சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US and Europe step up preparations for intervention in Libya

லிபியாவில் தலையிடுவதற்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் தயாரிப்புக்களை முடுக்கிவிடுகின்றன

By Patrick OConnor
26 February 2011

Use this version to print | Send feedback

லிபியாவின் முயாம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியான ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை நேற்று ஒபாமா நிர்வாகம் அறிவித்தது. இதில் அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்பு, இராணுவத் தளவாடங்கள் விற்பனை இரத்து ஆகியவையும் அடங்கும். திரிப்போலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் வாஷிங்டன் மூடியதுடன், சர்வதேச நிதிய நிறுவனங்கள் மூத்த லிபிய அதிகாரிகள் செய்யக்கூடிய பண மாற்றங்களைக் கண்காணிக்குமாறும் வாஷிங்டன் கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் .நா. மூலம் பன்முகப் பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட உள்ளன என்ற எதிர்பார்ப்பிற்கு முன்னதாகவே இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “இது முதற்படிதான், இன்னும் அதிக விருப்புரிமைகளைப் பரிசீலிக்க நாங்கள் தொடர்வோம் என்பது வெளிப்படை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளர் ஜே கார்னே அறிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத் தகவலின்படி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தயாரித்துள்ள .நா. பாதுகாப்புக் குழுத் தீர்மானம் கடாபி ஆட்சியின் கொடுமைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என ஆகலாம் என்று கூறி இவை ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கிறது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவும் லிபியா மீதான தீர்மானம் ஒன்று பற்றிப் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது. இது அந்த அமைப்பில் லிபியத் தூதர்கள் விலகிவிட்டதையடுத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரச செயலர் கிளின்டனும் திங்களன்று ஒரு குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பல ராஜதந்திர உத்திகளுக்குப் பின், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் லிபியாவில் இராணுவத் தலையீடு செய்வதற்கான தங்கள் அவசரகால நடவடிக்கைகளை விரைவுபடுத்திக் கொண்டு வருகின்றன. ஒபாமா நிர்வாகம் அனைத்து விருப்புத் தேர்வுகளும் மேசையில் உள்ளன என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வியாழனன்று பஹ்ரைனிலிருந்து பேசிய அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைவர் அட்மைரல் மைக் முல்லன், “நங்கள் எங்கள் திறன்கள் மற்றும் பல அவசரகால நடவடிக்கைகள் குறித்து எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஆராய்ந்து வருகிறோம் என்றார். ஜனாதிபதி ஒபாமவிற்கு விரிவான மற்றும் வலுவான தொலைநோக்குடைய விருப்புரிமைகளைச் சிந்தித்து அளிப்போம் என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய சக்திகளும் தங்கள் வலிமையைத் திரட்டுகின்றன. இத்தாலிய பாதுகாப்பு மந்திரி இக்நேசியோ லா ரஷியா நேற்று Sky TG24 செய்தித் தொலைக்காட்சிக்கு தனது அரசாங்கம் தென்கிழக்கு லிபியாவில் முடங்கி நிற்கும் இத்தாலிய மக்களை மீட்பதற்கான ஒரு இராணுவ நடவடிக்கையை திட்டமிடுவதாகக் கூறினார். பிரிட்டனும் இதேபோல் செய்ய உள்ளது. திரிப்போலி கடலோரப் பகுதிக்கு 360 கி.மீ. தொலைவிலுள்ள உயர் SAS படைகளும் இப்பொழுது மால்டாவில் உள்ளன. அதே சமயம் இரண்டு கடற்படை விமானத் தளம் கொண்ட கப்பல்களும் மத்தியதரைக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் அப்பகுதியில் மற்ற தொடர்ச்சியான சொத்துக்கள், சினூக் ஹெலிகாப்டர்கள், C17 விமானங்கள் ஆகியவையும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளன.

ஒரு அவசரகால நேட்டோக் கூட்டம் நேற்று பிற்பகல் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. இதன்பின் வெளிவந்த அறிக்கை நேட்டோ எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில் ஆலோசனைகளைத் தொடரும் என்று கூறியுள்ளது. தலைமைச் செயலர் ஆண்டர்ஸ் போ ரஸ்முசன் முன்னதாக இந்த அமைப்பு இதைப் போன்ற நிலைமைகளில் பயன்படுத்தக்கூடிய சொத்துக்களைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டுள்ள DEBKAfile வலைத் தளம் நூற்றுக்கணக்கான அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆலோசகர்கள், உளவுத்துறை அதிகாரிகள் உட்பட, போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை உள்ள படகுகளில் இருந்து பெப்ருவரி 24 வியாழன் அன்று பெங்காசி மற்றும் டோப்ருக் சிறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது. ஆனால் இந்த அறிக்கைக்கு ஆதாரமாக எந்தச் சான்றும் பகிரங்கமாகக் கிடைக்கவில்லை.

