சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US states’ budget crisis: Where should the money come from?

அமெரிக்க மாநில அரசுகளின் வரவு-செலவு திட்ட நெருக்கடி: பணம் எங்கிருந்து வர வேண்டும்?

Patrick Martin
7 March 2011

Use this version to print | Send feedback

குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநர்களும், ஒருவர் மாற்றி ஒருவர், கூலிகள், மருத்துவநலன்கள் மற்றும் அரசுத்துறை தொழிலாளர்களின் ஓய்வூதிகளில் கடுமையான வெட்டுக்களையும், அத்துடன் கல்வி, மருத்துவ காப்பீடு மற்றும் ஏனைய அத்தியாவசிய சமூக சேவைகளிலும் நிதி செலவினங்களைக் குறைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதாக கூறுகிறார்கள். அரசுகள் கைக்குமீறிய வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைகளை முகங்கொடுத்திருப்பதாகவும், அந்த வாதங்கள் நீண்டு செல்கின்றன. "அங்கே பணமே இல்லையாம்," அதனால் வெட்ட வேண்டியுள்ளதாம்.

இதுதான் விஸ்கான்சன் ஆளுநர் ஸ்காட் வால்கரால் முழங்கப்பட்ட முக்கிய உட்பொருளாக இருக்கிறது. தொழிலாளர்களின் பணத்தில் இருந்து $300மில்லியன் மோசடி செய்திருக்கும் இவர், $3.6பில்லியன் பற்றாக்குறை குறைப்பு திட்டத்தின் ஒரு பாகமாக தொழிலாளர்களின் பெரும்பாலான கூட்டு பேரம்பேசல் உரிமைகளையும் நிராகரிக்கிறார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அவர் "நம்முடைய வரவு-செலவு திட்டத்தை சம்படுத்த நாங்கள் முயன்று வருகிறோம் என்பது அடித்தளமாகும். ஆனால் உண்மையில் நாம் உடைந்துவிட்டிருக்கிறோம் என்பதால், அங்கே பேச்சுவார்த்தைக்கு எந்த வாய்ப்பும் இல்லை." என்றார்.

சபாநாயகர் ஜோன் பொஹ்னெர் முதல் ஜனாதிபதி ஒபாமா வரையில், வாஷிங்டனில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இந்த பரிசோதனைக்கு உடன்படுகிறார்கள். கூடுதல் வெட்டுக்களுக்கான முறையீடுகளை நியாயப்படுத்த, "நாம் உடைந்துவிட்டிருக்கிறோம்" என்பதை பொஹ்னெர் வழக்கமாக அறிவித்து கொண்டிருக்கிறார். ஒபாமா அவருடைய உத்தியோகபூர்வ ஜனாதிபதி உரையில் "நம்முடைய அரசாங்கத்திற்கு வரவைவிட செலவு அதிகமாக உள்ளது என்ற உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். அதை நீடித்து செல்ல முடியாது." என்றார்.

பெருநிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள், இத்தகைய திவால்நிலைமை அறிவிப்புகளுக்குப் பின்னால் கூறப்படாதுள்ள முகப்புரைக்ள் பற்றி ஒருபோதும் கேள்வி எழுப்பாமல், இத்தகைய முறையீடுகளை மனசாட்சியின்றி கிளிப்பிள்ளை போல மீண்டும் மீண்டும் சொல்வதுடன், அமெரிக்காவின் ஒருபுறம் நிதியியல் மேற்தட்டால் கணக்கில்காட்டாமல் பதுக்கிவைத்திருக்கும் பணக்காரர்களிடம் செல்வம் குவிந்து திரண்டுள்ளதையும், சமூகத்தின் அடுத்த துருவத்தில் வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் பூர்த்திசெய்யப்படாத சமூக தேவைகளுடன் நிலவும் பரந்த சமூக துருவப்படுத்தலை இவை வெறுமனே மேலோட்டமாக ஏற்றுக் கொள்கின்றன.

