சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wisconsin governor to announce $1 billion in budget cuts

விஸ்கான்சன் கவர்னர் வரவுசெலவுத் திட்டத்தில் $1 பில்லியன் வெட்டுக்களை அறிவிக்க உள்ளார்

By Jerry White
1 March 2011

Use this version to print | Send feedback

அமெரிக்காவின் விஸ்கான்சன் மாநில ஆளுனர் ஸ்காட் வால்க்கர் இன்று பிற்பகல் மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டுத் தொடர் உரையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் $1பில்லியன் டாலர்களுக்கும் மேலான வெட்டுக்களை அறிவிக்க உள்ளார்.

மாநில, உள்ளூர், நகரசபை பணிகளுக்கு இத்தகைய மோசமான குறைப்புகள் என்பது பொதுக் கல்விமுறையை மிகவும் பாதிக்கும்; மழலையர் வகுப்பில் இருந்து 12வது வகுப்புக் கல்வி வரை $900 மில்லியன் நிதியை அகற்றிவிடும். மருத்துவ உதவி, ஏழைகளுக்கான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றிலும் வால்க்கர் கடுமையான வெட்டுக்களைச் சுமத்த உள்ளார்.

வரவு-செலவுத்திட்ட குறைப்புக்கள் குடியரசு ஆளுனருக்கு மக்களுடைய எதிர்ப்பை அதிகப்படுத்தியுள்ளன; மாநிலத்தில் 175,00 ஆசிரியர்கள், செவிலியர்கள் இன்னும் பிற பொதுத் துறை ஊழியர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பணியிட உரிமைகளை அழிக்கவும் ஆளுனர் முற்பட்டுள்ளார். கடந்த இரு வாரங்களில் கிட்டத்தட்ட 300,000 பொதுத்துறை, தனியார்துறைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மாடிசனில் மாநில தலைநகரில் அன்றாடம் வால்க்கரின் வரவு-செலவுத்திட்டம் திருத்தும் சட்டவரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மாடிசன் தொலைக்காட்சி நிலையம் ஒன்றிற்கு வால்க்கர், மொத்தத்தில் பள்ளிகள், உள்ளூராட்சிகள் என்று வரும்போது ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெட்டுக்கள் வரும் என்றார்.

சட்டவரைவு இயற்றப்படுதவதற்கு இறுதிநாள் இன்றாக இருக்கும் என்று வால்க்கர் அறிவித்தார். ஏனெனில் அவருடைய திட்டமான $165 மில்லியன் மாநிலக் கடன் மறுகட்டமைப்பது என்பது பங்குப்பத்திர வணிகர்கள் மற்றும் நாணயத்தரம் வழங்கும் அமைப்புக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். சட்டவரைவு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உடனடியாக 1,500 அரசாங்கத் தொழிலாளர்களையும் பின்னர், 12,000 மாநில, உள்ளூராட்சி மற்றும் பள்ளி ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாகவும் வால்க்கர் அச்சுறுத்தியுள்ளார்.

இச்சட்ட வரைவின்கீழ் பெரும்பாலான பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியச் செலவுகளில் பாதிக்கும் மேல் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுவர். இது மாநிலத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் 5.8 சதவிகிதமாகும். மேலும் தங்கள் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் குறைந்தபட்சம் 12 சதவிகிதமும் கொடுக்க நேரிடும். இதையொட்டி ஏற்கனவே பல ஆண்டுகள் சலுகைகள் இழப்புக்கள் மற்றும் விடுமுறைகளையும் வாக்கரின் ஜனநாயக மற்றும் முந்தைய குடியரசு ஆட்சிகளின் கீழும் இழந்து தவிக்கும் மாநில ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஊதியக் குறைவாக நூற்றுக்கணக்கான டாலர்களை இழப்பர்.