எத்தகைய இராணுவத் தலையீடும் பொருளாதார, மூலோபாய வகையில் முக்கியமாக உள்ள லிபிய எண்ணெய் வயல்களை பாதுகாக்கும் வகையில் முக்கியமாக இயக்கப்படும். அமெரிக்கா, பிரிட்டிஷ், இத்தாலி, பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய எண்ணெய் பெருநிறுவனங்கள் அனைத்தும் லிபியாவின் உயரந்த தர எண்ணெய் இருப்புக்களில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. இந்த நடைமுறை காலனித்துவவாதமாக இருக்கும். இது மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் எரிசக்தி இருப்புக்கள் மீது கட்டுப்பாட்டைக் கொள்வதற்கு இராணுவ வலிமையைப் பயன்படுத்தும் வாஷிங்டனின் முயற்சிகளுடைய கூடுதல் விரிவாக்கமாக இருக்கும்.

லிபியாவிலுள்ள நிலைமை உலகளவில் ஒரு பெரிய எண்ணெய் விலை அதிர்ச்சி அச்சுறுத்தலையும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தீவிர சரிவையும் கொடுக்கக் கூடும். வியாழனன்று ஒபாமா இக்கவலையை ஜனாதிபதியின் வேலைகள், போட்டித்தன்மை பற்றிய குழுவின் கூட்டத்திற்கு வந்திருந்த பெருநிறுவன நிர்வாகிகளுக்கு உரையாற்றுகையில் அடிக்கோடிட்டுக் காட்டினார். எண்ணெய் விலைகள் குறித்து, “லிபிய நிலைமையச் சமாளிப்போம், விலை உறுதிப்பாடு அடையும் என்று நாம் உண்மையில் நினைக்கிறோம் என்றார் அவர். நிதி மந்திரி டிமோதி கீத்னர் கவலைகளை அகற்றும் வகையில் மற்ற OPEC உறுப்பு நாடுகள் அதிக உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளதையும் வலியுறுத்தினார்.

லிபியாவில் அமெரிக்கத் தலையீட்டு நடவடிக்கை கடாபியின் வன்முறையை எதிர்த்து நிற்கும் மக்களைக் காப்பதற்கோ, நாட்டில் ஜனநாயகத்தை நிறுவுவதற்கு என்றோ இருக்காது. ஆட்சி முதலில் எதிர்ப்பு சக்திகள் மீது அலையென வன்முறையைக் கட்டவிழ்த்த போது ஒபாமாவின் துவக்க எதிர்கொள்ளல் ஏதும் கூறாமல் இருந்தது என இருந்தது. இது கடாபியின் சக்திகள் விரைவில் கட்டுப்பாட்டை மீட்குமோ என்று பொறுத்திருந்து பார்த்தலின் ஒரு பகுதிதான். சர்வாதிகாரி அமெரிக்கா, ஐரோப்பியச் சக்திகளுடன் சமீபத்திய ஆண்டுகளில் உற்சாகமான உறவுகளைக் கொண்டிருந்தார். முன்னதாக வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லிபியாவில் நிறுவியிருந்த தடைகள் அகற்றப்பட்டிருந்தன. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அழைக்கப்பபடுவதற்கும் தன் முழு ஆதரவை அளித்திருந்தார்.

வட ஆபிரிக்காவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி லிபியாவிலும் பரவியதைக் குறித்து மேலைத்தேய அரசாங்கங்கள் அபாய ஒலியாக பார்த்தன. கடாபி அரசாங்கம் நடத்திய படுகொலைகள் பற்றி தகவல்கள் முதலில் வெளிப்பட்டபோது அதைப் பற்றி அதிகம் பேசாமல் தவிர்த்தது ஒபாமா மட்டும் அல்ல. இன்று கார்டியனில் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் குடிமக்களை அந்நாட்டில் இருந்து அகற்றுவதற்கான தயாரிப்புக்களைத் தாமதப்படுத்தியது முக்கியமாக வணிக நலன்களைக் காப்பதற்குத்தான் என்று எழுதியுள்ளது. பெயரிடப்படாத அதிகாரிகள் கன்சர்வேடிவ்-லிபரல் கூட்டணி அரசாங்கம், பிரிதம மந்திரி டேவிட் காமரோன் தலைமையில், “தயங்கியதற்குக் காரணம், இலாபகரமான நாட்டில் இருந்து அவசர அவசரமாக பிரிட்டிஷ் மக்களை வெளியேற்றுவதற்கு லிபியாவின் விடையிறுப்பு எப்படி இருக்குமோ என்ற கவலையும், அந்நாட்டில் பிரிட்டன் கொண்டுள்ள மிக அதிகமான முதலீடுகளும்தான் என்று செய்தித்தாளிடம் கூறியதாகத் தெரியவந்துள்ளது.

