சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US, Britain step up plans for military intervention in Libya

லிபியாவில் இராணுவத் தலையீட்டிற்கான திட்டங்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முடுக்கிவிடுகின்றன

By Ann Talbot
9 March 2011
Use this version to print | Send feedback

ஜனாதிபதி ஒபாமாவும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரொனும் நீண்டகால லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியைக் கீழிறக்குவதற்கான ஒரு சர்வதேச பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பது பற்றி செவ்வாயன்று விவாதிக்கையில், அமெரிக்காவும் பிரிட்டனும் லிபியாவில் நேரடி இராணுவத் தலையீட்டில் மற்றொரு அடியெடுப்பை எடுத்து வைத்தன.

ஒபாமாவும் காமெரொனும் கடந்த மாதம் கடாபிக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் எழுச்சி லிபியாவின் இயற்கை ஆதாரங்களைப் பெரும் எண்ணெய்  நிறுவனங்கள் சுரண்டுவதை தடைசெய்யாமல் இருக்க வேண்டும் அல்லது வட ஆபிரிக்காவில் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் பரந்த நலனுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என உறுதி காண விரும்புகின்றனர். கடாபிக்குப் பதிலாக ஒரு நம்பிக்கையான எடுபிடி ஆட்சியை அங்கு ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே இதற்காக லிபியாவிற்கு இராணுவப் பிரிவுகளை அனுப்பியுள்ளனர்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, ஒபாமாவும் காமெரொனும்கடாபி அதிகாரத்திலிருந்து எவ்வளவு விரைவில் அகற்றப்பட முடியுமோ அவ்வளவு விரைவில் அகற்றப்பட வேண்டும்என்பதில் உடன்பட்டனர். “ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் நேட்டோ உட்பட முழுப் பரப்பிலான விடையிறுப்புக்களை கொண்ட திட்டங்களை முன்வைக்க விழைகின்றனர்இவற்றுள் கண்காணிப்பு, மனிதாபிமான உதவி, ஆயுதங்கள் அளித்தலில் தடை மற்றும் ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்துதல் ஆகியவை அடங்கும்.”

கூறப்படாமல், ஆனால் ஐயத்திற்கு இடமின்றி இம்முயற்சியில் பிரிட்டிஷ் SAS மற்றும் SBS மற்றும் அமெரிக்கச் சிறப்புச் செயற்பாட்டுப் பிரிவுகள் உட்பட, இரகசியமாக படைகளை நிலை நிறுத்துதலும் அடங்கியிருக்கும்.

அமெரிக்கப்-பிரிட்டிஷ் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி 2003ல் ஈராக்கிய படையெடுப்பிற்கு முன் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் டோனி பிளேயர் கூட்டுச் சேர்ந்தவிதத்திலிருந்த பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. ஒபாமாவும் காமெரொனும் ஐரோப்பிய சக்திகளை ஒரு புதியவிரும்புவோர் கூட்டணியில்சேருமாறு வலியுறுத்த முற்பட்டுள்ளனர். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செயல்பட்டுவருவதால் திறன் குறைந்துள்ள அமெரிக்க இராணுவம் இவற்றைக் கணக்கில் கொள்ளும்போது, கடாபியின் லிபியாவிற்கு சற்றே கூடுதலான ஐரோப்பியப் பங்கு தேவைப்படுகிறது.

இந்த வாரம் பல தொடர்ச்சியான சர்வதேச கூட்டங்களுக்குத் தயாரிப்பிற்காக ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்துவதற்கான அரசியல், இராணுவத் தயாரிப்புக்களுக்கு வாஷிங்டனும் லண்டனும் முனைப்புடன் உள்ளன. நேட்டோவின் பாதுகாப்பு மந்திரிகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகிய அனைத்தும் லிபியாவைப் பற்றி விவாதிக்க உள்ளன.

திங்களன்று லிபிய மக்களுக்கு எதிரான வன்முறைஏற்கத்தக்கதில்லைஎனக் கூறியவிதத்தில் ஒபாமா கருத்துக்களைக் கூறி இத்தாக்குதலைத் தொடங்கி வைத்தார். “நம்மிடையே நேட்டோ உள்ளது, நாம் பேசும்பொழுதே பிரஸ்ஸல்ஸில் பல விருப்புத் தேர்வுத் திறன்கள் பற்றிய பல விவாதங்கள் உள்ளன, அவற்றுள் இராணுவ விருப்பத் தேர்வுகளும் அடங்கும்என்று அவர் எச்சரித்தார்.