கூட்டுப் பேரப்பேச்சு நடத்தும் உரிமைகளையும் வால்க்கர் அகற்ற விரும்புகிறார்; இதற்காக அவர் ஊதியங்கள் பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தைகள், ஊதிய உயர்வுகள் என்பது வாக்கெடுப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டால் ஒழிய பணவீக்க விகிதத்துடன் வரம்பு கட்டப்படும் என்று கூறிவிட்டார். அதேபோல் தொழிற்சங்கங்களுக்கு இயல்பாக கட்டணம் கழிக்கப்படுவது என்பதும் நிறுத்தப்படும்: தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல்கள் நடத்தினால்தான் பேரம் பேசும் குழுவிற்குப் பிரதிநிதிகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

உள்ளூர்த் தொலைக்காட்சி நிலையம் ஒன்றிடம் ஆளுனர் அவருடைய சட்டவரைவு இயற்றப்படுவது முக்கியம் என்றும், ஏனெனில் அது உள்ளூர் அரசாங்கங்களுக்கும் மாவட்ட பள்ளிகளுக்கும் பொது ஊழியர் செலவினங்களைக் குறைத்து தங்கள் வரவு-செலவுத்திட்டத்தை ஆளுனர் திட்டமிட்டுள்ள குறைப்புக்களுக்கு ஏற்ப சரி செய்து கொள்ள உதவும் என்றார். ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் (இதில் 8,000 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என்று மில்வாக்கி பொதுப் பள்ளிகளில் உள்ளவர்களுடன் செய்துகொண்டது அடங்கும்) மறு பரிசீலனை செய்யப்பட்டு, ''திருத்தப்டும்'' என்பதையும் அவர் தெளிவாக்கியுள்ளார்.

. ஜேனஸ்வில்லே என்னும் விஸ்கான்சன் தீயணைப்பு வீரர் தன் குடும்பத்தின்மீது இத்திடமிடப்பட்டுள்ள வெட்டுக்களின் பாதிப்புப் பற்றிச் சுருக்கமாக WSWS இடம், என்னுடைய மனைவி கிட்டத்தட்ட ஊதியத்தில் 18% இழக்கலாம். நான் ஒரு தீயணைப்பவர், எங்களுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்பது பற்றி எனக்கு இன்னும் தெரியாது. பின் என் மகள் விஸ்கான்சன் பல்கலைக்கழகத்தில் மாணவியாக உள்ளார். அவருக்கு கல்விக்கட்டணத்தில் 26% அதிரிப்பை எதிர்பார்க்கலாம். அதை ஈடுகட்ட நான் 4 வேலைகள் செய்ய வேண்டும். நகரத் தொழிலாளர்கள் கொள்ளையர்கள் போல் சம்பாதிப்பதாக அவர்கள் கூறிகின்றனர்-நான் அவ்வாறு நினைக்கவில்லை. என்றார். . (See, Firefighters speak out on Wisconsin struggle).

மொத்தத் தொழிலாளர்களும் இத்தாக்குதல்களை எதிர்க்கையில், இரு பெரிய தொழிற்சங்கங்களான Wisconsin Eductional Association Council, Wisconsin Public Employees Union தலைவர்கள் ஏற்கனவே வாக்கரின் பொருளாதாரக் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுள்ளனர். அவர்களுடைய ஒரே கவலை சலுகைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தும் சட்டபூர்வ அந்தஸ்து மற்றும் தொழிற்சங்கக் கட்டணங்களை வசூலிப்பது ஆகியவைதான்.

American Federation of State, County and Municipal Employees Council 40 யின் நிர்வாக இயக்குனரான ரிக் பாட்ஜேட் தன் உறுப்பினர்கள் இச்சலுகைகள் இழப்பை ஏற்பர் என்று கூறியுள்ளார். ஆளுனர் எங்களுடன் இணைந்து பேசினால், நாங்கள் இதைத் தீர்க்க முடியும் என்று மில்வாக்கி ஜேர்னல் சென்டினலிடம் அவர் கூறினார்.

தொழிற்சங்கங்கள் மாநில ஜனநாயகக் கட்சியினருடன் ஒத்துழைக்கின்றனர்; பிந்தையவர்கள் தங்களை வால்க்கரின் தொழிற்சங்கத்தின் சட்டபூர்வ அந்தஸ்தின் மீதான தாக்குதலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளனர். தங்கள் பங்கிற்கு மாநில வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறைகளுக்காக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் பொதுப்பணிச் சேவைள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியினர் இது தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பதின்மூலம்தான் முடியுமே ஒழிய அவற்றை அழிப்பதின்மூலம் அல்ல என்று நம்புகின்றனர்.

