சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France recognises Libyan opposition leadership      

லிபிய எதிர்ப்புத் தலைமைக்கு பிரான்ஸ் அங்கீகாரம் அளிக்கிறது

By Patrick O’Connor
11 March 2011
Use this version to print | Send feedback

லிபிய இடைக்கால மாற்றுக்காலத் தேசிய சபை என அழைக்கப்படும் அமைப்பிற்கு நேற்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் பிரெஞ்சு அரசாங்கம் உத்தியோகபூர்வ ராஜதந்திர அங்கீகாரத்தை அளித்தது. ஒரு வெளிநாட்டு அரசாங்கம் இவ்வாறு அங்கீகரிப்பது இதுவே முதலாவதாகும்.

பிரெஞ்சு செய்தித் ஸ்தாபனக் கூற்றுப்படி (AFP), சார்க்கோசியின் நிர்வாகம் இன்று முடிவுறும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், கடாபியின் தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலகம் குண்டூவீச்சிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மற்ற அரசாங்கங்களுக்கும் பரிந்துரைக்கவுள்ளது.

லிபிய விவகாரங்களில் இத்தகைய ஆக்கிரோஷமான ஒருதலைப்பட்ச தலையீடுகளானது வாஷிங்டன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு சபையில், கேணல் முயம்மர் கடாபியின் லிபிய ஆட்சியை எப்படி கட்டாயமாக வீழ்த்துவது என்று நடக்கும் திட்டங்களுக்கு இடையே வந்துள்ளன. நாட்டின் கிழக்குப் பகுதியில் கடாபி ஆட்சிக்கு எதிராக வெளிப்பட்ட வெகுஜன எதிர்ப்புக்களை ஒட்டி கடந்த மாதம் அமைக்கப்பட்ட எதிர்ப்புத் தேசிய சபையின் சவாலை கடாபி எதிர்கொள்கிறார்.

மேலைத்தேயச் சக்திகளின் மூலோபாய நலன்களைக் காத்தல் மற்றும் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்பாக இருக்கும் ஒரு வாடிக்கை அரசாங்கத்தை திரிபோலியில் இருத்தும் நோக்கத்தைக் கொண்டதுமான விமானத் தாக்குதல்கள், பறக்கக் கூடாத பகுதிகள் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகள் என்பவைகள் பற்றி விவாதங்கள் நடக்கின்றன.

தேசிய சபையை அங்கீகரிப்பதின் மூலம் பாரிஸ் இந்த அமைப்பிற்கு ஒரு உயிர்ப்பாதையை அளிக்கும் திறனைக் கொடுத்துள்ளது. அந்தச் சக்திகள் லிபியாவிற்குள் போரிடுவதற்குப் பெருகிய முறையில் கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளன. கடாபியின் படைகள் ஜவியாவை மீண்டும் கைப்பற்றிவிட்டன. அது ஒரு எண்ணெய் துறைமுகமாகும். திரிபோலிக்கு மேற்கே 50 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் நிறைந்த நகரமும் ஆகும். நாட்டின் கிழக்குப் பகுதியில் சிர்ட்டே வளைகுடாவிலுள்ள Ras Lanuf என்னும் முக்கிய எண்ணெய்த் துறைமுக மையத்தையும் கடாபி படைகள் கைப்பற்றியுள்ளன

ஒவ்வொரு சண்டையிலும் அரசாங்கத்தின் விமானப் படையானது முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. போர் விமானங்கள் மற்றொரு எண்ணெய் சிறுநகரான பிரேகாவை ராஸ் லாநுப்பிற்கு கிழக்கே 80 கி.மீ. தொலைவில் உள்ளதையும் குண்டுவீச்சிற்கு உட்படுத்தியதாகத் தகவல்கள் வந்துள்ளன.

பிரெஞ்சு அரசாங்கத்தின் தூண்டுதல் தன்மையுடைய நிலைப்பாடு பெங்காசியைத் தளமாகக் கொண்ட தலைமையினால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தலைமையகத்தின் செய்தி ஊடக அமைப்பாளர் முஸ்தாபா கீரியானி ஊடகத்திடம்கடாபியின் சவப்பட்டியில் அடிக்கப்பட்ட முதல் ஆணிதான்இந்த ராஜதந்திர அங்கீகாரம் என்றார். “பிரான்ஸானது ஐரோப்பிய ஒன்றியம் செயற்படப் பாதை அமைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இதைப் பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்றும் அவர் கூறினார்.

