சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Down with Gaddafi! No to US-NATO intervention!

கடாபியை வீழ்த்து! அமெரிக்க-நேட்டோ தலையீடு வேண்டாம்!

10 March 2011
Patrick Martin and David North
Use this version to print | Send feedback

ஏகாதிபத்திய சக்திகளோடு நீண்டகாலமாக ஒத்துழைத்து வந்திருக்கும் ஒரு வலதுசாரி முதலாளித்துவ சர்வாதிகாரி மௌம்மர் கடாபியின் ஆட்சியை தூக்கியெறியவும், அதனிடத்தில் ஒரு ஜனநாயக மற்றும் உண்மையான மக்கள் அரசாங்கத்தைக் கொண்டுவரவும் போராடிவரும் லிபிய மக்களின் போராட்டத்தை உலக சோசலிச வலைத் தளம் ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்க மற்றும் நேட்டோ தலையீடுகள் மூலமாகவோ அல்லது அதன் மூலமாக மட்டும் தான் கடாபியைத் விரட்ட முடியும் என்று கூறுவதை நாம் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலுமுள்ள மக்களின் கூட்டணியுடன் லிபிய தொழிலாள வர்க்கம் தான், லிபிய மக்களின் விடுதலைக்குரிய கருவியாக உள்ளது.

இது, ஏகாதிபத்திய தலையீடுகளை எதிர்க்க சோசலிச இயக்கத்தின் நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட கோட்பாடாகும். இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த முன்வரலாறு மட்டுமல்லாது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கிடைத்த கடந்த தசாப்த அனுபவங்கள் மட்டுமே கூட, இந்த கோட்பாட்டின் சரியானதன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொழிலாள வர்க்கம் தலைமை தாங்குவதன் மூலமான தலையீடு இல்லாமல், அமெரிக்க-நேட்டோ தலையீடு மூலமாக கடாபியை தூக்கிவீசுவது என்பது, புரட்சியைக் கருக்கலைப்பது என்பதை மட்டுமல்ல, மாறாக மற்றொரு காலனித்துவ ஆட்சியை கொண்டு வருவதையும் குறிக்கும். அது, இதுவரையில் அரசு எந்திரத்தையும், முதலாளித்துவ சமூக கட்டமைப்பையும் தீண்டாமல் விட்டுவைத்துக் கொண்டு, ஆனால் நீண்டகாலமாக இருந்துவந்த சர்வாதிகாரிகளை விரட்டியடித்த மக்கள் எழுச்சிகளைக் கண்ட துனிசியா மற்றும் எகிப்து ஆகிய இரண்டின் எல்லைகளிலும் ஏகாதிபத்திய இராணுவப் படைகளை நிலைநிறுத்தும். அது, உலக முதலாளித்துவ நிலைமுறிவால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு எதிராக இன்னும் கூடுதலாக கிளர்ச்சிகளைத் தூண்டிவிடவே களம் அமைத்துக்கொடுக்கும்.  

உண்மையில், இது தான் கடாபிக்கு எதிராக இராணுவரீதியிலான நேரடி தலையீடு செய்யும் திட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய உந்துசக்தியாக உள்ளது. இது லிபிய மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் ஏற்பட்டதல்ல.

இன்று நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் மாநாடு கூடுகின்ற நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் ஒரு தலையீடு குறித்து பேசி வருகின்றன. விமானங்கள் பறக்க தடைவிதிப்பது, லிபிய கிளர்ச்சி படைகளுக்கு இராணுவ தளவாடங்களை இறக்குவது, மற்றும் கடாபி அரசாங்கத்திற்கு எதிராக நேரடியான கடற்படை மற்றும் விமானப்படை தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை தயாரிப்புச் செய்வதில் அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் இராணுவ படைகள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதன்மை பத்திரிகை, நியூ யோர்க் டைம்ஸில் புதனன்று வெளியான ஒரு தலையங்கம், லிபியாவில் இராணுவ தலையீடு செய்யும் பிரச்சாரத்தை வலியுறுத்தியது. இராணுவ நடவடிக்கைக்கு அது வெளிப்படையாகவே உடன்பட்டிருப்பது, வெட்கக்கேடானது; பிற்போக்குத்தனமானது; நேர்மையற்றதனமுமாகும்.