தேசிய ஆளுனர்கள் சங்கத்திற்குக் கொடுத்த கருத்துக்களில் நேற்று ஜனாதிபதி ஒபாமா பொது ஊழியர்களின் உரிமைகள் மீறப்படுவது பற்றி நிதானமான குறைகூறலைச் செய்தார். அதே நேரத்தில் அவர்கள் ஊதியங்கள் நலன்கள், பொதுவாகச் சமூகநலச் செலவுகளின்மீதான தாக்குதலுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டாட்சி ஊழியர்களின் வருமானங்களை ஒரே நிலையில் வைத்துதவிட்டாதகவும் ஜனாதிபதி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு, நம் வரவுசெலவுத்திட்ட சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். பெரும்பாலான பொது ஊழியர்கள் அத்துடன் உடன்படுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக்கட்சியினரும் அதை ஒப்புக் கொள்ளுகின்றனர். என்றார்.

 

ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடன்பட்டாலும், விஸ்கான்சன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் நாடு முழுவதும் வரவு-செலவுத்திட்ட வெட்டுக்களுக்குக் கொண்டுள்ள பாரிய எதிர்ப்பின் வெளிப்பாடு ஆகும். தொழிலாள வர்க்கம் ஒன்றும் மாநிலங்களின் நெருக்கடிக்குப் பொறுப்பல்ல, அது ஒன்றும் நிதிய உயரடுக்கின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்கக் கூடாது என்ற பெருகிய உணர்வு உள்ளது. நிதிய உயரடுக்கோ பெரு மந்த நிலைக்குப் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை விரைவுபடுத்தியது.

வால்க்கரின் சட்டவரைவு இயற்றப்படுவதை தடைக்கு உட்படுத்திய மாநில ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே தாங்கள் மாடிசனுக்குத் திரும்பத் தயார் என்று அடையாளம் காட்டியுள்ளனர்; இது பொது ஊழியர் பணிநீக்கங்களைத் தடுக்கவும் மற்றும் அதேபோல் மாநிலக் கடன்களுக்கு மறுபடியும் நிதி கொடுக்கும் பங்குபத்திர வணிகர்களுடைய ஆதரவைப் பெறுவதற்கும் என்ற காரணமும் கூறப்படுகிறது. வெள்ளியன்று சட்ட மன்றத்தில் 51-17 என்ற கணக்கில் இயற்றப்பட்ட இச்சட்டவரைவு குறைந்தபட்சம் ஒரு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினராவது  வந்து வாக்களித்தால்தான் சட்டமாக முடியும்.

தொழிற்சங்க அதிகாரிகளுடன் சேர்ந்து, மாநில ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்புக்களைக் குறைக்க திறமையுடன் உழைக்கின்றனர். அதே நேரத்தில் வால்க்கருடன் முறித்துக் கொள்ள விரும்பும் பல சிறிய குடியரசுக் கட்சியினருடன் உடன்பாடு காணவும் விரும்புகின்றனர். டேல் ஷல்ட்ஸ் என்னும் குடியரசு செனட் உறுப்பினர் ஒரு சமரசச் சட்டவரைவை முன்வைத்துள்ளார். இது அனைத்து வெட்டுக்களையும் அடக்கும், கூட்டுப் பேரத்தை இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்.

ஞாயிறு இரவு ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பிரதிநிதி பிரெட் ஹல்சி எதிர்ப்பாளர்கள் மாநில தலைநகர கட்டிடத்தை விட்டு நகர்வதற்கு முயற்சி செய்து, வெற்றி பெறவில்லை. இதுதான் போராட்டத்தின் அடையாள மையமாக உள்ளது. கிட்டத்தட்ட 600 தொழிலாளர்களும் இளைஞர்களும் அங்கேயே இருந்து, கட்டிடத்தை எவரேனும் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் காலி செய்யவேண்டும் என்பதை மீறீனால் கைது செய்யப்படுவர் என்று தலைநகர பொலிஸார் விடுத்த எச்சரிக்கையில் இருந்து அவர்களைப் பின்வாங்க வைத்தனர்.

ஆனால், திங்களன்று வால்க்கருடைய வரவு-செலவுத்திட்ட வெட்டு உரைக்குத் தயாரிப்பிற்காக தலைநகர கட்டிடம் வேறு ஒரு மூடலுக்கு உட்பட்டது பொலிசார் இன்னும் அதிக ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுத்தனர். தூங்கும் பைகள், கம்பளிகள், படுக்கைகள் இன்னும் பிற எதிர்ப்பாளர்களுக்கு தேவையானவை கட்டிடத்திற்கு வராமல் தடுக்கப்பட்டன, அனைவரையும் வெளியே அகற்றுதவதற்குத் தயாரிப்புக்கள் நடந்தன. தான் கட்டிடத்தினுள் எடுத்த வீடியோக் காட்சியை பொலிசார் அகற்றிவிட்டதாக ஒரு செய்தியாளர் கூறினார்.