வரவு-செலவு கணக்கில் காட்டப்பட்டிருக்கும் வெட்டுக்கள் எண்கணித  விதிகளின் முகத்தில் தூக்கிவீசப்பட்டிருக்கின்ற போதிலும், அதை ஊடகங்கள் பகுத்தறிவிற்கும், யதார்த்தத்திற்கும் பொருந்தாததாக காட்டி எதிர்ப்பைச் சித்தரிக்கின்றன. ஆனால் இந்த பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்க சமூகத்திற்குத் தேவைப்படும் மிக அடிப்படை கட்டமைப்பின் மாற்றத்தைப் பெறுவதற்கு முன்னர், இந்த பற்றாக்குறையை வெறுமனே துடைப்பதற்கு ஆதாரவளங்கள் கிடைக்கக்கூடிய வெளியில் தெரியும் இடங்கள் மட்டுமில்லாமல், மாறாக அத்தியாவசிய சமூக சேவைகளைப் பெரிதும் விரிவாக்க வேண்டியும் உள்ளது.

விஸ்கான்சன் அரசால் $3.6 பில்லியன் இரண்டு வருட பற்றாக்குறையாக காட்டப்பட்டது. அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தின் பெரும் செல்வவளத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், முழுமையாக்கப்பட்ட தொகையின் ஒரு பிழையைவிட சற்று அதிகமாக உள்ளது. ஆளுநர் வால்கரின் அதி-வலது ஆதரவாளர்களான கோக் சகோதரர்களால் அந்த பற்றாக்குறைக்கு ஒரு காசோலையை வழங்க முடியும்; அதன்பின்னரும் கூட அவர்கள் பில்லினியர்களாக இருப்பார்கள்.

கைக்கு எட்டும் உயரத்தில் இருக்கும் கனியைப் போல, இந்த ஆண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் $130 பில்லியனாக இருக்கும், ஒட்டுமொத்த 50 மாநிலங்களின் பற்றாக்குறையையும் இல்லாதொழிக்கத்தேவையான பணம் வரும் வழிகளை பார்ப்போம்.

•  ஒபாமா நிர்வாகத்தின் ஒப்புதலோடு டிசம்பரில் ஒரு ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டிலிருக்கும் காங்கிரஸால் கொண்டு வரப்பட்ட, செல்வந்தர்களுக்கான புஷ்ஷின் வரி வெட்டுக்களை நீட்டியது, அடுத்த பத்து ஆண்டுகளில் பணக்காரர்களின் கைகளில் 700பில்லியனுக்கும் மேலான டாலர்களைக் கொட்டும். அந்த எதிர்பாரா வருமான வரியை இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் கொண்டு வருவதன் மூலமாக, அனைத்து மாநில பற்றாக்குறைகளையும் ஒட்டுமொத்தமாக தவிர்க்க முடியும்.

•  வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் கொண்டு வரப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படி, கடந்த ஆண்டு வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் பங்குநிறுவனங்களுக்கு அளித்த மொத்த நஷ்டஈடு, சாதனையளவாக $135பில்லியனாகும். அதேசமயம் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு அது $417 பில்லியனை ஈட்டியது. வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புகளைப் பெற்றவர்கள், இப்போது அவர்களின் சொந்த கைகளில் இருந்து அரசிற்குப் பிணையெடுப்பு அளிக்க முடியும்.

•  அமெரிக்காவிலுள்ள 400 மிகப்பெரிய பணக்காரர்களிடம் தேங்கிகிடக்கும் $1.37 டிரில்லியன் சொத்துக்களை, ஏறத்தாழ ஒவ்வொருவரும் $350 மில்லியனுக்கு அண்ணளவாக வைத்திருக்கின்றனர். இந்த பில்லியனர்களின் சொத்துக்களின்மீது 10 சதவீதம் வரிவிதித்தால் போதும், ஒட்டுமொத்தமாக 50 மாநிலங்களின் பற்றாக்குறையும் தீர்க்கப்பட்டுவிடும்.

•  அமெரிக்காவின் எல்லா பெருநிறுவனங்களின் ஒருங்கிணைந்த இலாபங்கள் 2010இல் விண்ணைமுட்டும் அளவிற்கு எகிறியது. இது மூன்றாம் காலாண்டில் மட்டும் $1.66 டிரில்லியன் ஆண்டு விகிதத்தை எட்டியது. இந்த இலாபங்களில் எட்டு சதவீதம், அதாவது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பூங்கா அதிகாரிகளின்மீது திணிக்க, வோல்கர் வெட்டக்கோரும் அதே அளவிற்கு, வரிவிதித்தால் போதும், அனைத்து மாநில பற்றாக்குறைகளும் தீர்ந்துபோகும்.

