சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Mounting US-China rivalry over South China Sea

தென் சீனக் கடல் தொடர்பாக பெருகும் அமெரிக்க போட்டி

By Joseph Santolan 
24 June 2011
Use this version to print | Send feedback

அமெரிக்காவினது பொது அறிக்கைகள் மற்றும் இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து ஆத்திரமூட்டும் பங்கை கொண்டுள்ளது. இதையொட்டி தென் சீனக் கடலில் வேண்டுமென்றே சீனாவுடன் அழுத்தங்களை அதிகரிக்கிறது.

மூலோபாயத்திற்கான சர்வதேச கற்கை மையத்தில் (Center for Strategic and International Studies - CSIS) ஜூன் 20ம்   திகதி தென் சீனக் கடல் பகுதியில் கடல்போக்குவரத்து பற்றிய மாநாட்டில் பேசிய முக்கியமான குடியரசுக் கட்சியின் செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் மக்கெயின் ஆக்கிரோஷமான அமெரிக்க செயற்பட்டியல் ஒன்றை முன்வைத்துள்ளார்.

உலகின் புவிசார் அரசியல் ஈர்ப்பு மையம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது. தென் சீனக் கடலில் இப்பொழுது நடைபெறும் நிகழ்வுகள் இந்த நூற்றாண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். அமெரிக்கா அந்த வழிவகையில் தீவிரமாக ஈடுபட்டுத்தான் தீரவேண்டும்….ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து நாம் பின்வாங்கமாட்டோம், வெளியில் அகற்றப்பட உடன்படவும் மாட்டோம்என்றார் அவர்.

தென் சீனக் கடலில் சீனாவின் நிலப்பகுதி உரிமைகளை மக்கெயின்ஆதாரம் அற்றவை”, “சர்வதேச சட்ட அடிப்படையில் இல்லாதவைஎன்று மக்கெயின் உதறித்தள்ளினார். அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பூசலுக்கு உட்பட்ட கடல் நிலைகள் பற்றி போட்டியிடும் தரப்புக்களின் பல கூற்றுக்களைப் பற்றி அமெரிக்கா ஒரு நிலைப்பாடும் கொள்ளவில்லை என்று வாதிட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா தடையற்ற கடல் போக்குவரத்தில்தான் அக்கறை கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வலதுசாரி Heritage Foundation ல் ஆசிய கற்கை மையத்தின் (Asian Studies Center) இயக்குனராக இருக்கும் வால்டர் லோஹ்மன் அன்றைய தினமே ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்: “நம்பிக்கையான அமெரிக்க-சீன உறவுகள் முக்கியமான பின்னணியைக் கொண்டவைதான்; ஆனால் அவற்றின் தன்மையினாலேயே மட்டும்அக்கறைகளைக் கொடுத்துவிடாது. இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் நலன்கள் ஒன்றையொன்று குறுக்கிடுவது என்பது மிகக் குறுகிய தன்மை உடையது. நம்பிக்கையான தவறுகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உண்மையான பணயத்திலுள்ள அமெரிக்க நலன்களை ஆபத்திற்கு உட்படுத்துவது சிறந்தது அல்ல: அதாவது கடல்களில் தடையற்ற போக்குவரத்து, நட்பு நாடுகளுடன் கொண்டுள்ள உடன்பாடுகள் பற்றிய உறுதிப்பாடு, பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு ஆகியவை நிலைநிறுத்தப்பட வேண்டும்.”

அமெரிக்காவின் உண்மையான நலன்கள்பொருளாதார நலன்கள் மற்றும் இப்பிராந்தியத்தில் தொடரும் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கம்என்பவைதான் பணயத்திற்கு உட்பட்டுள்ளன. மக்கெயினைப் போலவே, லோஹ்மனும்  இந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஏற்கனவே அழுத்தமாக உள்ள சீனாவுடன் இன்னும் உறவுகளில் அழுத்தங்களை விரிவாக்க அழைப்புக் கொடுக்கிறார்.

புதன்கிழமையன்று, சீனத் துணை வெளியுறவு மந்திரி குய் டியன்கை இதற்கு விடையிறுத்தார்: “இதில் [தென்சீனக் கடற்பகுதியில்] அமெரிக்காவின் பங்கு பற்றிக் கூறுகையில், அமெரிக்கா இந்த பூசலில் தொடர்புடைய நாடல்ல. எனவே இந்தப் பூசல் உரிமைகளைக் கோரும் அரசுகள் தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதுதான் அமெரிக்காவிற்கு நல்லது.” இவருடைய சொல்லாட்சி தெளிவாகச் சுட்டிக்காட்டியது: “ஒவ்வொரு நாடுகளும் உண்மையில் நெருப்புடன் விளையாடுகின்றனர் என்று நான் நம்புகிறேன்; இந்த நெருப்பு அமெரிக்காவையும் ஈர்த்துவிடாது என்றும் நான் நம்புகிறேன்.”

இது வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற தன் அண்டை நாடுகளுடன் தென் சீனக் கடலில் கொண்டுள்ள பூசல்களில் குறுக்கிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் நேரடி எச்சரிக்கை ஆகும். கடற்பகுதியில் சீனாவின் சொந்த முக்கிய நலன்கள் பணயத்தில் உள்ளனசீன நிலப்பகுதிக்கு அருகேயுள்ள கடல்நிலை, இதன் மூலம்தான் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து சீனாவின் எரிசக்தி விநியோகங்கள் -அளிப்புக்கள் பெரிதும் வந்து சேர்கின்றன. கடல்தளமும் பெரிய அளவில் எண்ணெய், மற்றும் எரிவாயு இருப்புக்களை கொண்டுள்ளது.

