சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US intensifies military operations in Libya

லிபியாவில் இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்துகிறது

By Mike Head
8 March 2011
Use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகம் மற்றும் வாஷிங்டனின் நட்பு நாடுகள் இன்னும் லிபிய நெருக்கடியில் தலையிடுவதற்கானஅவசரக்காலத் திட்டங்களைஉத்தியோகபூர்வமாகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தீவிர இராணுவ மற்றும் உளவுத்துறை செயற்பாடுகள் எண்ணெய் வளமுடைய நாட்டிற்குள்ளும் அதைச் சுற்றியும் நடைபெற்று வருகின்றன.

லிபிய மக்களுக்கு எதிராகஏற்கமுடியாத வன்முறையைநிறுத்துவது என்ற பாசாங்குத்தனப் பதாகையின்கீழ் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் கடந்த தசாப்தத்தில் நிரூபிக்கப்பட்ட முயம்மர் கடாபியின் ஆட்சியைவிட இன்னும் அடிபணிந்து நடக்கும் அரசாங்கத்தை டிரிபோலியில் நிலைநிறுத்துவதற்கு முயல்கின்றன.

துனிசியா மற்றும் எகிப்தில் நடைபெறும் புரட்சிகர இயக்கங்களுக்குக் காட்டிய விடையிறுப்பு போல் இல்லாமல்ஒபாமா ஒருமுறைகூட ஜைன் எல் அபிடைன் பெல் அலி அல்லது ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட வேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் ஆட்சி புதிய அரசாங்கத்தால் தக்கவைக்கப்படுவதற்குத்தான் ஆதரவைக் கொடுத்திருந்தார்இப்பொழுது அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாக கடாபி அகற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இப்பகுதி முழுவதும் ஜனநாயக விரோத ஆட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து அவற்றிற்கு ஆயுதங்களைக் கொடுக்கும் நிலையிலும், வாஷிங்டன் ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான அக்கறைகள் என்ற பெயரில் இந்த அழைப்பை விடுத்துள்ளது; குறிப்பாக சௌதி அரேபியா, பஹ்ரைன் யேமன் நாடுகளுக்கு ஆதரவைக் கொடுத்து வருகிறது; அவையோ பொலிஸ் மக்கள் எழுச்சிகளுக்கு எதிராக அரசாங்க அடக்குமுறை மற்றும் வன்முறையைப் பயன்படுத்துகின்றன.

கடாபி ஆட்சியின் உயர்மட்டத்தில் இருந்து விலகியவர்களுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது; அவர்களுள் பெங்காசியில் எதிர்த்தரப்பு இடைக்கால அரசாங்கத்தில் இருப்பவர்களும் உள்ளனர்; லிபியாவில் அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளின் கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவ முற்படுவதுடன், அண்டை நாடுகளில் தொடரும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்குத் தளம் அமைக்கவும் அத்தகைய அரசு உதவ வேண்டும் என வாஷிங்டன் எதிர்பார்க்கிறது.

அமெரிக்கத் தலைமையிலான செயற்பாட்டின் அளவிற்கு ஒரு குறிப்பீடு திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் தோம் ஷங்கரால் கொடுக்கப்பட்டது. நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டு, அவர்லிபியத் தலைநகரான டிரிபோலியைத் தாக்கும் தூரத்திற்கு அருகே சமீபத்திய இராணுவச் சக்திகளைக் கொண்டுள்ளது 26வது கடற்படை ஆய்வுப் பிரிவு ஆகும்; இதனுள் இரு தரையிலும் கடலிலும் செல்லும் தாக்கும் கப்பல்கள், Kearsarge, Ponce ஆகியவை உள்ளன. இப்பிரிவு முழு வான், கடல் மற்றும் தரைப்படைகளைக் கொடுக்க முடியும்; அதன் சக்தியை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு மிக விரைவில் வெளிப்படுத்த முடியும்; இது மத்தியதரைக்கடல் பகுதியிலுள்ள நீண்ட தளமுடைய கப்பல்கள் மூலம் அல்லது தரையில் உள்ள சிறு கடலோரக் கப்பல்கள் மூலமோ இயக்கப்பட முடியும்