கடந்த மூன்று வாரங்களாக எண்ணெய்-வளமிக்க அந்நாட்டில் வெடித்திருக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்க இராணுவத்தின் பாத்திரத்தை நியாயப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் ஒபாமா நிர்வாகம் போதிய வேகத்தில் செயல்படவில்லை என்ற விமர்சனத்தோடு அந்த தலையங்கம் தொடங்குகிறது. விமானங்கள் பறக்க தடைவிதிக்கும் பகுதிகளை அறிவிப்பதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களுக்காக, "வெளிப்படையாகவே கையைப் பிசைந்து-கொண்டிருக்கும்" மற்றும் முரண்பாடான குறிப்புகளை அளித்துக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது ஒபாமா எரிச்சலடைந்துள்ளார்.

இதற்கு பின்னர், லிபியாவில் அமெரிக்க தலையீட்டிற்கான "மனிதாபிமான" அடித்தளங்களைக் குறிப்பிட்டுக் காட்டி, டைம்ஸ் தனது கைவேலையில் இறங்குகிறது. அந்த தலையங்கம், தரைப்படை துருப்புகளைப் பயன்படுத்துவதை நிராகரித்த போதினும், (ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்துவரும் யுத்தங்களில் தேவையிருந்தாலும் கூட, எந்த சந்தர்ப்பதிலும் தேவை ஏற்படலாம் என்பதால் சில தரைப்படை துருப்புகளும் இருக்கின்றன), “லிபிய எழுச்சிகளை ஆதரிக்க ஏதேனும் வழி காணப்பட வேண்டும் என்றும், தளபதி மௌம்மர் அல்-கடாபி அவருடைய மக்கள்மீது நடத்தும் கொலைகளை நிறுத்தச்செய்ய வேண்டும் என்றும், அது குறிப்பிடுகிறது.   

லிபியாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படுவதைப் போன்று காட்டப்படும் இந்த நிலைப்பாடு  என்னவாக இருந்தாலும், நம்பகத்தன்மையும் அற்றது. துனிசியா மற்றும் எகிப்தில் நிகழ்ந்த முந்தைய படுகொலைகளையோ அல்லது ஈராக், யேமன், பஹ்ரெயின், ஓமான், அல்ஜீரியா, மொரோக்கோ அல்லது சவுதி அரேபியாவில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதையோ நிறுத்துவதற்கு தேவையான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைக் கோரி, டைம்ஸிடமிருந்து எந்த தலையங்க அறிவிப்புகளும் இல்லை

காசா மற்றும் லெபனானில் பொதுமக்கள்மீது இஸ்ரேல் குண்டுவீசுவதைக் கூட டைம்ஸ் கண்டிக்கவில்லை. அல்லது, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்க அரசாங்கம் பொதுமக்கள்மீது தொடர்ந்து குண்டுவீசுவதும் கூட அதற்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

புஷ் நிர்வாகத்தால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு ஆத்திரமூட்டலற்ற  ஈராக் யுத்தத்திலிருந்து வேறுபட்ட விதத்தில், லிபியாவில் தலையீடு செய்ய கோரும் டைம்ஸ், அமெரிக்க இராணுவத்தின் ஒரு புதிய நடவடிக்கைக்கு அப்பிராந்திய நியாயப்படுத்தல் வழங்கவேண்டும் அறிவிக்கிறது. “அரேபிய உலகில் ஒரு நம்பகமான ஏற்பிசைவு முற்றிலும் அவசியமாக இருப்பதாக தோன்றுகிறது,” அது குறிப்பிட்டது

மறுமுனையில், லிபியாவில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை அறிவிக்க அதன் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கும், பாரசீக வளைகுடா முடியாட்சிகளின் சவுதி செல்வாக்குபெற்ற கூட்டணியான வளைகுடா கூட்டுறவு அமைப்பை டைம்ஸ் பாராட்டுகிறது. விசாரணைகளுக்கு உட்படுத்தாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைப் படுகொலை செய்திருக்கும் பொலிஸைக் கொண்ட பஹ்ரெயின், ஓமான் ஆகியவற்றுடன், மரணவேதனையாக இருந்தாலும் கூட போராட்டங்களைச் சட்டவிரோதங்களாக கொண்டிருக்கும் சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.

எவற்றிற்காக டைம்ஸ் அழைப்புவிடுகிறதோ அந்த ஆட்சிகள் அனைத்தும், அவர்களின் சொந்த மக்களால் வெறுக்கப்படும் சர்வாதிகாரங்களாக உள்ளன.

விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளை நடைமுறைப்படுத்தினால், “அதில் பங்களிக்க எகிப்தும் மற்றும் ஏனைய பிற உறுப்பு நாடுகளும் இராணுவ வளங்களைக் கொண்டிருப்பதாக" குறிப்பிட்டு, வளைகுடா கூட்டுறவு அமைப்பை ஒரு முன்னுதாரணமாக கொண்டு, அரேபிய வெளிநாட்டு மந்திரிகளும் அதையே பின்தொடர வேண்டும் என்று டைம்ஸ் வலியுறுத்துகிறது. இது கொடூரமான விளைவுகளைக் கொண்டு வரும். எகிப்திய இராணுவம் தான் முபாரக் சர்வாதிகாரத்தின் அடித்தளமாக இருந்தது. மேலும், எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஜாம்பவான்களுக்கும் காவலாக இருந்து கொண்டு, அது தான் முபாரக்கின் இராஜினாமாவை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது

எகிப்திய இராணுவத்திற்கு கூடுதல் தளவாடங்களை அளித்தும், எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஏற்படும் தவிர்க்கமுடியாத எதிர்ப்பிற்கு அதை பலப்படுத்தியும், லிபியாவில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட ஒரு பகுதியின் அதிகாரத்தில் எகிப்தை ஈடுபடுத்துவதென்பது, பெண்டகனுடன் நேரடியாக செயல்பாட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதையே குறிக்கிறது.  

அந்த தலையங்கம் லிபிய எதிர்ப்பாளர்களைத் தொடர்ந்து பாராட்டுகின்ற அதேவேளையில், முற்றிலும் வேறுபட்ட விதத்தில் கடாபிக்கு எதிரான எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள படைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதைத் தவறவிடுகிறது. ஒருபுறம், கொடுங்கோலாட்சி மீது கொண்ட வெறுப்பால் உந்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் உள்ளனர். மறுபுறம், சில வாரங்களுக்கு முன்புவரை கடாபி அரசாங்கத்தின் மற்றும் அதன் பரிவாரங்களின் பக்கம் நின்றிருந்த பேச்சாளர்களும், தலைவர்களும் உள்ளனர். முக்கியமாக இத்தகைய பிரிவுகளிடமிருந்து தான், ஏகாதிபத்திய தலையீட்டிற்காக கவனத்தை ஈர்க்கும் அழைப்புகள் வந்துள்ளன.    

கிளர்ச்சிப்படைகளிடையே கூட, ஏகாதிபத்திய சக்திகளின்மீதும், லிபிய எண்ணெய் வளத்தை அணுகுவதிலும், அவர்களின் செல்வாக்கைப் பாதுகாப்பதற்குமான உபாயங்கள் மீதும், பரந்த அவநம்பிக்கை நிலவுகிறது. கிளர்ச்சிப்படையின் ஒரு பெண் செய்திதொடர்பாளர், இமான் புஹைகிஷ், Guardian பத்திரிகைக்கு தெரிவித்தது, “இளைஞர்கள் இராணுவ தலையீட்டை விரும்பவில்லை. புரட்சிகர கழகம் தான் அதை முன்மொழிந்தது. அரேபியர்களை பொறுத்த வரையில், அன்னிய இராணுவ தலையீட்டை சகித்துக் கொள்வதில் நாங்கள் மிக மோசமான வரலாற்றைப் பெற்றிருக்கிறோம். அதையொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகத் தான் மக்கள் கருதுவார்கள்.”

டைம்ஸ் தலையங்கத்தின் முடிவுரையில் அது குறிப்பிட்டது, “ஒருவேளை தளபதி கடாபி அவருடைய சொந்த மக்களைப் பலி கொடுத்து கொண்டே, அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தால், அதுவொரு பேரழிவாக இருக்கும்.” ஆனால், ஈராக்கில் மாலிகி மற்றும் ஆப்கானிஸ்தானில் கர்சாய் போன்ற அமெரிக்க கைப்பாவைகள் எவ்வாறு அதிகாரத்தில் தங்கியிருக்கிறார்கள்? அரசியல் எதிர்ப்பிற்கு, குறிப்பாக மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளிடமிருந்து உருவாகும் அரசியல் எதிர்ப்பிற்கு, அவர்களின் தலையை வெட்டுவதை மட்டுமே ஒரே நடவடிக்கையாக கொண்டிருக்கும் சவூதி முடியாட்சி நிலைத்திருப்பதை, டைம்ஸ் ஒரு "பேரழிவாக" கருதவில்லை போலும்.