இதுதான் ஒபாமாவின் மிக நேரடியான இராணுவ நடவடிக்கை பற்றிய அறிக்கை ஆகும். இதற்கு நேட்டோவின் ஆதரவு உடனே அது தன் லிபியக் கண்காணிப்பை தற்போதைய நாள் ஒன்றிற்கு 10 என்பதிலிருந்து 24 மணி நேரமும் விரிவாக்கும் என்று அறிவித்த வகையில் ஆதரவு பெற்றது. லிபியா வான்வழிக் கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளது என்பதை நேட்டோ ஒப்புக்கொள்வது இதுதான் முதல் தடவையாகும். இதுவரை AWACS உடைய கண்காணிப்புப் பார்வை விமானப் பறப்புக்கள் உத்தியோகபூர்வமாகபயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகள்என்றுதான் விளக்கப்பட்டுள்ளன. அவை 9/11 க்குப் பின்னர் கட்டாயமாக செயல்படுத்தப்படுபவற்றின் ஒரு பகுதியாகும்.

24  மணி நேரமும் கண்காணிப்பு என்ற மாற்றத்தில் தீய உட்குறிப்புக்கள் உள்ளன. இப்பொழுது எதிர்ப்புச் சக்திகளுக்கும் கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் படைகளுக்கும் இடையே அதிக இரவு நேரச் சண்டைகள் இல்லை. இரவுக் கண்காணிப்பு என்பது கடாபியின் சொந்த விமானத்தின் செயற்பாடுகளைப் பின்பற்றும் முயற்சிகளுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கலாம். இது அவரையும் அவருடைய மகன்களையும் படுகொலை செய்வதற்காக இலக்கு வைப்பதற்கு இருக்கலாம்.

இந்த வாரம் முன்னதாக அல் ஜசீரா தொலைக்காட்சியில் நேட்டோ மற்றும் அருகிலுள்ள மால்ட்டா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கும் இடையே நடந்த உரையாடல்களின் பதிவுகள் ஒளிபரப்பாயின. இது நேட்டோ கடாபியின் சொந்த விமானங்களில் ஒன்று கடந்தவாரம் பெலாருஸிற்குச் சென்றதைக் கண்காணித்தது, மற்றும் இன்னும் சமீபத்தில் ஜோர்டானிலிருந்து திரும்பியது ஆகியவற்றைக் கண்காணித்தது.

தனிப்பட்ட முறையில் கடாபி மீது இலக்கு என்பதைத் தவிர, அமெரிக்கா மற்ற இராணுவ விருப்பத் தேர்வுகளையும் பரிசீலித்து வருகிறது. இவற்றுள் நாட்டின் கிழக்குப் பகுதியைக் கொண்டிருக்கும் எதிர்ப்புப் படைகளுக்கு வலுவான ஆயுதங்களை அளிப்பதும் அடங்கும். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே, “எழுச்சியாளர்களுக்கு இராணுவ உதவி அளிப்பது என்னும் விருப்பத் தேர்வும் விவாதிக்கப்படுகிறதுஎன்று உறுதிபடுத்தினார்.

வியாழனன்று நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் லிபியா பற்றி விவாதிக்க உள்ளனர். பிரிட்டனும் பிரான்ஸும் ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்த ஆதரவைக் கொடுக்கின்றன. ஜேர்மனி இன்னும் உத்தியோகப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. ஆனால் ஆளும் CDU வின் முக்கிய உறுப்பினரான பிப் மிஸ்பெல்டர் இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.”அத்தகைய வலயப் பகுதி தோற்றுவிப்பதற்கு பாதுகாப்புச் சபையில் ஜேர்மனி உடன்பட வேண்டும். பகுதி பற்றி உடன்பாடு ஏற்பட்டால், பாதுகாப்புச் சபை உறுப்பினர் என்னும் முறையில் ஜேர்மனி தன் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாதுஎன்றார் அவர்.

பிரிட்டனும் பிரான்ஸும் ஐ.நா.தீர்மானம் ஒன்றை பறக்கக் கூடாத பகுதிக்கு சுமத்தப்படுவதற்கு ஆதரவாக உரிய நேரத்தில் வியாழனன்று பாதுகாப்புச் சபையில் இயற்றும் வகையில் உள்ளன. இங்கிலாந்தின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் ஆதரவை வலியுறுத்தும் வகையில் கூறினார்: “.நா. பாதுகாப்புச் சபையில் நாங்கள் பங்காளிகளுடன் நெருக்கமாக அவசரக்கால நிலை அடிப்படையில் பறக்கக்கூடாத பகுதி பற்றிய தீர்மானத்தின் கூறுபாடுகள் பற்றி உழைத்து வருகிறோம். இதற்குப் பிராந்திய ஆதரவு வேண்டும், அத்தகைய தீர்மானத்திற்கு ஒரு தெளிவான தூண்டுகோல் மற்றும் உரிய சட்டத் தளம் தேவைஎன்றார்.