இந்தப் பணிப்படையில் ஹாரியர் ஜம்ப் ஜெட் போர்விமானங்கள் உள்ளன; இவை குண்டுவீசி, போருக்கு நின்று பெரும் சேதம் விளைவிக்கக் கூடியவை என்பது மட்டுமின்றி, லிபிய நிலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை எடுப்பதைக் கண்காணிப்பதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது; தாக்கும் ஹெலிகாப்டர்கள், தளவாடங்களைக் கொண்டு செல்லும் விமானங்கள்சரக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் விரைந்து, தொலைதூரம் செல்லும் Osprey ஆகியவை, இவற்றின் ரோட்டார்கள் இவற்றை உடனடியாக நேரே மேலை உயர்த்திப் பின்னர் முன்னேறிச் செல்லும் என்பதோடு மரைன்கள், டாக்டர்கள், அகதிகள் அல்லது அளிப்புக்களை பாலைவனத்திலும் அதைக் கடந்தும் செலுத்த முடியும்; தரையில் இருக்கும் விமானங்கள் லிபியாவின் நீண்ட கடலோரப் பகுதியில் எங்கும் இறங்கவும், தேடவும் முடியும்; இவற்றைத் தவிர 400 சிறப்புத் துருப்புக்கள், 2ம் மரைன் 1வது பட்டாலியனைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.”

இதைத்தவிர, “போதியளவுஅமெரிக்க விமானங்கள் ஐரோப்பாவில் தளம் கொண்டுள்ளன; இவை லிபியாவில்மதிப்பு மிக்க அரசாங்க அல்லது இராணுவ இலக்குகுளைத் தாக்க முடியும்.” மேலும் aircraft carrier Enterprise மற்றும் அதன் தாக்கும் குழு ஆகியவை மத்தியதரைக்கடல் பகுதிக்குச் செல்லுவதற்குகவனமாகசெங்கடல் வரை வந்துவிட்டன. மற்ற விருப்பத் தேர்வுகளில் எதிர்த்தரப்புப் பிரிவினருக்கு உதவக்கூடிய சிறப்புச் செயப்பாடுகளை அனுப்பிவைத்தல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன; அப்படித்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் 2001, 2003ல் அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்புக்களுக்கு முன்பு நடந்தது.

இம்முயற்சி முதலில் மனிதாபிமானத்திற்கு என்று அளிக்கப்பட்டாலும், லிபியாவில் இருந்து சர்வதேச அகதிகளை விமானத்தின் மூலம் மீட்பதற்கு என்று கூறப்பட்டாலும், ஐயத்திற்கு இடமின்றி வேறு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று ஷங்கர் விளக்கியுள்ளார்: தற்கால உதாரணமாக இந்த மிதக்கும் படைப்பிரிவு “gunboat diplomacy முறைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். இது எதிர்ப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து, அரச விசுவாச சக்திகள் மற்றும் கூலிப்படைகளின் நம்பிக்கையை அதிர்ச்சிக்கு உட்படுத்தும்; ஒருவேளை அரண்மனை ஆட்சி மாற்றத்திற்குக்கூட வகை செய்யும்.”

வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து நேற்று பேசிய ஜனாதிபதி பாரக் ஒபாமா, கடாபி ஆட்சியை அகற்றுவதற்கு இராணுவச் சக்தியைப் பயன்படுத்துவது பற்றி இதுகாறும் இல்லாத அளவிற்கு மிக வெளிப்படையான அறிக்கையைக் கொடுத்துள்ளார். “நம்மிடம் நேட்டோ உள்ளது, நாம் பேசுகையிலேயே, பிரஸ்ஸில்ஸ் ஆலோசனைகளின் பரந்த விருப்பத் தேர்வு வகைகள் உள்ளனஅவற்றுள் இராணுவ விருப்பத்தேர்வுத் திறன்கள் உள்ளன; இவை அனைத்தும் லிபியாவிற்குள் தொடர்ந்து நடக்கும் வன்முறையை எதிர்கொள்வதற்காக திட்டமிடப்படுகின்றன.” என்றார் அவர்.

ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டுடன் பேசியபின் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், இரு நாடுகளும்தோளோடு தோள் இணைந்து நிற்கின்றன, “லிபிய மக்களுக்கு நாம் அவர்களுக்கு உதவியாக நிற்போம் என்ற தெளிவான தகவலை அனுப்புவதில்என்றார்.

திரைக்குப் பின், அமெரிக்க, ஐரோப்பிய இராணுவமும் உளவுத்துறைச் செயற்பாடுகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன; இங்கிலாந்து சிறப்பு விமானப் பணித்துறையின் (SAS) எட்டு உறுப்பினர்கள் சங்கடத்திற்குரிய வகையில் காவலில் கடந்த வெள்ளியன்று பெங்காசியில் வைக்கப்பட்டது இதைக் காட்டுகிறது; அதே போல் கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் படைகள் டச்சு மரைன்களை முன்னதாக வளைத்துப்பிடித்தன.