தன் நலன்களை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரோஷமாக முன்னேற்றிக் கொண்டிருக்கிறதுஅதிலும் அதன் முக்கிய எண்ணெய் நிறுவனமான Total பற்றியது சிறிதும் குறைந்ததல்ல. இது முன்பு இப்பிராந்தியத்தில் கணிசமான காலனிகளைக் கொண்டிருந்தது.

பிரான்ஸின் ராஜதந்திர அங்கீகாரம் எண்ணெய் வருமானங்களிலுள்ள பில்லியன் கணக்கான நிதியையும், முடக்கப்பட்ட லிபியச் சொத்துக்களும் கிழக்கு நகரமான பெங்காசியை தளமாகக் கொண்ட கடாபி-எதிர்ப்பில் தன்னைத்தானே தலைமையாகவும் நிறுவிக் கொண்டுள்ளதற்கு கொடுக்கப்படுவதற்கு வழிவகை செய்கிறது. இந்த அசாதாரண முடிவானது எதிர்ப்பின் தலைமை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை மற்றும் இதன் அமைப்புமுறை தெளிவாக இல்லை என்று இருந்தும் கூட வந்துள்ளது. அதன் முக்கிய உறுப்பினர்கள் பலர் முன்னாள் கடாபி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். அவற்றுள் சபைத் தலைவர் முன்னாள் அரசாங்கத்தின் நீதித்துறை மந்திரி முஸ்தாபா அப்டெல் ஜலிலும் உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று லிபிய ஆட்சிக்கு எதிராக இன்னும் நடவடிக்கைகளைச் சுமத்தியுள்ளது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் 70 பில்லியன் டொலர் மதிப்புடைய லிபிய முதலீட்டு அதிகார சபை மற்றும் லிபிய மத்திய வங்கி ஆகியவை உட்பட ஐந்து நிதி அமைப்புக்களைச் சேர்த்துள்ளது. இன்றும் விவாதங்கள் தொடரவுள்ளன. லிபிய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்தும் முடிவும் அதில் அடங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கிய ஐரோப்பிய சக்திகள் ஒவ்வொன்றும் லிபியாவிலும் மத்திய கிழக்கிலும் அதன் சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னேற்ற முற்பட்டுள்ளது. பிரிட்டனும் பிரான்ஸும் ஒரு பறக்கக் கூடாத பகுதி சுமத்தப்பட வேண்டும் என்று ஒருமித்த கோரிக்கையை வைத்துள்ளனர். ஆனால் சில பிரச்சினைகளில் அவையே மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளன. பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் அவருடைய அரசாங்கமானது பிரான்ஸ் எதிர்ப்புத் தலைமைக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதை அவருடைய அரசாங்கமும் விரைவில் பின்பற்றவேண்டும் என்ற கருத்தை நிராகரித்துள்ளார். “நாங்கள் அரசுக்குள் உள்ள குழுக்கள் என்பவற்றை விட, அரசுகள் என்பவற்றைத்தான் அங்கீகரிப்போம்என்று குறிப்பாக அவர் கூறினார்.

நேட்டோவின் பாதுகாப்பு மந்திரிகள் நேற்று லிபியாவிற்கு அருகே மத்தியதரைக்கடலில் போர்க் கப்பல்களைக் கொண்டு செல்ல உடன்பட்டனர். இதில் ஜேர்மனியப் போர்க் கப்பல்களும் ஒரு இத்தாலியப் போர்க் கப்பல் ஒன்றும், கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவும் அடங்கும். இக்கப்பல்கள் லிபியா மீதான கண்காணிப்பை அதிகரித்து அந்நாட்டிற்கு எதிராகவுள்ள ஆயுத விற்பனைத் தடைகளையும் மேற்பார்வையிடும்.

நேட்டோவின் தலைமைச் செயலர் ஆண்டர்ஸ் போ ரஸ்முசன் கப்பல்களானது, “நேட்டோவின் நிலைமை பற்றிய விழிப்புணைர்வை அதிகரித்து, நம் கண்காணிப்பு, மேற்பார்வைத் திறனுக்கும் உதவும், அதில் ஆயுதமளித்தலுக்கான தடுப்பும் அடங்கும்என்றார். அத்தகைய தலையீட்டிற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. “முதலில் நேட்டோ நடவடிக்கை தேவை என்பது உறுதியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக தெளிவான சட்டத்தளம் வேண்டும். மூன்றாவதாக உறுதியான பிராந்திய ஆதரவு இருக்க வேண்டும்.”

