிக விலை உடையனவாகி விடுகின்றது என்பது பற்றி கவனத்திற்கெடுப்பது பிரயோசனமானதுஎன்று அவர் எழுதுகிறார்.

அதிகரிக்கும் தேசிய முரண்பாடுகள், பரந்த வேலையின்மை, குறைவூதிய வேலைகள் மற்றும் முதலாளித்துவ சமூகத்தில் ஆழ்ந்த நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது வணிகத் தடைகள், செயற்பாடுகள், போட்டிகள் ஆகியவை பிற்போக்குத்தனத்தின் கோஷங்களாக வெளிப்படுகின்றன. இடது கட்சியில்இடதுபிரிவு என்று கூறப்படும் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்று கூறப்படும் ஒரு பெண்மணியிடம் இருந்து இக்கருத்துக்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன்கினெக்ட் தனக்காக மட்டும் பேசவில்லை. இவருக்கு ஒஸ்கார் லாபொன்டைன் உடைய முழு ஆதரவும் உண்டு. கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டாலும், அவர் இடது கட்சியின் மிகச்செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக அவர் இன்னும் கருதப்படுகிறார். இந்த நூல் வெளிவந்தபின், லாபொன்டைன் Tagesspiegel  ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறுகிறார்: “என்னைப் பொறுத்தவரை சோசலிசம் முன்பும் இப்பொழுதும் அதன் முடிவுவரை சிந்திக்கப்பட்ட தாராளவாதம் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதுதான்.”