Independent ன் மத்திய கிழக்குப் பகுதியின் மூத்த நிருபரான ரோபர்ட் பிஸ்க் நேற்று US AWACS கண்காணிப்பு விமானம் சில நாட்களாக லிபியாவைச் சுற்றி பறந்து, லிபிய விமானங்களைக் கண்காணிக்கிறது, இதில் கடாபியின் தனி ஜெட்டும் அடங்கும் என்று தகவல் கொடுத்துள்ளார். ஞாயிறு இரவு அல் ஜசீரா தொலைக்காட்சியின், அமெரிக்க விமானம் மால்ட்சே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவை கடாபி விமானம் பற்றிய விவரங்களைக் கோரியதைப் பதிவு செய்தவை வெளிவந்தன. திங்களன்று நேட்டோ AWACS பணி, நாள் ஒன்றிற்கு 24 மணிநேரமும் விரிவாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தது.

அமெரிக்கா சௌதி அரேபியாவை பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்புக் குழுவிற்கு ஆயுதங்களை அளிக்குமாறு கேட்டுள்ளது; அதில் டாங்க் எதிர்ப்பு ராக்கெட்டுக்கள், வெடிகுண்டுகள் தொடங்கி, தரையில் இருந்து வானுக்குச் செலுத்தப்படும் ஏவுகணைகள், லிபிய போர் குண்டுவீசும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் திறன் உடையவையும் அடங்கும் என்று பிஸ்க் தெரிவித்துள்ளார். “அவர்களுடைய உதவி வாஷிங்டனுக்கு அளிப்புச் சங்கிலியில் தன் இராணுவத் தொடர்பு ஏதும் இல்லை என்று கூற அனுமதிக்கும்ஆயுதங்கள் அமெரிக்காவுடையது, சௌதிக்களால் விலைகொடுத்து வாங்கப்பட்டது என்றாலும்.” என்றும் பிஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

சௌதி அரேபிய அரச குடும்பம் இத்தகைய செயற்பாடுகளைச் செய்துள்ளது என்பதற்கு வரலாறு உள்ளது. ரேகன் நிர்வாகக் காலத்தில் ஈரான்-கான்ட்ரா சட்டவிரோதச் செயற்பாடுகளில் இது 1980 களில் தொடர்பு கொண்டு எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்களை நிக்ரகுவாவில் அனுப்பிவைத்தது; மேலும் ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் இராணுவம் போரிட்டபோது அமெரிக்கா இஸ்லாமிய அடிப்படைவாதக் கெரில்லாக்களுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கும் உதவியது.

ஆயினும்கூட, ஒபாமா நிர்வாகம் சௌதிக்கள் வேண்டியுள்ளது மிகவும் பல உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. வெள்ளை மாளிகை அதன் சர்வாதிகார நட்பு நாட்டுடன் இணைந்துசௌதி மன்னராட்சி முன்னதாகவே திட்டமிடப்படும்சீற்ற தினஎதிர்ப்புக்களைத் தடைக்கு உட்படுத்திருக்கையில்அமெரிக்க இராணுவ, தூதரக மற்றும் எண்ணெய் நலன்களை அரேபியத் தீபகற்பத்திலும் வட ஆபிரிக்காவிலும் மூலோபாய வகையில் காப்பதற்கு, செயல்படுகிறது.

லிபியாவில் பகிரங்கமான இராணுவத் தலையீட்டிற்கு வாஷிங்டன் தயக்கம் காட்டுகிறது; அதற்கு முழு அளவு படையெடுப்பு தேவை. தயக்கத்திற்குக் காரணம் அப்பகுதி முழுவதும் மக்கள் பதிலடி கொடுக்கக் கூடும்; லிபியாவிலேயே அவ்வாறு ஏற்படலாம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அதன் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் புதிய காலனித்துவ வகை ஆட்சிக்கு ஆழ்ந்த விரோதப் போக்கு உள்ளது; மேலும் மத்திய கிழக்கின் மிக அடக்குமுறை ஆட்சிகளுக்கு எகிப்து முதல் வளைகுடா எமிரேட்டுக்கள் வரை அமெரிக்கா ஆதரவு கொடுப்பதற்கும் ஆழ்ந்த விரோதப் போக்கு உள்ளது.