தேசிய சபையானது கடாபி எழுச்சிக் காலம் முழுவதும் முற்றிலும் பிற்போக்குத்தனப் பங்கைத்தான் கொண்டிருந்தது. இந்த இயக்கம் தொழிலாளர்கள் மற்றும் இளம் லிபியர்களால் தூண்டப்பட்டு, துனிசியா மற்றும் எகிப்து புரட்சிகளால் ஊக்கம் பெற்றது, வட ஆபிரிக்காவிலுள்ள இதே போன்ற பிரச்சினைகளால்தான் உந்துதல் பெற்றது. அதாவது சமூக சமத்துவமின்மை, வெகுஜன வேலையின்மை, குறைந்த கல்வி வாய்ப்புக்கள், “தடையற்றச் சந்தை சீர்திருத்தங்கள், தனியார்மயமாக்கல் திட்டங்கள் மற்றும் அரசாங்க அடக்குமுறை, ஊழல் ஆகியவை ஏற்பட்ட நிலைமையில்.

தேசிய சபையானது லிபிய ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவைத்தான் பிரதிபலிக்கிறது. அது எழுச்சியின் துவக்கத்திலிருந்தே வெளிப்பட்டு வந்த எழுச்சியைக் கடத்த, முன்கூட்டியே தகர்க்க விரைந்தது. இந்த தட்டைப் பொறுத்தவரை, கடாபியை அகற்றுவது என்பது தன்னுடைய சொந்த அரசியல், பொருளாதார நலன்களை வளர்ப்பதற்கு ஒரு வழிவகை ஆகும்.

உத்தியோகபூர்வ எதிர்ப்புத் தலைமை என்பது லிபியாவிலுள்ள முதலாளித்துவ சொத்து உறவுகளுக்கு எத்தகைய சவால் வந்தாலும் அது பற்றி கடாபி ஆட்சியைப் போல்தான் விரோதப் போக்கைக் காட்டும்.

இது தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தின் சமூக விழைவுகளுக்கு முறையிடாமல், முக்கிய சக்திகளுக்குத்தான் முறையீடு செய்துள்ளது. “பெங்காசியைத் தளமாகக் கொண்ட தேசிய மாற்றுக்கால சபையானது லிபியா கையெழுத்திட்டுள்ள அனைத்து எண்ணெய் ஒப்பந்தங்களையும் மதிக்கும் எனக் கூறியுள்ளதுஎன்ற தகவலை நேற்று அல் ஜசீரா கொடுத்துள்ளது. எதிர்ப்புச் செய்தித் தொடர்பாளர் ஹபிஸ் கோகா, “நாம் நம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முற்படுகிறோம், ஆனால் சில எண்ணெய் தொழில்துறை இடங்கள் மீது குண்டுபோடுதல் என்பது நம் உற்பத்தித்திறன் அளவுகளை உறுதியாகப் பாதிக்கும்என்றார்.

இந்த அறிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் சுமத்த இருக்கும் பறக்கக் கூடாத பகுதிகளுக்குப் பின்னணியிலுள்ள நிதிய, மூலோபாயக் கணக்கீடுகளைச் சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் முக்கிய சக்திகளுக்கு இடையே கணிசமான மூலோபாயப் பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதேபோல் அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளும் லிபியாவில் திறமையுடன் தலையீடு எப்படிச் செய்வது என்பது பற்றிய பிளவுகள் உள்ளன.

.நா.பாதுகாப்பு சபையானது நேற்று ஒரு பறக்கக் கூடாத பகுதிக்கு வாக்களிப்பது பற்றி தேக்கநிலை அடைந்தது. ரஷ்யாவும் சீனாவும் தற்காலிக இராணுவ நடவடிக்கை குறித்துக் கூட நடவடிக்கைகள் எதுவும் கூடாது என எதிர்க்கின்றன.