•  தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தேவையான ஊக்கப்பொதிகளாக இருந்திருக்க வேண்டிய வரி வெட்டுக்களிலிருந்து கிடைத்த நிதியைச் சேகரித்துக் கொண்டதோடு, அமெரிக்க பெருநிறுவனங்கள் தற்போது $2 டிரில்லியன் ரொக்கப்பணத்தின் மீது உட்கார்ந்து கொண்டு, தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க மறுத்து வருகின்றன. கையிருப்பில் இருக்கும் அந்த பணத்தின்மீது விதிக்கப்படும் ஒரு 10 சதவீத வரிவிதிப்பு, மாநிலங்களின் பற்றாக்குறையை மட்டுமில்லாமல், அனைத்து நகரங்கள் மற்றும் உள்ளாட்சிகளின் பற்றாக்குறையையும் தீர்க்க போதிய பணத்தை அளிக்கும்; அத்துடன் அது நூறு ஆயிரக்கணக்கான அரசு தொழிலாளர்களின் வேலைகளையும் காப்பாற்றும்.

•  முன்னில்லாத அளவிற்கு அதிகபட்சமாக, ஆண்டு தொடக்கத்தில் $1.18 டிரில்லியனாக இருந்ததிலிருந்து, 2010இல் தனியார் முதலீட்டு(Hedge fund) சொத்துக்கள் $1.92 டிரில்லியனாக உயர்ந்தன. இது மொத்த சொத்து மதிப்பில் 2 சதவீதம் மற்றும் கூடுதலாக 20 சதவீத உயர்வு ஆகியவற்றுடன் ஒரு நிலையான வருவாய்க்கான சூத்திரத்தை அளித்தது. தனியார் முதலீட்டு நிதிய முதலாளிகள் அண்ணளவாக தனிப்பட்ட வருவாயாக $186பில்லியனைச் சேர்த்துக் கொண்டனர். அந்த வருவாயில் ஒரு 80 சதவீத வரிவிதிப்பு (அதாவது இது ஐசென்ஹோவர் நிர்வாகத்தின்கீழ் கோடீஸ்வரர்களுக்கு விதிக்கப்பட்ட வரிவிகிதங்களைவிட இது குறைவாகும்), அனைத்து 50 மாநிலங்களையும் இருட்டிலிருந்து வெளியில் கொண்டு வர தேவைப்படுவதைவிட போதியளவிற்கு அதிகமாகவே உருவாக்கி கொடுக்கும். (ஒரு டஜனுக்கும் அதிகமான தனியார் முதலீட்டு நிதிய முதலாளிகள் அவர்களின் தனிப்பட்ட வருவாயாக $2 பில்லியனுக்கும் அதிகமாகவும், இன்னும் பலர் $1 பில்லியனுக்கும் அதிகமாகவும் சேர்த்துக் கொண்ட நிலையில், முன்னணி தனியார் முதலீட்டு நிதிய நிர்வாகி ஜோன் பால்சன், தனிப்பட்ட வருமானமாக 2010இல் $5 பில்லியனுக்கும் அதிகமாக பெற்றிருந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.)

அரசியல்வாதிகளும், ஊடகங்களும் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில், இருக்கின்றன வாய்ப்புகளுடன் ஒரு பெரும் சமூக மறு-உருவாக்க திட்டத்தைத் தொடங்குவதன் மூலம், மாநில மற்றும் உள்ளாட்சி வரவு-செலவு திட்டத்தில் இருக்கும் இடைவெளியை அடைப்பதொன்றும் சிக்கலான விஷயமல்ல. மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் முன்மொழிவுகளில் சிலவற்றை நடைமுறைப்படுத்தினாலே, எடுத்துக்காட்டாக அடுத்த இரண்டு மாதங்களில் 5 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலைகளை கொடுக்க தேவைப்படும் போதிய நிதிகளை அது கொண்டு வந்துவிடும்.