விஸ்கான்சனை சுற்றியுள்ள தீயணைக்கும் படையினர் உட்பட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர கட்டிட  கதவுகளுக்கு வெளியே கூடி, “எங்களை உள்ளே விடு என்றும் இது எங்கள் மன்றம் என்றும் முழங்கினர். தொடர்ந்து பிற்பகலில், நூற்றுக்கணக்கானவர்கள் அதற்கு வெளியே கூடி கட்டிடத்திற்குள் நடப்பது பற்றிய விவரங்கள் மற்றும் பிற பேச்சாளர்களின் உரைகளை ஒரு திறந்த ஒலிபெருக்கி மூலம் கேட்டனர்.

கூட்டத்தில் பேசிய சோசலிச சமத்துவக் கட்சிப் பேச்சாளர் ஒருவர் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான தாக்குதல், சமுகப் பணிகள் குறைப்புக்கள் ஆகியவற்றை எதிர்க்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் பற்றி விளக்கினார்.

விஸ்கான்சனில் நடக்கும் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் தொழிலாள வர்க்கம் மீண்டும் சக்திவாய்ந்ததாக வெளிப்படுள்ளதை குறிக்கிறது என்றார். அக்காலக்கட்டத்தில் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் ஆதரவினால் பெருநிறுவனங்கள் ஒருதலைப் பட்ச வர்க்கப் போரை நடத்தினர் என்றார். “தொழிலாளர்கள் ஆளுனர் வால்க்கரிடம் பெருவணிகத்தின் மிக இரக்கமற்ற பிரிவுகளின் பிரதிநிதியை எதிர்கொள்கின்றனர். அவர் கடிகாரத்தை 1920களுக்குப் பின் கொண்டு செல்ல நினைக்கிறார்.” என்றார் அவர்.

ஆனால் இதில் வால்க்கர் மட்டும் தனியாக இல்லை என்றார் பேச்சாளர். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே நெருக்கடியை தூண்டிவிட்ட வோல் ஸ்ட்ரீட் கையாடல் செய்தவர்களுக்கு பிணையெடுப்பிற்கான நிதியைத் தரவேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர். “சரிவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கு எப்பொழுதைக் காட்டிலும் செழிப்பாக உள்ளது.” என்றார் அவர்.

கூட்டாட்சித் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது ஒபாமா நடத்தும் தாக்குதல் பற்றிக் குறிப்பு வந்தபோது பல தொழிலாளர்களும் சீற்றம் அடைந்து, குடியரசுக் கட்சியினரைப் போலவே ஜனநாயகக்  கட்சியினரும் தொழிலாள வர்க்கத்தின் விரோதிகள் என்று பேச்சாளர் வலியுறுத்தியதுடன் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தினர்.

பள்ளிகளுக்கு கொடுக்கப் பணம் இல்லை, கௌரவு ஊதியம் மற்றும் நலன்களைப் பொது ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்று கூறுவது ஒரு பொய் என்றார் பேச்சாளர். தொழிலாளர்கள் சலுகை இழப்புக்கள், சமூகநலச் செலவுகளில் வெட்டுக்கள் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார். தொழிற்சங்க அதிகாரிகள் ஏற்கனவே வாக்கரின் பொருளாதாரக் கோரிக்கைகளை ஏற்றுவிட்டனர் என்றும் தங்கள் கட்டணப் பாக்கிகளைக் காப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். பணம் பெறுவதிலும் பேச்சுக்களை நடத்துவதிலும் தங்கள் நிலைப்பாட்டை காப்பதிலும்தான் ஆர்வம் உடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாள வர்க்கம் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடந்த காலத்தின் சக்தி வாய்ந்த சோசலிச மரபுகளைப் புதுப்பிக்க வேண்டும் என்ற வகையில் பேச்சாளர் முடிவுரை கூறினார். “நிதியத் தன்னலக் குழுக்களின் அநியாயமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; தொழிலாள வர்க்கம் தோற்றுவிக்கும் செல்வம் தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும்.” என்றார் அவர்.