சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

WSWS public meeting in Paris

The revolutions in the Maghreb and the Middle East and the Theory of Permanent Revolution

பாரிஸில் உலக சோசலிச வலைத் தளத்தின் பொதுக் கூட்டம்

மெஹ்ரெப் மற்றும் மத்திய கிழக்கின் புரட்சிகளும் நிரந்தரப் புரட்சித் தத்துவமும்

10 March 2011

ஞாயிறு, ஏப்ரல் 3 2011, மாலை 2:00 மணி
AGECA
177 rue de Charonne
75011 Paris

துனிசியா மற்றும் எகிப்தின் புரட்சிகர எழுச்சிகள் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்து நிற்கின்றன. தொழிலாள வர்க்கம் தனது பிரம்மாண்டமான சமூக சக்தியை நிரூபணம் செய்திருக்கிறது. அச்சுறுத்தப்படவோ அல்லது தடுத்து நிறுத்தப்படவோ இடம் தராமல் முபாரக் மற்றும் பென் அலி ஆகிய சர்வாதிகாரிகளை பதவி விலகத் தள்ளியிருக்கிறது. 

ஆயினும் புரட்சி தனது ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே இருக்கிறது. சர்வாதிகாரிகள் போய் விட்டார்கள் ஆனால் அவர்களது ஆட்சி இன்னும் போகவில்லை. எகிப்தில் அதிகாரம் இராணுவத்தின் கைகளில் இருக்கிறது, துனிசியாவில் அரசாங்கத்தில் இருந்த பென் அலியின் கும்பலைச் சேர்ந்த சிலர் ஒரு அரசியல் மறைப்பாக எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு அதிகாரத்தைக் கையில் கொண்டிருக்கின்றனர்.

ஜனநாயகத்திற்கான பொதுவான கோரிக்கையுடன் புரட்சி நின்று விட முடியாது. வேலைகள், மேம்பட்ட ஊதியங்கள் மற்றும் ஒரு பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவை கோரி தொழிலாளர்களும் இளைஞர்களும் பாடுபட்டுப் போராடியதெல்லாம் முதலாளித்துவ சொத்துடைமையையும், நாட்டுப்புறத்தில் நிலவும் அரைப் பிரபுத்துவ உறவுகளையும் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையும் தடைசெய்வதன் மூலம் மட்டுமே பூர்த்தியாக்க முடியும். ஜனநாயகத்திற்கான போராட்டம் தொழிலாளர்களது அதிகாரத்திற்கான போராட்டத்துடனும் சமூகத்தை சோசலிசரீதியில் உருமாற்றுவதற்கான போராட்டத்துடனும் பிரிக்கவியலாமல் இணைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அதி முக்கியத்துவத்தையும் இந்த முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நிகழ்த்தப்பட்ட போராட்டத்தையும் உறுதிசெய்துள்ளன.

மெஹ்ரெப் மற்றும் மத்தியக் கிழக்கின் புரட்சி பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலுமான வர்க்கப் போராட்டத்துடன் தொடர்புபட்டது. சரியும் வாழ்க்கைத் தரங்கள், பெருகும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை, சிக்கன நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் சிதைவு என ஒரே பிரச்சினைகளுக்குத் தான் தொழிலாள வர்க்கம் எல்லா இடங்களிலும் முகம் கொடுக்கிறது. சமூகத்தின் இன்னொரு துருவத்தில், ஒரு சிறு நிதிய உயரடுக்கு பெரும் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருப்பதோடு அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு இரும்புப் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது.

பிரான்சில் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தை பாதுகாத்துப் பேசும் அனைத்து அமைப்புகளுடனும் - சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சியிலான அவர்களது கூட்டாளிகள் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) - முறித்துக் கொண்டு சர்வதேச சோசலிசப் புரட்சியின் பாதையை எடுக்க வேண்டும். எமது கூட்டம் மெஹ்ரெப் மற்றும் மத்திய கிழக்கிலான நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைக் குறித்தும் மத்தியத் தரைக் கடலின் இரு பக்கங்களிலும் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டுவது குறித்தும் விவாதிக்கும்.