அக்காரணத்தை முன்னிட்டும், தலையீட்டிற்கு ஒரு அத்தி இலை மறைப்பைக் கொடுக்கும் முயற்சிக்காகவும், ஒபாமா நிர்வாகம் அதன் ஐரோப்பிய சக்திகளை பகிரங்கமாகவேனும் முன்னணியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது; இது நேட்டோ மூலம் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் நடத்தப்படலாம் என்று கூறுகிறது. குடிமக்கள் மீது லிபிய இராணுவத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் இன்னும் நேரடியான இராணுவத் தாக்குதல்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன; ஒருவேளை இது பறக்கக் கூடாத பகுதியைத் தொடக்குவதில் இருந்து ஆரம்பிக்கலாம்; அதற்கு லிபிய இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.

நேற்று நேட்டோவின் தலைமைச் செயலர் Anders Fogh Rasmussen லிபியாவில் குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குஒப்பாகும் என்றார்; உலகம் இதைவெறுமேவேடிக்கை பார்ப்பது கடினம் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து பிரிட்டனின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் லிபிய அரசாங்கப் படைகள் குடிமக்களுக்கு எதிராக ஹெலிகாப்டரில் இருந்து குண்டு பொழிந்துள்ளனர் என்பதற்கானநம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன என்றார். பிரிட்டனும் சில நாடுகளும் பறக்கக் கூடாத பகுதியைச் செயல்படுத்த உதவதற்கு ஐ.நா.பாதுகாப்புக்குழுத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரஅவசரக்கால செயற்பாடாகஉழைத்துக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

SAS செயற்பாடு பாதியில் தோல்வியடைந்தது வெளிப்படுத்தியதுபோல், ஐரோப்பிய சக்திகள் தன்னைத்தானே லிபிய தேசியக்குழு என்று கடந்த சனியன்று லிபியா முழுவதற்கும் தான்தான் பிரதிநிதித்துவப் பிரிவு என அறிவித்துக் கொண்டு ஒரு அமைப்பிற்குத் தலைமை தாங்கும் கடாபியை விட்டு விலகி பெங்காசியில் இருக்கும் நபர்களுன் ஒருங்கிணைந்து செயல்பட முயல்கின்றன. SAS பெரும் தோல்வி என்ற பின்னடைவு இருந்தாலும்பெங்காசித் தலைமையும் மிக அப்பட்டமான முறையில் வெளிநாட்டுத் துருப்புக்கள் தலையிடுவதற்கு எதிர்ப்புக் கூறினபாதுகாப்பு மந்திரி லியம் பாக்ஸ்ஒரு சிறு பிரிட்டிஷ் தூதரகக் குழுபெங்காசியில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஞாயிறன்று பிரெஞ்சு அரசாங்கம் ஒரு தேசியக் குழு தோற்றுவிப்பதைப் பாராட்டியுள்ளது. “இதற்கு உந்துதல் கொடுத்துள்ள கொள்கைகளுக்கு பாரிஸ் ஆதரவை உறுதியளிக்கிறது, அது தனக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இலக்குகளையும் பாராட்டுகிறதுஎன்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் பேர்னார்ட் வாலெரோ கூறினார். அடுத்த நாள் இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பார்ட்டினி லிபியாவை மிருகத்தனமாக 1912ல் இருந்து 1943 வரை ஆட்சி செய்த இத்தாலி குழுவுடன் இரகசியமான பேச்சுக்களைத் தொடக்கியுள்ளதாகவும் பல நாடுகளை விட இத்தாலி லிபியாவில் நல்ல தொடர்புகளைக் கொண்டுள்ளன என்று தற்பெருமையும் அடித்துக் கொண்டார்.

பெங்காசிக் குழுவின் முதல் நடவடிக்கைளில் ஒன்று மேலைச் சக்திகளுக்கு லிபியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து எண்ணெய் அளிக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் மதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இப்பகுதியில்தான் நாட்டின் எண்ணெய் இருப்புக்களில் பெரும்பாலானவை குவிந்து உள்ளன. பொருளாதார விவகாரங்களை நிர்வகிக்கும் குழு உறுப்பினரான சாத் அல் பெர்ஜனி அல் அரேபியா தொலைக்காட்சியிடம் ஞாயிறன்றுநம் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மதிப்போம்; அவை மாற்றப்பட முடியாது என்றார்.