லிபிய சம்பவங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் என்ன பாத்திரம் வகிக்கிறது? எண்ணெய்வள சலுகைகள் மற்றும் உடன்படிக்கைகளின் ஆதாயத்திற்கு கைமாறாக, கடந்த தசாப்தத்தில் கடாபியுடன் கொஞ்சிக்குலாவி கொண்டிருந்த பின்னர், பெப்ரவரி 15இல் பெங்காசியில் வெடித்த ஒரு மக்கள் போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதுடன், அதை அமெரிக்கா, உடனடியாக ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டுக்கான போலிகாரணமாக ஆக்கியது.

முதலில் கிளர்ச்சிகளில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டினரை "மீட்பதற்காக" என்ற பெயரிலும், பின்னர் லிபிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக கூறிக் கொண்டும், டஜன் கணக்கான நாடுகளிலிருந்து சிறப்பு படைகளும், கடற்படை வாகனங்களும், இராணுவ விமானங்களும், ஏற்கனவே தொடர்ச்சியாக லிபிய இறையாண்மையை மீறிவிட்டன.   

எவ்வாறிருப்பினும், இறப்பு எண்ணிக்கையைக் குறைப்படுவதற்கு செயற்படுவதில் இருந்து விலகி நின்று கொண்டு, சுர்ட் மற்றும் த்ரிபோலியில் கடாபியின் பலமான இரும்புபிடியை நோக்கி, பாலவனத்தின் குறுக்கில் கிளர்ச்சி படைகளை விரட்டிக் கொண்டிருக்கும் பொய்தோற்றத்தில், ஏகாதிபத்திய சக்திகள் உள்நாட்டு யுத்தத்தை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற முன்தயாரிப்பற்ற மோதல்களில் இரத்த ஆறு ஓடுவது தவிர்க்க முடியாது. இதில் பெருமளவிற்கு இராணுவ பயிற்சியற்ற குடிமக்கள் தான் ஈடுபட்டுள்ளனர். இது அமெரிக்க-நேட்டோ இராணுவ தலையீட்டை ஊக்கப்படுத்தும் ஊடக பிரச்சாரத்திற்கும் தீனிப்போட்டுள்ளது

லிபியா மீதான தாக்குதல் குறித்து, தங்களின் சொந்த வாதங்களில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக டைம்ஸிடமிருந்தோ அல்லது அமெரிக்க-நேட்டோ தாக்குதலின் ஏனைய ஆலோசகர்களிடமிருந்தோ எந்த விளக்கமும் இல்லை. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அமைதியின்மை வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. லிபியா மட்டுமின்றி, ஒவ்வொரு விஷயத்திலும் ஏகாதிபத்திய சக்திகள் வலதுசாரி ஆட்சிகளைப் பலப்படுத்தும் பக்கம் தான் சாய்ந்துள்ளன.

ஆனால் லிபியா மீதான ஆக்கிரோசமான நிலைப்பாடானது, லிபிய மக்களின் மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அது பொருளாதார நலன்கள் மற்றும் பூகோள-அரசியல் மூலோபாயங்களைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்படுகின்றன. உண்மையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளைக் குறித்து தீர்மானமாக கூறுவதானால், அவற்றிடையே பெரும் ஏமாற்றம் இருந்தாலும் கூட, இராணுவரீதியில் தலையீடு செய்யும் அவர்களின் அச்சுறுத்தல்கள் பலவீனமான-காலகட்டத்தில், பலவீனமாக-தீர்மானிக்கப்பட்டுள்ளன. அவர்கள் கடாபியுடன் மீண்டும் வியாபாரம் பேச திரும்புவார்கள்.      

இறுதி ஆய்வுகளில், லிபியாவில் ஆகட்டும் அல்லது உலகின் வேறெந்த பகுதியிலாகட்டும் ஏகாதிபத்தியத்தின் சார்பாக ஆட்சி செய்துவரும் உள்நாட்டு சர்வாதிகாரங்களைத் தூக்கியெறியும் பணியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இராணுவ எந்திரங்களிடம் ஒப்படைக்க முடியாது.  

சோசலிச இயக்கத்தின் தோற்றம் குறித்து மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் குறிப்பிட்டதைப் போல, தொழிலாள வர்க்கத்தை விடுதலை பெறச் செய்வது தொழிலாள வர்க்கத்தின் கடமையாகும்.