லிபியாவில் ஒரு அமெரிக்க-ஐரோப்பியத் தலையீடு என்பது வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பாரிய எதிர்ப்பைத் தூண்டும். இந்த உண்மை ஏகாதிபத்தியத் தலைநகரங்களால் நன்கு உணரப்பட்டுள்ளது. எனவே ஒபாமா நிர்வாகம் அப்பிராந்தியத்திலுள்ள அதன் வாடிக்கை நாடுகளிடமிருந்து இயன்றளவு மறைப்பைப் பெற முயன்று வருகிறது.

பேர்சிய வளைகுடாவில் ஆறு அமெரிக்க ஆதரவுடைய முடியாட்சிகள், வளைகுடா ஒத்துழைப்புக் குழுவில் இணைந்தவைகள், திங்களன்று அவைகள் லிபியாவில் ஐ.நா. செயல்படுத்தும் பறக்கக் கூடாத பகுதிக்கு ஆதரவு தருவதாகக் கூறின. சௌதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் ஓமன் ஆகிய ஆறு நாடுகளும் லிபியாவில் கடாபி ஆதரவுடைய சக்திகள் நடத்தும் கொலைகளைபடுகொலைகள்என்று கண்டித்துள்ளன.

இது உண்மையிலேயே பானையில் கறுப்பு என அழைப்பதற்குத்தான் ஒப்பாகும். மன்னர் ஹமட் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவர்களில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்களை பஹ்ரைன் கொன்றுள்ளது. ஓமன் சுல்தானும் பொலிஸ் மற்றும் இராணுவத் துருப்புக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். சௌதி அரேபியா பொது இடங்களில் ஆர்ப்பட்டங்களுக்குத் தடைவிதித்ததுடன், அது மீறப்பட்டால் மரண தண்டனை என விதித்துள்ளது. வெளிப்படையாக இயக்கம் தீவிரமானால் பஹ்ரைனில் இராணுவத் தலையீட்டிற்கும் தயாரிப்புக்களை நடத்தி வருகிறது.

அரேபிய வெளியுறவு மந்திரிகள் சனிக்கிழமை கூடிவிவாதிக்க உள்ளனர். தலைமைச் செயலர் அமர் மௌசா ஏற்கனவே அரபு லீக் ஒரு பறக்கக் கூடாத பகுதிக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். வளைகுடாவில் பயணிக்கும் முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி கெவின் ருட் தன் ஆதரவைக் கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் அரபு உலகில் அதற்குப் பெரும் ஆதரவைக் காண்பதாகக் கூறியுள்ளார்.

பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்துவது என்பது மிக அதிக ஆக்கிரோஷ இராணுவ நடவடிக்கை ஆகும். மனிதாபிமான முறையில் அதைச் சித்தரிக்கக் காட்டப்படும் எந்த முயற்சியும் தவறு ஆகும். தவிர்க்க முடியாமல் அது குடிமக்களை இடருக்கும் உட்படுத்தும். ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் செர்பியாவில் வான்வழிக் குண்டுவீச்சுக்கள் காட்டியுள்ளமைபோல், அறுவை சிகிச்சை முறையில் தாக்குதல் நடத்துவது என்பது நடைமுறையில் சரியாக இருக்கப் போவதில்லை.

முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் ஒரு பறக்கக் கூடாத பகுதியை சுமத்துதல் என்பது குடிமக்கள் மீதான வான் தாக்குதல்களைத் தடுக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். இது அப்பட்டமான தவறு ஆகும். இராணுவ வல்லுனர்கள் லிபியாவின் பரப்பளவே இதைச் செயல்படுத்துவதைக் கடினமாக்கும் என்று கூறியுள்ளனர். அதே போல் பறக்கக்கூடாத பகுதி என்பது கடாபி ஹெலிகாப்டர்களைப் பறக்கவிடாமல் தடுத்து நிறுத்தி விடமுடியாது. ஏற்கனவே சிவிலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவர் அம்முறையைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் உள்ளன.

இராணுவத் தலைவர்கள் இரு வகைகளில் தயக்கத்தை வெளியிட்டுள்ளனர். அவை முக்கியமாக இந்தத் தந்திரோபாயத்தின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகின்றன. அவர்களுடைய எச்சரிக்கைகளின் உட்குறிப்பு ஒரு பறக்கக் கூடாத பகுதி நிறுவுதல் என்பது தரையில் செயற்பாடுகளைத் துவக்குவதற்கு ஒரு முன்னோடி ஆகும். இது லிபியாவின் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டைக் கொள்ளும் நடவடிக்கையை துவக்கும், பிராந்தியம் முழுவதுமிருக்கும் மக்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும்.

