சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

The fear of “Nile fever” in China

சீனாவில்நைல் சுரம்பற்றிய அச்சம்

By John Chan
5 February 2011
Use this version to print | Send feedback

எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எகிப்தில் ஜனநாயக உரிமைகள் மற்றும் கௌரவமான வாழ்க்கைத் தரங்களை கோரி வெகுஜன எதிர்ப்புக்களை நடத்தும் காட்சிகள் இரு தசாப்தங்களுக்கு முன் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய உறையும் நினைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது வெளிப்படை. எகிப்திலிருந்து புரட்சிகர நோய் பரவக்கூடும் என்ற அச்சத்தில், பெய்ஜிங் அதன் வலைய தளப் பொலிசைஎகிப்துஎன்னும் சொல்லைக் கட்டுரை எழுதி வெளியிடும் பகுதிகளில் இருந்து அகற்றி விடுமாறு உத்தரவை பிறப்பித்தது. அது சீனாவின் மில்லியன் கணக்கான இணைய தளப் பயன்படுத்துவோரிடையே தீவிர விவாதங்களை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட South China Morning Post தற்போதைய எகிப்திய அமைதியின்மைக்கும் 1989 சீன நிகழ்ச்சிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை, “புறக்கணிக்கப்பட முடியாத அளவிற்கு ஒற்றுமையைக் கொண்டுள்ளதுஎன அறிவித்துள்ளது. சீன ஆளும் வட்டாரங்களின் உணர்வுகளை விளக்குகையில், அரசியல் விஞ்ஞானி லியு ஜுன்னிங் செய்தித்தாளிடம் கூறினார்: “அரசியலில் வலிமை உடையவர்களால் கட்டுப்படுத்தப்படும் சர்வாதிகார ஆட்சிகள் எளிதில் உறுதிகுலைந்து கிட்டத்தட்ட ஒரே இரவில் அகற்றப்படலாம் என்பதை கற்பனை செய்துபார்ப்பதை நம்பமுடியாமலுள்ளது.”

முதலில் பார்த்தால் சீனாவும் எகிப்தும் வெவ்வேறு முனைகளில் இருப்பது போல் தோன்றும்புவியியல்ரீதியாகவும் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத் தன்மைகளிலும். ஆனால் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் கிடியன் ராஷ்மன் குறிப்பிட்டுள்ளபடி, “எகிப்திய எழுச்சியிலுள்ள சில கூறுகள் பெய்ஜிங்கில் சில ஒலிக்குறைப்புக்களுக்கு மணியடிக்கிறது: அதாவது ஊழல், உயரும் உணவுப்பொருட்களின் உறுதிகுலைக்கும் விளைவுகள், இளைஞர்களின் வேலையின்மை, இணைய தளங்களின் மக்கள் எதிர்ப்பைத் அணிதிரட்டும் திறன், ஆளும் உயரடுக்கிற்கும் அவர்கள் ஆள முயலும் மக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி ஆகியவற்றின் மீதான மக்கள் சீற்றமே அவைகள்.

துனிசியாவிலிருந்து எகிப்திற்கு பரவியுள்ள அரசியல் தொற்று கண்டங்கள் கடந்து ஆசியாவிற்கு தாண்டிச் செல்லும் என்பது மிகவும் அரிதான செயல்என்று தன் வாசகர்களுக்கு தெம்பூட்ட ராஷ்மன் முயன்றுள்ளார். ஆனால் ராஷ்மன் அடையாளம் கண்டிருப்பது துல்லியமான சமூகப் பிளவு, வர்க்கங்களின் விரோதங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திலிருந்து மக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுசீன உட்பட உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நிலைமையில் இவைகள் காணப்படுகின்றன. எகிப்திய முறையில் சீனாவில் எழுச்சி வரக்கூடும் என்ற கருத்து, அதுவும் 400 மில்லியன் மக்கள் தொழிலாள வர்க்கத்தில் குவிந்துள்ள நிலையில் என்பது சீன உயரடுக்குகளின் இதயங்களில் மட்டும் பேரச்சத்தை ஏற்படுத்தவில்லை, உலகின் நிதிப்பிரபுத்துவத்திற்கும் ஏற்படுத்தியுள்ளது. அதுவோ சீனாவின் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை பெரிதும் நம்பியுள்ளது.