இந்த அறிக்கை மேற்கத்தைய சார்பும், முதலாளித்துவ ஆட்சியின் தன்மையும் அதன் கரு நிலையிலேயே இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது; இதன் முக்கிய நபர்கள் அனைவருமே மிகச்சமீப காலம் வரை கடாபியின் ஆட்சியில் பணிபுரிந்தவர்கள், அவர்களுள் குழுவிற்குத் தலைவராக உள்ள, முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா மகம்மத் அபுத் அல் ஜெலீல், முன்னாள் லிபிய உள்துறை மந்திரியும் கடாபியின் சிறப்புப் படைகளின் தலைவருமான ஜேனரல் அப்துல் பட்டா யூனிஸ் அல் ஒபைடி, வெளியுறவுகளுக்குத் தலைமை தாங்கும் இந்தியாவின் முன்னாள் தூதராக இருந்த அலி எஸ்ஸவி, மற்றும் இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரான ஒமர் ஹரிரி ஆகியோரும் அடங்குவர்.

குழுவின் சார்பு பற்றிய மற்றொரு தெளிவான அறிக்கையில், ஜெலில் இது மேலைச் சக்திகளால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று கூறினார். அல் ஜசீராவிடம் அவர் கூறியது: “ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளுடன் உத்தியோகபூர்வ தொடர்புகள் உள்ளன.” குழு, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பதை கடாபி தன் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடும் என்ற கவலையில், ஜெலில் வெளிநாட்டு இராணுவக் குறுக்கீட்டிற்கு குழு எதிர்ப்பைக் காட்டுவதாகக் கூறினார். ஆனால் ஒரு பறக்கக் கூடாத பகுதியை சுமத்துவதற்கு அவர் ஆதரவு கொடுத்துள்ளார்.

கடாபி ஆட்சியில் இவர்களுடைய முக்கிய பங்கு இருந்ததால், குழுவினர் பலருக்கும் இராணுவம், உளவுத்துறை, நிதி மற்றும் தூதரக உறவுகள் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் கொண்டவை பற்றித் நன்கு தெரியும். கடந்த தசாப்தத்தில் கடாபி மேற்கிற்கு உளவுத்துறைத் தகவல்களை அளித்தார், உலக எண்ணெய் நிறுவனங்களுடன் மிக இலாபகரமான உடன்பாடுகளைச் செய்துகொண்டார் மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் லிபிய முதலீட்டு அதிகாரத்தின் ஊடாக மட்டுமே, கிட்டத்தட்ட $65 பில்லியன் மதிப்பிற்கு முதலீடு செய்துள்ளார்.

நேற்று பெங்காசி தளத்தைக் கொண்ட எதிராளிகளைவெளித் தலையீட்டிற்குஉதவி, உடந்தையாக உள்ளனர், லிபியாவிற்குகாலனித்துவ ஆட்சி மீண்டும் வரும்என்று குற்றம் சாட்டிய கடாபி, ஏகாதிபத்தியச் சக்திகளுடன் புதிதாக சமரசத்திற்கு அதிக மறைப்பு இல்லாத வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டார். “பயங்கரவாதத்தின் மீதான போருக்குஅவர் ஆட்சி கொடுத்த ஒத்துழைப்பையும், ஐரோப்பாவிற்குள் ஆபிரிக்க அகதிகள் நுழைவதைத் தடுத்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார். “வட்டார அமைதி மற்றும் உலக சமாதானத்தில் லிபியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அல் குவேடாவை எதிர்த்து நிற்பதில் நாங்களும் ஒரு முக்கிய காரணிதான்.” என்றார் அவர். “மத்தியதரைக்கடல் பகுதிக்கு மில்லியன் கணக்கான கறுப்பர்கள் பிரான்ஸ் இத்தாலி நாடுகளுக்குச் செல்ல வருவர், லிபியாதான் மத்தியதரைக் கடல் பகுதியில் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய அங்கத்தைக் கொண்டுள்ளதுஎன்றும் கூறினார்.

லிபிய நாட்டின் நிலைமையைப் பொறுத்தவரை, நேற்றும் சண்டை கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புச் சக்திகளுக்கு இடையே தொடர்ந்து நடந்தது. இரு கட்சிகளுமே சிர்ட்டே வளைகுடா, மற்றும் டிரிபோலிக்கு மேற்கே உள்ள முக்கிய எண்ணெய்த் தொடர்புடைய நிலையங்களில் குவிப்புக் காட்டுகின்றன. முக்கிய செய்தி ஊடகங்கள், பெங்காசி பக்கத்தில் இருந்து முற்றிலும் மோதல்களைப்பற்றி தகவல் கொடுப்பது மற்றும் எதிர்த்தரப்புச் சக்திகள் கடாபி சக்திகளின் திறனுக்கு ஈடுகொடுக்கும் திறனற்றிருப்பதையும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன; இது இன்னும் வெளிப்படையான இராணுவக் குறுக்கீட்டிற்கு தளத்தை அமைக்கக்கூடும்.