இவை சோசலிச முறைமைகள் இல்லையென்ற போதினும், சமூக சமத்துவமின்மையைத் தீர்ப்பதிலும், கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி திரும்புவதிலும், அதாவது வங்கிகள் மற்றும் பெரும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்குவது மற்றும் அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் அரசுடைமை ஆக்கப்பட்ட உடைமைகளாக மாற்றுவது; ஜனநாயகரீதியில் பொருளாதார திட்டமிடலுக்கான அமைப்பை அமைப்பது; அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தின் அறிவார்ந்த மற்றும் முற்போக்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் போன்ற கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி திரும்புவதிலும், நெருக்கடியைத் தீர்ப்பதிலும், வறுமை மற்றும் பசியைப் போக்குவதிலும், பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தவும் மற்றும் சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வரவும், அவை ஒரு முக்கிய படியாக இருக்கும்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பலத்த சக்தியும், மற்றும் அரசியல் அமைப்புமுறையில் அது கொண்டிருக்கும் முழு ஆதிக்கமும் தான் பிரச்சினையாகும். காலூன்றியுள்ள இரண்டு கட்சிகளான ஜனநாயக கட்சியும், அவர்களுக்கு சற்றும் சளைக்காத குடியரசு கட்சியும், முற்றிலுமாக நிதியியல் மேற்தட்டின் சொந்த துணை நிறுவனங்களாகும். இரண்டு கட்சிகளுமே வங்கிகள் மற்றும் பெரும் பெருநிறுவனங்களின் இலாபங்கள் மற்றும் சொத்துடைமைகளைப் பாதுகாக்கின்றன.

தொழிலாள வர்க்கம், விஸ்கான்சன் ஆர்ப்பாட்டக்காரர்களைப் போல, தங்களின் வேலைகளையும், வாழ்க்கைத்தரங்களையும் மற்றும் சமூக சேவைகளையும் பாதுகாக்க தயாராக உள்ளனர். ஆனால் பழைய தொழிற்சங்க அமைப்புகள் முற்றிலுமாக அழுகிப்போயுள்ளன. அவை ஜனநாயக கட்சிக்கும், முதலாளித்துவத்தின் பாதுகாப்பிற்கும் அசைக்கமுடியாதபடிக்கு பொறுப்பேற்றுள்ளன. ஆறு-இலக்க சம்பளங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெறும் தொழிற்சங்க தலைவர்களுடன், இதில் சங்கங்களும் கணிசமான பங்குதாரர்களாக உள்ளன.

இந்த 21ஆம் நூற்றாண்டில், அமெரிக்க சமூகம் இனியும் இயன்றளவிற்கு ஒரு நாகரீகமான பாடசாலைகளை, மருத்துவ நலன்களை, வீட்டுவசதி மற்றும் ஏனைய தேவைகளைப் பெற முடியாது என்ற வஞ்சகமான முறையீடுகளை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். நூறு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் உழைப்பு சக்தியிலிருந்து உருவாக்கப்பட்ட, மேலே இருக்கும் ஒரு சிறிய சுரண்டும் அடுக்கால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்ட ஆதாரவளங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரவளங்கள் சமூக பயன்பாட்டிற்காக, மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திரும்ப பெறப்பபட வேண்டும்.

இது ஓர் அரசியல் போராட்டம், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியிடமிருந்து உடைத்துக்கொண்டு, ஒரு பரந்த சோசலிச இயக்கத்தை கட்டியமைக்க வேண்டும். இந்த போராட்டத்தை நடத்திச்செல்ல தேவைப்படும் அமைப்புரீதியிலான வடிவங்களையும், அரசியல் வேலைத்திட்டத்தையும் விவாதிக்க, சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும், மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான சமூக சமத்துவ பேரவையும் நாடு முழுவதும் ஏப்ரலில் ஒரு கூட்டத்தொடரை ஏற்பாடு செய்துள்ளது. ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு தீவிரமான போராட்டத்தை நடத்த விரும்பும் ஒவ்வொருவரும், மற்றும் நம்முடைய அனைத்து வாசகர்களும் இவற்றில் கலந்து கொள்ள இன்றே திட்டமிடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.