இப்பொழுது லிபிய நிலப்பகுதியில் பெரும்பாலனவற்றில் கடாபி கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்பை அவரால் அடக்க முடியவில்லை என்று நிரூபிக்கப்பட்டபின், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் அவருக்கு எதிராகச் செயல்பட முற்படுகின்றன. தங்கள் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் லிபிய உள்நாட்டுப் போர் நீடித்தாலோ அல்லது அதிகார வெற்றிடம் வந்தாலோ பாதிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி அவை கவலை கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் அப்பகுதி மீது எவரும் பறக்கக்கூடாது என்ற விதியைச் சுமத்துவது பற்றிய விவாதங்கள் இருந்தன. Heritage Foundation இல் உள்ள மத்திய கிழக்கு வல்லுனர் ஒருவரான ஜேம்ஸ் பிலிப்ஸ் USA Today இடம் இது இராணுவ நடவடிக்கைக்கு ஒப்பாகும் என்றும், “இது கடைசிப் பட்சமாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டார். 1990 களில் முறையாக அமெரிக்காவானது ஈராக்கிய இலக்குகளைக் குண்டுவீசித்தாக்கியது பறக்கக் கூடாத பகுதிகள் பற்றிய ஆக்கிரோஷத் தன்மையைத்தான் நிரூபித்தது. அத்தகைய நடைமுறை லிபியா மீதும் நடத்தப்படுவது கடுமையான விமானத் தாக்குதல்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.

அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடக்கங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் மனிதாபிமானப் பாசாங்கு நிலைப்பாட்டிற்கு தங்கள் ஆதரவைக் கொடுத்துள்ளன. இவைதான் 1990 களில் பால்கன் பகுதிகளில் அமெரிக்கத் தலைமையில் குறுக்கீடுகளுக்குப் போலிக் காரணங்களாக இருந்தன. அவைதான் இப்பொழுது புதுப்பிக்கப்படுகின்றன. வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரேகன் கடாபியைக் கண்டித்தது பற்றி பைனான்சியல் டைம்ஸ் லிபிய வெறி நாயை அடக்கும் நேரம் வந்துவிட்டது என்ற தலைப்பில் நினைவு கூர்ந்தது. லண்டனை தளமாகக் கொண்ட வெளியீடு உடனடியாக பறக்கக் கூடாத தேவை மற்றும் துனிசியா, எகிப்து ஆகியவற்றில் மனிதாபிமானத் தாழ்வாரங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

இதே கருத்துத்தான் நியூ யோர்க் டைம்ஸாலும் கடாபியை நிறுத்த வேண்டும் என்னும் அதன் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இராணுவத் தலையீடு வேண்டும் என்று கூறாமல் நிறுத்தும் கட்டுரையில் செய்தித்தாள், “பொஸ்னியா, கோசோவோ மற்றும் ருவண்டாவிற்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெகுஜனத்திற்கு எதிரான கொடுமைகளை நிறுத்த கடுமையாக உழைக்கின்றன. சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்றுஉலகம் இன்னும் பொறுக்குமே ஆனால், இன்னும் அதிக மக்கள் இறந்துவிடுவர் என்று அறிவித்துள்ளது.

இத்தகைய அறிக்கைகள் முற்றிலும் இழிந்தவை, பாசாங்குத்தனமானவை. ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பிற்கு போலித்தனமான பேரழிவுதரும் ஆயுதங்கள் என்ற பொய்க்காரணத்தைப் பிரச்சாரம் செய்ததில் நியூ யோர்க் டைம்ஸ் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது போல், இப்பொழுது மற்றொரு எண்ணெய்ச் செழிப்புடைய லிபியா நாட்டின் மீது காலனித்துவ தலையீட்டிற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு அது இப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.