நைல் சுரத்திற்குசீனா ஒன்றும்தடுப்புச் சக்தியைபெற்றிருக்கவில்லை என்பது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு நன்கு தெரியும். சீனாவில் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு அனிமேசன் வீடியோப் படம், மக்களை முயல்கள் போல் காட்டுகிறது. அவர்கள் சீற்றத்துடன் எழுச்சி பெற்று கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தினரைக் கொலை செய்வதுபோல் இது உள்ளது. இதன் பொருள் என்ன என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் விளக்கியுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து மோசமானால், “சீனாவின் உறுதித்தன்மை ஒரு பாலைவனச் சோலை என்று தான் நிரூபணமாகிவிடும்என்று அது எழுதியுள்ளது.

பல விதங்களில் சீனாவில் வர்க்க அழுத்தங்கள் எகிப்தில் உள்ளதைப் போலவே தீவிரமாக உள்ளன. அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பில்லியனர்கள் குழு —2010 ல் 69ல் இருந்து 189 என உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதுபற்றிப் பெருமை பேசிக்கொள்கிறது. ஆனால் அதன் தலா நபர் மொத்த உள்நாட்டு வருமானம் எகிப்தில் உள்ளதில் மூன்றில் இரு பகுதிதான். செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளின் தீவிர உயர்வினால் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் உட்பட இளைஞர்கள் வேலை தேடுவதும் ஒரு வேலையைப் பெறுவதும் மிகக் கடினமாக அதிகரிக்கிறது. எகிப்திய இளைஞர்கள் போல, சீனாவின் இளைஞர்களும் 384 மில்லியன் இணைய தளப் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையாக உள்ளனர். இணைய தளம் இவர்களுக்கு ஒரு உலகப் பார்வையையும் முந்தைய தலைமுறைகளில் இருந்ததைவிடக் கூடுதலான சமூக விழைவுகளையும் அளித்துள்ளது.

தொழிலாள வர்க்கம் முழுவதும் ஒரே முறைகளில் வர்க்க அடக்குமுறைக்கு முகங்கொடுக்கும் ஒரு சர்வதேச வர்க்கமாகத்தான் எப்பொழுதும் இருந்து வருகிறது. ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் உலகந்தழுவிய உற்பத்திகளின் ஒருங்கிணைப்பானது உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களை முன்னோடியில்லாத தன்மையில் ஒன்றுசேர்த்து ஒன்றாகக் கொண்டு வந்திருக்கிறது. பல விதங்களில் சீன மற்றும் எகிப்தியத் தொழிலாளர்கள் இதே சர்வதேச நிறுவனங்களால்தான் சுரண்டப்படுகின்றனர். அதேபோல்தான் பெருநிறுவ உயரடுக்களுக்கு பணிபுரியும் அடக்குமுறையைக் கையாளும் ஆட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. எனவேதான் எகிப்தில் நடைபெறும் புரட்சி எழுச்சிக்கள் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு இணைப்பை கொடுத்துள்ளதுஆளும் ஸ்தாபனத்திற்கு பீதியையும் கொடுத்துள்ளன.

லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோரின் போல்ஷிவிக் தலைமையின் கீழ் அக்டோபர் 1917ல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியபின் உலகம் முழுவதும் முதலாளித்துவ வர்க்கத்தின் மீதுபோல்ஷிவிக் தொற்று என்னும் பீதி நிறைந்த அச்சம் ஏற்படுத்தியதைத்தான் நினைவுபடுத்துகிறது என்றுநைல் சுரம்பற்றி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது எகிப்திய எழுச்சியிலிருந்து தொழிலாளர்கள் ஊக்கம் பெறத் தொடங்கியுள்ளது போல், ரஷ்ய புரட்சியும் சீனா உட்பட உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடேயே ஒரு ஆர்வமான விடையிறுப்பைக் கண்டது.