குயியின் சொற்கள் அவர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் குர்ட் காம்ப்பெல்லுடன் ஹவாயில் முக்கிய பேச்சுக்களை நடத்துவதற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் வெளிவந்தன. இக்கூட்டம் ஆசிய-பசிபிக் விவகாரங்கள் பற்றி முதலில் இணைந்து நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம் ஆகும். ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு சீன ஜனாதிபதி ஹு பயணிந்திருந்தபோது இது ஏற்பாடு செய்யப்பட்டது. தென் சீனக் கடல் கூட்டத்தில் விவாதத்திற்கான செயற்பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் இப்பிராந்தியத்தில் அமெரிக்கா எப்பகுதியையும் உரிமை கோரவில்லை என்றும் குயி கூறினார்.

நேற்று செய்தி ஊடகத்திற்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில், வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் கூறினார்: “சமீபத்தில் ஓர் உயர்மட்ட சீன அதிகாரி கூறியுள்ள கருத்துக்களைப் பற்றி நாங்கள் அறிவோம். உதவிச் செயலர் குர்ட் காம்பெல் முதல் ஆசிய-பசிபிக் ஆலோசனைகளில் அமெரிக்க குழுவிற்கு தலைமை தாங்குவார் செயற்பட்டியலில் இது மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும் என்பது உறுதி.”

ஜூன் 23ம் திகதி அமெரிக்க தென் சீனக் கடலில் கடற்படைப் பயிற்சிகளை முடித்தது. இது பிலிப்பைன்ஸ், புரூனே, இந்தோனோசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. போலியாக உருவாக்கப்பட்ட மோதல் எதிர்கொள்ளல்கள் என்ற வகையில் போர் முறைகள் பூசலுக்குட்பட்ட கடல்நிலைகளில் எதிரிகளின் கப்பல்களுடன் சண்டையிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுக்கு போரில் அமெரிக்கா பயிற்சி அளிக்கையில், சீனாக் கடலின் வடக்கு முனையில் ஹைனன் தீவுகளுக்கு அருகே அதன் பயிற்சிகளை நடத்தியது. அமெரிக்கப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு நடுவே, சீனா ஒரு கடற்படை ரோந்துக் கப்பலைஹைக்சுன்-31—சிங்கப்பூருக்கு அனுப்பியது. இது அமெரிக்கா அதன் போர் முறைகளை நடத்திக் கொண்டிருக்கும் கடல்நிலைகளை நேரடியாக நடுவே கடந்து சென்றது.

பிலிப்பைன்ஸின் வெளியுறவு மந்திரி ஆல்பெர்ட் டெல் ரோசரியோ கடந்த வாரம் அமெரிக்காவிற்கு பயணித்து முதலில் மக்கெயினைச் சந்தித்து, தென்சீன்கடல் பற்றிய CSIS  மாநாட்டில் உரையாற்றிப் பின் கிளின்டனையும் சந்தித்தார். இவர் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸையும் சந்திக்கவுள்ளார்.

டெல் ரோசரியோ அவருடைய துறைக்கு எழுதியுள்ள நிலைப்பாட்டு ஆவணம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். இதில் தென் சீனக் கடலில் மோதல்கள் வெடிக்க நேர்ந்தால், அமெரிக்கா 1951ம் ஆண்டு பரஸ்பரப் பாதுகாப்பு உடன்படிக்கையின்படி பிலிப்பைன்ஸின் பாதுகாப்பிற்கு உதவ வரும் சட்டபூர்வக் கட்டாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டெல் ரோசரியோவின் கூற்றுக்கள் குறித்து குறிப்பான அறிக்கைகளை வெளியிடவில்லை என்றாலும், கிளின்டன் பலமுறை இந்த உடன்பாடு பற்றிய தன் கருத்துக்களை அவரை சந்தித்தபின் நம்பிக்கைக் குறிப்பாக தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ டெல் ரோசரியோவிடம் அவருடைய அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களையும் புதிய இராணுவத் தளவாடங்களையும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த ஏற்பாடுகள் கேட்ஸுடன் ரோசரியோ சந்திக்கும்போது முழுமை பெறும் என்று கிளின்டன் கூறியுள்ளார்.

சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை அனைத்தும் அடுத்த மாதம் தென் சீனக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக தோண்டுதல் திட்டங்களைக் கொண்டுள்ளன. சீனாவும் பாரிய ஆழ் கடல் தோண்டுதலை தொடக்க உள்ளது. வியட்நாம் கனேடிய எண்ணெய் நிறுவனம் ஒன்றான Talisman Energy உடன் சீனா ஒரு போட்டி எண்ணெய் நிறுவனத்திற்கு உரிமை கொடுத்துள்ள பகுதியில் தோண்ட உள்ளது. பிலிப்பைன்ஸ் சார்பனில் Forum Energy என்னும் நிறுவனம் பல மாதங்களுக்கு முன்பு சீன கடற்படை ரோந்துக் கப்பல்களுடன் மோதலை எதிர்கொண்ட இடத்தில் இந்நிறுவனம் எண்ணெய்க்காக தோண்ட உள்ளது.

அமெரிக்கா அதன் கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளை வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் அடுத்த இரு வாரங்களுக்கு நடத்தும். இத்தகைய உடனே தொடரும் பயிற்சிகளே போர்முரசுகொட்டுவதற்கு தயாராவதற்கான தெளிவான நிகழ்வுகள் ஆகும். இவை அமெரிக்க கப்பல்கள் பூசலுக்கு உட்பட்ட கடல்நிலைகளில் தொடர்ந்து இருப்பதற்குப் போலிக் காரணத்தைத் தருவதுடன், இப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்தும் நோக்கத்தையும் கொண்டவை