சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government blocks key local elections

இலங்கை அரசாங்கம் பிரதான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நிறுத்தியுள்ளது

By K. Ratnayake
1 February 2011

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீதான மேலும் ஒரு தாக்குதலில், தலைநகர் கொழும்பு உட்பட 19 பிரதான மாநகர சபைகளுக்கும் மற்றும் 15 பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களைஒத்திவைத்துள்ளது”. வேட்புமனு தாக்கல் செய்தல் கடந்த வாரம் முடிவடைந்து மார்ச் 17 அன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள போதிலும், அரசாங்கம் 335 உள்ளூராட்சி சபைகளில் 301 சபைகளையே கலைத்துள்ளது.

கொழும்பு, கண்டி, காலி, ஹம்பந்தொட்ட ஆகிய நான்கு பெருநகரங்களில் பெப்பிரவரியிலும் மார்ச்சிலும் உலக கோப்பை கிரிக்கட் போட்டிகள் நடக்கவிருப்பதே இந்த ஒத்தி வைப்புக்கான போலிக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆயினும், அரசாங்கப் பேச்சாளர் சுசில் பிரேமஜயந்தவின் படி, உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்தாலும், “மேலும் ஒரு வருடத்துக்கு அந்த மாநகர சபைகளை இயங்குவதற்கு அனுமதிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தனது அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துவார்.

கொழும்பைப் பொறுத்தவரையில், மாநகர சபையொன்று இயங்கவில்லை. தலைநகரின் மத்திய பகுதியில் இருந்து குடிசைகளில் வாழும் 66,000 குடும்பங்களை அப்புறப்படுத்தும் திட்டங்களின் மத்தியில், கொழும்பு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பாரம்பரியமாக எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் ஆளப்பட்டு வந்துள்ள கொழும்பில் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான முடிவானது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான எந்தவொரு அவகாசத்தையும் தடுப்பதை குறியாகக் கொண்டதாகும்.

அப்புறப்படுத்தல்களை மேற்பார்வை செய்ய அணிதிரட்டப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்கனவே மோதல்கள் நடந்துள்ளன. இந்த அப்புறப்படுத்தல் திட்டத்துக்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி அதிகார சபை (யு.டி..) காணி சீர்திருத்த அபிவிருத்திச் சபையை, அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளது.

யூ.டி.. பொலிசாரின் உதவியுடன் நடைபாதை வியாபாரிகள் மீது ஒரு தடையை திணித்து வருகின்றது. இந்த வியாபாரிகள் கொழும்பு, கண்டி, காலி, இரத்தினபுர மற்றும் நுவரெலியா உட்பட பல மாநகரசபை பிரதேசங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் கொழும்பை குறிப்பாக தெற்காசியாவுக்கான ஒரு வர்த்தக மையமாகவும் மற்றும் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாகவும் மாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.

அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்குவதானது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதார திட்டத்தினதும் தொழிலாள வர்க்க-விரோத பண்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் வழியில், ஜனாதிபதி இராஜபக்ஷ விலை மானியம், நலன்புரி சேவை, பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவைக்கான செலவுகளை வெட்டுவது உட்பட உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை திணிக்கும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்திக்கொண்டிருக்கின்றார்.

301 சபைகளுக்கு மட்டுமே உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவுள்ள அதே வேளை, இந்த நடவடிக்கைக்கும் ஜனநாயகத்துக்கும் அதிக தூரம் உள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் 18 மாதங்களுக்கு முன்னரே இராணுவ முறையில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இன்னமும் இராஜபக்ஷ அவசரகால ஆட்சியை பேணிவருகின்றார். வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்வது உட்பட மிகப்பரந்த அதிகாரங்கைள ஜனாதிபதிக்கு வழங்கும் இந்த அவசரகால சட்டத்தை நியாயப்படுத்துவதற்காக, அரசாங்கம், புலிகள் மீண்டும் ஒன்று சேர்வதாகவும்ஒரு வெளிநாட்டு சதியின் மூலம் அவர்களுக்கு ஆதரவு கிடைப்பதாகவும் கூறிவருகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் கூட்டணியானது தேர்தல் பிரச்சாரத்தின் போது அதனது நன்மைக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊடகங்கள் மற்றும் ஏனைய அரச வளங்களின் மீதான கட்டுப்பாட்டை வெட்கமின்றி சுரண்டிக்கொள்ளும். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத பண்பானது எதிர்க் கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவை கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்து தீர்ப்பளித்துள்ளதன் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