லிபியாவில் தன் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் கூட்டணியைக் கட்டமைக்க விரும்பும் ஒபாமாவின் அக்கறை ஈராக்கிலிருந்து அமெரிக்க ஆளும் உயரடுக்கு கற்றுள்ள படிப்பினைகளைப் பிரதிபலிக்கிறது. லிபியாவில் தான் தனியே செயல்படக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. மற்றய ஐரோப்பிய சக்திகளையும் களத்தில் இறக்க முற்படுகிறது. ஓரளவிற்கு இது இராணுவச் சுமையைப் பரவலாக்கும், ஆனால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசியல் தன்மையைக் கொண்டுள்ளன.

ஒரு வெளிப்படையான ஒருதலைப்பட்ச அமெரிக்க நடவடிக்கை என்பது மத்திய கிழக்கு முழுவதும் எரியூட்டும் இடரைக் கொண்டுள்ளது. அதுவும் துனிசியா, எகிப்து இன்னும் வளைகுடா நாடுகளில் சௌதி அரேபியா உட்பட எழுச்சிகள் இப்பொழுது பரவியுள்ள நிலையில்.

ஈராக்கின் மீதான படையெடுப்பு உலகெங்கிலும் 2003ல் எதிர்ப்பு அலையைத் தோற்றுவித்தது. ஒவ்வொரு முக்கிய நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் முன்னோடியில்லாத வகையில் சர்வதேச நடவடிக்கை ஒருங்கிணைந்து வெளிப்பட்டது. மற்றொரு அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தின் அலையை அப்பட்டமாக மறுபடியும் தொடங்குவது, அதுவும் தற்போதைய பொருளாதார, அரசியல் சூழ்நிலையில் என்பது, இன்னும் பெரிய அளவில் எதிர்ப்பைத் தூண்டும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க நடவடிக்கைக்கு ஐ.நா. ஆதரவு பெறுதல் அதிக வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், நேட்டோ தலைமையிலான பிரச்சாரம், கோசோவோவில் நடந்தது போல் ஏற்பட வேண்டும் என்பதற்கு மிக அதிகமான சட்டநெறி, அரசியல் நெறி ஆகியவை தேவைப்படும்.

இராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்துள்ள கடாபி தன் சொந்த ராஜதந்திர முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி மேலாண்மைக் குழுவிற்கு தலைமைதாங்கும் அகோஸ்டினோ மியோஜௌவின் தலைமையில் வந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவை அவர் சந்தித்தபோது, கடாபி ஐரோப்பிய ஒன்றியத்தை லிபியாவிலுள்ள நிலைமை பற்றிசுதந்திரமான மதிப்பீடுசெய்வதற்குப் பார்வையாளர்களை அனுப்புமாறு அழைத்துள்ளார்.

எதிர்ப்புக்காரர்களின் இடைக்கால தேசிய சபையானது கடாபி ஒரு உடன்பாடு பற்றிப் பேச அதை அணுகினார் என்றும் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற மற்றும் விசாரணையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்தார் என்றும் கூறியுள்ளது. இதை முஸ்தாபா கேரியானி குழு நிராகரித்துவிட்டதாகக் கூறினார். அத்தகைய திட்டம் ஏதும் முன்வைக்கப்படவில்லை என்று கடாபி ஆட்சி மறுத்துவிட்டது. ஆனால் திங்கள் இரவு, முன்னாள் லிபியப் பிரதம மந்திரி ஜடல்லா அஜோஸ் அல் டல்ஹி அரசத் தொலைக்காட்சியில் தோன்றி எதிர்ப்பாளர்கள்இந்த நெருக்கடியைத் தீர்க்க ஒரு தேசிய உரையாடலுக்கு வாய்ப்புத் தர வேண்டும், குருதி கொட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும், நம் நாட்டை மீண்டும் வெளிநாட்டினர் வந்து கைப்பற்ற வாய்ப்பு கொடுக்கப்படக்கூடாது என்று முறையிட்டார்

கடந்த காலத்தைப் போலவே, கடாபி ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டைக் காண முயல்கிறார். அவருடைய முற்போக்குத்தன வனப்புரை நீண்ட நாள் முன்னரே கைவிடப்பட்டு விட்டது. இப்பொழுது அவர் லிபியாவை மேற்கின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் திறன் அற்றவர், லிபிய மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலாதவர் என்றுதான் காட்டுகின்றன. அமெரிக்க ஆக்கிரோஷத்திற்கு எதிரான போராட்டம் அரபு முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவினாலும் நடத்தப்பட முடியாது. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள தொழிலாள வர்க்கம்தான், எல்லாவற்றிற்கும் மேலாக முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின்  மையங்களிலுள்ள தொழிலாள வர்க்கம்தான் வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்த்துப் போராட கட்டமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.