நேற்று வாஷிங்டனானது ஜேர்மனிய அரசாங்கத்துடன் தற்பொழுதைக்கேனும், பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு செயற்பாடுகளான நேட்டோ ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் சுமத்த வேண்டும் என்பதை நிராகரிப்பதில் சேர்ந்து கொண்டது. பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் அவசரக்காலத் திட்டம் தொடரும் என்றும்பறக்கக் கூடாத பகுதியைப் பொறுத்தவரைதான் அதன் பரப்புஎன்றார். லிபியாவிற்கான ஆயுதம் வழங்கும் தடைகள் இராணுவப் பிரிவினால் ஐ.நா.பாதுகாப்பு சபை இசைவு கொடுத்தால் ஒழியச் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி கைடா வெஸ்டர்வெல்லே அறிவித்தார்: “ஜேர்மனிய அரசாங்கத்திற்கு ஒன்று தெளிவுவட ஆபிரிக்காவில் ஒரு போரில் ஈர்க்கப்பட நாம் விரும்பவில்லை.” சார்க்கோசி பெங்காசித் தலைமைக்கு ராஜதந்திர அங்கீகாரம் அளித்ததுஅவசரத்தில்எடுக்கப்பட்ட முடிவுபோல் தோன்றுகிறது என்று வெஸ்டர்வெல்லே கூறினார்.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் நேற்று மன்ற ஒதுக்கீட்டுக் குழுவிடம் தான் லிபிய எதிர்ப்புத் தலைமையிடம் அடுத்த வாரம் துனிசியா, எகிப்து செல்லுகையில் பேச இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் கிளின்டன்இராணுவத் தலையீடு பற்றி ஒருவாரத்திற்கு முன்பு இருந்ததைவிட மிகவும் எச்சரிக்கையாக இருந்தது போல் தோன்றியது. பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் கொடுத்த எச்சரிக்கைளுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டிருப்பார் போலும்என்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச இசைவு இல்லாத நிலையில், அமெரிக்கா தனிமையாகச் செயல்படுவது என்பது எதிர்பார்க்க முடியாத விளைவுகள் நேரக்கூடிய நிலைமையில் நுழைவதற்கு ஒப்பாகும்என்று வெளிவிவகார செயலர் கூறினார். பறக்கக் கூடாத பகுதிகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க உந்துதலுக்கு உதவாதவை. 1990 களில் ஈராக் மீது சுமத்தப்பட்ட இத்தகைய தடைதரையில் மக்களை சதாம் ஹுசைன் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை, அது ஒன்றும் அவரைப் பதவியிலிருந்தும் அகற்றவில்லைஎன்று கிளின்டன் எச்சரித்தார்.

ஏற்கனவே இரு நவ காலனித்துவ போர்களை ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா இந்த நடவடிக்கைக்கு திறன் கொண்டுள்ளதா என்பதும் மற்றொரு பிரச்சினை ஆகும். மூத்த கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குள் லிபியாவுடன் போர் பற்றிய உட்குறிப்புக்கள் குறித்து அமைதியின்மை தெளிவாக உள்ளது. கடாபி மீண்டும் தரையில் கூடுதலான ஏற்றத்தைப் பெற்றுவிட்டார் என்று தோன்றியுள்ள நிலையில்.

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனரான ஜேம்ஸ் கிளாப்பர் காங்கிரசிடம் ஒரு நீண்ட காலக் கண்ணோட்டத்தில்ஆட்சி தொடரும்”, ஏனெனில் அதனிடம் கூடுதல் ஆயுதங்கள் உள்ளன என்றார். லிபிய வான் பாதுகாப்பு முறைகள்மிகவும் கணிசமானவை”, அரபு நாடுகளில் எகிப்திற்கு அடுத்தாற்போல் உள்ளவை என்றார்.

ஆயுத சேவைக் குழுக் கூட்டத்தின்போது, தரைப்படையில் லெப்டினென்ட் ஜெனரல் ரோனால்ட் பர்கஸ், பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் இயக்குனர் கிளாப்பர் கருத்துடன் உடன்பட்டார். “இப்பொழுது [கடாபி] அதிகாரத்தில் இருப்பது போல்தான் தோன்றுகிறது. ஏதேனும் பேரியக்க மாறுதல்கள் ஏற்பட்டால் ஒழியஎன்றார். “இயக்கம் ஆட்சியின் சக்திகளுக்கு ஆதரவாக நகர்ந்துவிட்டதுஎன்றார் அவர். பறக்கக்கூடாத பகுதிகள் சுமத்தப்படுவதுஒரு போர் நடவடிக்கையாகக் கருதப்படலாம் என்பதையும் பர்கஸ் ஒப்புக் கொண்டார்

ஆனால் இந்த மதிப்பீடுகளை சில வெள்ளை மாளிகை அதிகாரிகள்  சவாலுக்கு உட்படுத்துவது போல் தோன்றுகிறது. ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோர் டோனிலோன் செய்தியாளர்களிடம் கிளாப்பர் நிலைமை பற்றியஅசையா மதிப்பீட்டைஅளித்துள்ளார் என்றார். “ஆனால்ஓர் இயக்கத் தன்மையுடைய பூதக்கண்ணாடி மூலம் பார்த்தால், உந்துதல் தனிமைப்பட்டுள்ளது, கடாபி சட்டத் தன்மையை இழந்துள்ளது, இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்நாம் வேறுவித மதிப்பீட்டைக் கொள்ள வேண்டும்என்று டோனிலோன் அறிவித்தார்.