விலைவாசி அதிகரிப்பு, வேலையின்மை மற்றும் பொதுச் சேவைகளிலான பற்றாக்குறை சம்பந்தமாக சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் குவிந்துவரும் அதிருப்தி மேலும் கொதிநிலையடையக் கூடும் என்பதே அரசாங்கத்தின் அதிகபட்ச பீதியாகும். கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலிலும் கொடுத்த சகல வாக்குறுதிகளையும் இராஜபக்ஷவும் கூட்டணி அரசாங்கமும் மீறியுள்ளனர். அரசாங்கத்தில் இருந்து மட்டுமன்றி, ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனத்தில் இருந்தும் பரந்தளவிலான வெகுஜன அந்நியப்படுதல் காணப்படுகிறது.

அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடந்தால் தோல்வியடையக் கூடும் என அரசாங்கம் அஞ்சுகிறது என யூ.என்.பி. பொதுச் செயாலளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஆனால், தற்போதைய திறந்த பொருளாதார திட்டத்தை இலங்கையில் ஆரம்பித்து வைத்த யூ.என்.பி. க்கு, வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக அல்லது அவர்களது வாழ்க்கை நிலைமை சீரழிவது சம்பந்தமாக அனுதாபம் கிடையாது. அப்புறப்படுத்தல் திட்டத்தை யூ.என்.பி. எதிர்க்கும் அதேவேளை, கடந்த காலத்தில் அது தனது சொந்த குடிசை அகற்றும் திட்டத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தது.

இன்னுமொரு பிரதான எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசாங்கம் தனது சொந்த விவகாரங்களை சமாளித்துக்கொள்ளக் கூட இலாயக்கற்றுள்ளதை வெளிக்காட்டியுள்ளது எனத் தெரிவித்து, கிரிக்கெட் உலக கோப்பைக்காக தேர்தலை ஒத்தி வைக்கும் முடிவை ஏளனம் செய்துள்ளது. ஏமாற்றத்துக்கு ஒரு முடிவு, மக்களுக்கு ஒரு புதிய ஆரம்பம் என்ற கட்சியின் தேர்தல் கோஷத்தை அறிவித்த ஜே.வி.பீ.யின் பொதுச் செயாலளர் டில்வின் சில்வா, உத்தியோகபூர்வமாக சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளாக பல்வேறு வாக்குறுதிகள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஆனால், சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள, புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்த ஜே.வி.பீ.க்கு வேறு மாற்றீடு கிடையாது. 1960களில் ஜே.வி.பீ. ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, அது ஏதாவதொரு முதலாளித்துவ கட்சியுடன் ஒத்துழைத்து வந்துள்ளது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக சேவையாற்றியதோடு 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்ததற்கு அதுவே நேரடிப் பொறுப்பாளியாகும்.

2006 நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஜே.வி.பி. ஆதரித்தாலும், அது பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் பாகமாகவே இருந்தது. தமது பொது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவை ஆதரிப்பதில் கடந்த ஆண்டு அது யூ.என்.பீ. உடன் இணைந்துகொண்டது. பின்னர், கடந்த ஆண்டு ஏப்பிரலில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜே.வி.பீ. பொன்சேகாவின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜனநாயக தேசியக் கூட்டணியை (ஜ.தே.கூ.) அமைத்தது.

ஜ.தே.கூ. இப்போது பொறிந்து போனதாகவே தெரிகின்றது. பொன்சேகாவின் ஆதரவாளர்களாக இருந்த அதன் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் அருஜுன ரணதுங்கவும், தங்களுக்கும் பொன்சேகாவுக்கும் அங்கத்துவம் பெறுவதற்காக யூ.என்.பீ. உடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். ஜே.வி.பி. உள்ளூராட்சித் தேர்தலில் அதன் சொந்த சின்னத்தின் கீழ் போட்டியிட்டாலும், அது தொடர்ந்தும் ஜ.தே.கூ. உடன் செயற்படும் என அறிவிக்கின்றது.

பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பில் தனது பேரம் பேசுவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்வதற்காக இந்தத் தேர்தலை பயன்படுத்த முயற்சிக்கின்றது. ஐலண்ட் பத்திரிகைக்கு பேசிய போது தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்ததாவது: தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டுவதை நோக்கி தற்போது அரசாங்கத்துடன் நட்ந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்காக எதிர்வரும் தேர்தலில் கட்சியின் கைகளை பலப்படுத்துவது தமிழ் மக்களுக்கு தீர்க்கமானது.

முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒரு அரசியல் தங்குமிடத்தை எதிர்பார்க்கின்றது. அது யுத்தத்துக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பது சம்பந்தமாக சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. புலிகளின் தோல்வியின் பின்னர் சாதாரண தமிழர்களின் தலைவிதி பற்றி வாய்வீச்சில் கவலை தெரிவிக்கும் அதே வேளை, தமிழ் ஆளும் தட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையேனும் தக்கவைத்துக்கொள்வதே தமிழ் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோளாகும்.

முன்னாள் தீவிரவாத கட்சிகளான நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (யூ.எஸ்.பீ.) பிரதான முதலாளித்துவக் கட்சிகளைச் சுற்றிவருகின்றன. சில உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக யூ.எஸ்.பி. உடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள நவசமசமாஜக் கட்சி, மேலும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தளம்கொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.), தொழிலாளர் ஐக்கிய முன்னணி (தொ.ஐ.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகியவற்றுடன் இன்னுமொரு குழுவையும் அமைத்துக்கொண்டுள்ளது.

இந்த பின்னைய கூட்டணியின் இழிந்த தன்மை, அண்மைய காலம் வரை, தொ.ஐ.மு. மற்றும் ம.ம.மு ஆகியவை இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியாக இருந்ததோடு ஜ.ம.மு. வலதுசாரி யூ.என்.பீ. உடன் கூட்டணியில் பங்குவகித்தது என்ற உண்மையில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில், எம்.கே. சிவாஜிலிங்கத்துடன் நவசமசமாஜக் கட்சி ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்டது. தமிழ் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றிந்த சிவாஜிலிங்கம், இப்போது மீண்டும் தமிழ் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.

லக்பிமநியூஸ் பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய நவசமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரம்பாகு கருணாரட்ன, புதிய கூட்டணியை ஒரு சமூக ஜனநாயகப் போக்கின் பிறப்பு என பாராட்டினார். முன்னர் ட்ரொட்ஸ்கிஸ்ட் என போலியாக உரிமைகோரிய கருணாரட்ன, இப்போது சமூக ஜனநாயகத்தின் பாகமாக தன்னை பகிரங்கமாக அறிவிக்கின்றார். அதாவது சீர்திருத்தவாத குழு. இந்த புதிய கூட்டணியானது அரசியல் ஸ்தாபனத்தின் ஏதாவதொரு பகுதியுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போடுவதை இலக்காகக் கொண்ட நவசமசமாஜக் கட்சியிடனும் யூ.எஸ்.பீ. யினதும் நீண்டகால சந்தர்ப்பவாத சூழ்ச்சித்திட்டங்களின் புதியதே ஆகும்.

உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திப்போடுவதற்கான முடிவானது, உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை திணிக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத பண்பை புதிதாக உறுதிப்படுத்துகின்றது. ஆளும் வர்க்கத்தின் சகல பகுதியினரில் இருந்தும் அரசியல் ரீதியில் முழுமையாக பிரிந்து செல்வதே, அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதற்கும் ஒழுங்கான வாழ்க்கைத் தரத்துக்கும் போராடுவதற்கான ஒரே வழியாகும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைப்பதன் பேரில், தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள்வதும் மற்றும் கிராமப்புற நகர்ப்புற மக்களை தன் பின்னால் அணிதிரட்டிக்கொள்வதும் அவசியமாகும்.