1925-27 சீனப் புரட்சியின் சோகம் ததும்பிய தோல்வி எகிப்திலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு பெரும் படிப்பினைகளை கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்ற வைத்தனர். அது தொழிலாள வர்க்கம் அனைத்து துரோகத்தனமான தேசிய முதலாளித்துவத்தின் பிரிவுகளிடம் இருந்தும் அரசியல் சுயாதீனத்தை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சீனாவில் ஸ்ராலின் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு கீழ்படுத்தி நடக்க வைத்தார். கோமின்டாங்தான் சீனப் புரட்சிக்கு வழி நடத்தி வருகிறது என்றார். இதன் விளைவு கோமின்டாங் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பின்னர் படுகொலை செய்ததாகும்.

சீனாவில் ஜூன் 1989ல் நடைபெற்ற நிகழ்வுகளும் இதை ஒத்த படிப்பினைகளை கொண்டுள்ளன. எழுச்சியின் உச்சக்கட்டத்தில், தொழிலாளர்கள் தியனன்மென் சதுக்கம் மற்றும் பிற நகரங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களுடன் சேர்ந்தபோது, சீனத் தலைவர் Deng Xiaoping அதிகாரத்தை இழந்துவிட்டது போல் தோன்றியது. இராணுவத்தில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று அவர் அச்சப்பட்டார், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு ஆட்சி சரிந்துவிடும் என்றும் பயந்தார். ஆனால் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாமற் போய்விட்டது. அரசியல் முனைப்புக் கொள்வதற்கு பதிலாக, பெய்ஜிங் தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பானது (Beijing Workers Autonomous Federation) குட்டி முதலாளித்துவஜனநாயகவாதிகள்என்ற மாணவர் இயக்கத்தில் இருந்தவர்களிற்குப் பின் நின்றனர். அவர்களோ கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலுள்ள சீர்திருத்தக்காரர்கள்ஜனநாயகசலுகைகளை அளிப்பார்கள் என்ற மோசமான போலித் தோற்றங்களுக்கு ஊக்கமளித்தனர். இந்த இடைவெளியை டெங் பயன்படுத்தி தொலைதூர மாநிலங்களிலிருந்து துருப்புக்களையும் டாங்குகளையும் தருவித்து எதிர்ப்புக்களைக் குருதி கொட்ட வைத்து நசுக்கினார்.

எகிப்திய இளைஞர்களும் தொழிலாளர்களும் இந்த சீனத் தொழிலாள வர்க்கத்தின் கொடூரத் தோல்விகளிலிருந்து தேவையான படிப்பினைகளை பற்றி எடுக்க வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் நெருக்கமாகப் பிணைந்ததாகும். முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற அமைப்பு மற்றும் மஹ்மத் எல்பரடெய் போன்ற தலைவர்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்கப்படக்கூடாது. இவையும் இவர்களும் எந்தவித்திலும் தற்போதைய சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதில் முபாரக் சர்வாதிகாரத்தைவிடக் குறைந்தவை அல்ல. தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன வலிமையைத்தான் நம்ப வேண்டும், தன் அமைப்புக்களை ஆரம்பிக்கவும் கட்டமைக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர் அரசாங்கம் அமைப்பதற்கும் சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கும் அரசியல் கட்சியைக் கட்டமைக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலைநிறுத்த அலையின் முதல் நடவடிக்கைகளை எடுத்த சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எகிப்திலுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் உறுதி, தைரியம் ஆகியவற்றிலிருந்து ஊக்கத்தைப் பெறலாம். சீனா மற்றும் எகிப்தில் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவை ஆகும். எகிப்து, சீனா மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்க  வேண்டியது அவசரத் தேவையாகும். அது ஒன்றுதான் கடந்த நூற்றாண்டின் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து மூலோபாய அனுபவங்களின் தன்மையை உருவகப்படுத்தி நிற்கிறது. உலகிலேயே ஒரே புரட்சிகரப் போக்குடையதும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் திறனுடையதும், உண்மையான சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை தளமாகக் கொண்ட சமூக ஒழுங்கை நிறுவக்கூடிய  அமைப்பும் ஆகும்.